http://www.dinamalar.com/news_detail.asp?id=996870

அதிக சம்பளம் பெறுவோர் பட்டியலில் தோனி


நியூயார்க் : சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். சர்வதேச அளவில், அதிக சம்பளம் பெறும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. பட்டியலின் முதன்மை இடங்களில், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளாய்ட் மேவெதர், கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், டென்னிஸ் நட்சத்திரங்கள் ரோஜர் பெடரர் மற்றும் ரபேல் நாடல் உள்ளனர். இப்பட்டியலின் 22வது இடத்தில் தோனி உள்ளார்.