Results 1 to 10 of 921

Thread: இனியதிலகம் பிரபு

Threaded View

  1. #11
    Junior Member Diamond Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இளையதிலகத்தின் பட வரிசை.

    06.சின்ன மாப்பிள்ளை.
    14.01.93

    இளையதிலகம் பிரபு
    சுகன்யா, ராதாரவி, விசு, சிவரஞ்சனி, வினு சக்கரவர்த்தி, ஆனந்த், மற்றும் பலர்.
    இசை :இளையராஜா
    இயக்கம் :சந்தான பாரதி


    ஆளவந்தார்(ராதாரவி)ஒருமிராசுதாரர்.தன்னை விட வசதி படைத்தகுடும்பத்தை சேர்ந்த மணமகனுக்குத்தான் தன் மகளை திருமணம் செய்து தர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்.அதனால் தன்னை விட வசதி குறைவானவர்கள் பெண் கேட்டு வரும்போது அவர்களை அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்.இப்படி அவமானப்படும் தரகர்களில் ஒருவர் அம்பலவாணன்( விசு.)இந்தளவுக்கு பண திமிறும், அகந்தையும் கொண்ட மிராசுதாரருக்கு சரியான பாடம் புகட்ட நினைக்கிறார்.அந்த எண்ணத்தில் அவர் இருக்கு போது அவருக்கு அறிமுகமாகிறார் பிரபு.அவர் பஸ்நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்பவர்.
    இவரை பெரும் பணக்காரர் என்று கூறி சில ஏமாற்றுத்தனங்கள் செய்து ஆளவந்தாரின் மூத்த மகளான ஜானகிக்கு (சுகன்யா) திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

    பேருந்து நிலையத்தில் தன் மாப்பிள்ளை போர்ட்டராக வேலை செய்வதை பார்த்து விடுகிறார் ஆளவந்தார்.மனைவியிடம அது தான் அல்ல, உதவாக்கரை தம்பிதான் போர்ட்டர் வேலைசெய்கிறான் என்றுசமாளிக்கிறார்.ஆனால் அது வேறு பிரச்சினைகளை கொண்டு வருகிறது.அவற்றை சமாளிக்க ஒவ்வொரு பொய்யாக சொல்லுகிறார்.இறுதியில் உண்மை தெரிகிறது.ஆளவந்தாரும், ஜானகியும் அவரை ஏற்றுக் கொள்கிறார்களா? என்பதுதான் முடிவு
    ***

    விஸ்வநாதன் -ராமமூர்த்தி என்று அறிவிக்கப்பட்டு சின்ன மாப்பிள்ளை என்று வெளியான படம் .
    ஆபாசம் இல்லாத, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத முழுநீள காமெடி படம்.
    இளையதிலகத்தின் சிறப்பான நடிப்பை படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் காணலாம்.போர்ட்டராக அவர் பஸ் நிலையத்தில் வேலை செய்யும் காட்சிகளில் நிஜ போர்ட்டராகவே வாழ்ந்திருப்பார்.
    அண்டர்வேர் தெரிய லுங்கியை மடித்துக்கட்டி நடப்பதும், காது கிழிய விசில் அடிப்பதும், பஸ்ஸின் மீது விரைந்து ஏறுவதும், துண்டை தலையில் கட்டி லக்கேஜ்களை தூக்கி வருவதுமாயும் சுமை தூக்கிகளின் உணர்வுகளை சரியாக பிரதிபலித்துள்ளார்.

    காமெடி படமென்றாலும் பாடல்காட்சிகள், சண்டைக்காட்சிகளும் அருமையாக அமைந்த படம் இது.
    காதோரம் லோலாக்கு பாடல் செம ஹிட் பாடல்.
    காட்டுக்குயில் பாட்டுச் சொல்ல,
    கண்மணிக்குள் சின்னச் சின்ன
    பாடல்களும் கேட்க இனியவை.
    படத்தில் இடம் பெறாத பாடல்
    "வானம் வாழ்த்திட"பாடல்.
    சின்ன மாப்பிள்ளை பிரபுவின் திரைப்பாதையை மேலும் சிறப்பாக்கிய படம்.
    100நாள் வெற்றிப்படம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •