மார்ச்-18ல் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5 பைனல்
ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன் 5 தனது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது, கிராண்ட் ஃபினாலே லைவ் வரும் மார்ச் 18 ஆம் நாள் சென்னை D B ஜெயின் காலேஜ் மைதானத்தில், மாலை 6 மணி முதல் நடக்கும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும். கடந்த ஒரு வருடமாக பல பாடகர்கள், வித்வான்கள், திரை நட்சத்திரங்கள், வாரம் ஒரு அட்டகாசமான தீம், அற்புதமான போட்டியாளர்கள் என அத்தனை இசை பரிட்சைகளையும் கடந்து வந்த ஐந்து இறுதிப் போட்டியாளர்கள், ஃபரிதா (SS02), ஆனந்த் அரவிந்தாக்ஷன் (SS05), சியாத் (SS04), ராஜா கணபதி (SS03) மற்றும் லக்ஷ்மி ப்ரதீப் (SS07) ஆகியோர் அந்த பிரமாண்ட மேடையில் பாட தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். <br><br>இன்று வெள்ளித்திரையில் பின்னணி பாடகர்களாக வலம் வரும் சூப்பர் சிங்கர்ஸ், இந்த பிரமாண்ட மேடையில் பல இசை ஜாம்பவான்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் முன் பாடி அற்புதமான வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டனர். இம்முறை இவர்களின் கடின முயற்சி திருவினையாக்க உங்களது விருப்பத்துக்குகந்த பாடகருக்கு கிடைக்க, www.supersinger.in என்னும் இணையதளத்தின் மூலம் மார்ச் 18 வரை வாக்களிக்கலாம்.
இந்த முறை கிராண்ட் ஃபினாலே லைவ் இன்னும் பிரமாண்டமாய் அரங்கேரவிருக்கிறது. பிரபல பாடகர்காளான கானா பாலா , சித் ஸ்ரீராம் பார்வையாளர்களை இசையால் உற்சாகப்படுத்த உள்ளனர். போட்டியாளர்களுக்கு இரண்டு சுற்றுமே ஃப்ரீ ஸ்டைல் வகையில் அமையும், மேலும் போட்டியாளர்கள் பியானோ இசைக் கலைஞர் ஸ்டீபன் தேவஸ்ஸியின் இசையில் பாடவுள்ளனர். சூப்பர் சிங்கரின் ஆஸ்தான நடுவர்கள் மற்றும் பாடகர்கள் சித்ரா, மஹாராஜன், மால்குடி சுபா, உஷா ஊத்துப், மனோ மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்ப்பார்கள். மேலும் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், பாடகர் மனோ மற்றும் ஸ்ரீனிவாஸ்வுடன் சேர்ந்து இசை விருந்தளிக்க உள்ளார்கள். இன்னும் பல பாடல்களும், கச்சேரிகளும், வியக்கவைக்கும் இசை விருந்துகளும் அரங்கேரவுள்ளது, காணத்தவறாதீர்கள் !!!





நன்றி: தினமலர்