ஒப்புக் கொள்கிறேன். "கைவீணையை ஏந்தும் கலைவாணி" பாடல் "வியட்னாம் காலனி" படத்தில் வந்தது என்பதை மறந்து விட்டேன். அற்புதமான பாடல்தான். "மார்கழி மாசம்" பாடல் நினைவுள்ளது. நல்ல பாடல்தான். ஆனால் இது போல் பல பாடல்கள் வந்து விட்டன. ராஜாவின் முத்திரை இந்த பாடலில் ஆழமாக இல்லை என்பது எனது கருத்து. என்னை பொறுத்தவரை ராஜாவின் 1991க்கு முந்தைய பாடல்களின் தரத்தில் இல்லை என்பது எனது கருத்து. இதனால் எனது ரசனை தரம் தாழ்ந்தது என்று நினைத்தால் அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

ராஜாவின் படைப்புத்திறன் 1991க்கு பிறகு குறைந்தது என்ற கருத்தை நானும் தான் ஏற்கவில்லை என்பதை மறுபடி நினைவு கூறுகிறேன். ஆனால் நீங்கள் கூறிய மற்ற பாடல்கள், "சாத்து நட சாத்து" உட்பட, நினைவில் உள்ளனவே தவிர ராஜாவின் திறமையை பறை சாற்றும் பாடல்கள் என்று நான் கருதவில்லை. கோபால் அவர்களின் கருத்தில் நான் எடுத்துக் கொண்டது இதுதான். ராஜா யார் என்று பின் வரும் சந்ததியினருக்கு விரைவாக எடுத்துரைக்க வேண்டும் என்றால், 1991க்கு முந்தைய அவரது படைப்புகளே வெகுவாக எடுத்துக்காட்டப்படும்.