Results 3,171 to 3,180 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    முதலில் விக்ரமனை மிக மிக நுண்ணியமாக ஆராய்வோம். அவன் எப்படி பட்டவன்?சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பாதுகாப்பு என்ற போர்வையில் அன்னையின் நிழலில் இருந்தே அகற்ற பட்டவன்.சிறு வயதில் இருந்தே சுய சிந்தை மழுங்கடிக்க பட்டு,ராஜ வாழ்வு என்ற நிழலில் மது,மாது என்பதை அடிப்படை ஆக்கியே வளர்க்க பட்டவன்.அவனுக்கு ராஜ வாழ்வு என்ற ஒரே குறிக்கோள் மற்றவர் பற்றிய சிந்தனையின்றி அவனுடைய சுயநலம் சார்ந்த ego ஊட்டி, மாமா என்ற ஒரே நண்பன்,ஒரே வழிகாட்டி, ஒரே ஆசிரியர்,ஒரே சேவகன் என்ற முறையில் சுயநல கயவன் மாமாவின் தீ வழிதான்
    ஒரே வழி. தான், தன் ஆசை, தன் வாழ்வு ,தன் அகந்தை என்ற ஒரே வட்டம். ஆனால் மன்னனுக்குரிய சில பண்புகள் (சவால் ஏற்கும் வீரம், போர் பயிற்சி) பெற்றவன். ஆனால் பிற மாண்புகள் எதுவுமே இல்லாத மூர்க்கன். தன்னை தானே ஆசை படும் narcist . மற்றோரை துன்புறுத்தி மகிழும் vicarious sadist .


    இதற்கு மிக மிகச் சரியான உதாரணம், தர்பாரில் பட்டாபிஷேகத்திற்காக நுழையும் போது, தன்னிடம் நிர்வாகத்தை ஒப்படைக்கும் படி மாமா கேட்பதும், ஒரு நொடி கூட தாமதிக்காமல், உடனே அங்கேயே சொல்வதற்காக எத்தனிப்பது. உடனே மாமா, இங்கே அல்ல ஆசனத்தில் அமர்ந்தவுடன் என்று சொல்லிய வுடன் தலையாட்டி செல்வது. Determination of character spontaneously and giving reaction immediately என்கிற இந்த அணுகுமுறையினை அங்கே நிறைவேற்றியுள்ளார். இந்த இடத்தில் அந்த Reaction தர வேண்டும் என்பதை யார் சார் சொல்லிக் கொடுத்தார்கள். பிறவி மேதை அல்லவா நடிகர் திலகம். இந்தக் காணொளியில் அதனைப் பாருங்கள். தாங்களே உணர்வீர்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •