Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Hybrid View

  1. #1
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

    நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்

    'மங்கையர் திலகம்' படத்தில் M.N.ராஜம் அவர்களின் அழகிய தோற்றம்.



    'பாவை விளக்கு' திரைப்படத்தில் ஸ்டைலான நடிகர் திலகத்துடன் ராஜம்.



    'மங்கையர் திலகம்' படத்தில்





    'பெண்ணின் பெருமை'





    'பாவை விளக்கு'





    'பாசமலர்'




    நடிகர் திலகத்தின் ஜோடிகளில் ஒருவர். M.N.ராஜம் அவர்கள் சிறு வயது பிராயம் முதல் சினிமாக்களில் நடிக்கத் தொடங்கி விட்டார். யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை அவர்களில் பட்டறையில் இருந்து பட்டை தீட்டிக் கிளம்பிய இன்னொரு வைரம். டி.கே.எஸ் நாடக மன்றத்திலும் சிறந்த பயிற்சி பெற்றவர். ரத்தக் கண்ணீர் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்த ராட்சஷி. "வேம்ப் கேரக்டரா... கூப்பிடு ராஜத்தை"... என்று சொல்லுமளவிற்கு அந்தப் பாத்திரமாகவே மாறி அமர்க்களப் படுத்தியவர். NSK அவர்களின் படங்களில் முதலில் சிறு சிறு வேடங்களில் தமிழில் தலை காட்டி 'ரத்தக் கண்ணீர்' மூலம் உச்சப் புகழ் அடைந்த நடிகை. அப்படி ஒரு கேரக்டர் ஹிட்டடித்தால் சும்மா விடுமா தமிழ்ப் பட உலகம்? வேம்ப்(vamp),வில்லி, கொடுமைக்கார சித்தி, இரண்டாந்தாரம் என்ற ரோல்களுக்கு M.N.ராஜம் தான் என்று முத்திரை குத்தப்பட்டது. பின் அதையும் மீறி அப்போதைய சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடிக்கும் அளவிற்கு M.N.ராஜம் அவர்களின் நிலை உயர்ந்தது. அதற்குக் காரணம் அவருடைய கடின உழைப்பு. வில்லி ரோலுக்கு மட்டுமல்ல ஹீரோயினாகவும் பரிமளிக்க முடியும் என்று சாதித்துக் காட்டிய நடிகை. நகைச்சுவை ரோல்களையும் விட்டு வைக்கவில்லை அவர். எம்.என்.ராஜம் நடிப்பில் 'எமன்' ராஜம் என்று பாராட்டப்பட்டார்.

    சரி! தலைவருடன் இவர் பங்கு என்ன என்று பார்த்து விடலாம். 'மங்கையர் திலகம்' படத்தில் தலைவருக்கு ஜோடி இவர்தான். அடங்காப்பிடாரி மனைவியாக அட்டகாசம் செய்து பின் அடங்கிப் போகும் பாத்திரம். "பெண்ணின் பெருமை" திரைப்படத்திலும் கிட்டத்தட்ட தலைவருக்கு ஜோடி போலவே வருவார். இதிலும் ஆளை மயக்கும் பாத்திரம்தான். 'ரங்கோன் ராதா'வில் கேட்கவே வேண்டாம். தலைவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட வில்லியான ராஜமும், நாயகரும், வில்லருமான(!) தலைவரும் பானுமதிக்கு பேய் பிடித்திருப்பதாகக் கதை அளந்து, பைத்தியக்கார பட்டம் சூட்டி வீட்டைவிட்டு துரத்த எத்தனிப்பதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட இயலாது. 'பாக்கியவதி'யிலும் இதே கதைதான். கொண்டவள் பத்மினி இருக்க பொறுப்பில்லாமல் சுற்றித்திரியும் நடிகர் திலகத்தை மயக்கும் மோகினியாய் மயக்கி வைக்கும் கதாபாத்திரத்தை அலட்சியமாக ஊதித் தள்ளியிருப்பார் ராஜம்.

    'பதிபக்தி'யில் நேரடி ஜோடியாக பரிமளிப்பார். அதுவும் "கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" பாடலில் தலைவரும், ராஜமும் ரசிகர்களை உற்சாகத்தின் உச்சத்துக்கே அழைத்துச் செல்வார்கள். நல்ல ரோல். 'பாவை விளக்கு' திரைப்படத்தில் சௌகார் ஜானகி, குமாரி கமலா இவர்களுடன் ராஜமும் தலைவரின் இன்னோர் ஜோடி. காலத்தால் மறக்க முடியாத காவியப் பாடலான "காவியமா...நெஞ்சின் ஓவியமா" பாடலில் ஒரிஜினல் தாஜ்மஹாலில் தலைவரும், ராஜமும் ஷாஜஹானாகவும், மும்தாஜாகவும் அற்புத நடை நடந்து வாழ்ந்து காட்டியதை ஆயிரம் ஜென்மங்களுக்கும் மறக்க முடியாதே. அதே போல தற்போது மீண்டும் வெற்றிக்கொடி நாட்டத் தயாராகி வரும் 'பாசமலரி'லும் ராஜம் அவர்கள் தலைவருக்கு ஜோடியாக நடித்தது அவர் செய்த பெரும் பாக்கியம். அருமையான கேரக்டர். வித்தியாசமாக பரிதாபப்பட வைக்கும் கேரக்டரும் கூட. இப்படி நிறையப் படங்களில் தலைவருடன் ராஜம் அவர்கள் நடித்திருந்தாலும் ஒரு தேவிகா போல, ஒரு பத்மினி போல, ஒரு விஜயா போல, ஒரு வாணிஸ்ரீ போல (ஒரு உள்ளம் அப்படியே இந்நேரம் குளிர்ந்து போய் இருக்குமே!) ராஜம் அவர்கள் ஒரு சிறந்த பொருத்தமான ஜோடியாய் நடிகர் திலகத்திற்கு அமையாதது துரதிருஷ்டமே! அதற்கு காரணம் அவர் முன்னம் ஏற்ற ஒருமாதிரியான கேரக்டர்களே.

    அதுமட்டுமல்லாமல் நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் ராஜம் அவர்கள் நடித்திருப்பார்கள். நானே ராஜா, (இதில் நடிகர் திலகத்தின் தங்கை ரோல்... அதாவது ராமாயணத்தின் சூர்ப்பனகை ரோல் மாதிரி) மக்களைப் பெற்ற மகராசி (இதிலும் தலைவருக்கு தங்கை ரோல்), புதையல், காத்தவராயன் காமெடி ரோல்), தெய்வப் பிறவி, விடிவெள்ளி என்று பல குறிப்பிடத் தக்க படங்கள்.

    M.N.ராஜம் அவர்கள் பிரபல பின்னணிப் பாடகர் திரு A.L.ராகவன் அவர்களை மணந்து கொண்டார்.

    திரைப்படத்துறையில் பல சாதனைகள் புரிந்த ராஜம் திரு எம்ஜியார் அவர்கள் முதல்வராக இருந்த போது தமிழ்நாடு அரசு செய்திப்பட நிறுவனங்களின் செய்திப் படங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பவராகவும் சிறந்த பணியாற்றினார். பின்னாளில் பல படங்களில் தாயார் ரோல்களிலும், சிறந்த குணச்சித்திர ரோல்களிலும் தன் அனுபவத்தால் நன்கு பரிமளித்தார். திரு.பாலச்சந்தர் அவர்களின் அரங்கேற்றம் திரைப்படத்தில் அந்தண மாமியாக இவர் நடித்தது மிகவும் பேசப்பட்டது.


    இனி பாடல் வீடியோக் காட்சிகள்.

    "கொக்கரக்கொக்கரக்கோ சேவலே" (பதிபக்தி)



    "காவியமா...நெஞ்சின் ஓவியமா" (பாவை விளக்கு)



    'பாட்டொன்று கேட்டேன்' (பாசமலர்)




    கணவர் A.L.ராகவன் அவர்களுடன் M.N.ராஜம் அவர்கள்.


    Last edited by vasudevan31355; 4th April 2013 at 09:56 PM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)

    நடிகர் திலகத்தின் நாயகிகள் (12) M.N.ராஜம்
    Thank you Vasu sir for detailed information about Mrs. MN Rajam. Not sure whether you knew it or not, she is from Madurai and her mother tongue is Sourashtra like mine.

    Her husband mother tongue is also Sourashtra and he is from Kumbokonam.

    Cheers,
    Sathish

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •