மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் உள்ள 'லட்சுமி' திரையரங்கில், 17.12.2010 வெள்ளி வைகுண்ட ஏகாதசி முதல் நேற்று 22.12.2010 புதன் வரை ஆறு நாட்களுக்கு, கலையுலக சொக்கநாதரின் "திருவிளையாடல்" திரைக்காவியம் வெளியாகி வெற்றி நடை போட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நள்ளிரவுக் காட்சியும் நடைபெற்றுள்ளது.

நாளை 24.12.2010 வெள்ளி முதல், சென்னை மண்ணடி 'பாட்சா' திரையரங்கில் (பழைய 'மினர்வா'), தினசரி பகல் 11:30 மணிக் காட்சியாக, வாழ்வியல் திலகத்தின் "எங்க மாமா" திரைக்காவியம் திரையிடப்படுகிறது.

இனிக்கும் இந்த இரு தகவல்களை வழங்கிய ரசிக நல்லிதயம் திரு.எஸ்.ராமஜெயம் அவர்களுக்கு நன்றிகள் பற்பல!

அன்புடன்,
பம்மலார்.