Results 21 to 30 of 4007

Thread: மனதை கவரும் மதுர கானங்கள் இரண்டாவது பாகம

Threaded View

  1. #11
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    ஏணிப்படிகள்

    இப்படத்தில் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஒரு அருமையான பாடல்.

    கிராமத்து தியேட்டர் ஒன்றில் குப்பைகளை கூட்டி சுத்தப்படுத்தும் பணியில் இருப்பவர்கள் சிவகுமார் மற்றும் ஷோபா. சந்தர்ப்ப சூழ்நிலையில் சென்னை செல்லும் இவர்களில் சிவகுமார் முயற்சியால் ஷோபாவுக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது நட்சத்திரமாகிவிடுகிறார். ஆனால் உடனிருக்கும் சிவகுமார், ஷோபாவால் சிறுகச்சிறுக புறக்கணிக்கப்பட்டு, மீண்டும் கிராமத்து தியேட்டருக்கே குப்பை அள்ள வந்துவிடுகிறார். அப்போது கிராமத்தில் நடக்கும் பள்ளி விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நட்சத்திரம் ஷோபா வர, அந்த விழாவில் கண்பார்வையற்ற சிறுவன் பாடுவதாக இந்தப்பாடல்....

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
    அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்

    ஏற்றிவிட்ட ஏணி ஒன்று நின்றபடி நிற்கிறது
    ஏறிவிட்ட ஒருமனமோ வேறுவழி நடக்கிறது
    ஏற்றியது குற்றமில்லை ஏணியிலும் பாவமில்லை
    மாற்றியது கடவுள் என்னும் மாயக்காரன் லீலையம்மா

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
    அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்

    தேவனவன் கோயிலிலே கோடைவெயில் சுடுகிறது
    தேவியவள் வாசலிலோ செல்வமழை பொழிகிறது
    நல்லவர்க்கு பொருள் எதற்கு நாடிவரும் புகழ் எதற்கு
    அன்புகொண்ட மனங்களிலே அசைந்து அசைந்து நடப்பதற்கு

    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்
    அன்புமிக்க ஒருமனம் நல்லவர்க்கு ஒருகுணம்
    கண்ணிழந்த பிள்ளைக்கு தெய்வம் தந்த தரிசனம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •