Results 1 to 10 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

Threaded View

  1. #11
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    *оссия
    Posts
    0
    Post Thanks / Like
    பொட்டு வைத்த முகமோ !

    என் உள்ளத்தைக்கவர்ந்த தலைவர் பாடல்களில் இதுவும் ஒன்று.
    இதன் சிறப்பம்சமாக அனைவரும் கருதுவது,SPB அவர்கள் தலைவருக்கு பின்னணி பாடியிருப்பது.மேலும் தலைவர் இந்த பாடலில் காட்டும் ஒரு youthful style.இதைத்தவிர என்னை மேலும் ஈர்த்தவை கண்ணதாசனின் அற்புத வரிகள்.

    பாருங்களேன்..Chris Gayle போல,முதல் பந்தையே(வரியே)சிக்ஸருக்கு அடிக்கிறார்..
    ."பொட்டு வைத்த முகமோ!"..
    எத்தனை எளிமையான விவரிப்பு.
    ஒரு பெண், சிறிய பொட்டு ஒன்றை தன நெற்றியில் வைத்திருக்கிறாள்.
    இதில் என்ன அப்படி ஒரு அதிசயம்?

    இந்தியர்களுக்குத்தான் தெரியும் ஒரு பெண் முகத்தில் பொட்டு வைக்கும் போது,
    அவள் அழகு பன்மடங்கு அதிகமாகிறது.அவள் கணவனை அல்லது காதலனை,
    அவள் பால் இன்னும் நெருங்க செய்து, நேசிக்க செய்கிறது.
    மேலும் ஒரு சிறப்பு,அந்த பொட்டினால் ஏற்படும் அழகு, மற்றவர் மனதில் வேறு எந்த சலனத்தையும் ஏற்படுத்துவதில்லை.இப்படி ஒரு nativity ததும்பும் வரிகளை கவியரசரால் மட்டுமே படைக்க முடியும்.

    இதற்கு இன்னொரு அர்த்தமும் கொடுக்கலாம்.பொட்டு என்பதற்கு திலகம் என்றும் பொருள் கொள்ளலாம்.எனவே "நடிகர்கள் லட்சம் பேர் இருக்கலாம்.அதில் திலகம் வைத்த ஒரே முகம் நீ!..நடிகர்களில் திலகம் நீ!" என்பதையும் இதில் கவியரசர் தலைவரை மனதில் நிறுத்தி சொல்லாமல் சொல்கிறார்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •