Results 1 to 10 of 4010

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 17

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இவ்வளவு மழையிலும், வெள்ளத்திலும் துயருறும் போதும் கூட நேற்று வசந்த் தொலைக்காட்சியில் மதியம் இரண்டு மணிக்கு தலைவரின் ஈடு இணையில்லா வெற்றிச் சித்திரம் 'தியாகம்' படம் போட, தமிழகம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி இருக்க, நான் தலைவரின் நடிப்பில் மெய்மறந்து அதில் மூழ்கி விட்டேன். புதிது புதிதாக நடிப்பு முத்துக்களைக் கண்டெடுத்தேன்.

    மிக ரசித்த காட்சிகள்.

    பாலாஜியிடம் தலைவர் போலீஸ் ஸ்டேஷனில் ரகளை செய்யும் சீன்.

    பாலாஜி சவுக்கால் உடம்பில் விளையாட ஆரம்பித்து கை சோர்ந்துவிடும் அளவிற்கு அடித்துவிட, ஒவ்வொரு அடிக்கும் தலைவர் கொடுக்கும் முக பாவங்கள் டாப். அதுவும் பாலாஜி அடித்துக் கொண்டிருக்கும் போதே இன்னும் வேகமாக என்று பொருள் பட 'force' என்று குரல் கொடுப்பது அருமை. ஒவ்வொரு அடிக்கும் தலையை மேலும் கீழும் இடத்தும் வலதுமாக அவர் ஆட்டுவது கிரேட். தலையை கீழ்ப்பக்கம் அசைக்கும்போது அவரின் அழகான முகவாய்க்கட்டைக்குக் கீழே விழும் அந்த சிறிய அழகழகான ஒன்றன் கீழ் ஒன்றான கழுத்து மடிப்புக்கள் ஈடு இணையற்றவை. உலகில் இவரைத் தவிர வேறு எவரிடமும் இப்படி பார்க்க முடியாது.

    பாலாஜி அடித்து முடித்து ஓய்ந்ததும் அப்படியே அடிகளின் வலியை கண்களின் வழியேகொண்டு வந்து,கண்களை அகல விரித்து சிவக்கக் காட்டுவார் பாருங்கள். இந்த அற்புதமான காட்சியை படிப்படியாகத் தந்திருக்கிறேன்.













    அடி வாங்கி முடித்தவுடன் ஷர்ட்டை படு ஸ்டைலாய், 'சட்'டென்று வேகமாக மாட்டுவார். ஹேர் ஸ்டைலோ சொல்லவே வேண்டாம். கற்றையாக மிக அழகாக நெற்றியை மறைத்திருக்கும். கொள்ளை அழகு அது.



    சாட்டையடி காட்சிக்குமுன் பாலாஜியுடன் காட்சிகள்.

    ஸ்டேஷனில் பாலாஜியை தலைசாய்த்து வெறுப்பு உமிழும் பார்வை பார்ப்பதை கவனியுங்கள்.



    'எச்சிலை உயர உயரப் பறந்தாலும் எச்சிலைத்தான். கோபுரம் கீழ விழுந்தாலும் கோபுரம்தான்' என்று தலைவர் அமர்க்களமாய் முழங்கும் காட்சி.



    பாலாஜி 'ஷட்-அப்' என்று கத்தும் போது கொஞ்சம் தலை சாய்த்து அட்டகாசமாக 'ப்ச்' என்பாரே! கைகள் டேபிளை அப்படியே ஒரு குத்து குத்தி எடுக்குமே!


    Last edited by vasudevan31355; 24th November 2015 at 09:44 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •