Page 23 of 185 FirstFirst ... 1321222324253373123 ... LastLast
Results 221 to 230 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

  1. #221
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    1964ல் வெளி வந்த கர்ணன் அக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கக் கூடிய தாக்கத்தைக் காட்டிலும் 2012ல் வெளிவந்த கர்ணன் இக்காலத்திய இளைஞர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் நிச்சயம் பல மடங்கு அதிகம் எனவே சொல்லலாம். காரணம், அக்காலத்திய இளைஞர்களுக்கு பெற்றோர்கள் மூலமாக பரவலாக மகாபாரதமும் கர்ணன் பாத்திரமும் முன் கூட்டியே ஓரளவிற்குத் தெரிந்திருந்தது. நடிகர் திலகத்தின் மூலம் அது இன்னும் அதிகமாக அப்போது சென்றடைந்தது. ஆனால் 2012ல் மகாபாரதமும் ராமாயணமும் மற்ற இதிகாசங்களும் இளைஞர்களுக்கு சென்று சேர்க்கும் அளவிற்கு வலுவான சாதனங்கள் இல்லை. முதல் சாதனம் பெற்றோர் அல்லது தாத்தா-பாட்டி போன்ற மூதாதையர். பெரும்பாலான குடும்பங்கள் தனிக்குடித்தனம் செய்வதால் மூதாதையர் இருக்கும் வாய்ப்புக் குறைவு. பெற்றோர் மூலமாக குழந்தைகளுக்கு சென்று சேருமா என்றால், பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்வதால் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதே பெரிய விஷயம்.

    இப்படிப் பட்ட சூழலில் வாராது வந்த மாமணி போல் கர்ணன் திரைக்காவியம், இளைஞர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த வடிவத்தில் வந்தது மட்டுமல்லாமல், நடிகர் திலகம் என்கிற மாபெரும் பொக்கிஷம் தமிழகத்திற்கு கிடைத்ததையும், இந்திய புராணங்களின் மகிமையையும் அதிலும் மகாபாரதத்தில் உள்ள சமுதாய குடும்ப சிக்கல்களின் சூழல்களையும், கர்ணன் பாத்திரத்தின் சிறப்பையும் கூறி, நடிகர் திலகத்தின் சிறப்பை ஆணித்தரமாக நிரூபித்து அவர்களுக்குள் மிகப் பெரிய அளவில் இடம் பெறக் காரணமாயிருந்தது. இதன் மூலம் நடிப்பின் மேன்மையை இப்போது தான் அவர்கள் உணரத் துவங்கியுள்ளனர்.

    இந்த அளவிற்கு இன்றைய தலைமுறையிடம் கர்ணன் சென்று சேர்ந்ததற்கு மற்றொரு காரணம் மெல்லிசை மன்னர்களின் இசை. குறிப்பாக பாடல்கள். அதிலும் குறிப்பாக சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இந்தப் பாடல் சென்ற ஆண்டின் மிகச் சிறந்த பாடல் என்று கூறும் அளவிற்கு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது.

    இப்பாடல் நம் அனைவருக்குமே என்றுமே விருப்பமாக உள்ளது என்பது உண்மை.

    இச்சந்தர்ப்பத்தில் திவ்யா பிலிம்ஸ் நிறுவனத்தையும் நம்மால் நினைவு கூறாமல் இருக்க முடியாது. அவர்களுக்கு நமது நன்றிகள் என்றென்றும்.

    மிக்க நன்றி சகோதரி.
    Last edited by RAGHAVENDRA; 2nd February 2013 at 09:40 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #222
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    என் விருப்பம்:

    Fantasy,Concept/ Album அக்காலத்திலேயே மிக மிக புதிதாய் யோசித்து, தமிழ் இரசிகர்களுக்கு வழங்கிய கலைவள்ளல் நம் நடிகர்திலகம்.

    அவரின் அங்கத்துடிப்பைக் கண்ட பின்னரே அந்த ஆழிப்பேரலை இசை உருவாக்கியதாய் மெல்லிசை மன்னர் சொல்வார்... '' எங்கே நிம்மதிக்கு?''



    காகிதத்தில் கப்பல் கட்டி - அன்புக்கரங்கள்
    யாரந்த நிலவு - சாந்தி
    நதியினில் வெள்ளம் -தேனும் பாலும்

    இப்படி நடிகர்திலகம் கற்பனைக்கு மேனி தந்து நமக்களித்த கவின்விருந்துகள் பலப்பல..

    அவற்றில் ஒன்று இன்றைய விருப்பமாய்..

    கரங்களுக்குச் சவால் விடும் கால் அசைவுகளில் தாளலயம் கேளுங்கள்..

    நேர்க்கோடுகள் நடுவே நின்று ஜியோமெட்ரிக் கோலங்கள் காட்டும் அங்கங்களின் அளந்த கோணங்கள் காணுங்கள்..

    மதுவின் ஊற்று திராட்சைக்கொத்தில் ஒன்றைக் கொய்யும் உருவகம் பாருங்கள்..

    எத்தனை சுமைகளடா எனும்போது- தாங்கிச் சாய்ந்தவனின் உன்னத உடல்மொழிக் கவிதை சுவாசியுங்கள்..

    காலத்தை வென்ற கலைஞனின் தீர்க்கதரிசனப் படைப்பழகைச் சுவையுங்கள்...


    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  4. #223
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் காவிரிக்கண்ணன்
    படைத்தானே படைத்தானே -
    நம்மை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே
    மனதில் ரசனையை வளர்த்தானே

    இருந்தால் இவர் போல் இருந்திட வேண்டும்
    என்பது உண்மையடா
    குடும்பம் மனைவி என்பது எல்லாம்
    இவரின் பாடமடா

    ஆசை பாசம் காதல் என்பது
    வாழ்வில் உண்மையடா
    இளமை தொடங்கி முதுமை வரையில்
    என்றும் திலகமடா நமக்கு
    அவரே திலகமடா

    பல சரணங்கள் எழுதிக் கொண்டே போகலாம் ... தமிழ்த்திரையுலகில் சரித்திரம் படைத்த பாடல்களின் வரிசையில் முதல் பத்து இடங்களுக்குள்ளாகவே வரத் தகுதியுள்ள பாடல். Class to the peak எனச் சொல்லும் அளவிற்கு இப்பாடல் சிறப்பு வாய்ந்தது. கண்ணதாசன் மெல்லிசை மன்னர் சௌந்தர் ராஜன் இவர்கள் நடிகர் திலகத்திற்காக உருவாக்கும் பாடல்கள் .... இணையற்றவை ....

    தங்களின் சிறந்த தேர்வுக்கு பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #224
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள். நடிகர் திலகத்தின் வாழ்வில் திருப்பு முனை உண்டாக்கிய சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்யம் நாடகத்தில் அவரை நடிக்க வைத்த அண்ணா அவர்கள் அம் மேடையில் நடிகர் திலகத்துடன் தோன்றும் காட்சியின் நிழற்படத்தின் மூலம் அவருக்கு நம் அஞ்சலி செலுத்துவோம்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #225
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    SIVAJI GANESAN FILMOGRAPHY SERIES


    11. ILLARA JOTHI இல்லற ஜோதி

    வெளியான நாள் 09.04.1954
    தயாரிப்பு – மாடர்ன் தியேட்டர்ஸ்
    இயக்கம் – ஜி.ஆர். ராவ்
    மேற்பார்வை – டி.ஆர்.சுந்தரம்

    கதை வசனம் பாடல்கள் – கண்ணதாசன்
    அனார்கலி நாடக வசனம் – மு.கருணாநிதி
    இசையமைப்பு – ஜி.ராமநாதன்
    இசைக்குழு – ஜி.ராமநாதன் இசைக்குழு
    நடன அமைப்பு – ஏ.கே.சோப்ரா, மாதவன்
    ஆடை அலங்காரம் – எம்.அர்த்தனாரி
    மேக்கப் – ஜி.மாணிக்கம், டி.குருநாதன்
    லேபரட்டரி – பி.வி.மோடக், டி.பி.கிருஷ்ணமூர்த்தி
    எடிட்டிங் – எல்.பாலு
    ஸ்டூடியோ – மாடர்ன் தியேட்டர்ஸ்
    நடிக நடிகையர்
    சிவாஜி கணேசன் – மனோஹர்
    தங்கவேலு – நெட்டிலிங்கம்
    அசோகன் – மோஹன்
    பெருமாள் – புரொபஸர்
    கிருஷ்ணன் – மக்கு
    திருப்பதிசாமி – சாவதானப் பிள்ளை
    கொட்டாப்புளி ஜெயராமன் – கதை பார்ப்பவர்
    சௌந்தர் – ராஜா மான் சிங்
    ராமாராவ் – அமீனா
    சேதுபதி – யூனானி டாக்டர்
    பத்மினி – சித்ரலேகா
    ஸ்ரீரஞ்சனி – காவேரி
    சரஸ்வதி – அனந்தா
    கமலம் - லக்ஷ்மி
    நடனம் – சந்திரா, கமலா
    பின்னணி பாடியோர்
    பி.லீலா, ஜிக்கி, ஸ்வர்ணலதா, காந்தா, கஜலக்ஷ்மி, ஆண்டாள், ஏ.எம்.ராஜா
    பாடல்கள்
    1. கல்யாண வைபோக நாளே
    2. பார் பார் பார் இந்த பறவையைப் பார்
    3. சிட்டுப் போலே வானகம் எட்டிப் பறந்தே
    4. பெண்ணில்லாத ஊரிலே
    5. களங்கமில்லா காதலிலே
    6. கேட்பதெல்லாம் காதல் கீதங்களே
    7. சிறுவிழி குறுநகை சுவைதரும் மழலையின்
    8. கண்கள் இரண்டில் ஒன்று போனால்
    9. கலைத் தேனூறும் கன்னித் தமிழ் பேசுவேன்
    10. உனக்கும் எனக்கும் உறவு காட்டி

    இப்படத்தின் நெடுந்தகடு ஜெயம் ஆடியோ நிறுவனத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

    Last edited by RAGHAVENDRA; 3rd February 2013 at 11:42 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  7. #226
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இல்லற ஜோதி திரைப்படத்தின் காணொளிகள்

    Anarkali play அனர்கலி நாடகம்



    Ketpathellam கேட்பதெல்லாம் காதல் கீதங்களே



    Kalangamilla – களங்கமில்லா காதலிலே



    Siru vizhi – சிறு விழி



    Paar paar – பார் பார்



    kalyana vaiboga nale – கல்யாண வைபோக நாளே



    Unakkum Enakkum – உனக்கும் எனக்கும்



    chittu pole – சிட்டுப் போலே



    காணொளிகள் உபயம் யூட்யூப் இணைய தளம்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #227
    Senior Member Devoted Hubber
    Join Date
    Sep 2005
    Location
    A, A
    Posts
    204
    Post Thanks / Like
    Dear Ragavendra
    VM release news ku nandri-any chance the movie can be released in DTH?-nowadays new movies are shown in VijayHITS channel, and airtel movies, etc.
    Vazga Sivaji pugaz

  9. #228
    Devoted Hubber
    Join Date
    Mar 2010
    Posts
    33
    Post Thanks / Like
    நடிகர்திலகம் பற்றி நினைவுத்தாம்பூலக் கவிதை தந்து மகிழ்வித்த இராகவேந்திரருக்கு நன்றி....

    ---------------------------------------------

    இல்லற ஜோதி தகவல்கள், சுட்டிகளால் இன்றைய பொழுது இனிமையானது..

    அனார்கலி கல்லறை முன் வசனம்.. அப்போது அவர் கரங்கள் குரலோடு இணைந்து வடிக்கும் உணர்வோவியம்..

    வீணை, வயலின் வாசிக்கும் நேர்த்தி ( பாட்டும் நானேவுக்கு ஒத்திகை ...!!!!)

    உழைத்து எமக்காய் எடுத்தளிக்கும் உன்னதப்பணிக்கு பாராட்டுகள் இராகவேந்திரருக்கு..
    நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  10. #229
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சங்கர்,
    டி.டி.எச். வடிவம் அல்லது வெளியீடு பற்றிய எந்தத் தகவலும் தற்போதைக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #230
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டிற்கும் கவிதைக்கும் நன்றி காவிரிக் கண்ணன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •