Results 2,671 to 2,680 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சிவாஜியின் காதல்கள்-3

    ராஜா ராணி-1956.

    இதுவரை நான் பேசியதெல்லாம் intellectual காதல்கள்.இதெல்லாம் காதலில் சேர்த்தியா என்றே உலகம் பேசி கொண்டிருக்கிறது. இப்போது நான் பேச போவது அக்மார்க் உள்ள பூர்வமான காதல்.

    அதுவரை தமிழ்திரையே காணாத அதிசயம்.

    நிஜமாகவே chemistry கொண்ட அழகான இளைஞன் இளைஞி இணைவு.

    நடிப்பு,வயது,அனுசரணை (compatability ) அத்தனையிலும் நூற்றுக்கு நூறு வாங்கி அன்றைய இளைஞர்களின் இதய துடிப்பை எகிற செய்த ஜோடி.

    Feelgood என்ற genre ரொமாண்டிக் காமெடி.

    அலுப்பு தட்டாத திரைக்கதை ,வசனம்,நல்ல இயக்குனர்.

    டீசிங் ,situational காமெடி ,ஜாலியான ஓட்டம் அனைத்தும் கொண்ட அற்புத படம்.

    எப்போதாவது கிளைமாக்ஸ் முடிந்த பிறகு ஒரு full டூயட் பாடலை ஒரு ஜோடி பாடி ரசிகர்கள் கலையாமல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்த அதிசயம் கண்டதுண்டா?ராஜா ராணியில் சிவாஜி-பத்மினி என்ற அமர காதலர்கள் நிகழ்த்தி காட்டினர்.

    60லும்,70 களிலும் இயக்குனர்கள் திணறிய (கே.எஸ்.ஜி,ஸ்ரீதர்,பாலச்சந்தர்) விதவா மறுமணத்தை அலட்சியமாய் அலட்டாமல் சாதித்து காட்டியது இந்த 50 களின் படம்.

    சேரன் செங்குட்டுவன்,சாக்ரடிஸ் போன்ற அபூர்வ performance ,இந்த படத்தின் மிக அற்புத காதலை விழுங்கி ஏப்பம் விட்டு நிலைத்து நிற்பது சோகமே.

    ராணி என்கிற குருட்டு தகப்பனின் ஏழை பெண் ,சந்தர்ப்ப வசத்தால் ராஜா என்கிற வசதியுள்ள இளைஞனால் பணக்கார பெண்ணாக புரிந்து கொள்ள பட்டு ,அவனிடமே வேலைக்கு சேர்ந்து ,காதல் கனிந்து,உண்மையும் தெரியும் போது,ராணி இளம் வயது விதவை என்ற பேருண்மை திடீரென்று காதலை பெயர்க்க ,பிறகு பரபரப்பான இறுதி காட்சியில் காதலர்கள் சேரும் கதை.

    என்னவென்று இந்த படத்தை வர்ணிக்க?இதை பார்க்காதவர்களை சிவாஜி ரசிகன் என்ற லிஸ்ட் டில் நான் சேர்க்கவே மாட்டேன்.(ராகவேந்தர் மட்டும்தான் நிபந்தனை விதிக்க வேண்டுமா?நானும்தான்)இளைமையுடன் கூடிய குறும்பு மின்னி தெறிக்கும் அழகோ அழகு சிவாஜி-பத்மினி.(முத்துலிங்கம் போல நானும் சிறிதே வருந்தினேன் இந்த படம் காணும் போது)

    மயக்க மருந்து உட்கொண்டு ராணி தள்ளாடி ராஜாவின் காரில் உட்கார்ந்து கண்ணசர தொடங்கும் இளமை குதூகல திருவிழா. ராஜா வீட்டிற்கு அழைத்து சென்று(தூக்கம் வருதுப்பா என்னும் பத்மினியின் நடிப்பு,பின்னாட்களின் பஞ்ச தந்திரம் தேவயானியை தூக்கி சாப்பிடும்) ,ஏனோதானோ போஸில் போட்டு விட்டு,பத்திரிகையில் வந்த விளம்பர படி பணக்கார பெண்ணாய் (லீலா) இருப்பாளோ என்ற சந்தேகத்தில் ,அவளின் தூங்கும் விதத்தை நேர் செய்து,போர்வையும் போர்த்தும் விதம். மறுநாள் காலை ராணி ஒட்டு கேட்டு லீலாவாகவே தொடர ,அவளை வீட்டில் விட வரும் ராஜாவிடம் இங்கேயல்ல, என்ற டபாய்த்து ,சுலபமாய் நுழைந்து வெளியேறும் வீடாக பார்ப்பது. நுழைந்து பிறகு அமைதியாக வெளியேறி ,பரோபகாரம்-தங்கம்(என்.எஸ்.கே,டி.ஏ.மதுரம்) தம்பதிகள் வீட்டில் குழப்பம் விளைவிக்கும் சமயங்கள். ராஜா, ராணியிடம் சேலை கொடுக்க,துரத்தும் நாய்க்கு பயந்து மாடியேறி ஓடி அமர்க்களம் செய்ய , தங்கத்தையும்,ராஜாவையும் ,பரோபகாரம் சந்தேகிக்க, ராணியையும்,பரோபகாரத்தையும் தங்கம் சந்தேகிக்க ஜாலி நாட்.

    வேலைக்கு அமரும் ராணியிடம் சீசீ இதெல்லாம் அவங்களுக்கு ஒரு பொருட்டா ,அவங்க பொழுது போக்கா வேலை செய்யறாங்க ,சம்பளமெல்லாம் வாங்க மாட்டாங்க என்று ராணி வயிற்றில் புளி கரைக்கும் காட்சி தூள். ராணி பிறகு தான் ஒரு 200 ஐ தொலைத்ததாய் சொல்லி சமாளித்து இருநூறை பெறுவார்.

    பாபு என்ற அமச்சூர் நாடக நண்பனிடம் முரண் பட்டு ,தானே நாடகம் அரங்கேற்றும் போது,பாபு பணம் கொடுத்து தூண்டி விடும் கலாட்டாவால் துவங்கும் காதல் அத்தியாயம் நம்மை சொக்க வைக்கும்.

    எனக்கு மிக பிடித்த காதல் காட்சிகளில் ஒன்று.கல்லடிக்கு தப்பி ஓடும் லீலாவை துரத்தி கொண்டு, ஓடி,இருவரும் ஒரு வாய்க்காலை கடக்க முயலும் போது நனைந்து விட,நடுக்கத்துடன் ,தன வயிற்றுக்குள் நாடகத்திற்காக சுருட்டும் சேலையை லீலாவிற்கு கொடுத்து திருமணம் என்று சொல்லி தீர்மானம் என்று சமாளித்து லவ் மீட்டர் கையை கொடுத்து மாட்டி கொண்டதாய் டபாய்த்து,மீனை கண்ணுக்கு ஒப்பிட்டு வழிந்து,அய்யய்யோ,அநியாயத்துக்கு ஜாலி இந்த காட்சி.

    பாபுவுடன் நேரும் கைகலப்பை விலக்க,வீட்டினுள்ளிருந்து பையன் வேஷத்தில் வரும் ராணியை ,போட்டோ பார்த்து அடையாளம் கண்டு ,கட்டு போடும் போது டபாய்ப்பது படு ஸ்வீட்.

    டீசிங் சாங் (எஸ்.சி.கிருஷ்ணன்)லீலா லாலி, பூனை கண்ணை மூடி கொண்டால் செம கலாய்ப்பு.

    improvisation என்றால் தெரிந்த கொள்ள விரும்பும் ஆட்கள், சிவாஜி-பத்மினி காதல் காட்சியில் சிவாஜி ஒரு மர மட்டையை பறித்து, frisky ஆக காலால் உதைத்து,மட்டையை கையால் உரித்து கொண்டு ,துரு துறுவென்று பண்ணும் இந்த அதகள காதல் காட்சி!! என்னவென்று வர்ணிக்க?

    காதலில் ஒருமித்த பின் transister பரிசு காட்சி என்று மகா சுவாரஸ்யம்.

    ஒரு இதமான ஜாலி ரைட் இந்த இதமான நகைச்சுவை கலந்த அர்த்தமுள்ள காதல் படம்.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. Thanks Russellmai thanked for this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •