Results 1 to 10 of 536

Thread: Maestro Ilayaraja News and Tidbits 2014

Hybrid View

  1. #1
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    அந்த திரியில் நிறைய இசை ரசிகர்களின் பங்களிப்பு அதிகம். எல்லோரும் எழுதுகிறார்கள். நிறைய சுவராஸ்யமான பாடல்களின் நினைவூட்டல், நல்ல விஷயம் தான்.

    ஆனால் அங்கு எழுதுவோரில் சிலர் மிகவும் தலை கணத்துடன், மதுர கானங்களை பற்றி மட்டும் சிலாகிக்காமல், ராஜா சாரை காய்ச்சி எடுக்கிறார்கள்.


    அவன் இவன் நீ என்று ஏக வசனத்தில் அவரை ஏளனமாய் பேசி முகம் சுளிக்க வைத்து.. இதில் கொடுமை என்னவென்றால், சொல்லி வைத்தது போல் இவர்கள் எல்லோரும் அவருடைய ரசிகர்களாம். பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    பைபோளார் டிசார்டர் கொண்டோரின் இயல்பில் சிலர் எழுத்தை அங்கு காண முடியும். பாவம், இவர்களிடம் மாட்டிகொண்டு இவர்களின் சுற்றத்தார் என்ன பாடு படுகிறார்களோ?
    உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.

    உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?
    Last edited by Gopal.s; 16th August 2014 at 03:08 PM.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  4. #3
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    உங்கள் அரைகுறை "3" படத்தை பார்த்து தெரிந்து கொண்டதை எல்லாம் பிரயோக படுத்த வேண்டாம். கீழ்த்தரமான செய்கைகளை பேச்சை கண்டிப்பது அகந்தை என்றால், அது அகந்தையாகவே இருக்கட்டும்.கோழை போல ஒளிந்து பர்சனல் abuse செய்தல் என்ன வியாதியில் சேரும்?காற்றிலடித்த காகிதம் போல எந்த ஊருக்கு சென்றாலும் குறுகிய புத்தி சிலருக்கு விடுவதில்லை.

    உங்கள் குடும்பத்தை பற்றி பேச வேண்டுமானால் சௌகரியமாய் பேசலாம்.அங்கு வந்து விடுகிறீர்களா?
    ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

    by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..

  5. #4
    Junior Member Devoted Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    https://m.facebook.com/story.php?sto...00002203075390 … pic.twitter.com/K9Rul61nGB


    இன்று எனது வாழ்க்கையில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான மூன்று நிகழ்வுகள் நடந்தது.

    ஒன்று : இன்று இசைஞானி இளையராஜா கலந்து கொள்ளவிருக்கும் அருணகிரிநாதர் திருவிழாவிற்கு ராஜா சார், என்னை அவசியம் வரச் சொன்னதாக நண்பரொருவர் தொலைபேசியில் சொன்னார். கண்டிப்பாக வந்து விடுகிறேன் என சொல்லிவிடுங்கள் என்றேன்.

    இரண்டு : விழா மேடையின் அருகே அவரை வரவேற்ற என்னை அழைத்து, மேடையில் அவரருகில் அமரச் சொல்லி, விழாக் குழுவினரை அழைத்து, கருணாவை பேசுவதற்கு அழையுங்கள் என்றார். அதன்படி என்னிடம் மைக் கொடுக்கப் பட, திடீரென பேச அழைக்கப் பட்டதால், முன் தயாரிப்பின்றி பேசிய சுருக்கமான பேச்சு இது.

    "இசைஞானி இளையராஜா அவர்களை இங்கே அழைத்து, அவரை மன சிம்மாசனத்தில் வைத்திருக்கும் வெகு ஜனங்களின் மத்தியிலே அமரவைத்து இந்த விழாவினை நடத்தும் விழாக்குழுவினருக்கு எனது நன்றியும், பாராட்டுதல்களும்.

    சில மாதங்களுக்கு முன் நான் துபாய் சென்றிருந்த போது, அங்கே எனக்கு கார் ஓட்டிய ஓட்டுநர் ஒரு தமிழர். அவரிடம், நீங்கள் எப்போது கடைசியாக தமிழகம் சென்றீர்கள் நாக் கேட்டதற்கு, ஏழு ஆண்டுகள் என்று பதிலளித்தார். அவருக்கு மகன் பிறந்த அன்று இரவு புறப்பட்டு துபாய் வந்தவர் இன்னமும் திரும்பிச் செல்ல முடியவில்லையாம். நான் அதிர்ந்து விட்டேன். எப்படி உங்களால், ஏழு ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து இருக்க முடிகிறது? எனக் கேட்டதற்கு, அவரது காரின் டேஷ்போர்டைச் சுட்டிக் காட்டினார். அங்கே இசைஞானி இளையராஜாவின் படம் ஒட்டப்பட்டிருந்தது.
    நான் மனம் நெகிழ்ந்து போன அந்த வேளையில், உரத்த குரலெடுத்து 'தென்பாண்டிச் சீமையிலே! தேரோடும் வீதியிலே!' பாடலைப் பாடினார். இந்தப் பாடல்தான் சார், எனக்கு ஏழு வருடமாக மகன் என்றார்.

    இப்படி, புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும், தாயகம் வாழ் தமிழர்களுக்கும், பெற்றத் தாயாக, தந்தையாக, மகனாக, மகளாக, மனைவியாக, காதலியாக, உற்றத் தோழனாக வாழ்ந்து வரும் எங்கள் இசைஞானியை பாதம் தொட்டு வணங்கி வரவேற்கிறேன்.

    சில மாதங்களுக்கு முன் அவர் உடல்நலமில்லாமல் இருந்த சமயத்தில், எமன் அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தான். ஒருவேளை இசைஞானியும் கூட, அவனுடன் செல்ல தயாராக இருந்திருக்கலாம். ஆனால், அவரது உயிர் கயிறு நேராக எங்கள் அண்ணாமலையாருடன் பிணைக்கப் பட்டிருந்ததைக் கண்ட எமன் வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான்.

    அண்ணாமலையார் விரும்பும் வரையிலும், இசைஞானி,ராகதேவன் எங்கள் இளையராஜா எங்களுடனே இருந்து, மேலும் மேலும் காலத்தினால் அழியாப் பாடல்களை தர வேணுமாய் எங்கள் திருவண்ணாமலை மக்கள் சார்பில் கேட்டு அமர்கிறேன்."

    ( இதை எழுதும்போது தெளிவாக எழுதியிருந்தாலும், மேடையில் ராஜாவின் முன்னே பேசும்போது லேசாக நா தழுதழுத்து கண்கள் கலங்கி விட்டேன்.)

    எதிரில் அமர்ந்திருந்த சில ஆயிரம் பேர்களிடம், எனது பேச்சுக்கு நல்ல கைத்தட்டல்களும், ஒரு சில கண்ணீர் துளிகளும் கிடைத்ததைக் கண்டேன். பேசி முடித்து இடம் திரும்பிய என்னை அழைத்து, 'ஒரு வார்த்தை கூட குறைவாக இல்லாமல், கச்சிதமா இருந்தது உன் பேச்சு! சமீபத்தில் நான் ரொம்ப ரசித்த பேச்சு இதுதான் என்று பாராட்டினார் இசைஞானி!'

    ஆக, ஒரு பேச்சாளனாகவும் நான் பாஸாகி விட்டேன்.

    அந்த மூன்றாவது விஷயம் என்ன எனக் கேட்கிறீர்களா?

    வேறென்ன? இசைஞானியுடன் நான் எடுத்துக் கொண்ட 'செல்ஃபிதான்'!

    இனி யாராவது என்னிடத்தில், உலகத்திலேயே உயரமான இடத்தில், உலகத்தின் ஆழமான இடத்தில், உலகத்தின் அழகான இடத்தில், என்று கேப்ஷன் போட்டு செஃல்பி எடுத்துப் போடட்டும்!

    அவனிடம் சொல்வேன்! அட முட்டாள்! நான் அத்தனையும் சேர்ந்த மூளை கொண்ட ஒரு மேதையுடனேயே, செல்ஃபி எடுத்து விட்டேன் என்று.

    -எஸ்கேபி. கருணா.

  6. Likes rajaramsgi liked this post
  7. #5
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajaramsgi View Post
    ஹா.. வேண்டாங்க... நீங்கள் வெட்டெரன் ஹப்பர். சீனியர். நீங்கள் வென்றதாகவே வைத்துகொள்வோம்... உங்கள் எழுத்தால் நல்ல விஷயங்களை நான் தெரிந்து கொண்டால் மட்டும் போதும். carry on.

    by the way, 3 படம் நான் பார்க்கவில்லை. நான் கோழையும் இல்லை. மேலும் மேலும் வரிந்து கட்டிக்கொண்டு வர வேண்டாமே..
    Bye Bye.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

Tags for this Thread

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •