Results 21 to 30 of 38

Thread: முயற்சிகள்..

Threaded View

  1. #25
    Senior Member Senior Hubber chinnakkannan's Avatar
    Join Date
    Apr 2006
    Location
    BOOLOGAM
    Posts
    996
    Post Thanks / Like
    மதுரம் மாமி
    கொள்ளை அழகு
    பொன்னிறம்
    நாலுவீடு தள்ளி தான்..
    முக அழகை விட
    கூந்தல் தான்
    விட்டால் தரை பெருக்கும்
    சின்ன வயது முதல்
    நானும் என் அக்காவும்
    அவர் ரசிகைகள்..

    அவரும்
    பார்த்துப் பார்த்துத் தலைசீவுவார்..
    ஏதோ மூலிகையாம்..
    அடர்த்தியாக
    கொட்டாமல் இருப்பதைப் பார்த்து
    கல்லூரி செல்லும் வயதில்
    இருந்த எங்களுக்கு
    நம நம என்றிருக்கும்..
    பின் பக்க ப்ளவுஸின்
    வெட்டுப்பட்ட் இடத்துடன்
    நின்றுவிடும் முடி மீது
    கோபம் கோபமாய் வரும்..
    இருப்பினும் பழகிவிட்டது..
    அவரிடமே சொல்வோம்
    உங்களோட கூந்தலிருக்கே
    எனச் சொன்னால் சிரிப்பார்..
    எங்கள் மீதும் பாசம் அவருக்கு

    காலப் போக்கில்
    கல்யாணம் ஆகி
    நான் துபாய், என் சகோதரி யுஎஸ் எனச்
    சென்றுவிட
    ஒருசில வருடம் கழித்து மதுரை வந்தால்
    மதுரம் மாமி வீடு இல்லை..
    வேறுயாரோ வாங்கி விட்டார்களாம்
    அம்மாவிடம் கேட்டால் தெரியாதுடி
    எப்பவோ காலி பண்ணிட்டுப்போய்ட்டா என்றவள்
    பாவம் ரொம்ப க் கஷ்டப் பட்டா
    மொதல்ல புருஷன்..
    குழந்தைதான் இல்லையோன்னோ..
    அப்புறம் இவளுக்குத் தான்..
    என்னம்மா ஆச்சு..
    இரு நீயே நேர்ல பாரு
    அண்ணா நகர் தான்
    நாளைக்குப் போலாம்..

    அந்த ஃப்ளாட் போய் பெல்லடித்து
    கால்மாற்றி கால்மாற்றி நின்று
    இன்னும் குட்டையாயிருந்த
    கூந்தலைத் தடவியபடி நின்றதில்
    கதவு திறக்க
    கண்களின் வழியாக நெஞ்சினுள் இடி..

    மாமி தான்
    ஆனால் மொட்டை அடித்து..
    இல்லை இல்லை
    முடி கொட்டிவிட்டது போலும்
    முக்காடாய் சேலையிட்டு
    வாடி க்லா எப்பவந்த உள்ளவா
    மாமி வாங்கோ என அம்மாவிடமும்..
    அமர்ந்து கை பற்றினேன்..
    மாமி என்னாச்சு

    என்னமோ வியாதி..
    கீமோ பண்றேன்னு சொல்லி..
    ம்ம் எல்லாம் கொட்டிப் போச்சு..
    ரொம்பப் பெய்ன் டி..
    தாங்கத்தான் முடியலை..
    இப்போ பெட்டர்..

    மாமி ரொம்ப அழகா இருக்குமே மாமி
    எனக்குத் தாங்கலை..எனச் சொல்ல
    போறதுடி போ..முடி தானே..
    தானா வந்துச்சு
    பாத்துக்கிட்டேன்
    போகணும்னு ஆசப்பட்டுச்சு
    போய்டுச்சு எனச் சொல்லி
    வெளிறிச் சிரித்தாள்..
    Last edited by chinnakkannan; 25th August 2014 at 01:12 PM.

  2. Likes venkkiram liked this post

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •