Results 1 to 10 of 4001

Thread: Makkal thilagam mgr part 13

Threaded View

  1. #11
    Junior Member Seasoned Hubber
    Join Date
    May 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RavikiranSurya View Post
    புயலென திரி 13உக்கு பயணிக்கவைத்த அனைத்து மக்கள் திலகம் திரி பக்தர்களுக்கு என்னுடைய புத்தாண்டு நல வாழ்த்துக்கள். மற்றும் வர இருக்கும் தை திருநாள் அனைவருக்கும் நல்லதொரு வளமையும், வலிமையும், சீரையும், சிறப்பையும் கொடுக்கட்டும் என்று ஆண்டவனை வேண்டிகொள்கிறேன்.

    புதிதாக வந்திருக்கும் திரு cs குமார் சார் ...வருக...வருக...தங்கள் வருகை நல வரவாகுக..!

    எஸ்வி சார்...உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். !

    திரு யுகேஷ் ...இரு திரிக்கும் பாலமாக அமைந்திருக்கும் தங்களுடைய நல்ல மனதிற்கும் நல்ல எண்ணத்திற்கும் கோடானு கோடி நன்றிகள்..! தங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...!

    கலைவேந்தன் சார் ! சௌக்கியமா ? சிறந்த நகைச்சுவையுடன் கூடிய சிந்தையை கிளரும் தங்களுடைய பதிவை படித்து நிறைய நாளாகிவிட்டது..! ஒரு பதிவு பதிவிட்டீர்களேயானால் மிகவும் நன்றாக இருக்கும்..! தங்களின் பங்களிப்பு இந்த திரிக்கு தனி பலத்தை சேர்த்துள்ளது..! இந்த புதுவருடத்தில் தை பிறக்கவிருக்கும் நிலையில் தங்களுக்கு எல்லா வளமும் இறைவன் கொடுக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு என்னுடைய புதுவருட மற்றும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    மற்றும் இந்த திரி நண்பர்கள் திரு கலியபெருமாள், வெல்லூர் ராமமூர்த்தி சார், திரு சைலேஷ்பாபு சார்..மற்றும் திரியின் "புதுப்புயல்" முத்தையன் சார், மற்றும் அனுபவஸ்த்தர், தகவல்களின் கருவூலம் திரு பேராசிரியர் செல்வகுமார் சார், புதிதாக இணைந்துள்ள பெங்களூரை சேர்ந்த பழுத்த அனுபவஸ்த்தர், "ஞ்யாயஸ்த்தர்" அண்ணன் திரு cs குமார் அவர்கள் மற்றும் பெயர் விட்டுப்போன அனைத்து நண்பர்களுக்கும் இந்த ஆண்டு இனியதொரு ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி என் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

    Jaihind !

    Rks

    திரு.ஆர்.கே.எஸ்.

    தங்களின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. தங்களுக்கும் எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். புரட்சித் தலைவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய அனைவருக்கும்,தாங்கள் எழுதிய கவிதைக்கும் நன்றி தெரிவித்திருந்தேன். அதைப் பார்த்தீ்ர்களா என்று தெரியவில்லை. தலைவர் நினைவஞ்சலி தொடர்பாக எங்கள் சகோதரர்கள் போட்ட காட்டாற்று வெள்ளம் போன்ற புகைப்படங்களில் எனது பதிவு அடித்துச் செல்லப்பட்டு விட்டது.

    அந்தக் கவிதைக்காக மீண்டும் நன்றி தெரிவிக்கிறேன். அது முதல் கவிதை என்று வேறு சொல்லியிருந்தீர்கள். இத்தனை நாள் இந்த திறமையை எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள்? ‘சுரங்கத்தில் இருக்கும் ஒளிவீசும் வைரம் நீண்ட நாள் சுரங்கத்தில் தங்காது. வெளிவந்தே தீரும்’ என்று திரு.சிவாஜி கணேசன் அவர்களைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியது போல உங்கள் கவிதைத் திறமை வெளிவந்து விட்டது. அதுவும் முதல் கவிதை தலைவருக்கு நினைவஞ்சலியாக அமைந்தது மிக்க மகிழ்ச்சி. தலைவர் பிறந்தநாளில் உங்களின் 2வது கவிதையை எதிர்பார்க்கிறேன்.

    ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையே
    கணேசர் புகழ்பாடும் கவிக்குயிலே
    தலைவர் பிறந்த நாள் கவிதை ஆர்த்து
    களிப்பில் எம்மை ஆழ்த்து.’

    நகைச்சுவை பதிவு போட வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். இப்போது அந்த மனநிலையில் நான் இல்லை. காரணம், நண்பர் திரு.கோபால் நம்மிடமிருந்து 4வது முறையாக விடை பெற்றுக் கொண்டிருக்கிறார். அதனால் சோகத்தில் இருக்கிறேன். யார் கண்டது? அவர் என்னை விட திறமைசாலி. கணக்கு சரியாக வைத்திருப்பார். இதைப் பார்த்த உடனே, ‘‘பொய் சொல்லாதீர்கள் கலைவேந்தன். நான் 4 முறை விடைபெறவில்லை. 3 முறைதான்’ என்று சொல்லிக் கொண்டு வந்தாலும் வரலாம்.

    வரட்டும். வரவேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறேன். அப்படி வந்துவிட்டால் நமது மகிழ்ச்சிக்கும் நகைச்சுவைக்கும் பஞ்சமேது? இப்போது உங்கள் கோரிக்கையை ஏற்க முடியாததற்கு மன்னிக்கவும். சோகமாக இருக்கிறேன்... அவ்...வ்...வ்... (நீங்கள் கேட்டதற்காக இது நகைச்சுவை பதிவு என்று நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பல்ல திரு.ஆர்.கே.எஸ்.)

    அன்புடன் : கலைவேந்தன்
    சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •