Page 132 of 400 FirstFirst ... 3282122130131132133134142182232 ... LastLast
Results 1,311 to 1,320 of 3992

Thread: மனதைக் கவரும் மதுர கானங்கள் - பாகம் 4

  1. #1311
    Senior Member Veteran Hubber rajraj's Avatar
    Join Date
    Oct 2004
    Posts
    3,364
    Post Thanks / Like
    Rajesh,
    Good to see MKT songs here. If you want lyrics in a hurry please visit MKT thread in memories of yesteryears section.
    " I think there is a world market for may be five computers". IBM Chairman Thomas Watson in 1943.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1312
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    மிகவும் அருமை ராஜேஷ் . என் தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் . என்ன குரல் வளம் - இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் - சிவன் அவர்களின் " நானொரு விளையாட்டுப் பொம்மையா " பாடலும் மிகவும் பிரசித்தம் . கேட்டுருக்கிண்டீர்களா ?

    ராகம் நவரஸ கன்னட தாளம் ஆதி
    பல்லவி
    நானொரு விளையாட்டு பொம்மையா - ஜகன்னாயகியே உமையே உந்தனுக்கு (நானொரு)
    அனுபல்லவி
    நானிலத்தில் பல பிறவி எடுத்து திண்டாடினது போதாதா உந்தனுக்கு (நானொரு)
    சரணம்
    அருளமுதைப் பருக அம்மா அம்மாவென்றலுருவதைக் கேட்பதானந்தமா
    ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே திருவுள்ளம் இரங்காதா உந்தனுக்கு (நானொரு)

    வரிகள் நம் இயல்பான வாழ்க்கையின் ஒரு எதிரொலி ......

  4. Likes rajeshkrv liked this post
  5. #1313
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Good Morning


  6. #1314
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 103

    பாகம் 2 - தந்தை


    உண்மை சம்பவம் 14

    பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

    அதிகமாக அப்பாவுடன் நான் பேசியதில்லை - அவர்கள் திருமணம் செய்துகொண்டு 18வருடங்களுக்குப் பிறகுதான் பிறந்தேன் - என்றுமே அப்பாவிடம் ஒரு வித பயம் . ஏதாவது விவாதித்தால் , உடனே மரியாதை தெரிகிறதா பார் உன் மகனுக்கு - எதிர்த்துப்பேசுகிறான் என்பார் . எல்லாமே எனக்கு அம்மா தான் - கல்லூரியில் , அந்த ஸ்டேட் லேயே முதல் மாணவனாக தேர்வானேன் --- நல்ல பெயருடன் காதலும் கேட்க்காமலேயே வந்தது ---- பானு சந்தித்த முதல் நாளிலேயே அம்மா, அப்பாவை மறக்க வைத்துவிட்டாள் ---காதல் வளந்தது - உள்ளே பயமும் வளர்ந்தது - அப்பாவிடம் எப்படி சொல்வது ? -----

    அம்மாவிடம் ஓடினேன் - ஆச்சாரம் மிகுந்தவள் - தன் மருமகளைப்பற்றி அவளை சுற்றி ஒரே பெரிய கற்பனைக்கோட்டையையே கட்டி வைத்திருந்தாள் . ஒரே நிமிஷத்தில் அதைப்போட்டு உடைக்கப்போகிறேன் -- அப்பா ---- கேட்கவே வேண்டாம் - ஒரு பூகம்பத்தை வீட்டுக்குள் ஏற்படுத்திவிடுவார் ---

    அம்மாவிடம் மெதுவாக பானுவின் புகைப்படத்தைகாட்டினேன் - ஏதோ கிழித்துப்போட்ட பேப்பரை பார்த்ததுபோல அம்மா அதை பார்த்துவிட்டு ரசம் கொதிக்கிறதா என்று பார்க்க சென்றுவிட்டாள் ---
    முதல் முயற்ச்சியே தோல்வி ..... பானுவை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்தால் ------ ஒருவேளை அம்மாவிற்கு பிடித்து விட்டதென்றால் அப்பாவை அவள் சமாதனம் செய்துவிடுவாள் ----

    இரண்டாவது கட்டம் - பானுவை வீட்டிற்கு கூடிக்கொண்டு வந்தேன் அப்பா வீட்டில் இல்லாத சமயத்தில் --- அம்மாவிடம் அறிமுகம் செய்தேன் --- வீட்டுக்கு யார் வந்தாலும் செய்ய படும் அதே உபசரணைகளைத்தான் அம்மா அவளுக்கும் செய்தாள் - பானு சென்ற பிறகு அம்மாவிடம் ஒரு மாறுதலும் இல்லை -- ஒரு பதிலும் இல்லை .சில மாதங்கள் செலவழிந்து விட்டது - பானுவை மறக்க முடியவில்லை - புதிய படிப்பிலும் நாட்டம் இல்லை - இவ்வளவு வருத்தமாக இருந்தாலும் ஏனோ தாடி மட்டும் வளரவே இல்லை .

    அம்மாவிடம் இருந்து செய்தி வந்தது - " ராஜன் உனக்கு பெண் பார்த்தாகிவிட்டது - உடனே புறப்பட்டு வரவும் -அம்மா !"

    மனம் கணத்தது - என் வாழ்க்கையை என் விருப்பபடி அமைக்ககூடாதா ? அப்பா அம்மா பிறகு எதற்க்காக ??? " என்னவோ கேள்விகள் - விரைந்தேன் வீட்டுக்கு - நான் ஒன்றும் ஒரு கைபொம்மை அல்ல என்று சொல்ல ---அங்கே நான் கண்ட காட்சி --- நிச்சியதார்த்தம் எனக்கும் , என் உள்ளத்தில் இருக்கும் பானுவுக்கும் தான் ---- எப்படி இது ? அப்பா எப்படி ஒத்துக்கொண்டார் ? ஒன்றுமே புரியவில்லை - ஒரு பக்கம் எல்லை இல்லாத சந்தோஷம் , மறு பக்கம் அப்பாவை சரியாக புரிந்துகொள்ளவில்லையே என்ற ஒரு தாழ்வு மனப்பான்மை ... என் கதவை யாரோ தட்டினார்கள் -- அப்பா தான் நின்று கொண்டிருந்தார் --- " ராஜன் ஒரு சந்தோஷத்தைப் பெற நாங்கள் 18 வருடம் தவம் இருந்தோம் - உன் சந்தோஷத்தை ஒரு நொடியில் அழித்து விட எப்படி எங்களுக்கு மனம் வரும் ?

    உன் வாழ்க்கை என்பது ஒரு காத்தாடியில் கட்டப்பட்ட ஸ்ட்ரிங் யைப்போல , அந்த ஸ்ட்ரிங் யை வெட்டி விட்டால் , காத்தாடி இன்னும் சுதந்திரமாக பறக்கும் , இன்னும் உயரே பறக்கும் -- சற்று நேரத்தில் ஒய்ந்து கீழே விழுந்து விடும் - உறவுகளும் , நமது பண்பாடுகளும் , நண்பர்களும் , குடும்பமும் உன் வாழ்க்கை என்கிற காத்தாடியில் கட்டப்பட்டுள்ள ஸ்ட்ரிங் - அதை நீ நீக்க நினைத்தால் அந்த கீழே விழும் காத்தாடியின் நிலைமை தான் உனக்கும் . நீ காதலிப்பதை தவறாக சொல்லவில்லை - உன் வயது அப்படி -- ஆனால் ஸ்ட்ரிங் காக நாங்கள் இருக்கிறோம் - கவலைப்படாதே !" "Never go away from culture, family, friends and relationships as they help keep you stable while you are flying high."

    அப்பா !!--- எவ்வளவு நேரம் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் என்று இன்று வரை கணக்கு போட முடியவில்லை - அப்பா தந்த தைரியத்தால் இன்னும் கீழே விழாமல் மேலே உயர உயர பறந்து கொண்டிருக்கிறேன் ......


  7. Likes vasudevan31355, rajeshkrv liked this post
  8. #1315
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 104

    பாகம் 2 - தந்தை

    இவர் மனத்தில் தான் எத்தனை ஆசைகள் - தனக்கு ஒரு மகன் பிறப்பான் , அவன் தன்னைப்போலவே இருப்பான் --- நல்ல இடத்தில் பிறக்க குழந்தைகளுக்கும் கொடுத்து வைக்க வேண்டும் - அதிகமாக இருக்கும் இடத்தில் பிறந்தால் பெற்றவர்கள் குப்பைத்தொட்டியை நாடும் காலமாக மாறிக்கொண்டு வருகிற இந்த உலகத்தில் அன்பை சொரியும் ஒரு தந்தை கிடைத்து விட்டால் அந்த குழந்தையின் வளர்ச்சியில் குறைவேது ??

    எனக்கொரு மகன் பிறப்பான்
    அவன் என்னைப் போலவே இருப்பான்
    தனக்கொரு பாதையை வகுக்காமல்
    என் தலைவன் வழியிலே நடப்பான்
    ஹேய்..
    எனக்கொரு மகன் பிறப்பான்
    அவன் என்னைப் போலவே இருப்பான்
    தனக்கொரு பாதையை வகுக்காமல்
    என் தலைவன் வழியிலே நடப்பான்

    காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
    மனித குலம் வாழ உழைப்பான்
    அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
    சின்னஞ் சிறுவரை அழைப்பான்
    காக்கை இனம் வாழும் வாழ்க்கை பார்த்து
    மனித குலம் வாழ உழைப்பான்
    அண்ணன் தம்பியாய் அன்பு கொள்ளவே
    சின்னஞ் சிறுவரை அழைப்பான்
    இரண்டு வரி கொண்டு மூன்று நெறி கண்ட
    குறளின் பொருள் தேடிச் செல்வான்
    நாளை வருகின்ற வாழ்வு நமக்கென்று
    ஏழை முகம் பார்த்து சொல்வான்
    ஏழை முகம் பார்த்து சொல்வான்

    (எனக்கொரு மகன் பிறப்பான் )

    கல்லைக் கனியாக்க கனவை நனவாக்க
    கையில் ஏர் கொண்டு வருவான்
    சாந்தி வழி என்று காந்தி வழி சென்று
    கருணைத் தேன் கொண்டு தருவான்
    உயிரைத் தமிழுக்கும் உடலை மண்ணுக்கும்
    உதவும் நாள் கண்டு துடிப்பான்
    சுற்றிப் பகை வந்து சூழும் திரு நாளில்
    வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்
    வெற்றித் தோள் கொண்டு முடிப்பான்

    (எனக்கொரு மகன் பிறப்பான் )

    Last edited by g94127302; 23rd June 2015 at 07:50 AM.

  9. Likes Russellmai, vasudevan31355, rajeshkrv liked this post
  10. #1316
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    கருவின் கரு - 105

    பாகம் 2 - தந்தை



    இங்கே பாருங்கள் - இவர் மனம் ஒடிந்து ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ -- என்று பாடுகிறார் - இரு பாடல்கள் , ஆனால் கருத்து ஒன்றே ! தன் இயலாமை , முடியாமை - இந்த ஆமைகளின் நடுவே அற்புதமாக பிறந்த ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது - காதலில் பெருமை இல்லாத கடமையில் ஈன்ற ஒரு குழந்தையை எப்படி பேணி பாதுக்காப்பது என்ற கவலை ---- இருந்தாலும் சந்தோஷத்தை அவரால் மறைக்க முடியவில்லை - வார்த்தைகளில் வேதனை - உள்ளத்தில் ஒரு இனம் புரியாத ஆனந்தம் - கலந்த நடிப்பு , பாடல் , கருத்துள்ள வரிகள் - இந்த குழந்தையும் புண்ணியம் செய்த குழந்தைதான் இப்படி ஒரு தந்தை கிடைக்க

    மண்வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய், கண்மலர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்.. நீ வளர்ந்து மரமாகி நிழல் தரும் காலம்வரை தாய்மனதை காத்திருப்பேன்.. தங்கமகனே!


  11. Thanks adiram, vasudevan31355 thanked for this post
    Likes adiram, Russellmai, vasudevan31355 liked this post
  12. #1317
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ரவி
    தந்தை பாடல்களில் ஊடே நுழைந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பகிர்ந்து கொள்ள தாங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.

    ஒரு தந்தை தன் பிள்ளையை எப்படியெல்லாம் மனதில் நேசிக்கிறான், அதுவும் சிறு வயதில் தாயை இழந்து தான் வளர்க்கும் பிள்ளையின் மேல் அவனுடைய பாசம் எந்த அளவிற்கு இருக்கிறது.. இது போன்ற சூழ்நிலை பலருடைய வாழ்வில் நேரிட்டிருக்கலாம். சிலரோ அல்லது பலரோ, சந்தர்ப்பத்தின் வசமாகவோ அல்லது தேவைக்காகவோ மறுமணம் செய்வதுண்டு. அப்போது தன் குழந்தையை சிலர் எப்படி வளர்ப்பதெனத் தெரியாமலோ அல்லது எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோ இருக்கலாம். இது சராசரி ஆண்களின் நிலைப்பாடாக கடந்த காலங்களில் இருந்துள்ளது. ஆனால் அதையும் தாண்டி எத்தனையோ பேர் தன் உயிருக்குயிரான மனைவியின் மேல் தாங்கள் வைத்துள்ள அன்பின் காரணமாக மறுமணம் செய்து கொள்ளாமல் தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட தந்தைமார்களின் மனநிலையை சித்தரிக்க இதை விட சிறந்த பாடல் இருக்கவே முடியாது எனக் கூறலாம்.

    இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் பொழியும் பாசத்தை அப்படியே உணர்வு பூர்வமாக திரையில் வடித்துள்ள நடிகர் திலகம் தமிழகத்தின் பொக்கிஷம் என்பதற்கு இப்பாடல் மிகச்சிறந்த உதாரணம்.

    இப்பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் முக உணர்வுகளைப் பற்றித் தனியாக நடிகர் திலகம் திரியில் Definition of Style தொடரில் பின்னர் காண்போம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்த வசீகரமான முகத்தை வைத்துக் கொண்டு டூயட், சண்டை என சாமான்யமான விஷயங்களை செய்து வணிக ரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டிருந்தால் ......

    இந்தப் பாட்டு மனதில் ஒரு பாதிப்பை ஏற்படுத்த வில்லையென்றால் அங்கே மனதே இல்லையென்று பொருள்.



    பாடல் வரிகளே சொல்லி விடும்

    நான் பெற்ற செல்வாம் நான் பெற்ற செல்வம்
    நலமான செல்வம் தேன்மொழி பேசும்
    சிங்காரச் செல்வம் சிங்காரச் செல்வம்
    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
    நான் பெற்ற செல்வம்

    தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
    சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
    தொட்டால் மணக்கும் ஜ்வ்வாது
    சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு
    எட்ட இருந்தே நினைத்தாலும்
    எட்ட இருந்தே நினைத்தாலும்
    இனிக்கும் மணக்கும் உன் உருவம்
    இனிக்கும் மணக்கும் உன் உருவம் நீ

    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
    நான் பெற்ற செல்வம்

    அன்பே இல்லா மானிடரால்
    அன்னையை இழந்தாய் இளம் வயதில்
    அன்பே இல்லா மானிடரால்
    அன்னையை இழந்தாய் இளம் வயதில்
    பண்பே அறியாப் பாவியர்கள்
    பண்பே அறியாப் பாவியர்கள்
    வாழுகின்ற பூமியிது நீ அறிவாய் கண்ணே

    நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
    தேன்மொழி பேசும் சிங்காரச் செல்வம்
    நான் பெற்ற செல்வம்...

    நன்றி யூட்யூப் இணைய தளம்


    இதே போன்று தன் பிள்ளையைப் பற்றி மனைவியும் கணவனும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் இப்பாடலும் தந்தையின் மேன்மையை மிகச் சிறப்பாகக் கூறுகிறது. ஒவ்வொரு வரியும் என்ன அற்புதமான தத்துவத்தைக் கூறுகிறது..

    பணம் படைத்தவன் படத்திலிருந்து, மாணிக்கத் தொட்டில் இங்கிருக்க மன்னவன் மட்டும் அங்கிருக்க...

    http://www.inbaminge.com/t/p/Panam%20Padaithavan/
    Last edited by RAGHAVENDRA; 23rd June 2015 at 10:04 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  13. Thanks sss, adiram, Russellrqe, vasudevan31355 thanked for this post
  14. #1318
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்



    (நெடுந்தொடர்)

    11

    'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்'



    பாலா தொடரில் மீண்டும் எம்.ஜி.ஆர் அவர்களின் படப் பாடல். பத்மினி பிக்சர்ஸ் 'தேடி வந்த மாப்பிள்ளை'(1970)படத்திலிருந்து.

    அக்மார்க் எம்.ஜி.ஆர் டிரேட் மார்க் பாடல். ஒரு வித்தியாசம். பாடகர் திலகத்திற்குப் பதிலாக பாலா.

    பெரும்பாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் இன்ட்ரோ பாடல்களை டி.எம்.எஸ் அவர்கள் பாடக் கேட்டு பழகிப் போன காதுகளுக்கு அதுவும் சுறுசுறு பாடலை பாலா பாடிக் கேட்டதில் தனி சுகம் இருந்ததை, இருப்பதை மறுக்க முடியாது. கொஞ்சம் குரல் பொருந்தாமல் இருந்தாலும், தாய்ப் பாசத்தோடு கொள்கைப் பிடிப்பும் உள்ள பாடல் ஆதலால் பாலாவும் சிறப்பாகப் பாடி இந்தப் பாடலை சூப்பர் டூப்பர் வரிசையில் கொண்டு வந்து சேர்த்து விட்டார். எம்.ஜி.ஆர் அவர்களின் மிகச் சிறந்த பாடலாகவும், மிக இலகுவாக அனைவரும் எளிதில் பாடிப் பார்க்கும் பாடலாகவும், தன்னம்பிக்கை ஊட்டும் பாடலாகவும், தாயின் பெருமை பேசும் பாடலாகவும் பல சிறப்புகளைப் பெற்று விட்டது இப்பாடல்.

    பாலாவுக்கு இன்னொரு வெற்றி. காதல் பாடல்களில் மட்டுமல்ல...பாசத்தோடு கூடிய வீர உணர்ச்சிப் பாடல்களிலும் தன்னால் சோபிக்க முடியும் என்று நிரூபித்த பாடல் இது.



    எம்.ஜி.ஆர் அவர்கள் இப்பாடலில் வழக்கத்தை மீறிய சுறுசுறுப்புக் காட்டுவார். நீலக் கலர் பேண்ட்டும், சிகப்புக் கலர் பட்டுச் சட்டையுமாக மனிதர் சின்னப் பிள்ளை போல அங்கும் இங்கும் தாவி, ஆடி, ஓடி, சோபாவைத் தாண்டி, மாடிப்படிகளின் பிடிகளிலிருந்து வழுக்கித் தவழ்ந்து, அன்னை வேடம் பூண்டிருக்கும் எம்.வி ராஜம்மாவையும் சுறுசுறுப்பாக்கி பாடலை மேலும் விறுவிறுப்பாக்குவார்.

    அவரது கையில் இருக்கும் நீல நிற சூட்கேஸ் அப்படியே Sony Vaio லேப்டாப்பை நினைவூட்டி இந்தக் காலத்திற்கும் பொருத்தமாய் இருப்பது போல் தோன்றுகிறது. பாடலுக்கேற்றவாறு அதிலேயே தாளமும் போடுவது பொருத்தமே.

    கல்லூரிப் படிப்பு முடித்து விட்டு வரும் மகன் தாயிடம் தான் அங்கிருந்து வங்கி வந்த பரிசுக் கேடயத்தை உடனே காட்டாமல் கொஞ்சம் ஆட்டம் காட்டி, போக்குக் காட்டி, தாயின் பெருமை எத்தகையது என்பதை தரணிக்கு உணர்த்தி பாடும் பாடல்.

    ரவி சாரின் கருவின் கரு நினைவுக்கு வருகிறது.



    கலரில் தாய் வேடம் 'ஞான சௌந்தரி'க்கு. கணவர் எடுத்த படத்தில் நாயகனுக்குத் தாய். இவர் கொஞ்சம் உதடுகளை குவித்து சிறுபிள்ளை சாக்லேட் கிடைக்காமல் வெம்புவது போல் அழுவது மிக இயல்பாய் இருக்கும். இரக்கத்தையும் வரவழைக்கும். கர்ணனில் குந்தி தேவியாய் நடிகர் திலகத்துடன் இவர் வாழ்ந்த அந்த வரம் கேட்கும் காட்சி சாகா வரம் பெற்ற காட்சி அன்றோ! இவரைப் பார்த்தாலே குந்தி தேவியாகத்தானே தெரிகிறார்.

    வாலி தாயின் பெருமைகளை மகன் விளக்குவது போல அருமையான வரிகளைத் தர, குரலில் பாலா அதைப் புரிந்து கொண்டு இளம் வழுக்கைக்குரலில் இனிமையாகப் பாட, தாய்ப் பாடல் என்றால் அது ஸ்லோவாகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியை மாற்றி அதை சுறுசுறுப்பு பாடலாக எம்.ஜி.ஆர் அவர்கள் மாற்றிக் காட்ட, 'மெல்லிசை மன்னர்' எளிமையான, இனிமையான இசை தர, பாடல் ஹிட்ட்டடிக்காமல் வேறென்ன செய்யும்?



    'தேடி வந்த மாப்பிள்ளை' நிஜமாகவே ஒரு ஜாலிப் படம். படம் நெடுக இழையோடும் காமெடி இப்படத்தின் தனிச் சிறப்பு. பாடல்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டும் ரகம். எம்.ஜி.ஆர், ஜெயா, ஜோதிலஷ்மி, (படத்தின் மிகப் பெரிய பலம் இவர்...கொடி கட்டிப் பறப்பார் இந்த 'பிக்பாக்கெட் ராணி' ஹீரோயினை பின்னுக்குத் தள்ளி) அசோகன், சோ, மேஜர் என்று அவரவர்களும் ஜாலியாக பண்ணியிருப்பார்கள்.

    'மாணிக்கத் தேரில் மரக்கதக் கலசம் மின்னுவதென்ன' பாடலின் சீரியல் விளக்குகளின் அலங்காரம் இப்போது கூட நம்மை வியக்க வைக்கும்.

    (கனவுக்காட்சி மின்சார ஒளி அமைப்பு கே.சாத்தையன், கே.ஆர்.பாலகிருஷ்ணன் என்று தனியாகவே டைட்டில் போட்டு எலெக்ட்ரீஷியன்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்)

    அது மட்டுமல்ல... எனக்கு மிக மிகப் பிடித்த தொட்டுக் காட்டவா, (பியானோ இசையில் பித்து கொள்ள வைப்பார் மன்னர்) சொர்க்கத்தைத் தேடுவோம் ... தபலா மாமா டோலக்கு பாட்டி, ('பாடகர் திலகம்' போதை கொண்டவன் குரலில் பரவசம் கொள்ள வைப்பார்) இடமோ சுகமானது, (அடடா! என்ன ஒரு பாடல்! என்ன படமாக்கம்! என்ன ஒரு உற்சாகத் துள்ளல்! ஜோதியே பாதி ஆக்கிரமிப்பு செய்வார்.) அட ஆறுமுகம், ராட்சஸியின் குரலில் 'ஆடாத உள்ளங்கள் ஆட' ('ஆடுவது உடலுக்கு விளையாட்டு' 'குமரிக் கோட்டம்' படப் பாடலை நினைவுபடுத்தும் பாடல். இதில் என்ன கொடுமை என்றால் இணையத்தில் சில தளங்களில் இந்தப் பாடலை 'குடியிருந்த கோயில்' படத்தின் பாடல் என்று தவறாக தகவல் தந்துள்ளனர். 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' பாடலால் இந்தக் குழப்பம் போல. கொடுமைடா சாமி!) என்று இனிக்க இனிக்க பாடல்கள். படம் போவதே தெரியாது.

    எம்.ஜி.ஆர் படங்களிலிருந்து கொஞ்சம் பாதை விலகி வித்தியாசம் காட்டும் 'கலகல' மாப்பிள்ளை. கலர்ஃபுல் மாப்பிள்ளை.

    இத்தனை அம்சங்கள் இருந்தாலும் தன் தனித்துவக் குரலால் பாலாவும் தன் பங்கிற்கு 'வெற்றி மீது வெற்றி வந்து' அவரைச் சாரும்படி செய்து கொண்டது இன்னும் மகத்துவம் அல்லவா!

    ஹேட்ஸ் ஆஃப் பாலா.




    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்
    பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
    பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ
    நீ பேசுகின்ற தெய்வம் என்பதுண்மை அல்லவோ
    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

    தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
    தாலாட்டில் தமிழைக் கண்டேன்
    தாய்ப் பாலில் வீரம் கண்டேன்
    தாலாட்டில் தமிழைக் கண்டேன்
    உண்ணாமல் இருக்கக் கண்டேன்
    உறங்காமல் விழிக்கக் கண்டேன்
    உண்ணாமல் இருக்கக் கண்டேன்
    உறங்காமல் விழிக்கக் கண்டேன்
    மற்றவர்க்கு வாழுகின்ற உள்ளம் என்னவோ
    அது உன்னிடத்தில் நானறிந்த பாடம் அல்லவோ

    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்

    அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
    பிள்ளையினால் பன்னீராகும்
    அன்னை சிந்தும் கண்ணீரெல்லாம்
    பிள்ளையினால் பன்னீராகும்
    ஆசை தரும் கனவுகள் எல்லாம்
    அவளால்தான் நனவுகள் ஆகும்
    ஆசை தரும் கனவுகள் எல்லாம்
    அவளால்தான் நனவுகள் ஆகும்
    அன்று தொட்டு நீ நினைத்த எண்ணம் என்னம்மா
    அதை இன்று தொட்டு நான் முடிக்கும் வண்ணம் பாரம்மா

    வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
    அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்


    Last edited by vasudevan31355; 23rd June 2015 at 11:29 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  15. Likes Russellmai, Russellrqe, uvausan, Gopal.s liked this post
  16. #1319
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Thedi vantha mappillai- One of my favourites also.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  17. #1320
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Cameroon
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    ரவி
    தந்தை பாடல்களில் ஊடே நுழைந்து எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை பகிர்ந்து கொள்ள தாங்கள் அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்.
    என்ன சார் - பெரிய பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லுகிறீர்கள் ? உங்களுக்கு இல்லாத உரிமையா ?? - இந்த பாடலை நாளை போடுவதாக இருந்தேன் - ஆனால் இவ்வளவு அழகாக நீங்கள் வர்ணித்தைப்போன்று கண்டிப்பாக என்னால் எழுதி இருக்க முடியாது ... மாணிக்க கட்டிலை பாகம் ஒன்றில் கவர் செய்து விட்டேன் ..... நன்றி மீண்டும் , இந்த பாகத்தில் பங்கு ஏற்று கொள்வதற்கு .

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •