Results 21 to 30 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Senior Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like


    ( 2 )

    "என்றும் துன்பமில்லை"
    பாட்டு வரும்
    "புனர்ஜென்மம்"
    பாட்டிக்குப் பிடிக்கும்.

    சின்னப் பாட்டிக்கு
    "கௌரவம்" பிடிக்கும்.

    அத்தைக்கு
    "பாலும் பழமும்" பிடிக்கும்.

    அழுவது நிச்சயமென்று
    தெரிந்தாலும்
    துணிந்து "பாசமலர்" பார்க்க
    அம்மாவுக்குப் பிடிக்கும்.

    "நடிகர் திலகம்
    சிவாஜி கணேசன்"
    எனும் எழுத்துக்கள் ஓடும்
    எல்லாப் படங்களும்
    எனக்குப் பிடிக்கும்.

    "எங்கிருந்தோ வந்தாளும்",
    "எங்க மாமா"வும்
    மகளுக்குப் பிடிக்கும்.

    "திரிசூலமும், கர்ணனும்"
    மகனுக்குப் பிடிக்கும்.

    தலைமுறைகள் கடந்த தலைமுறைகளை
    ஆக்கிரமித்து விட்ட
    அற்புதக் கலைஞனே...

    மிச்சமிருக்கிற படங்களையெல்லாம்
    "எனக்குப் பிடிக்கும்",
    "எனக்கும் பிடிக்கும்",
    என்று ஆளுக்கொன்றாய்ச்
    சொல்லி வருவார்கள்...

    என் பேரன்,பேத்திகளும்,
    கொள்ளுப் பேரன்,
    கொள்ளுப் பேத்திகளும்.

  2. Thanks Russellmai thanked for this post
    Likes Harrietlgy, Russellmai liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •