Results 1 to 10 of 1846

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan - Filmography, News and Events

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    என்னதான் நடிகர்திலகம் Strasberg/Stanislavsky method Acting செய்தாலும்,Meisner பாணியில் நடித்தாலும் ,நிறைய நல்ல படங்கள் கொடுத்து பெரும் பாராட்டுதல்களை பெற்றாலும் , என் கருத்தில் நடிகர்திலகம் நடித்த Chekhov பாணி படங்கள்,Oscar Wilde /Stella Adler /Shakespere school படங்களே அவரை உலகத்திலேயே சிறந்த நடிகர் என்று நம்மை ஓங்கி சொல்ல வைக்கிறது. ஏனென்றால் பிற இந்திய நடிகர்கள் method Acting பாணியில் நடித்து அவருடைய நடிப்பில் ஒரு 60% தொட முடிந்துள்ளது. ஆனால் அவருடைய மற்ற பாணி நடிப்பில் 5% கூட தொட யாருக்கும் தகுதியில்லை என்று தைரியமாக கூற முடியும். அவரால் மட்டுமே முடியும் என்று சொல்ல கூடியவை. ஒரு சோகம் என்னவென்றால்,இந்த வேறு பட்ட பள்ளிகள் சார்ந்த நடிப்பை ரசிக்க ரசிகன் நன்கு தயார் படுத்த பட வேண்டும் ரசனையில். இந்த காலமே ,நடிப்பின் எல்லைகளை சுருக்கி ,ரசிகனின் ரசனை எல்லையை சுருக்கி ,அவர்களுக்கு பல விஷயங்களில் பரிச்சயம் இல்லாமல் செய்து ,நேரமும் இல்லாத நிலையில் மற்றவற்றை உதாசீன படுத்த வைக்கிறது.(what ever I dont know doesn't have right to exist ) என்ற மோசமான நடத்தைக்கு பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,நட்பு வட்டம் எல்லாமே காரணியாகி விடுகிறது. ஆனால் உன்னதமான ஒன்றை சரியான படி marketing செய்தால் விழுந்து விழுந்து ரசிப்பார்கள் என்பதற்கு கர்ணன் படத்தின் ஒப்பில்லா இமாலய வெற்றி ஒரு சான்று.

    Larger than life என்பது சராசரி மனிதனை விட மேற் தரத்தில் உள்ள (பணம்,பதவி,நோக்கம்,புகழ்,தலைமை,போராட்ட குணம் ,இறை நிலை ) மக்களை பேசும் வலுவான நோக்கம் கொண்ட ,அதீத உணர்ச்சிகள்,போராட்ட நிலை உள்ளதாகவே அமையும். மேற்தர மனிதர்களின் பிரச்சினையும் அதற்குரிய பிரம்மாண்டம் கொண்டே அமைவது தவிர்க்க இயலாதது. இன்றைய காலத்தில் ஒரு NRI குழந்தை,ஒரு அரசாங்க மேற்பணியானர்,தலைவர்,அமைச்சர், புகழ் பெற்ற மருத்துவர் இவர்களை பார்த்தாலே இவர்களின் பொது நடத்தை விந்தையாகவே தெரியும். முற்காலங்களில் அரசர், பிரபுக்கள் ,மதகுருமார்கள் இவர்கள் சராசரி மனிதர்களிலிருந்து வேறு பட்ட உடை, தலை அலங்காரம் (கொம்பா முளைச்சிருக்கு.இல்லை கிரீடம் )நடை,பேச்சு தோரணை, பெரிய பொறுப்பு அதற்குரிய பெரும் பிரச்சினைகள் என்று வேறு பட்டே வாழ்ந்தவர்களை ,நிறைய இக்கால மேதாவிகள் சொல்வது போல் soft contemporary முறையில் நடிப்பது அபத்தத்திலும் அபத்தம்.

    உதாரணத்திற்கு வீர பாண்டிய கட்டபொம்மன் படம் ஒரு Epic தன்மை கொண்ட folklore .மக்களுக்கு அதை பற்றி ஒரு பிரம்மாண்ட image இருக்கும். இங்கு சரித்திரம் புறம் தள்ள பட்டே ஆக வேண்டும். (சரித்திர கட்டமைப்பில் எவ்வளவு சதவிகிதம் உண்மை என்பதே கேள்வி குறி. எல்லோரை பற்றியும் தேவையான சரித்திர குறிப்புகளும் இல்லை.)இந்த நிலையில் Costume Drama என்ற வகை பட்ட பிரம்மாண்ட படத்திற்கு ஒரு உன்னத நடிகரின் கற்பனை சார்ந்த , உயிரிலும் உணர்விலும் அந்த நடிகன் கனவு கண்ட ஒரு பாத்திரத்தை ,கட்டபொம்மன் எப்படி இருந்திருக்க வேண்டும் என்ற எல்லோருடைய fantasy ஐயும் பூர்த்தி செய்வதாகத் தானே அமைய வேண்டும்? அப்படித்தான் அமைந்தது. அதை மொழிக்கு அவசியம் இன்றி உலகமே வியந்தது. எந்த காலத்திலும் எந்த கலைஞனும் அதில் ஒரு நுனியை கூட தீண்ட முடியாது

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •