பற்பல பெருமை படைத்து கொண்டிருக்கும் திரை உலக சக்கரவர்த்தி ----- உண்மைலேயே நிழல் உலகிலும், நிஜ உலகிலும் ஆதாரமாகவும், அவதாரமாகவும் விளங்கி கொண்டிருக்கும் ஆயிரத்தில் ஒருவன்- லட்சத்தில் ஒருவன்- நிஜத்தில் கோடிகளில் ஒருவன் பாரத் ரத்னா மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்., என்பதே சரியான 100 % வார்த்தை எனில் அது மிகையன்று...அவர்தம் திரையுலக வாழ்வை விளக்கவே இந்த ஒரு யுகம் போதாது!!! நாமெல்லாம் அவர்களின் சகாப்தத்தில் மிக சிறிய பங்களிப்பையே பேசி, எழுதி கொண்டிருக்கிறோம்... அவர்தம் அரிய ஆவணங்கள், புகைப்படங்கள் - அருமை சகோதரர்கள் வசம் இருப்பதை இங்கு பதிவிட்டு எல்லோரும் அறிய ஆவன செய்வோம்... மீண்டும் நமது மக்கள்திலகம் திரி பார்வையாளர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பேருஉவகை அடைகிறேன்...நன்றி...