Results 1 to 10 of 3996

Thread: Makkal Thilagam MGR Part -19

Threaded View

  1. #11
    Junior Member Platinum Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    ஹலோ எப் எம்.106.4ல் இன்று ஒலிபரப்பான "நாடோடி மன்னன் " ஒலிசித்திரத்தின்
    இடையே வெளியான செய்திகள்.


    நாடோடிமன்னன் திரைப்படம் கிட்டத்தட்ட 5 மணி நேரம் திரையில் ஓடும் அளவிற்கு பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது .எடிட்டிங் வேலையில் பணிபுரிந்தவர்கள் திக்கு முக்காடினர். இயக்குனர் எம்.ஜி.ஆர். அவர்களே படதொகுப்பா ள ருடன் இணைந்து காரியத்தைக் கச்சிதமாக முடித்தார்.
    படத்தொகுப்பு வேலைகள் ஒருபுறம் நடக்க, பட தயாரிப்பு வேலைகளும் நடந்து
    கொண்டே இருந்தனவாம் .

    இந்தப் படத்திற்கு ஆகும் செலவு, தாமதம்,வெற்றி /தோல்வி , வேலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன . அவற்றை பொருட்படுத்தாமல், இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். படம் தோல்வி அடைந்தால்
    நான் நாடோடி, வெற்றி பெற்றால் மன்னன் என அறிவித்து, விமர்சனங்களை
    தவிடு பொடியாக்கி மாபெரும் வெற்றி பெற்றார் .


    அரசிளங்குமரி திரைப்பட படப்பிடிப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , வில்லன்
    நம்பியாரும் மோதும் சண்டை காட்சியில் , எம்.ஜி.ஆர். அவர்களின் கையில் கத்தி
    பட்டு, சிறிது ரத்தம் வந்ததும் , படப்பிடிப்பு குழுவினர் பதட்டம் அடைந்து, வில்லன்
    நம்பியாரிடம் வாதிட, உடனே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தலையிட்டு
    நம்பியார் அவர்களுக்கு என் மீது கோபம் இருக்காது, எங்களது நட்பு ஆழமானது .
    அவருடைய கத்திக்கு தான் கோபம் வந்துள்ளது என்று சாதுர்யமாக பேசி
    அனைவரின் பதட்டத்தையும் போக்கினாராம்.


    1967ல் நடிகர் எம்.ஆர். ராதாவால் சுடப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை
    மேற்கொண்டிருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆரிடம் , தயாரிப்பாளர் தேவர்
    மருதமலை கோயில் பிரசாதத்துடன் சென்று, அடுத்த படத்திற்கு (விவசாயி )
    அட்வான்ஸ் பணம் கொடுத்து , கண்டிப்பாக , முருகா நீ விரைந்து நலம் அடைந்து
    வீடு திரும்புவாய். என் அடுத்த 3 படங்களுக்கும் நீ தான் கதாநாயகன் என்று
    அறிவித்து, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நெகிழு
    ம்படி செய்ததோடு, அனைவரையும்
    வியப்பில் ஆழ்த்தினார்.

  2. Likes orodizli liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •