Page 68 of 399 FirstFirst ... 1858666768697078118168 ... LastLast
Results 671 to 680 of 3986

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 11

  1. #671
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ராகுல்,

    'என் தம்பி' பற்றி என்தம்பி நீ எழுதிய ஆய்வு அருமை. அதுவும் நடிகர் திலகத்தின் உடையலங்காரங்களைப் பற்றி நிறையவே குறிப்பிட்டு விட்டாய். கத்திச் சண்டையையும் மறக்காமல் குறிப்பிட்டு இருக்கிறாய்.

    பாலாஜி அவர்கள் முதலில் தலைவரை வைத்து தயாரித்தது சுஜாதாவின் 'தங்கை' திரைப்படம்தான். வெளியான நாள் தங்கை 19.05.1967. அடுத்துதான் 'என் தம்பி' வெளியானது. வெளியான நாள் 07.06.1968. கிட்டத் தட்ட ஒரு வருட இடைவெளி.

    தொலைக்காட்சியில் அதாவது ஜெயா மூவிஸ் சேனலில் என் தம்பி படத்தை அடிக்கடி போடுகிறார்கள். கண்காணித்துக் கொண்டே இருந்தால் பார்த்து விடலாம்.
    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #672
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அகில இந்திய சிவாஜி மன்ற செயலாளர் திரு எம்.எல்.கான் அவர்கள் எனக்கு ஈ மெயிலில் தலைவருடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் சில அனுப்பியிருந்தார். இப்போது அவை நமது பார்வைக்கு.



    நடிகர் திலகமே தெய்வம்

  4. #673
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    Dear Mr.Rahul,

    Your Post about En Thambi is very good.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  5. #674
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் ஸ்டைல் சண்டைக் காட்சிகள் (வீடியோ தொடர்) 10

    இந்த அருமையான சண்டைக் காட்சியை இளைய திலகத்தின் தீவிர ரசிகர் திரு சவுரி சார் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்

    Don't Miss It

    படம்: சங்கிலி



    வெளிவந்த ஆண்டு: 14.04.1982

    தயாரிப்பு: அருண் சுஜாதா கம்பைன்ஸ் (S.D.குணசேகரன்)

    சண்டைப்பயிற்சி : விஜயன்



    நடிகர் திலகம் மோதும் வில்லன் : 'இளைய திலகம்' பிரபு

    இயக்கம்: C.V.ராஜேந்திரன்


    பதை பதைக்க வைக்கும் சண்டைக்காட்சி.



    ரேஷன் பொருட்களைப் பதுக்கி கள்ள மார்க்கெட் தொழில் செய்யும் 'சர்தார்' ராஜாளி ஒரு காலை இழந்த பயங்கரவாதி. போலீஸ் நுழைய முடியாத அந்த பகுதிக்கு அநியாயத்தைத் தட்டிக் கேட்க நுழைகிறார் புதிதாக பதவி ஏற்றிருக்கும் டி.எஸ்.பி.சரவணன். ராஜாளிக்கும் சரவணனுக்கும் வாக்குவாதம் முற்றிப் போக அது சண்டையாக மாறுகிறது. தன் அப்பா கொடுத்த திரிசூலத்துடன் டி.எஸ்.பி.சரவணனை எதிர்கொள்ளத் தயாராகிறான் ராஜாளி. அவன் சவாலை ஏற்று அவனுடன் மோதத் தயாராகிறார் சரவணன். அப்போதுதான் சரவணனுக்குத் தெரிகிறது ராஜாளி ஒரு காலை இழந்தவன் என்று. எனவே சரவணனும் தன்னுடைய ஒரு காலை துணியால் கட்டிக்கொண்டு ராஜாளியுடன் பயங்கரமாக மோதுகிறார். அனல் பறக்கும் சண்டையில் யார் வெற்றி பெறுவார்கள் என்று தீர்மானிக்க முடியாத நிலை. இருவரும் சமபலத்துடன் மோதுகிறார்கள். முடிவு?... நீங்களே காணுங்கள்.

    'சர்தார்' ராஜாளியாக நிஜத் தனயன்

    டி.எஸ்.பி.சரவணனாக நிஜத் தந்தை (நடிப்புலகிற்கும் சேர்த்து)

    ஆம்... நடிகர் திலகமும், இளையதிலகமும் அற்புதமாக மோதிக்கொள்ளும் மெய்சிலிர்க்கும் சண்டைக்காட்சி. இளையதிலகத்தின் அமர்க்களமான அறிமுகம். அப்பாவின் புகழ் பாடியபடியே அப்பாவுடன் மோதும் காட்சி. அதுவும் முதல் படத்திலேயே அப்பாவுடன் மோதல். நடிகர் திலகத்திற்கும் பிரபுவுடன் மோதும் முதல் சண்டைக்காட்சி.

    எப்படி இருக்கும்?!

    எதிர்பார்த்ததைவிடவும் அற்புதமாக யாராலும் மறக்க முடியாத சண்டைக்காட்சியாய் அமைந்து விட்டது. திரிசூலத்தை தன் தந்தையிடம் பிரபு தூக்கிப் போட்டு எழுந்திருக்க, ஒரு கால் இல்லாத பிரபுவை பார்த்து ஒரு சில வினாடிகளை பிரபுவின் நிலைகண்டு பரிதாபப்பட எடுத்துக் கொண்டு, பின் தன் ஒரு காலைக் கட்டிக்கொண்டு, உடனே உக்கிரமாய் பிரபுவுடன் மோத ஆரம்பிப்பார் நடிகர் திலகம். திரிசூலங்களுடன் இருவரும் மோதிக் கொள்ளும் போது ஒரு கட்டத்தில் நடிகர் திலகத்தை பிரபு கீழே தள்ளி விடுவார். பின் கீழே விழுந்த நடிகர் திலகத்தை எழுந்து மீண்டும் தன்னுடன் சண்டையிடும்படி சிரித்தவாறே "எழுந்திரு" என்பது போலத் தலையாட்டுவார். அதற்கு நம் நடிகர் திலகத்தின் பதில் expression ஐ பார்க்க வேண்டுமே! ("அட பொடிப்பய! நான் பார்த்துப் பொறந்த பய! என்னையே கீழே தள்ளிட்டு எழுந்திருக்க வேற சொல்லி நக்கல் பண்றியா? பரவாயில்லையே" என்ற சொந்த மகனைப் பற்றிய பெருமைப் பூரிப்பு! ) அட்டகாசமான ஒரு நையாண்டி நக்கல் சிரிப்பை பதிலுக்கு சர்வ சாதாரணமாகக் பிரதிபலிப்பார். மறுமுறையும் ஒரு சந்தர்ப்பத்தில் நடிகர் திலகம் மீண்டும் கீழே விழுந்துவிட, இளையதிலகம் நாக்கை மடித்துக் கடித்து மீசையை முறுக்குவது செம ஜோர். பின் திரிசூலங்கள் இல்லாமல் இருவரும் ஒற்றைக்காலில் நொண்டிக்கொண்டே ஒருவரையொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ள மொத்தத் தியேட்டரும் சீட் நுனியில். ராஜாளியின் மிக வேகமான கோபமான தாக்குதல்களை லாவகமாக தலைவர் சமாளிக்கும் சாமர்த்தியம், அந்த வயதிலும், (54) சற்று உடல் ப ருத்திருந்த நிலையிலும், நடிகர் திலகம் இளம் வயது பிரபுவுடன் சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் அதுவும் ஒரு காலைக் கட்டிக் கொண்டு ஒற்றைக்காலில், பெரும்பாலும் 'டூப்' இல்லாமல் சண்டை செய்வது மெய் சிலிர்க்க வைக்கிறது. அதுவும் மோதுவது மகனுடன் என்பதால் எந்த காம்ப்ரமைஸும் செய்து கொள்ளாமல் இன்னும் அதிக சிரத்தை எடுத்து அந்த சண்டைக் காட்சியை எங்கோ தூக்கிக் கொண்டு போய் நிறுத்தி விடுவார் நடிகர் திலகம். இளைய திலகமும் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆக்ரோஷம் காட்டி, தந்தையுடன் மோதி, கைத்தட்டல்களை அள்ளுவார். நடிகர் திலகம் ரசிகர்கள் பிரபு ரசிகர்கள் என்று தனித்தனி கோஷ்டிகள் வேறு உருவாக ஆரம்பித்தன.

    மீண்டும் சொல்கிறேன். நடிகர் திலகத்தின் அனாயாசமான உழைப்பு இந்த சண்டைக்காட்சியில் தெரியும். இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் நடிகர் திலகத்திற்காக சில இடங்களில் போடப்பட்டிருக்கும் 'டூப்' பிரமாதமாக தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பார் நடிகர் திலகத்தைப் போலவே... அவரது உடல்வாகு போலவே... காரணம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சி.வி.ஆர்தான். சி.வி. ராஜேந்திரன் இயக்கிய அத்துனை படங்களிலும் சண்டைகாட்சிகள் படு நேர்த்தியாகவும், கவனமாகவும், அதே சமயம் ஸ்டைலாகவும்,அமைக்கப் பட்டிருப்பதைக் காணலாம். தலைவரை அழகு மன்மதனாக ஜொலிக்க வைத்து பெயர் வாங்கிய இயக்குனர் சண்டைக்காட்சிகளிலும் நடிகர் திலகத்திற்கு நல்ல பெயரை சம்பாதித்துக் கொடுத்தார். டூப் செலக்ஷனிலும் ஆள் பலே கில்லாடி. நன்றி C.V.R .

    இந்த சண்டைக் காட்சி முடியும்போது தவறி பக்க வாட்டில் செருகிக் கொண்டிருக்கும் திரிசூலத்தின் மீது பிரபு தவறி விழப் போவார். தலைவர் அவரை திரிசூலம் குத்திவிடாமல் தடுத்துக் காப்பாற்றி விடுவார். காப்பாற்றி முடித்ததும் அந்த திரிசூலத்தையும், பின்பு பிரபுவையும் இரண்டு முறை மாறி மாறிப் பார்ப்பார் பாருங்கள். அடப் போங்கப்பா! என்ன லுக் சாமி அது! ("இந்தத் திரிசூலம் உன் மேலே படாமல் காப்பாற்றி விட்டேன் பார்த்தாயா! அது உன்னைக் குத்தியிருந்தால் என்னாவது? எவ்வளவு கூர்மையான திரிசூலம்! என்னால் பிழைத்தாய்!")


    முதன்முறையாக இணையத்தில் உங்களுக்காக

    Last edited by vasudevan31355; 19th September 2013 at 09:36 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #675
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு,
    நீங்கள் சொல்வது போல இளமை நாட்களை விடவே சுறு சுறுப்பாய் 23 வயது மகனுக்கு ஈடு கொடுப்பார் சிவாஜி. இந்த சண்டை காட்சி நான் ரசித்த ஒன்று. உங்கள் சுறுசுறுப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. மூன்று தொடர்கள் மாறி மாறி. குறைந்த பட்ஷம் 3 மணிநேர தின உழைப்பு. உங்களை என்ன சொல்லி பாராட்ட வாசு?

  7. #676
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இன்று 'தினத்தந்தி' (22-6-2013) இதழில் வெளிவந்த 'சினிமாவின் மறுபக்கம்' என்ற தொடரில் 'பாசமலர்' காவியம் உருவான விதம் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் எழுதியுள்ள அட்டகாசமான கட்டுரை.















    Last edited by vasudevan31355; 22nd June 2013 at 09:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #677
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நிழற்படங்கள் தனியாக



    Last edited by vasudevan31355; 22nd June 2013 at 09:06 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #678
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாசமலரின் சாதனை.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #679
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தால் நல்வாழ்வு பெற்ற ஆரூர்தாஸ்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #680
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    'பாசமலர்' காவியத்தில் நடிகர் திலகத்தின் அபார பங்களிப்பைப் பற்றி ஆரூர்தாஸ் அவர்கள் குறிப்பிடுவதைப் படிக்கையில் கண்களில் நீர் நிறைகிறது. இப்படி ஒரு உடல் வருத்தம் செய்து காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக தன்னை முழுவதுமாக வருத்திக் கொண்ட அந்த நடிப்புலக மாமேதை நடிகரல்ல. கடவுள்தான்.
    Last edited by vasudevan31355; 22nd June 2013 at 09:19 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •