கிரிம்சன் கிங் சொல்வதுபோல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் ஒரு இசையமைப்பாளரை இன்னொரு ஹிட் பாடலை தழுவி ஒரு பாடலை தர* தூண்டுவது இந்திய திரையுலகில் நடப்பதுதான். "கனவு காணும்" பாடலின் மூலம் ஒரு ஹிந்தி பாட்டென்றும் அதை எடுக்க சொல்லி பாலு மகேந்திரா இளையராஜாவை வற்புறுத்தியதாகவும் எங்கோ படித்த நினைவு. அதை ஏன் பாலு செய்தார் என்று எனக்கு புரியவில்லை. அது ஒன்றும் அவ்வளவு சிறந்த பாடல் இல்லை. அதை விட சிறந்த* பல பாடல்களை இராஜாவால் தர முடியும், தந்தும் இருக்கிறார். ஆனால் அது இயக்குனருக்கு ஒரு சென்டிமென்டாக இருக்கலாம், ஏதோ ஒரு விதத்தில் அவரை பாதித்திருக்கலாம். தனக்கும் இராஜாவிற்கும் இருக்கும் ஆழமான நட்பை பயன்படுத்தி அந்த செயலை செய்ய தூண்டியிருக்கலாம். ஆனால் இதை நியாயப்படுத்த முடியாது. எல்லா சிறந்த இசையமைப்பாளர்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இதை செய்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை இரஹ்மானோ இராஜாவோ அவர்களின் தழுவப்பட்டதாக கூறப்படும் பாடல்கள் என்னை பெரிதாக ஈர்த்ததே இல்லை. அவர்களின் சிறந்த படைப்புகள் அனைத்தும் அவர்களுடையதே. இதை தேவாவுக்கோ, சிற்பிக்கோ, அனு மாலிக்கிற்கோ, அல்லது ப்ரீத்தம்மிற்கோ சொல்ல முடியாது.