Page 2 of 10 FirstFirst 1234 ... LastLast
Results 11 to 20 of 100

Thread: Post lines or lyrics lingering in mind

 1. #11
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று கைகள் கலந்தாட
  மஞ்சள் முகத்தினில் வெண்பிறை நெற்றியில் வேர்வை வழிந்தோட
  சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு சம்பவம் உண்டாக
  தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான் மல்லிகைச் செண்டாக...

  ம்ம் கண்ணதாசன்.. தாமரை க் கோவில் என்ன அழகிய உவமை.. அதுவும்
  கொஞ்சம் விலகினாலும் விரசமாகி விடக் கூடிய விஷயத்தை
  நாசூக்காக- எளிமையாக் க் கொடுப்பது என்பது அவருக்குக் கைவந்த கலை

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #12
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,823
  Post Thanks / Like
  beautitul ck // அதுவும்
  கொஞ்சம் விலகினாலும் விரசமாகி விடக் கூடிய விஷயத்தை
  நாசூக்காக- எளிமையாக் க் கொடுப்பது //

 4. #13
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,823
  Post Thanks / Like
  நீலம்............... these words justify


  அலையில்லாத ஆழி வண்ணம்
  முகில் இல்லத வானின் வண்ணம்
  மயில் கழுத்தில் வரும் வண்ணம்
  குவளைப் பூவில் குழைந்த வண்ணம்
  ஊதாப் பூவில் ஊறிய வண்ணம்.
  எல்லாம் சேர்ந்து உன் கண்ணில் மின்னும்


  hmm.....appuram
  என் கண்ணன் திருமேனியில் பூத்த வண்ணமும் கூட

 5. #14
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  பூவைப் பூ வண்ணா.. அப்படின்னு திருப்பாவைல வரும்..அதற்குப் பொழிப்புரை எழுதறச்சே ரொம்ப சிரம்ப்பட்டுட்டேன்.. பூவைப் பூ- பூக்காத பூ அப்படின்னு நிறைய பொழிப்புரைல்ல எழுதியிருந்தாங்க..பூக்காத பூன்னா மொட்டு..கண்ணா மொட்டாவா இருக்கான்..இல்லியே..

  அப்புறம் எம் ஏ வேங்கடகிருஷ்ணனோட வியாக்கியானம்.. பூவைப் பூ..ன்னா காயாம் பூ என்ற ஒரு அர்த்தம்.. அது இருப்பது சற்றே நீல நிறம்!

 6. #15
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,823
  Post Thanks / Like

 7. #16
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  உன்னை ஒன்று கேட்பேன்
  உண்மை சொல்ல வேண்டும்
  என்னைப் பாடச் சொன்னால்
  என்ன பாடத் தோன்றும்..

  தமிழ் தெரிந்த,திரைப்படப் பாடல் பிரியர்களில் 75 சதவிகிதம் பேர் இந்தப்பாட்டை அலசி கசக்கிப் பிழிந்து காயப் போட்டிருப்பார்கள்..
  ஆனாலும் எப்போது கேட்டாலும் நினைத்தாலும் இனிக்கும் பாடல் இது..இந்தப்பாட்டின் மேல் மிக மிக ஆசை கொண்ட எழுத்தாளர் ஒருவர்..

  அவர் என்ன செய்தார் தெரியுமா..ஒரு வரிக்கு ஒரு நாவல் எழுதியிருந்தார் அந்தக் காலத்தில்..

  அவர் மணியன்..

  கொஞ்சம் உள் புகுந்து பார்க்கலாமா..பாடலில்...

  காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
  தாலாட்டு பாட தாயாகவில்லை

  முகச் சிணுங்கலை சரோஜாதேவி கொஞ்சம் அழகாகச் செய்திருப்பார்..எனில் இந்தப் பெண் மணமாகாத சின்னப் பெண்ணா..

  நிலவிலா வானம் நிரில்லா மேகம்
  பேசாத பெண்மை பாடாது உண்மை


  கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
  பெண்ணை பாட சொன்னால்
  என்ன பாட தோன்றும்

  முதல் இர்ண்டு வரிகளை மட்டும் எடுத்துக் கொண்டால் என்னய்யாஇது கொஞ்சம் இடிக்கிறதேஎனத் தோன்றலாம்..
  அடுத்த மூன்று வரிகளில் பெரிய கதையாகவே சொல்லலாம்..

  அவளோ சின்னப் பெண்..அப்போது தான் மலர்ந்தவள்..உலகம் அறியாதவள்..கறந்தபாலைப் போன்ற தூய்மையான மனது அவளுக்கு..

  பருவமும் விதியும் சேர்ந்து சிரிக்கிறது அவளுக்கு..

  அவள் மனதையும் கவர்கிறான் ஒருவன்..கொஞ்சம் இனிய இல்லாததுகள் பேசிக் களித்திருக்கையில் மேல்ல கைபிடித்து
  அணைத்து முத்திட முற்படுகையில் நாணம் தடுக்க அவள் விலகிவிட..அவனுக்குக் கோபம்..

  சரி பெண்ணே.. நான் அப்புறம் வருகிறேன்..என்றெல்லாம் சொல்லாமல் கொஞ்சூண்டு முறைத்துவிலகிச் சென்று விடுகிறான்..

  இந்தப் பெண்ணிற்கோ இந்தக் காலத் தமிழில் சொல்வது போல் மனதுக்குள் குழப்பம் கன்ஃப்யூஷன்..
  என்னடி கேட்டான் அவன்..ஜஸ்ட் ஒரு முத்தா தானே கொடுத்திருக்கலாமே..இதோ போய்விட்டான் பார்..என..

  கண்ணை மூடி தன்னைத் தானே நொந்து கொள்கிறாள்..

  வீட்டிற்கு வந்தால் அப்பா ... ஹேய் இவர் என் நண்பர் .. இவனே..என் பொண் நலலாப் பாடுவா.. ஏய் ஒரு பாட்டுப் பாடேன் என்றால்..
  பாடல் தொடர்கிறது இப்படி...

  தனிமையில் கானம் சபையிலே மௌனம்
  உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்
  அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
  என்னை பாட சொன்னால்
  என்ன பாட தோன்றும்

  ம்ம்..ஓரளவு ஜஸ்டிஃபை பண்ணியாச்சுன்னு நினைக்கிறேன்..

 8. #17
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,823
  Post Thanks / Like
  nice ck....naan idhai vera mathiri decipher pannirunthen

 9. #18
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  சொல்லுங்க பார்க்கலாம்

 10. #19
  Senior Member Veteran Hubber Shakthiprabha's Avatar
  Join Date
  May 2009
  Location
  Vagabond
  Posts
  2,823
  Post Thanks / Like
  romba sollarathukku onnum illa....


  உன்னை ஒன்று கேட்பேன்
  உண்மை சொல்ல வேண்டும்
  என்னைப் பாடச் சொன்னால்
  என்ன பாடத் தோன்றும்..  நான் எப்படிங்க பாடுறது? என்ன தான் பாடுறது! Of all the peopole, என்னப் போயி...... பாட சொன்னா.....என்னதான் பண்றது.

  காதல் பாட்டுப் பாடலாம்...ஆனா எனக்கு காதல் ன்ன என்னன்னே தெரியாதே... அதுக்கான அனுபவமோ நேரமோ இல்ல...

  தாலாட்டுப் பாட 'தாய்மை உணர்வும்' என்னை தாக்கல.  நிலவிலா வானம் நிரில்லா மேகம்
  பேசாத பெண்மை பாடாது உண்மை

  கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
  பெண்ணை பாட சொன்னால்
  என்ன பாட தோன்றும்
  நிலவு இல்லாத வானம் நான்...ஏன் என்றால் I am not in love காதலும் இல்லை...காதலினால் பெறும் தாய்மை பூரணத்துவமும் பெறல.....

  நீரில்லா மேகம்...I aint complete... அதனால இந்த பெண்மைக்குப் பேச எதுமே இல்ல.... அனுபவம் இல்லாம பாடற பாட்டுல உண்மையும் இருக்காது...


  காதலோ உறவோ பூண்டு பூரணத்துவம் பெறாத என் பெண்மையை நினைச்சு நானே வாடி நிக்கறேன்...என்னப் போய் பாட சொல்றியே....
  தனிமையில் கானம் சபையிலே மௌனம்
  உறவுதான் ராகம் உயிரெல்லம் பாசம்
  அன்பு கண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
  என்னை பாட சொன்னால்
  என்ன பாட தோன்றும்  இல்லாத காதலையும், உறவின் சுகத்தையும் தனிமையில் மட்டும் நினைச்சு நினைச்சு சந்தோஷ பட்டு ராகம் பாடுறேன்....அதை யெல்லாம் வெளிய சொல்லி பாட முடியுமா?

  உறவுங்கற ராகத்தை, உயிரில் பாசமாய் உருவேத்தி.... உருகிப் போயிருக்கேன்.

  அன்பு நிறைந்த இந்த நெஞ்சுல அனுபவம் இல்லை...அப்படி இல்லாத அனுபவத்தை
  வெச்சு சபைல, எல்லார்க்கும் முன்னாடி...என்னதான் பாடுறது.... புரிஞ்சுக்கோ மாக்கானே!!!

  Last edited by Shakthiprabha; 23rd August 2012 at 02:30 PM.

 11. #20
  Senior Member Diamond Hubber chinnakkannan's Avatar
  Join Date
  Apr 2006
  Location
  BOOLOGAM
  Posts
  8,018
  Post Thanks / Like
  பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
  பிறந்து பாரென இறைவன் பணித்தான்
  இறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன்
  இறந்து பாரென இறைவன் பணித்தான்..

  மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
  மணந்து பாரென இறைவன் பணித்தான்
  அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில்
  ஆண்டவ்னே நீ ஏன் எனக் கேட்டேன்..

  ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து
  அனுபவமே தான் நான் எனச் சொன்னான்..

  கண்ணதாசன் பாட்டு இது..

  காதலே இல்லாத பொண்ணு பாடற பாட்டு இல்லை அந்த உ.ஒ.கே..காதல்னா என்னான்னு அறிஞ்சுக்கத் துடிக்கிற பருவத்துல இருக்கற
  பொண்ணு பாடற பாட்டு..ஆவும் இருக்கலாம்..

  உங்கள் வண்ண்மயமான விளக்கம் குட்

Page 2 of 10 FirstFirst 1234 ... LastLast

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •