Page 34 of 185 FirstFirst ... 2432333435364484134 ... LastLast
Results 331 to 340 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #331
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    news and events

    தொலைக்காட்சிகளில் நடிகர் திலகத்தின் படங்கள்

    சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் வித்தியாசமான குரல் மாற்றப் பாத்திரப் படைப்பில் உருவான கருடா சௌக்கியமா திரையிடப் படுகிறது. மறக்காமல் பாருங்கள். அரிய வாய்ப்பு. [கருடா சௌக்கியமா திரைப்படத்தைப் பற்றி வாசுதேவன் அவர்களுடைய ஆய்வுக் கட்டுரைக்கான இணைப்பு http://www.mayyam.com/talk/showthrea...=1#post778517]

    மெகா 24 – பிப்ரவரி 09 பிற்பகல் 3 மணி – கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி
    கே டி வி – பிப்ரவரி 11 பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
    ராஜ் டி வி – பிப்ரவரி 11 பிற்பகல் 1 மணி – எங்கிருந்தோ வந்தாள்
    ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் – பிப்ரவரி 11 இரவு 8 மணி – மண்ணுக்குள் வைரம்
    கலைஞர் டி.வி. – பிப்ரவரி 13 – இரவு 10 மணி – என் மகன்
    மெகா டி.வி. பிப்ரவரி 13 பிற்பகல் 1 மணி – படித்தால் மட்டும் போதுமா
    வசந்த் டி வி – பிப்ரவரி 15 – பிற்பகல் 2 மணி – நீதியின் நிழல்
    Last edited by RAGHAVENDRA; 9th February 2013 at 07:55 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     
  3. #332
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கூண்டுக்கிளி பாடல்களின் பட்டியல்

    1. ஆனந்தமாய் வாழ வேணுமே மாந்தர் - மருதகாசி - டி.வி.ரத்னம்
    2. ஓஹோ...ஹோ... அம்மா - தஞ்சை ராமய்யதாஸ் - பி.ஏ.பெரிய நாயகி
    3. ராமனே ஆண்டாலென்ன - தஞ்சை ராமய்யதாஸ் - கே.வி.மகாதேவன், வி.என்.சுந்தரம் குழு
    4. காயாத கானகத்தே நின்றுலாவும் - தஞ்சை ராமய்யதாஸ் - டி.எம்.சௌந்தர்ராஜன், வி.என்.சுந்தரம் குழு
    5. எனக்குத் தெரியலே - விந்தன் - பி.ஏ.பெரியநாயகி
    6. சொல்ல வந்தாயோ - மகாகவி பாரதியார் -டி.வி.ரத்னம்
    7. வாங்க எல்லோருமே சேர்ந்து - கா.மு.ஷெரீப் - சௌந்தர்ராஜன், ராணி குழு
    8. கொஞ்சும் கிளியான பெண்ணை - விந்தன்- டி.எம்.சௌந்தர்ராஜன்
    9. பார் என் மகளே பார் - விந்தன் - ராதா ஜெயலக்ஷ்மி

    கூண்டுக்கிளி கதைச் சுருக்கம்

    ஜீவா ஒரு தனிப் பிரக்ருதி. அவனுக்கு மங்களா தான் வாழ்க்கையின் ஜீவன். ஆனால் அவளோ தங்கராஜின் வாழ்க்கை ஜீவன் ஆகி விட்டாள். தங்கராஜ் ஜீவா ஆருயிர் நண்பர்கள். ஜீவா - தங்கராஜ் - மங்களா மூவரின் வாழ்க்கைப் போராட்டம் தான் கூண்டுக்கிளி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #333
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES
    19. ETHIR PARATHATHU எதிர்பாராதது

    வெளியீடு - 09.12.1954
    பொன்னுக்கு மேலான பொக்கிஷங்கள்

    முதல் வெளியீட்டு விளம்பரம் : தினமணி : 6.12.1954

    முதல் வெளியீட்டு விளம்பரம்

    51வது நாள் விளம்பரம் : The Hindu : 28.1.1955
    மிக அரிய நிழற்படம் : தமிழ் சினிமா : 15.12.1954
    ['தமிழ் சினிமா', மாதமிருமுறை வெளிவந்த சினிமா செய்தித்தாள்]
    மேற்காணும் அரிய விளம்பர நிழற்படங்கள் உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #334
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பங்கு பெற்ற கலைஞர்கள்
    தயாரிப்பு – சரவண பவா & யூனிடி பிக்சர்ஸ்
    கதை வசனம் – ஸ்ரீதர்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன், வி.நாகய்யா, எஸ்.வி.சஹஸ்ரநாம்ம், பிரண்ட் ராமசாமி, பத்மினி, எஸ்.வரலக்ஷ்மி, பேபி சரஸ்வதி, அங்கமுத்து மற்றும் பலர்
    சங்கீத அமைப்பு – சி.என்.பாண்டுரங்கன்
    நடன அமைப்பு – ஏ.கே.சோப்ரா
    ஒளிப்பதிவு – பி.ராமசாமி
    ஒலிப்பதிவு – ஏ.கோவிந்தசாமி
    எடிட்டிங் – சிஎச். நாராயணமூர்த்தி, எம்.ஏ.திருமுகம்
    உதவி டைரக்ஷன் – என்.கே.கோபாலகிருஷ்ணன், என்.பார்த்தசாரதி
    நிர்வாக உதவி – பி.வி.சத்யம்
    ஆர்ட் டைரக்ஷன் – ஏ.கே.சேகர் வி.எஸ்.ராவ்
    செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, பி.பக்தவத்சலம்
    மேக்கப் – ஹரிபாபு, ஏ.வி.ராமச்சந்திரன்
    உடை அலங்காரம் – பி.ராமகிருஷ்ணன்
    ஸ்டில்ஸ் – ஆர்.என்.நாகராஜ ராவ்
    செட் ப்ராபர்டீஸ் – சினிகிராப்ட்ஸ்
    ப்ளோர் இன்சார்ஜ் – சி.சி.அந்தப்பன்
    விளம்பரம் – ஜூபிடர் அட்வர்டைஸிங்
    ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – சி.சுந்தரம்
    ப்ரொடக்ஷன் மேனேஜர் – பி.எம்.நாச்சிமுத்து
    நிர்வாகம் – ஏ.கே.பாலசுப்பிரமணியம், ஜி.உமாபதி
    லேபரட்டரி – ஜூபிடர் லேபரெட்டரீஸ், அடையார், சென்னை 28.
    ஸ்டூடியோ – நெப்ட்யூன் ஸ்டூடியோஸ், அடையார், சென்னை 28.
    ஆர் சி ஏ சவுண்ட் சிஸ்டம் முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது.
    ஸீனேரியோ மற்றும் டைரக்ஷன் – சிஎச். நாராயண மூர்த்தி

    பாடல்கள்
    1. மதுராபுரி ஆளும் மஹராணியே – சுரபி – பி.லீலா
    2. ஜெகம் ஏழும் நீயே அம்மா – சுரபி – ராதா-ஜெயலக்ஷ்மி
    3. சிற்பி செதுக்காத பொற்சிலையே – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஜிக்கி
    4. கண்ணான காதலர் காலேஜ் மாணவர் – சுரபி – ஜிக்கி
    5. திருமுருகா வென்று ஒரு தரம் – சுரபி – வி.நாகையா
    6. காதல் வாழ்வில் நானே – கே.எஸ்.கோபால கிருஷ்ணன் – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
    7. திருச் செந்தில் ஆண்டவனே – பாபநாசம் சிவன் – வி.நாகையா
    8. வந்த்து வசந்தம் – சுரபி – ஏ.எம்.ராஜா, ஜிக்கி
    9. சிற்பி செதுக்காத பொற்சிலையே – கே.பி.காமாட்சி சுந்தரன் – ஏ.எம்.ராஜா

    எதிர்பாராதது - சென்னையில் வெளியான திரையரங்குகள் - சித்ரா, பிராட்வே, காமதேனு, பாரத், லக்ஷ்மி

    100 நாட்கள் ஓடிய திரையரங்கு

    திருச்சி ஸ்டார் 100 நாட்கள்
    Last edited by RAGHAVENDRA; 24th February 2013 at 09:51 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #335
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதிர்பாராதது திரைப்படத்தைப் பற்றி திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களின் பதிவுகளிலிருந்து

    VASU SIR IMAGES:

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #336
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சாரின் பதிவுகளிலிருந்து ... தொடர்ச்சி
    பிற மொழிகளில் 'எதிர்பாராதது'

    அற்புதமான புதுமைப் படைப்பான ஸ்ரீதர் அவர்களின் 'எதிர்பாராதது' காவியம் மாபெரும் வெற்றி அடைந்ததோடல்லாமல் 'நித்யகன்யக' என்ற பெயரில் மலையாளத்தில் எடுக்கப்பட்டு 1963 இல் வெளியானது. நடிகர் திலகத்தின் பாத்திரத்தை சத்யனும், பத்மினியின் பாத்திரத்தை ராகினியும் (பத்மினியின் தங்கை), நாகையா அவர்களின் பாத்திரத்தை நடிகர் திலகத்தின் அருமை நண்பரான 'திக்குரிசி' சுகுமாரன் நாயர் அவர்களும் ஏற்று நடித்திருந்தனர்.

    தெலுங்கில் ‘Ilavelpu' என்ற பெயரில் வெளிவந்தது. பிரதான ரோல்களில் நாகேஸ்வரராவும், அஞ்சலி தேவியும் நடித்திருந்தார்கள். இயக்குனர் யோகானந்த் இயக்கியிருந்தார். 1956-இல் இப்படம் வெளிவந்தது.

    'எதிர்பாராதது' இந்தியிலும் எடுக்கப்பட்டது. 'சாரதா' என்ற பெயரில் இயக்குனர் திரு.எல்.வி.பிரசாத் இயக்கத்தில் 1957-இல் வெளிவந்த இப்படத்தில் ராஜ்கபூரும், மீனாகுமாரியும் பிரதான வேடங்களில் நடித்திருந்தனர்.

    மேற்கண்ட மொழிகளில் 'எதிர்பாராதது' எடுக்கப்பட்டு அத்தனை மொழிகளிலும் வெற்றிகண்டது குறிப்பிடத்தக்கது.
    'எதிர்பாராதது' அரிய வரலாற்று ஆவணம்.

    'எதிர்பாராதது' 58-ஆவது வருடத் துவக்கத்தை முன்னிட்டு 'தினத்தந்தி' நாளிதழில் (22-3-2005) 'வரலாற்றுச் சுவடுகள்' என்ற தொடரில் 'திரைப்பட வரலாறு' (106) என்ற தலைப்பில் நடிகர் திலகம் புகழ் பாடிய தொடரில் வெளியான 'எதிர்பாராதது' படத்தைப் பற்றி வந்த இந்தக் கட்டுரையைப் பதிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவரும் படித்து இன்புற வேண்டுகிறேன்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #337
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதிர்பாராத்து திரைப்படத்தைப் பற்றி ஹிந்து பத்திரிகையில் வந்துள்ள கட்டுரை

    November 17, 2012
    Blast from the past
    Ethirpaaraathathu 1955
    Randor Guy

    Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami
    Sivaji Ganesan and Padmini were a popular pair in Tamil cinema during the 1950s and even later. One of the Sivaji Ganesan-Padmini hits, Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplays Ethirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.
    Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
    The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.
    Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #338
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதிர்பாராதது திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் காட்சி

    VIDEOS
    "சிற்பி செதுக்காத பொற்சிலையே"... காலத்தால் அழிக்க முடியாத இனிய காவியத்தின் இன்ப கானம். (வீடியோ வடிவில்)
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #339
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    எதிர்பாராதது திரைப்பட நெடுந்தகட்டின் முகப்பு

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #340
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by NOV View Post
    NOTICE: This thread will be allowed to continue PROVIDED only the filmography of Nadigar Thilagam is posted here.
    Please use the main thread for other discussions.
    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாடரேட்டர் அவர்களின் கூற்றுக் கேற்ப நடிகர் திலகத்தின் திரைப்படப் பட்டியல் மற்றும் தகவல் பரிமாற்றங்களுக்கும் மட்டுமே இத் திரி இனிமேல் பயன் படுத்தப் படும். விவாதங்களையெல்லாம் நாம் பாகம் 10ல் தொடரலாம்.

    மாடரேட்டர் சார், தங்களுக்கு மிக்க நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •