Results 1 to 10 of 1967

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 8

Threaded View

  1. #11
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    மன்னவன் வந்தானடி படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு மலைக்க வைக்கிறது. திருவருட்செல்வரை விட, ராஜபார்ட்டை விட அமோக வரவேற்பு. வெள்ளி முதலே ஒவ்வொரு காட்சிக்கும் கணிசமான ஆட்கள் கண்டு களித்திருக்கின்றனர் என்றால், இன்று மாலைக் காட்சிக்கு மிகப் பெரிய அளவில் மக்கள் வந்த காட்சியை மறக்கவே முடியாது. ஆனால் இம்முறை காவல் துறை வாகனம் ஒன்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலிஸாரும் ரசிகர்களின் ஆர்வத்திற்கு தடை போட்டு விட்டார்கள். அதனால் தியேட்டர் வளாகத்திலேயே ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தவிர்க்க முடியாத சூழ்நிலையால் இடைவேளை வரை மட்டுமே காண முடிந்தது. பல நண்பர்களும் பல்வேறு அலுவல்கள் காரணமாக வர முடியாத சூழல். பார்த்தவரை ரசிகர்கள் அமர்க்களம் இருந்தது என்றாலும் கூட இம்முறை பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் ரசிகர்களின் அன்பு தொல்லை இல்லை என்பதால் படத்தை ரசித்து பார்க்க வந்தவர்களுக்கும் அது சாத்தியமானது.

    இப்போது பார்க்கும் போது கூட படத்தில் வரும் வசனங்கள் இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்தி வருவது ஆச்சரியமே. பாலமுருகனின் பேனா அரசியல் நையாண்டியை அழகாய் செய்திருக்கிறது. "தப்பை சுட்டிக் காட்டினா உடனே அண்ணாவா", "நீங்க தொழிற்சாலையை மூடினா நான் காஞ்சி தொட்டி திறப்பேன்", வீரத்தின் விளைநிலம் வெற்றியின் பிறப்பிடம் சிவகாமியின் செல்வனின் சிஷ்யனுக்கு பயமா, என் எதிரிகளை நான் எதிர்கொள்கிறேன், "இப்போது போலீஸ் அமைச்சர் யார்? அவர் என் நண்பராயிற்றே" ,"உங்கள் ஊழல் ஆட்சியை ஒழித்துக் கட்டவே நான் வந்துள்ளேன்" என்று பல அரசியல் சரவெடிகள் 1975-ல் நிலவிய காலக்கட்டத்தை மீண்டும் கண் முன்னர் கொண்டு வந்தது. இந்த வசனங்களுக்கெல்லாம் ஏக கைதட்டல்கள்.

    ராஜஸ்தானில் யாரோ ஒருவன் பாடலுக்கு அவர் ஆட்டத்திற்கு அமர்க்களம் என்றால் காதல் ராஜ்ஜியம் எனது பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைலுக்கு அமோக வரவேற்பு. அதிலும் அந்த பாடலின் இறுதியில் மீண்டும் பல்லவி பாடும் போது ஒரு தூணின் பின்னிலிருந்து வெளிப்பட்டு இரண்டாவது வரியான அந்த காவல் ராஜ்ஜியம் உனது என்று வாயைசைத்துக் கொண்டே அந்த முகத்தை லேசாக இடது பக்கம் திருப்பி அந்த கண்ணை மட்டும் மேலேற்றி இறக்குவார். அதிர்ந்தது அரங்கம்.

    இடைவேளைக்கு பின் இன்னும் அதிகமாக நடந்திருக்கும். அதை சுவாமி, ராதா மற்றும் சந்திரசேகர் விவரிப்பார்கள்.

    அன்புடன்

    ps :சந்திரசேகர், உங்களின் தில்லானா பற்றிய பதிவு நன்று.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Similar Threads

  1. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 7
    By saradhaa_sn in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1982
    Last Post: 22nd May 2011, 07:39 PM
  2. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 5
    By Murali Srinivas in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1490
    Last Post: 4th February 2010, 02:35 PM
  3. Nadigar Thilagam Sivaji Ganesan - Part 4
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1478
    Last Post: 17th November 2008, 09:45 AM
  4. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 3)
    By joe in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1472
    Last Post: 28th February 2008, 08:05 PM
  5. Nadigar Thilagam Sivaji Ganesan (Part 2)
    By NOV in forum Nadigar Thilakam Sivaji and His Movies
    Replies: 1470
    Last Post: 2nd July 2007, 09:40 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •