View Poll Results: Which of the Vijay movie do you think is the most important movie of his career?

Voters
36. You may not vote on this poll
  • Poove Unakkaga - Vijay's talent get's noticed

    2 5.56%
  • Kadalukku Mariyadhai - The boy-next-door becomes an household name

    6 16.67%
  • Ghilli - Establishing Vijay as the Undisputed King of Commercial Cinema

    18 50.00%
  • Pokkiri - Redefines Vijay's mass and reach among all audiences

    1 2.78%
  • Thuppakki - Re-establishes Vijay's top position in today's highly competitive industry

    9 25.00%
Page 351 of 398 FirstFirst ... 251301341349350351352353361 ... LastLast
Results 3,501 to 3,510 of 3976

Thread: ★ Ilayathalapathy™ VIJAY ★ - Updates and Discussions # 8

  1. #3501
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    At Kappal audio launch.. #Vijay and I discuss cinema. I'm a huge fan of #Vijay. We even gossip together. I love his films says @chiyaanvikram

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3502
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Vikram at Kappal audio launch : At parties, I always dance for #Vijay songs.

  4. #3503
    Senior Member Veteran Hubber
    Join Date
    Aug 2006
    Posts
    1,354
    Post Thanks / Like
    a micro autobiography of shoba chandrasekar! – Ilayathalapathy’s mom shares about her naughty son.

    Posted on July 24, 2014
    ஷோபா சந்திரசேகர்

    “ஏப்ரல் 24, 1973 ல் எங்களுக்கு திருமணமானது. தர்மபிரகாஷ் திருமண மண்டபத்தில் தான் திருமணம்.
    நாகி ரெட்டியாரின் வாஹினி ஸ்டூடியோவில் புரோகிராம் இன்சார்ஜ்ஜாக இருந்தார் என் அப்பா. அங்கே வேலைப்பார்த்த நீலகண்டன் என்பவர்தான் நாங்கள் இன்று இருக்கும் இந்த நல்ல நிலைக்கு காரணம். அவர் போட்ட விதைதான் இந்த வாழ்க்கை. என் அம்மா ஒரு பாடகி. அப்பாவுக்கு நடிகராக வேண்டுமென்ற ஆசை. தங்களது கனவை நிறைவேற்ற இருவரும் ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்தார்கள்.
    அப்பா இந்து மதம். அம்மா கிறிஸ்துவ மதம். கலப்பு திருமணம். சினிமாவில் சுலபமாக ஜெயித்துவிடலாம் என்று நினைத்து சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார்கள். ஆனால் அப்பாவால் ஒரு புரோக்ராம் இன்சார்ஜ்ஜாகதான் ஆக முடிந்தது. அம்மாவால் ஒரு கோரஸ் சிங்கராகதான் முன்னேற முடிந்தது. அவங்களது கனவு பலிக்கவே இல்லை.
    என் அம்மா அழகாக இருப்பார்கள். ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில் ‘பாரடி கண்ணே நில்லடி..’பாட்டில் சாவித்திரி அம்மா பாடுவார்கள். அவர்களைச் சுற்றி நின்றபடி பாடகிகள் பாடுவார்கள். அதில் ஒருவராக ஹார்மோனியம் வாசித்தபடி அம்மா பாடியிருப்பார்கள். ஒரு குரூப் சிங்கராகதான் அம்மாவால வரமுடிஞ்சது. அதனால் அப்பாவுக்கு நம்ம பிள்ளைகளையாவது நாம் ஆசைப்பட்ட மாதிரி கொண்டு வரணும்னு ஆசைப்பட்டாங்க. சுந்தர், சுரேந்தர், ஷோபா, ஷீலா என நாங்க பிறந்தது வளர்ந்ததும், தன்னோட சக்திக்கு மீறி எல்லா விஷயங்களையும் எங்களுக்காக பண்ணினாங்க. அடிப்படையிலேயே நாங்க எல்லா திறமைகளையும் வளர்த்துக்கணும்னு கிளாஸிக்கல் மியூஸிக்கையும் கத்துக் கொடுத்தாங்க.
    எனக்கு பதினோறு வயசான போது வடபழனி முருகன் கோயிலில் என்னோட அரங்கேற்றம் நடந்துச்சு. ’லலிதாஞ்சலி ஃபைன் ஆர்ட்ஸ்’னு அம்மா பெயர்ல ஒரு ட்ரூப் வைச்சு, பக்திப் பாடல்களைப் பாடினோம். அந்த சின்ன வயசிலேயே இப்படி ட்ரூப் ஆரம்பிச்சது நாங்கதான். சின்ன குழந்தைங்க பாட்டு என்றால் எம்.எஸ்.வி. சார் எங்க நாலு பேரையும்தான் கூப்பிடுவாங்க. மறுபக்கம் அப்பா நாடகங்களும் போட ஆரம்பிச்சாங்க. இந்த நேரத்துலதான் எஸ்.ஏ.சி. பேயிங் கெஸ்ட்டாக எங்க வீட்டுக்கு வந்தார். அப்பா தனியாக ஒரு ட்ரூப்பையும், நாடகங்களையும் பண்ணினதால, எஸ்.ஏ.சி. தன்னோட கதையைச் சொல்லி, அவர் இயக்கத்திலேயே நாடகம் பண்ணலாம்னு ஆரம்பிச்சோம். அந்த நாடகத்துக்கு இளைய ராஜா சார் இசையமைச்சிருக்காங்க.
    எஸ்.ஏ.சி. எங்க வீட்டுல பேயிங் கெஸ்ட்டாக இருந்தாலும், நானும் அவரும் நேருக்கு நேர் பார்த்து பேசிக்கிட்டதே இல்ல. எங்க காதலை ஒரு ‘மெளனக் காதல்’னு சொல்லலாம். எங்கம்மா ரொம்ப கண்டிப்பானவங்க. எங்க ரெண்டு பேரையும் பேசக்கூட விடமாட்டாங்க. நாடகத்துல அம்மாதான் ஹீரோயின். ஜெய் கணேஷ் சார் ஹீரோ. நாங்க சின்னச்சின்ன கதாபாத்திரங்கள்ல நடிச்சிட்டு இருந்தோம். தீடீர்னு எஸ்.ஏ.சி. வீட்டுல அவருக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாங்க. எஸ்.ஏ.சி. அப்பவே ஷார்ட் டெம்பராக இருந்தாலும், ‘இவர் நல்ல திறமைசாலி. நல்லா வருவார்’னு அம்மா சொல்வாங்க. ’கோபம் இருக்குற இடத்துலதான் குணமும் இருக்கும்’னு சொல்லி எனக்கு எஸ்.ஏ.சி. மேல் ஒரு ஈர்ப்பு வர்ற மாதிரி ஆகிடுச்சு.
    ‘நான் இருக்குற வீட்டுல ஷோபான்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அவளைதான் நான் கல்யாணம் பண்ண ஆசைப்படுறேன்’னு எஸ்.ஏ.சி. அவங்க வீட்டுல சொன்னதும் எதிர்ப்புகள் கிளம்பிச்சு. இதையெல்லாம் மீறிதான் என்னோட பதினேழாவது வயசுல எங்க திருமணம் நடந்துச்சு. அப்போ அவர் அஸிஸ்டெண்ட்டாக இருந்தார், நான் சிங்கராக இருந்தேன். அந்த சமயங்கள்ல எங்களுக்கு பெரிய வருமானம் எதுவுமில்ல. அவருக்கு சம்பளம் ரொம்ப கம்மி. அதையும் கூட ஒழுங்காக கொடுக்க மாட்டாங்க. 1973ல ஆரம்பிச்சு 1981வரை ஒரே போராட்டம்தான். லைட் மியூஸிக் நிகழ்ச்சிகள்ல நான் கலந்துகிட்டு சம்பாதிச்ச பணத்துலதான் குடும்பம் நடத்தினோம். எனக்கு பதினெட்டு வயசாகும்போதே விஜய் பிறந்தாச்சு. எஸ்.ஏ.சி. எந்தவிதமான ஈகோவும் பார்க்காம, என்னோட நிகழ்ச்சிகளுக்கு கூடவே வந்து விஜய்க்கு பாட்டில் பால் கொடுப்பார். விஜயை நல்லா கவனிச்சுக்குவார். மனைவி பாடுற நிகழ்ச்சிக்கு வந்து, குழந்தையைக் கவனிச்சுக்கிறதை அவர் ஒரு தாழ்வு மனப்பான்மையோடு நினைச்சதே இல்ல. நான் நல்லா பெயர் வாங்கணும்னு, பாடுறதுக்கு கடினமான பாட்டுக்களைத் தேர்ந்தெடுத்து கொடுத்து பாடிப் பழகச் சொல்வார். திருமணமான போது அடையாறு மியூஸிக் காலேஜ்ஜில படிச்சிட்ட்டு இருந்தேன். அதை தொடர முடியாம போன வருத்தம் எல்லாம் எஸ்.ஏ.சி.ன் அன்பால காணாமலேயே போயிடுச்சு.
    1981- ல் வடலூர் கம்பைன்ஸின் தயாரிப்பாளர் சிதம்பரம்கிட்ட எஸ்.ஏ.சி. கதை சொன்னார். அந்த கதைதான் ‘சட்டம் ஒரு இருட்டறை’. அதுக்கு பிறகு இவர் படிப்படியாக மேலே வந்ததும், நான் பாடுறதை குறைச்சிட்டேன். முதல் படமே பெரிய ஹிட்டானதால, எல்லா மொழிகளிலும் படம் பண்ணினார். அதனால அவருக்கு துணையாக நானும் ஷூட்டிங்களுக்கு போவேன். என்னோட அப்பா அம்மாகிட்ட இல்ல எஸ்.ஏ.சியின் அப்பா அம்மாகிட்ட விஜயை விட்டுட்டு ஷூட்டிங் போவோம். எஸ்.ஏ.சி. ரொம்ப ஹோம் சிக். நான் இல்லாம இருக்கவே மாட்டார். அவர் கிளம்பி போய் ரெண்டு நாளானாலே, நீ இன்னும் வரல்லையான்னு அழ ஆரம்பிச்சிடுவார். எந்தளவுக்கு கோபப்படுவாரோ அந்தளவுக்கு அன்பாக இருப்பார்.
    எஸ்.ஏ.சி. ஹிந்திப் படங்கள் பண்ணின போது, அவருக்கு உதவியாக இருக்குமேன்னு நான் ஆறு மாசமாக ஹிந்தி கத்துகிட்டேன். இப்படி இவரோடவே அதிகம் போனதால, விஜயோட டீன் ஏஜ் சமயங்கள்ல அவரை ரொம்ப மிஸ் பண்ணியிருக்கேன். பதிமூணு வயசிலிருந்து பதினெட்டு வயசாகிற காலங்கள்ல ரொம்பவே மிஸ் பண்ணியிருக்கேன்.


    இவர் எல்லா மொழிகளிலும் படம் பண்ணினதால ஒவ்வொரு ஊருக்கும் போக வேண்டியதாயிடுச்சு. நடுவுல வித்யா பிறந்தாள். அவளுக்கு உடம்பு சரியில்லாம போக, மூணரை வருஷம் ஒரே போராட்டம்தான். வித்யாவுக்கு ரத்தப் புற்றுநோய் வந்தால, காப்பாத்த முடியாத நிலையிலும் ட்ரீட்மெண்ட் மட்டும் கொடுத்துட்டு இருந்தோம். எங்களுக்கு பணம் இருந்துச்சு. புகழ் இருந்துச்சு. ஆனால் அதனால் ஒரு பயனும் இல்ல. எங்க வித்யாவைக் காப்பாத்த முடியாம, அவளை இழந்துட்டோம். எல்லாமும் எங்களுக்கு கிடைக்க ஆரம்பிச்சது, ஆனால் 1984 மே 28ம் தேதி வித்யா எங்களை விட்டுட்டு போயிட்டா. விஜய்க்கும், வித்யாவுக்கும் ஆறு வயசு வித்தியாசம்.
    எஸ்.ஏ.சி. சினிமாவுல ஜெயிக்க ஆரம்பிச்சதும் சொந்த கார் வாங்குனோம். சொந்த வீடு கட்டினோம். அவருக்கு கோபம் வரும்போது நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன். ரெண்டு மூணு நாள்ல அவர் கொஞ்சம் அமைதியானதும், நான் எவ்வளவு திட்டினாலும் அவர் அமைதியாகக் கேட்டுப்பார். எல்லா கணவன் மனைவிகளிடமும் நான் சொல்றது, ‘விட்டுக் கொடுத்து போனாதான் வாழ்க்கை’ங்கிற ஒரே விஷயத்தைதான்.
    குடும்ப வாழ்க்கையில முதல் பாதியை கணவருக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவங்க என்ன சொன்னாலும் கோபப்படாம அமைதியாக கேட்டால், ரெண்டாவது பாதி வாழ்க்கை அந்தப் பொண்ணுக்கு நல்லா இருக்குங்கிறது என்னோட அனுபவம்.
    திருவாரூர்ல முரளி சிம்பொனிக்காக நிகழ்ச்சி பண்ண போயிருந்தோம். நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு கொஞ்சம் முன்னாடி, விஜய் பெரிய படியிலிருந்து கீழே விழுந்து பல்லை உடைச்சிட்டார். ரத்தம் கொட்டுது. உதடு வீங்கிப் போச்சு. இதைப் பார்த்துட்டு எனக்கு பாடுறதுக்கும் மனசில்ல. ஆனால் என்னால ஒண்ணும் பண்ணவும் முடியல. இங்கே சென்னைக்கு வந்து சேர்ற வரைக்கும் வலி தாங்காம அழுதுகிட்ட வந்தார். இதை என்னைக்கும் என்னால மறக்கவே முடியாது.
    விஜய் பத்து பதினைஞ்சு வயசு வரைக்கு ரொம்ப துறுதுறுன்னு இருப்பார். ஒரே சேட்டைதான். வீட்டுக்குள்ளே நேராக வராம பின்பக்கம் பைப் வழியாக ஏறி உள்ளே வந்து பயமுறுத்துறது, உயரத்துல இருந்து எகிறிக் குதிக்கிறது, மாமியாரை பயமுறுத்துறதுன்னு ஒரே ஆர்ப்பாட்டம் பண்ணுவார். இதுவரைக்கும் விஜய் படி வழியாக உள்ளே வந்ததே இல்ல. எகிறிக் குதிச்சு பல்லை உடைச்சுகிறது எல்லாம் சகஜம்.
    1977 -ல் சிங்கப்பூர்ல கே. பாலசந்தர் சார், கமல் கலந்துக்கிற நிகழ்ச்சியில் நான் லைட் மியூஸிக் சிங்கராக போனேன். அப்போதெல்லாம் சிங்கர்கள் யாரும் துணையைக் கூட்டிப் போகமாட்டாங்க. ஆனால் நான் பாலசந்தர் சார்கிட்ட, ‘சார் எனக்கு சிங்கப்பூர் பார்க்கணும்னு ஆசையில்ல. ஆனால் என்னோட ஹஸ்பெண்ட் என்கூடவே வந்தால்தான் நான் வருவேன்’னு சொன்னதால எஸ்.ஏ.சி.க்கும் டிக்கெட் எடுத்து கொடுத்தார்.
    விஜய் முதல்ல ரொம்ப சேட்டை பண்ணினாலும், அப்புறம் ரொம்ப அமைதியான ஆளாக மாறிட்டார். அதனால ஒரு நடிகனாக வருவார்னு நினைச்சுகூட பார்க்கல. ப்ளஸ் டு முடிச்சு, பதினெட்டு வயசானதும் விஷூவல் கம்யூனிகேஷன் சேர்ந்து படிக்கன்னு சொன்னப்பதான் தனக்கு நடிக்கிறதுலதான் விருப்பம் அதிகம்னு சொன்னார். சரி முதல்ல விஷூவல் கம்யூனிகேஷனை படிச்சு முடிங்க, பிறகு நடிகனாக அறிமுகப்படுத்துறோம்னு சொன்னோம். ஆனால் விஜய் கேட்கல. நீங்க என்னை இப்பவே நடிகனாக அறிமுகப்படுத்துங்க. இல்லைன்னா நான் வெளியில போய்தான் முயற்சி பண்ணனும்னு சொன்னார். நாம அடிமட்டத்துல இருந்து வந்திருக்கோம். எல்லாமே நாம சம்பாதிச்சதுதான். பரம்பரை சொத்து இல்ல. யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதும் இல்ல. எத்தனையோ பேரை அறிமுகப்படுத்து இருக்கீங்க. நம்ம விஜயை ஏன் நீங்களே அறிமுகப்படுத்த கூடாதுன்னு எஸ்.ஏ.சி.கிட்ட சொன்னேன். விஜய் ஆசையை நிறைவேத்தி உற்சாகப்படுத்தினா நல்லாயிருக்கும்னு சொன்னேன். எஸ்.ஏ.சி. சகோதரர்கள் குடும்பத்துல பசங்க எல்லோருமே இன்ஜினீயரிங் படிச்சாங்க. அதனால விஜயை மெடிஸின் படிக்க வைக்கணும்னு எங்களுக்கு ஆசை இருந்துச்சு. ஆனால் விஜய் ‘நான் டாக்டர் ஆக மாட்டேன். ஆக்டராக தான் ஆவேன்’னு அடம்பிடிச்சு நடிகராகிட்டார்.
    விஜய்க்கு கூச்ச சுபாவம் இருந்ததால முதல் நாலைஞ்சு படத்துக்கு நானும் கூடவே இருந்தேன். கேமரா ஷாட் வைச்சதும் கொஞ்சம் குனிஞ்சபடியே இருப்பார். நான் ‘சின் அப்..சின் அப்’னு சொல்வேன். தனக்குள்ளே நிறைய திறமைகள் இருந்ததாலே, கொஞ்சம் கொஞ்சமாக அந்த திறமைகள் எல்லாத்தையும் வளர்த்துகிட்டார் விஜய். அவரோட குரல் நல்லா இருந்ததால ’ரசிகன்’ படத்துல பாட வைச்சோம்.
    ’எந்த துறையாக இருந்தாலும் சரி நம்மோட கேரக்டர் ரொம்ப முக்கியம். டைமிங் ரொம்ப ரொம்ப முக்கியம்.’னு விஜய் முதல் நாள் ஷூட்டிங் போகும் போது சொன்னோம். அதை இன்னைக்கு வரைக்கு விஜய் பாலோ பண்றார்.

    வித்யா இறந்ததால, விஜய் தனிமையாக ஃபீல் பண்ணக்கூடாதுன்னு சீக்கிரமே திருமணம் பண்ணி வைச்சோம். விஜய் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு பிறகு வீட்டிலும் சரி, பள்ளிக்கூடத்திலும் சரி சொன்ன பேச்சைக் கேட்கிற, மரியாதைக் கொடுக்கிற பையனாகதான் வளர்ந்தார். எங்க பேச்சுக்கு எதிர் பேச்சு பேசுற பழக்கம் விஜய்க்கு இல்ல.
    விஜய்கிட்ட எனக்குப் பிடிக்காத விஷயம்னு எதுவுமில்ல. ரொம்ப அமைதியாக இருந்ததால, கொஞ்சம் ரிலாக்ஸாக எல்லோரிடமும் பழகச் சொல்வேன். பள்ளிக்கூடத்துல கூட டீச்சர் காதுகிட்ட போய் சொன்னதான் கேட்கும். அவ்வளவு மெதுவாகதான் பேசுவார்.
    ‘ப்ரியமுடன்’ படத்துல நெகட்டிவ் கதாபாத்திரத்துல விஜய் நடிச்சது எனக்கு பிடிக்கல. இனிமேல் இப்படி நடிக்காதீங்கன்னு நான் சொன்னதிலிருந்து விஜய் இன்னைக்கு வரைக்கும் அப்படி நெகட்டிவாக நடிக்கவே இல்ல. எனக்குப் பிடிக்காதுங்கிறதுக்காக அதை இப்போதும் ஃபாலோ பண்றார்.
    எங்க வாழ்க்கை ரொம்ப சிம்பிளான வாழ்க்கை. சினிமா துறையில இருந்தாலே மோசமானவங்கன்னு சில பேர் நினைக்கலாம். ஆனால் எல்லோருமே அப்படியில்லையே.
    எல்லாமும் எல்லோருக்கும் அமையாது. அப்பா, அம்மா, கணவர், மகன், மருமகள், பேரக் குழந்தைகள்னு எனக்கு எல்லோருமே நல்லவர்களாக கிடைச்சிருக்காங்க.
    எஸ்.ஏ.சி. கோபக்காரராக இருந்தாலும் அவரோட அன்புக்கு நான் அடிமை. விஜய் மாதிரி ஒரு மகன் கிடைச்சது நான் பண்ணிய புண்ணியம்தான்.”
    Link - http://tamilcinemacritic.wordpress.c...his-pride-son/

    Nice article about Vijay and his parents, family by his mother.

    Vijay's sister if not because of the cancer and was alive today would have been great to see the brother-sister bonding.....can see the vijay's loneliness and his missing of his beloved sister in his calmness and silence.....
    Yennai Arindhaal...

  5. #3504
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like
    Shankar: Though #Vijay call me as a guru, I think we share a rapport like college friends. Especially after the party hosted by Prabhudeva

  6. #3505
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like

  7. #3506
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like

  8. #3507
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like

  9. #3508
    Diamond Hubber Kumaran.P's Avatar
    Join Date
    Oct 2010
    Posts
    0
    Post Thanks / Like

  10. #3509
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

  11. #3510
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Russia
    Posts
    0
    Post Thanks / Like

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •