தான் ஈடுபடும் கலையிலேயே தனக்கு ஒரு நல்ல சீடர் அமைவது குருவுக்கே பெருமை. அந்த வகையில் நமது பாரம்பர்ய இசையின் தொடர் சங்கிலியின் கடைசி முடிச்சியாக திகழும் இளையராஜா என்ற சீடரை பெற்ற மெல்லிசை மன்னர் புண்ணியம் செய்தவர். தமிழ்த் திரையுல இசை சாம்ராஜ்யத்தின் மிக முக்கிய நிகழ்வாக, மெல்லிசை மன்னரும், இசை ஞானியும் இணைந்து பணியாற்றிய இசைப் பிரவாகத்தினை கருதுகிறேன்.

இறுதி அஞ்சலி உரையில் கூட, எல்லாரும் சொல்ல மறந்த ஒன்றை முக்கியப்படுத்தி சொன்னார் இளையராஜா. அதுதான் திராவிட கழக வளர்ச்சிக்கு மெல்லிசை மன்னரின் பங்கு.