Results 301 to 310 of 3997

Thread: மனதை மயக்கும் மதுர கானங்கள்

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்றைய ஸ்பெஷல் (5)

    மிக மிக அரிய பாடல்

    1973 -ல் வெளிவந்த, தாயகம் பிக்சர்ஸ் தயாரித்த 'வள்ளி தெய்வானை' படத்தின் மிக மிக அபூர்வ பாடல். அபூர்வ பாடகர்கள் இப்பாடலைப் பாடியுள்ளார்கள். தனசேகர், மல்லிகா என்ற பாடகர்கள்தான் அவர்கள்.



    'மலர்களின் ராஜா
    அழகிய ரோஜா'

    என்று தொடங்கும் மிக அழகிய பாடல்.
    ]



    மலர்களின் ராஜா
    அழகிய ரோஜா
    இளமங்கை வாழ்வின்
    தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

    காதலின் ராணி
    கலைதரும் வாணி
    என் இதய வானில்
    இன்ப ராணி ராணி ராணி மகராணி

    மலர்களின் ராஜா
    அழகிய ரோஜா
    இளமங்கை வாழ்வின்
    தங்கராஜா ராஜா ராஜா மகராஜா

    ஊரினில் உறவைத் தேடிடும் நினைவு
    பருவத் தேரினில் ஆடும் தெய்வத்தின் கனவு

    ஆசையின் பாசம்
    பேசிடும் உரிமை
    தன்மானத்தில் விளையும்
    உலகினில் பெருமை

    பூங்கொடி முகத்தில் புன்னகை வெள்ளம்
    அமுதத் தமிழிசை பாடும் கவிதைகள் சொல்லும்

    தலைமுறை புகழின் குலம் நலம் காப்போம்
    ஓராயிரம் காலத்து பயிர்வளம் சேர்ப்போம்.

    பாரத வீரர் மார்பினில் இணையும் (தேசிய நடிகர் சசிகுமாருக்கு புகழ்க் கிரீடம்)
    பாவையின் மனமே கனி போல் கனியும்
    வேதங்கள் ஓதி வளர்த்திடும்
    பேதம் அதை வென்றிட வேண்டும் தேசிய கீதம்

    மலர்களின் ராஜா
    அழகிய ரோஜா

    என் இதய வானில்
    இன்ப ராணி ராணி ராணி மகராணி

    லா ல லா லாலா....லா ல லா லாலா


    கேட்க கேட்க அவ்வளவு இனிமை.

    மல்லிகாவின் மந்திரக் குரல். (அதுவும் 'பாரத வீரர் மார்பினில் இணையும்' எனும் போது ஒரு ஹை பிட்ச் தூக்குவார் பாருங்கள்! வார்ரே வா!)

    சற்றே நடுங்கும் குரலில் எம்.எல்.ஸ்ரீகாந்தை நினைவு படுத்தும் தனசேகரன்.

    என்.எஸ்.தியாகாராஜன் என்பவர் இப்படத்தின் இசையமைப்பாளர்.

    இப்பாடலை வீடியோவில் அப்லோட் செய்த TFM Lover அவர்களுக்கு மிக்க நன்றி!

    இப்பாடலுக்கு youtube ல் comment பட்டியலைப் பார்க்கும் போது ஒரு இன்ப ஆச்சர்யம்.

    இப்பாடலுக்கு இசை அமைத்திருந்த என்.எஸ்.தியாகராஜன் அவர்கள் தன் கருத்தை இங்கு பதிவு செய்து TFM Lover அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்த போது என் நெஞ்சு நெகிழ்ந்தது உண்மை.

    (I am the music director N.STheyagarajan of this song and was looking for it.Thanks a lot for uploading TFML!)

    அதுவும் பாடலின் ஆரம்ப இசையும், இடையிசையும் அட்டகாசமான அட்டகாசம். இப்படிப்பட்ட திறமைசாலிகள் எல்லாம் எங்கு போனார்கள்?

    அதுவும் மல்லிகா 'மலர்களின் ராஜா' என்று கொஞ்சுவதும் தொடர்ந்து
    அழகிலே 'ர்ர்ர்ர்ரோஜா'... என்று ரோஜாவுக்கு அழுத்தம் தந்து பாடுவதும் நம்மை வியக்க வைத்து விடும்.

    தேசிய நடிகர் சசிகுமாரும், குமாரி பானுமதியும் பாடும் டூயட் பாடல் இது. நான் கூட இப்பாடலைப் பார்ப்பதற்கு முன் பயந்தேன் அருமையான இப்பாடலை எப்படிப் படமாக்கியிருப்பார்களோ என்று. நல்லவேளையாக பாடலைக் கெடுக்காமல் எடுத்திருப்பார்கள்.
    ]

    'அகத்தியர்' திரைப்படத்தில் சிவக்குமாருடன் பானுமதி.



    எம்.பானுமதி நடிகர் திலகம் நாடகக் குழுவில் பெரும் அங்கம் வகித்தவர். நிறைய படங்களிலும் நடித்துள்ளார். கோபால் உச்சி குளிர்ந்து மகிழ்வாரே 'காதல் ஜோதி' படத்தில் 'ஓம் மேல கொண்ட ஆச' ன்னு. அந்தப் படத்தில் விதவையான இளம்பெண்ணாக (!) பானுமதி நடித்திருப்பார். சற்று முற்றிய முகம் இவருக்கு. இதனால் இளமை மிஸ்ஸிங். 'வியட்நாம் வீடு' படத்தில் நாகேஷுடன் ஜோடியாக 'மை லேடி... கட் பாடி... நீயே எந்தன் ஜோடி' பாடலுக்கு ஆடியிருப்பார். 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' படத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடும் புகழ் பெற்ற பாடலான 'திருத்தணி முருகா... தென்னவர் தலைவா!' பாடலுக்கு நாட்டியம் சிறப்பாக ஆடியிருப்பார் பானுமதி. நிறைய தொலக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.

    காதலர்கள் டூயட்டிலேயே நமது தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து அஞ்சலி செலுத்துவது அற்புதம். இப்போது படங்களில் தேசியக் கொடியை யார் காட்டுகிறார்கள்? டாஸ்மாக் கடைகளைத் தான் காட்டுகிறார்கள்.
    ]

    பல பேர் இப்பாடலைக் கேட்டிருக்க வாய்ப்பில்லை. கேட்டிருந்தாலும் மறந்திருக்கக்கூடும். இப்போது கேளுங்கள். ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.]



    இப்படத்தில் ரவிச்சந்திரன் பிரமிளா இணை. (பூத்திருந்து காத்திருந்தேன் நிலமகள் போலே) திரைக்கதை இயக்கம் தில்லை ராகவன்.
    Last edited by vasudevan31355; 1st May 2016 at 11:04 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •