For the purpose of ready reference, the parts 1 to 30 are quoted here. Courtesy: Gopal Sir.

Part 1

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-1

நடிகர்திலகம் Stanislavski ,Straberg ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner பாணியில் instinctive improvisations செய்து,
Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,
Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,
Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,
Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,
Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில்,
உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.இதனாலேயே உலகத்தில் ,எந்த நல்ல நடிகன், எந்த ஸ்கூல் படி நடித்தாலும் ,எல்லாமே அவருடைய நடிப்பின் ஒரு அங்கமாகவே நம் புலனுக்கு தெரிந்தார்கள்.(அத்தனை school யும் integrate செய்த சுயம்பு நடிகன் அந்த பிறவி மேதை).அதனாலேயே,அனைத்து இயக்குனர்களின் கனவு நாயகனாகி,நல்ல படம் தர விரும்பும் அனைவருக்கும் ஒரே நம்பிக்கை ஒளியாகி,அந்த படங்களை வேறு தளத்திற்கே உயர்த்தினார்.

இந்த அளவு எனக்கு விரிவான பார்வை வர உதவிய அஜீத் ஹரி இதை கேட்டதும் துள்ளி குதித்து குழந்தை போல் குதூகலித்தது,எனக்கு முதல் inspiration .அடுத்து, இந்த குறிப்பை முன்னெடுத்து செல்ல பணித்த தகப்பன் சாமி பிரபு ராம்.என்னை தொடர்ந்து தூண்டி கொண்டிருக்கும் முன்னாள் நண்பர் ganpat .

marlon brando (அண்ணா இவருடன் ஒப்பிட்டு நடிகர்திலகத்தை புகழ்ந்தார்)- அவர் என்னை போல் நடிப்பார் ,நான் அவரை போல் நடிக்க முடியாது என்று சொன்னதின் உள்ளர்த்தம் தேடி பயணித்ததன் விளைவே இந்த தொடர்.(நம்மை போல உபசாரத்திற்கு ஒருவரை புகழும் மரபு Hollywood இல் கிடையாது.

உலக பட பரிச்சயம் உள்ள சுஜாதா (எழுத்தாளர்) NT ஐ Marlon Brando ,Rex Harrison ,Alpacino ,Robert De Niro ,Paul Neuman வரிசையிலும் ,முதல்வர் ஜெயலலிதா இவரை Marlon Brando ,Richard Burton ,Laurence Olivier வரிசையிலும், உலக பட ரசிகரான சோ அவர்கள் சமீபத்திய பதிவு ஒன்றில், Laurence Olivier ,Charles Laughton ,Gilgit ,David Niven ,Danny Kaye ,Clark Gable ,Humphrey Bogart ,Norman Wisdom ,Charles Heston ஆகியோருடனும்,Randor Guy இவரை paul Muni ,Spencer Tracy போன்றோருடனும் ஒப்பிட்டு பேசியுள்ளனர் எனக்கும், Kurosawa நடிகரான takashi Shimura , Nesferatu பட நடிகர் Klauskinski, Lincoln பட oscar நாயகன் Daniel Day Louis போன்றவர்களின் நடிப்பிலும் அவர் பிம்பமே தெரிகிறது.

அவரின் ரசிகர்களின் பட்டியலில் சத்யஜித் ரே,பிரிதிவி ராஜ் கபூர்,ராஜ் கபூர்,திலிப் குமார்,தேவ் ஆனந்த்,சஞ்சீவ் குமார்,அமிதாப் பச்சன்,லதா மங்கேஷ்கர்,ராஜ்குமார்,விஷ்ணுவர்தன் A .N R ,NTR ,கமல்,ரஜினி,பாரதி ராஜா,மகேந்திரன்,ஷங்கர்,பாலு மகேந்திரா ,மது,சத்யன்,பிரேம் நசிர்,மமூட்டி,மோகன் லால்,கோபி,திலகன், இன்னும் எண்ணிலங்கா இந்த பட்டியல் ரசிகர்கள் மட்டுமல்ல. பலர் அவரை role model ஆக,குருவாக பாவிப்பவர்கள்.

இத்தனை பேரின் மதிப்பை யும் சுமந்து artists ' artist ஆக அமரத்துவம் பெற்ற அந்த நடிப்பு கடவுளை விஞ்ஞான தொழுகை நடத்தும் சிறு முயற்சியே இது.

---To be continued.
Part 2

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-2

பொருளாதாரம் படித்தவர்களுக்கு புரியும். ஒரு உண்மையை நிரூபிக்க அனைத்து புற காரணிகளையும் constant என்ற நிலையில் வைத்து, அவற்றை பொருட்படுத்தாது, நாம் எடுத்து கொண்ட பொருளை மட்டும் ஆராயும் variable என்ற உயிர் பொருளாக்க வேண்டும்.

நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில்(cine field) நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution )&compromises, நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,உலகபார்வையில் tribalised ஆக தெரியும் நமது விரிந்த கலாச்சாரங்கள்,நமது மொழியின் seperation &peculiar nuiances (தமிழ் மொழியின் வினோதமான பேச்சு வழக்கு/எழுது முறை வேறுபாடுகள்மற்றும் அதன் நூற்று கணக்கான வட்டார வழக்கு,தூய தமிழ் பேச்சு ETC ), நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.

முதலில், ஏன் உலக பள்ளிகளோடு ஒப்பீடு என்ற கேள்விக்கு பதில் திரை படம் என்பதே மேல் நாட்டார் நமக்கு அறிமுக படுத்தி,அவர்களாலேயே வளர்த்தெடுக்க பட்ட கலை. இன்றும் கூட தர நிர்ணயம்,பரிசுகள் எல்லாமே அவர்கள் போட்ட பாதையில்தான் பயணிக்கின்றன(விமரிசனங்கள் உட்பட). முதலில் அவர்களின் முக்கிய நடிப்பு பள்ளிகள்(Different schools of Acting) என்ன, அதன் சாரங்கள் என்ன, அதில் பயின்ற முக்கியமானவர்கள் யார் யார் என்று சுருக்கமாக பார்த்து விட்டு தொடருவோம் .மேலை நாடுகளில் நடிப்பு துறைக்கு வர விரும்பும் அனைத்து நடிகர்களுமே, ஏதோ ஒரு நடிப்பு பயிற்சி பள்ளியில் படித்து தேர்ந்து, ஒரு school of acting இல் முறையாக சிறப்பு பயிற்சி பெறுவது நடைமுறை. அதனால் சில வெளிநாட்டு நடிகர்களை அந்தந்த பள்ளிகளில் உதாரணம் காட்டி உள்ளேன்.

இதில் நான் இன்னொன்றையும் குறிப்பிட்டு சொல்ல விழைகிறேன். நான் தேர்ந்தெடுத்த படங்களில் பிரதானமான நடிப்பு முறையை பிரித்தெடுத்தாலும்,அந்த மேதையை கூண்டுக்குள் அடைப்பது சிரமம் என்பதால்,பிற பள்ளிகளின் தாக்கமும் சிறிதளவு இருக்கும்.

அதே போல ஒரே படத்திலேயே மூன்று விதமான நடிப்பு பள்ளிகளின் கூறுகள் உண்டு. தெய்வ மகன் அப்பா (method Acting ),கண்ணன் (Chechov பாணி),விஜய்(Oscar Wilde பாணி).நான் தவற வாய்ப்புள்ளதால் அங்கங்கே திருத்துமாறு வேண்டுகிறேன்.

சக்கரத்தை திரும்ப திரும்ப கண்டு பிடித்தல் என்ற சொற்றொடர் (reinventing the wheel ) ஆங்கிலத்தில் உண்டு. NT இடம் நமக்கு மிக பரிச்சயமான, முயற்சி,பயிற்சி,கடின உழைப்பு,கூரிய பார்வையுடன் கவனிப்பு திறன்,உடல்-மனம் சார்ந்த ஆளுமை,அங்க ஒத்திசைவு,கற்பனை திறன், கிரகிப்பு,ஒருங்கிணைப்புடன் கூடிய சிந்தனை திறன், concentration,aptitude,improvisation இவை எல்லா பள்ளிகளுக்கும் பொருந்தும், அவருக்கு பிறவியிலேயே கை வந்த விஷயங்கள். இதற்குள்ளும், மிக நுழையாமல், ஒவ்வொரு பள்ளிகளின் கோட்பாடு, வித்யாசங்கள்,நிறை-குறைகள், சில படங்கள் (NT ) உதாரணங்கள், அவற்றில் நடிகர்த்திலத்தின் நிறை பங்குகள். இவ்வளவுதான் ஆய்வின் scope .

இந்த தொடர் முடிந்ததும்,நமது இலக்கியங்களில்(சிலப்பதிகாரம் போன்ற) நடிப்பு பற்றிய பார்வை,கோட்பாடு போன்றவற்றுடன் நடிகர் திலகத்தை முன் வைத்து இன்னொரு தொடர் வரையும் எண்ணமும் உள்ளது. பார்ப்போம்.

-----to be continued .
Part 3

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3

Stanilavski//Strasberg school.

முக்கியமாக எல்லோராலும் பேச படும் "Method Acting" என்ற புகழ் பெற்ற நடிப்பு பள்ளியாகும்.சுருங்க சொன்னால் "உன் பாத்திரமே நீயானால் எப்படி உணர்வாய் " என்ற முறையில் நடிப்பை செங்கல் செங்கலாய் வீடு கட்டுவது போல் அணுக வேண்டும்.ஆனால் அத்தைனையும் உன் சொந்த செங்கலாக இருக்க வேண்டும்.இரவல் கூடவே கூடாது.

ஒரு கதை கருவின் இயங்கு சக்தி என்னவென்று கண்டு அதனை "super Objective" என்று கொண்டு பிறகு அதனை உதிரி உதிரி ஆக Script வடிவத்தில் பிரித்து,அந்த பாத்திரத்தின் முக்கிய நோக்கமென்ன,அது எதனை நோக்கி பயணிக்கிறது அதற்கு தடைகளென்ன , உதவிகள் என்ன, அதை அணுக வேண்டிய முறையென்ன, அது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அதன் பின்னணி என்ன, நடப்பு நிலை என்ன, எதிர் காலம் என்ன, என்று கண்டு அதனை "Super Objective" உடன் வரி வரியாக இணைவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.பிறகு, "Sense Memory" என்ற தங்கள் சொந்த நினைவு சார் உணர்வுகளின் மூலம் அந்த பாத்திரத்தின் தன்மைகள்,உணர்ச்சி வெளிப்பாட்டை super -impose செய்ய வேண்டும். இதில் "Realistic Approach" என்பது இன்றியமையாதது.உணர்வுகளை போலி செய்தல்(Faking of Emotion) அறவே தவிர்க்க பட வேண்டும்.பிறகு அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடக்க,பேச,நினைக்க,பாவிக்க,என்று முன்முடிவு செய்து,அதனை அவற்றின் mannerism சார்ந்த விஷயங்களை நிர்ணயித்து, கொண்டு வெளியிட பழக வேண்டும்.இவையெல்லாம்,"Sub Objective" and "Super Objective"மற்றும் சக பாத்திரங்களுடன் ஒருங்கிணைக்க பட வேண்டும்.இதன் மூலம் அந்த பாத்திரம் வாழ வேண்டிய முறை முன்-நிர்ணயம் செய்ய பட்டு விடும்.

இந்த முறை நடிகர்களில் குறிப்பிட வேண்டிய முக்கியமான பிரபலங்கள்-Marlon Brando,Gregory Peck.

நிறைகள்-இந்த முறையில் ஒரு வலுவான சமகால கதையை ,உண்மைக்கு அருகில் வரும் வலுவான கதாபாத்திர வார்ப்புகளால் மெருகேற்றலாம். Oscar விருது வென்ற நிறைய நடிகர்கள் இந்த வகை பள்ளியை பின் பற்றயவர்களே.ஒரு சிறந்த இயக்கனரின் வலுவான படைப்பு இவர்களின் பங்களிப்பில் மெருகேறும்.(உறுத்தல் இன்றி துருத்தி தெரியாமல்)
முக்கியமாக Limited period ,biographical ,contemporary commoner பாத்திரங்களுக்கு ,இதை விட சிறந்த முறை கிடையாது.

குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.

நடிகர்திலகம் நடித்த இந்த வகை நடிப்பு மிகும் படங்கள்-அந்த நாள்,மக்களை பெற்ற மகராசி,தெய்வ பிறவி,பாக பிரிவினை,இரும்பு திரை,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்,பார்த்தால் பசி தீரும்,இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,ராஜபார்ட் ரங்கதுரை ,தீபம் ,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களாகும்.

-----to be continued .
Part 4

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-4

Meisner School.


இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.

இந்த வகை நடிப்பில் பயின்றவர்கள்-Dustin Hoffman,Steve Mcqueen,Alpacino,Tom Cruise,Diana Keaton,Sandra bullock போன்றவர்களாகும்.

நிறைகள்- Surprise yourself to surprise the audience என்ற வகையில் spontaneity கிடைக்கும். சில வலுவான தனி காட்சியமைப்புகள் இந்த வகை நடிப்பின் மூலம் ,நல்ல நடிகர்களால் ,மேலும் வலுப்படும் சாத்தியங்கள் அதிகம்.இந்த வகை நடிப்பில் சோர்வகன்ற புத்துணர்ச்சியுடன் energy level high ஆக இருக்கும்.

குறைகள்-பாத்திர வார்ப்பில் மிகை உணர்ச்சியால்,inconsistency வர வாய்ப்புண்டு.நிறைய re-takes தேவை படலாம்.நடிப்பவர்கள் அன்றைய மனநிலை காட்சிகளில் பிரதிபலித்து காட்சியின் tone கெடும் வாய்ப்பு அதிகம்.(when you cant get call sheet again from the actor/actors in indian situation )

நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).

-----to be continued .
Part 5

இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

Stella Adler School

இந்த பள்ளி எல்லாவற்றிலும் largeness வேண்டியது.உடல் மொழியில், உடலில்,குரலில், பாணியில் எல்லாவற்றிலுமே.மிகையான energy level கொண்டு ,larger than life (சராசரி வாழ்வினும் மிக மேம்பட்ட அல்லது அந்நிய பட்ட)பாத்திரங்களில்,மிகை உணர்வுகள்,தோரணைகள்,பாவங்கள்,உடல் மொழி கொண்டு,போலி செய்த புலன் சார்ந்த உணர்வுகளையும் கலந்து(faking the emotion ),மேடைக்கு மட்டுமே உண்மையாகவும்,அந்த சூழ்நிலை புரிந்து,அபரிமித கற்பனை அடிப்படையில் நடிப்பதே இந்த பள்ளியாகும்.

Acting is doing -You have to be larger in all aspect -Strong body ,voice கொண்டு,actors should never feel small ,they should give bigger meaning to the text with sense of epic என்று போதிக்கும் பள்ளியாகும்.

இவர் stanislavski யின் சிஷ்யராக இருந்தும் ,நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட நடிப்பு கலையை பயிற்றுவித்தார்.

இந்த முறை நடிப்பு பள்ளி பிரபல மாணவர்கள் -Robert De Niro ,Antonio Banderas ,Warren Beaty முதலியோர்.

நிறைகள்- சரித்திர,புராண, அமானுஷ்ய,மாயா-ஜால,futuristic ,Science fiction போன்ற larger than life பாத்திரங்களுக்கும்,shakespere ,கம்பன் போன்ற காவிய பாத்திரங்களுக்கும் ,பொதுவாக நம்மிடையே மிக வேறு பட்ட கதா பாத்திரங்களுக்கும் இதை விட சிறப்பான பயிற்சி முறை கிடையாது.

குறைகள்-இந்த வகை நடிப்பு சம கால நடப்பு பாத்திரங்களுக்கு பொருந்தாது.realism சார்ந்த படங்களுக்கு அறவே பொருந்தாது.இந்த வகை நடிப்பில் பார்வையாளர்கள் அந்நிய படும் சாத்திய கூறுகள் அதிகம்.பார்வையாளனுக்கும், காவியங்களில்,கவிதைகளில் பயிற்சி இருந்தால்தான் சுவைக்க முடியும்.

நடிகர்திலகத்தின் படங்கள்-
மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

---to be continued.