-
25th June 2016, 03:12 PM
#11
Junior Member
Veteran Hubber
ஜெமினி பெட்டி Vs ஜேம்ஸ்பாண்ட் பெட்டி !
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவர் தனது விஞ்ஞான தொழில்நுட்ப உபகரணங்களை வேவு பார்க்கும் நோக்கில் விமானத்திலோ காரிலோ நடந்தோ ஒரு சூட்கேசில் வைத்துகொண்டு செல்லும் காட்சிகள் தவறாமல் இடம் பெறும் !
ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் திரைத்தோற்ற வடிவமைப்பில் அவரது 6 அடி 2 அங்குல உயரமே ஏனைய ஜேம்ஸ்பாண்ட் நடிகர்களுக்கும் வரையறுக்கப்பட்ட உயரம் .
சாவில்ரோ தையல் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட அவரது கருநீல கோட்சூட் டை தொப்பி கறுப்புக்கண்ணாடியுடன் இந்த சூட்கேஸைக் கையில் பிடித்தபடி ஜேம்ஸ் பாண்டின் தீம் மியூசிக்குக்கு இணங்க ஷான் கானரி நடக்கும் கம்பீரம் வர்ணிக்க வார்த்தைகளற்றதே !
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் தாக்கத்தை நமது தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் பயன்படுத்தியதில் இந்த ஜேம்ஸ்பாண்ட் பெட்டி என்று வர்ணிக்கப்படும் சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸும் தவிர்க்க முடியாத செட் ப்ராப்பர்டி ஆகிவிட்டது வரலாற்றுப்பதிவே !
1962ல் முதல் ஜேம்ஸ்பாண்ட் படமான டாக்டர் நோவில் ஆரம்பித்து இவ்வகை ஜேம்ஸ்பாண்ட் பெட்டிகளும் பல்வேறு பரிணாம பரிமாண மாற்றங்களைக் கண்டுகொண்டே இருப்பதும் இன்றுவரை தொடர்கதையே ! அதேவருடம் வெளிவந்த சுமைதாங்கி காவியத்தில் காதல் மன்னர் சோகசக்கரவர்த்தியாக மயக்கமா கலக்கமா பாடல் காட்சியின் இரண்டாவது பதிப்பில் இதே பெட்டியை ஜெமினி பெட்டியாக்கி நடை பயிலுவார் ... எந்தப்பெட்டி முதல் பேட்டி என்று அனுமானிக்க முடியவில்லை ....ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் பெட்டிதான் முதல் என்று அறிவுக்குத் தெரிகிறது ....ஆனால் ஜெமினி/சிவாஜி பெட்டியே முதல் என்று உணர்ச்சி உரைக்கிறது ....எனது கலக்கமான மயக்கத்தை மனதின் குழப்பத்தை வாழ்க்கையின் நடுக்கத்தை நீக்குவீர்களா .....நீக்குவீர்களா ?!
From Russia with Love....(1963)
Sumaithaangi (1962)
ஸ்ரீதர் நடிகர்திலகத்தின் கையிலும் இந்த பெட்டியை முன்பே கொடுத்து விட்டாரே !
Punar Jenmam (1961)!
Last edited by sivajisenthil; 26th June 2016 at 09:44 PM.
-
25th June 2016 03:12 PM
# ADS
Circuit advertisement
Bookmarks