Results 1 to 10 of 122

Thread: Why I Consider IR Unparalleled

Hybrid View

  1. #1
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சரி சார். glorification ,sycophancy ரொம்ப ரொம்ப தூரம் செல்வதால் என் சிற்றுரையை முடித்து விடுகிறேன்.

    மற்றவர்கள் எல்லோருமே,சுற்றியிருக்கும் மண்ணையோ,மக்களையோ,புல் பூண்டுகளையோ காணாது ,இலக்கியம்,மொழி அறியாது,அனுபவங்கள் அற்று, வானத்திலிருந்து தொபீரென்று இருபது வயதில் குதித்து தொழிலை கவனிக்க ஆரம்பிக்கிறோம்.இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் ராஜா சாரை தவிர.

    போதுமா? convince ஆகி ரொம்ப நேரமாகிறது.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #2
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சரி சார். glorification ,sycophancy ரொம்ப ரொம்ப தூரம் செல்வதால் என் சிற்றுரையை முடித்து விடுகிறேன்.
    தூற்றனும் என முன்முடிவு செய்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறீர்கள். இசையும், இசை உருவாக்கத்திற்கான பின்புலத்தின் மீதான அடிப்படை அறிவும் மேலோங்கி இருப்பதாக கருதி ஒருவரை இங்கே சிலாகிக்க முனையும்போது என்ன தவறு? ஒரு சாதாரண இசையமைப்பாளர் ஒரு சுமாரான மெலடி தருகிறார். அப்பாடலுக்கான பின்னணி இசையை சொதப்பியும் மெலடியால் பேசப்படுகிறார் என வைத்துக் கொள்வோம். அவருடைய ஆக்கத்தினை "பேஷ்! பேஷ்! சிறப்பாக இருக்கிறது! அருமையான இருக்கிறது! கேட்பதற்கு இன்பமாக இருக்கிறது! " எனப் புகழ்கிறொமென வைத்துக் கொள்வோம். அப்போ ராசைய்யாவின் ஆக்கங்களை என்னவாறு பாராட்டுவது? நமது பண்பாட்டின் தவறே அதுதான். இருக்கிற அட்ஜெக்டிவையெல்லாம் தேவையில்லாத இடத்தில் பயன்படுத்தி, சிலாகிக்க வேண்டிய ஒன்றிற்கு தேவையான பதங்களை ஒதுக்குவதில்லை..
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  4. #3
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by venkkiram View Post
    தூற்றனும் என முன்முடிவு செய்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றாக பதிவிடுகிறீர்கள்.
    VenkkiRam,

    I was under the impression that I have been discussing all along. If you think I am accusing I stand corrected. Of all the people,why IlayaRaja?
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  5. #4
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    VenkkiRam,

    I was under the impression that I have been discussing all along. If you think I am accusing I stand corrected. Of all the people,why IlayaRaja?
    மறுபடியும் மொதலேர்ந்தா? "Of all the people, Why சிவாஜி?" ன்னு நான் உங்கள கேள்வி கேட்கப் போறதில்ல.

    இசையைப் பத்திப் பேசினா, திடீரென ராசைய்யாவின் தனிப்பட்ட வாழ்க்கை, குணங்களைப் பேசுறீங்க! பின்னணி இசையில் சிறந்தவர் என ஒரு பதிவில் சொல்லிக்கொண்டே மொஸார்ட், பீதொவன்களிடமிருந்து ராஜா நகலெடுக்கிறார் என அடுத்த பதிவில் எதிர்மறையாக சொல்றிங்க. அப்புறம் நீங்களாகவே ராஜா எந்த இடத்தில் இருக்கிறார் என வரிசையும் படுத்திறிங்க.. எனக்கு அயற்சிதான் மேலோங்குது.

    சினிமா என எடுத்துக் கொண்டால்..எந்த ஒரு சிறந்த படைப்பாக இருந்தாலும் மற்ற எல்லாக் கலைஞர்களின் பங்களிப்பைக் காட்டிலும் இசைப் பணியாக ராஜாவின் உழைப்பு பெரியதாக நிற்கிறது, காலம் கடந்து பேசப்படுகிறது. எளிதாக மறந்துபோகக் கூடிய பலநூறு படைப்புக்கள் ராசைய்யாவின் பாடல்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இன்றும் நினைவில் நின்று பேசப்படுகிறது.

    சினிமா தவிர்த்து ராசைய்யாவின் பங்களிப்புகள் (பக்தி மார்க்கம், மற்றும் சாஸ்திரிய இசையில் அவரது முயற்சிகள் ) உணர்வு ரீதியிலும், இசை நுட்பத்திலும் பிரமாண்டமானவை.

    சினிமாவில் யாருமே இதுவரை செய்யாத ஒரு முயற்சி..அதையும் அவர் திறம்பட செய்து வெற்றிகண்டிருக்கிறார். ஹேராம் படத்தில் வேறொரு இசையமைப்பாளர் செய்த பாடலுக்கென்றெ படம்பிடிக்கப் பட்ட காட்சிகள் இவர் கைகளுக்கு வந்தபோது, அவர்களது உதட்டசைவு மற்றும் காட்சிகளுக்குப் பொருந்தும் வகையில் வேறொரு பாடல்களை உருவாக்கித் தந்திருக்கிறார். கமலஹாசன் சொன்னதையே குறிப்பிடணும் என்றால் "ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வைன்னு பியானோ வாசிச்சிருக்கேன். அதுக்கு சிவகாமி மகனிடம் சேதி சொல்லடின்னு பாட்டு போட்ருக்காரு! சிங்கம் அவரு!"

    ஆரம்பம் முதல் இன்றுவரை அவரது குரல் வழி எட்டிப்பார்க்கும் பலதரப் பட்ட உணர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாடலுக்கு வரிகளை கட்டமைப்பதிலும் சிறந்தவர்.

    நான் ஆரம்பத்தில் சொன்னதுதான்.. இதெல்லாம் கிளிப்பிள்ளைக்கு சொல்லி புரியவைக்குமாறு செய்வதே வீண். ராசைய்யா தன்னிகரற்றவர் என்பது தானாகவே உணர்ந்து நிறுவவேண்டியது.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  6. Likes mappi, Russellhaj liked this post
  7. #5
    Junior Member Devoted Hubber rajaramsgi's Avatar
    Join Date
    Mar 2009
    Location
    U.K
    Posts
    2
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சரி சார். glorification ,sycophancy ரொம்ப ரொம்ப தூரம் செல்வதால் என் சிற்றுரையை முடித்து விடுகிறேன்.

    மற்றவர்கள் எல்லோருமே,சுற்றியிருக்கும் மண்ணையோ,மக்களையோ,புல் பூண்டுகளையோ காணாது ,இலக்கியம்,மொழி அறியாது,அனுபவங்கள் அற்று, வானத்திலிருந்து தொபீரென்று இருபது வயதில் குதித்து தொழிலை கவனிக்க ஆரம்பிக்கிறோம்.இது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் ராஜா சாரை தவிர.

    போதுமா? convince ஆகி ரொம்ப நேரமாகிறது.

    I can understand glorification.. I glorify the man who is a genius, whose music brings peace and happiness in me. I don't see anything wrong with it. He is more than my dad, second to my son. I am very proud to do so.

    But what is sycophancy? I tried my best to look at its meaning and can't figure how any of these discussions are related to "
    the act of using flattery to win favour from individuals wielding influence"..

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •