சிம்புக்கு அம்மாவாக நடிக்க த்ரிஷா மறுப்பு: நான் இன்னும் ஹீரோயினாகத்தான் நடிக்கிறேன்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை த்ரிஷாவுக்கு இப்படி ஒரு சோதனையா?. சிம்புவை கதாநாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருக்கும் படத்துக்கு அம்மா கேரக்டரில் நடிக்க த்ரிஷாவை அனுகியுள்ளனர்.




கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் நல்ல வரவேற்பையும், வெற்றியையும் பெற்றது. சிம்பு என்றாலே அதிகமாக கிசுகிசுக்கள் வரும். அந்த நேரத்தில் சிம்பு, த்ரிஷா இருவருக்கும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.

அந்த படத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்புவும், த்ரிஷாவும் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் 3 வேடங்களில் சிம்பு நடிக்க உள்ளார். இதில் ஒரு கேரக்டரில் சிம்புவுக்கு அம்மாவாக நடிக்க த்ரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த த்ரிஷா நான் இன்னும் ஹீரோயினாகத்தான் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.