Results 1 to 10 of 122

Thread: Why I Consider IR Unparalleled

Threaded View

  1. #11
    Senior Member Diamond Hubber venkkiram's Avatar
    Join Date
    Jan 2009
    Posts
    3,178
    Post Thanks / Like
    ராஜா என்றாலே பின்னணி இசைதான், மெட்டமைப்பதில் (மெலடி - குரல் பகுதி) மற்றவர்கள்தான் சிறந்தவர் என்பதே ஒரு மித். அதை எளிதானக் காரணிகளை கருத்தில் கொண்டு சுலபமாக உடைக்கலாம். இது ராசைய்யாவிற்காக பிரத்யேக இடம். இதில் மற்ற இசையமைப்பாளர்களில் மெட்டுக்களை ஒப்பீட்டு எது சிறந்தது எது தாழ்ந்தது என்ற விளிம்பு வரை செல்லவேண்டாம் என நினைக்கிறென். பாடலுக்காக பின்னணி இசை, படக் காட்சிகளுக்காக பின்னணி இசை இந்த இரண்டு அஸ்திரங்களையும் பயன்படுத்தாமலேயே ராசய்யாவின் மெட்டுக்களையும் பேசலாம். நீங்கள் மேற்குறிப்பிட்ட இரு இசையமைப்பாளர்களின் பாடல்களையும் கேட்டு ரசிப்பவன் என்ற முறையில் என்னாலும் ராசைய்யா எந்த இடத்தில் நிற்கிறார் என்பதை கணிக்க முடியும்.

    ராசைய்யாவிற்கு கொடுக்கப் பட்ட பாடல் சூழ்நிலைகளை பட்டியலிட்டால் இந்த திரியே பத்தாது. டெம்ப்ளேட் வகை உணர்ச்சிகளை உள்ளடக்கியதாக இருந்தாலும் சரி, சட்டகத்தை விட்டு தள்ளி பிரத்யேக சூழ்நிலைகளை வெளிப்படுத்தும் இடங்களாக இருந்தாலும் சரி, ஒரே மெட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட ரசங்களை வெளிப்படுத்தும் இடங்களாக இருந்தாலும் சரி.. எல்லாவற்றிலும் பரிட்சார்த்த முயற்சியில் ராகத்தை கையாண்டிருக்கிறார். முழுக்க முழுக்க சாஸ்திரிய வகை, முழுக்க முழுக்க தெம்மாங்கு வகை, முழுக்க முழுக்க மேற்கத்திய வகை இப்படி தனித் தனியாகவும், பல்வேறு இசைவகைகளை ஒன்றாக பின்னிப் பிணைத்தும் கூட மெட்டமைத்திருக்கிறார்.

    ஆயிரம் படங்களை தொடும் நிலையில் (சுமார் 4500 பாடல்கள்) இருக்கும் பட்சத்தில் மூன்றே மூன்று பாடல்களை இங்கே வைக்கிறேன். மூன்றுமே ஒருசில காரணிகளில் ஒன்றுபடும். அவை 1) மண் வாசனை ததும்பும் 2) மனிதர்களாக வாழ்ந்து மறைந்து அவர்களின் பிற்கால சந்ததிகளால் / ஊர்மக்களால் கடவுள் ஸ்தானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப் படுபவர்களைப் பற்றிய கதைப் பாடல். 3) மூன்றிலுமே மிக மிகக் குறைந்த அளவில் வாத்தியக் கருவிகள் பயன்படுத்த பட்டு இருக்கிறது.

    மலையூர் மம்பட்டியான் - காட்டுவழி போற பொண்ணு


    கரிமேடு கருவாயன் - கதகேளு கதகேளு


    விருமாண்டி - கருமாத்தூர் காட்டுக்குள்ளே


    மூன்றுமே நமது நாட்டுப்புற மெட்டமைப்பின் அகராதி. பொக்கிஷங்கள். மண்ணின் வரலாற்றை பதியவைக்கும் முயற்சி. வரிகளுக்கு ஏற்ப சரியான உணர்வுகளை வெளிப்படுத்த குரல்களை எப்படியெல்லாம் வளைத்து வளைத்து செதுக்கியிருக்கிறார் இவைகளில். இந்த மூன்று மெட்டுக்களே போதும் என்னளவில் ராசைய்யா ஒரு தன்னிகரற்றவர் என்பதை பறைசாற்ற.
    Last edited by venkkiram; 19th July 2014 at 06:41 AM.
    சொல்லிச் சொல்லி ஆறாது சொன்னா துயர் தீராது...

  2. Likes Russellhaj liked this post
  3. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •