யார் நல்லிசை விரும்பிகள் என்று முடிவு செய்வது யார்? நீங்களா? உங்களுக்கு யார் அந்த பதவியை அளித்தது? "முத்துக்காளை" படத்தில் வரும் "கஞ்சி கலயத்தை" மற்றும் "புன்னைவனத்து குயிலே" இரண்டுமே நானும் விரும்பி கேட்கும் பாடல்கள் என்பது வேறு விஷயம்.

இந்தியாவை பொறுத்தவரை பின்னணி இசை என்றால் ராஜா, ராஜா என்றால் பின்னணி இசை என்பது யாவரும் அறிந்த ஒன்றே. என்னவோ எங்களுக்கு தெரியாத ஒன்றை தெரிய வைக்க முயற்சிப்பது போல் பாவலா காட்டுவது வேண்டாத ஒன்று. பின்னணி இசை என்று எடுத்துக் கொண்டாலும், இந்திய திரைப்படங்களில் வருகிற ஜானர்கள் மிக குறுகியவையே. இது ராஜாவின் குறை அல்ல. வேறு ஜானர்களிலும் ராஜா பிரமாதப்படுத்தியிருக்கலாம் என்றாலும் இது தான் உண்மை. மற்ற நாட்டு திரைப்படங்களில் வரும் சில குறிப்பிட்ட ஜானர்களுக்கு அவரது இசை எப்படி இருந்திருக்கும் என நாம் நினைத்துதான் பார்க்க முடியும். ஏதோ ஒரு கன்னட சை ஃபை படத்திற்கு அவர் அளித்த இசையை குறிப்பிட்டு அது போல் யாரால் செய்ய முடியும் என்று நீங்கள் சிலாகித்தால் ஒன்றும் செய்ய முடியாது. அதே நேரம் திகில் திரைப்படங்களில் அவர் அதிகம் வேலை செய்யவில்லை என்ற ஆதங்கமும் உள்ளது. 91 என்று நினைக்கிறேன். "உருவம்" என்ற திரைப்படம். படம் குப்பை என்றாலும் பின்னணி இசை மிரட்டியது.

91 என்ற வரையறை இல்லை. ராஜா ஆரம்பத்தில் செய்த இசை ஜாலங்களை விட பிறகு வந்தவை பிரமாதம் இல்லை என்பது தான் எனது கருத்து. மற்ற இசையமைப்பாளர்களோடு ஒப்பிட்டு ராஜாவையும் மற்ற இசையமைப்பாளர்களையும் அவமதிக்கும் செயலை உங்களோடே வைத்துக் கொள்ளவும்.