Page 66 of 305 FirstFirst ... 1656646566676876116166 ... LastLast
Results 651 to 660 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #651
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் சந்திரசேகரன் சார்,

    பாராட்டுக்கு நன்றி..!

    நல்ல உள்ளம் படைத்தவரான தங்களிடமிருந்து 'உள்ளத்தில் நல்ல உள்ளம்' வீடியோ பதிவு வந்தது கூடுதல் சிறப்பு..!

    ஆங்கில சப்-டைட்டில்களை அம்சமாக வழங்கியுள்ள திருமதி. ரேகா ஹரிசரண் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #652
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by HARISH2619 View Post
    திரு பம்மல் சார்,
    விலைமதிப்பில்லாத 3000 பதிவுகளை அதுவும் மிக குறுகிய காலத்தில் அளித்து எங்களையெல்லாம் மகிழ்ச்சிகடலில் ஆழ்த்தி கொண்டிருக்கும் தங்களுக்கு பலகோடி நன்றிகள்.

    திரு வாசு சார்,
    'சந்திப்பு' அனுபவம் அபாரம்.எவ்வளவு எளிமையான நடையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நெஞ்சைவிட்டு அகலாத வண்ணம் ஆழமாக பதித்துவிட்டீர்கள்,நன்றி.
    டியர் செந்தில் சார்,

    தங்களின் இதயபூர்வமான பாராட்டுக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் எனது எல்லையில்லா நன்றிகள்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #653
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    டியர் கல்நாயக் சார்,

    கடலூர் OT- யில் இருந்த கமர் திரையரங்கை அற்புதமாக ஞாபகம் வைத்துள்ளீர்கள். தங்கள் நினைவாற்றலுக்கு ஒரு அன்பு ஷொட்டு. நான் பேபி கிளாஸ் (அப்போதைய L.K.G) முதல் 10th std வரை படித்தது (St.David High School) கடலூர் ஓல்ட் டவுன் என்று கூறப்படும் OT- யில் தான். சொந்த ஊராகையால் பல படங்கள் பார்க்கும் வாய்ப்பு. கமர் தியேட்டர் பிரபல .....கடத்தல் புகழ் ஹாஜி மஸ்தான் அவர்களின் தியேட்டர். கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். 'பேசும் தெய்வம்' இங்கு ரிலீஸ் ஆன தலைவரின் முதல் படம்.

    கடலூர் துறைமுகத்திற்கே இந்த ஒரு தியேட்டர் தான். மீனவர்கள், சிமென்ட் சாக்கு தைப்பவர்கள், தீக்குச்சி அடுக்கும் தொழிலாளிகள், இறால் தோல் உரிப்புப் பணியாளர்கள், மீன் வலை பின்னுபவர்கள் என்று பல்வேறு சிறு தொழில்கள் நடத்தும் உண்மை உழைப்பாளிகளின் உறைவிடம் இந்த ஊர். பகல் காட்சியை விட இரவுக் காட்சிக்கு நாள் முழுதும் உழைத்துக் களைத்த தொழிலாளிகள் கவலைகள் மறக்க கமருக்கு படையெடுப்பது வழக்கம். சும்மா ஜெகஜோதியாய் இருக்கும் சார்!

    பாட்டி வீட்டில் தங்கி படித்தேனா...அவர்களும் தங்கள் வீட்டாரைப் போல கண்டிப்பானவர்களா.. அதனால் இரவுக் காட்சிக்கு தலைவர் படம் பார்க்க போகும் போது என்னுடைய ரூமில் நான் படுக்கும் பெஞ்ச்சில் பாயை நன்றாக ஆள் போல சுருட்டி வைத்து விட்டு, தலைக்கு பதிலாக தண்ணீர் சொம்பை பாயின் தலைப்பகுதியில் வைத்து விட்டு, அதன் மேல் போர்வையை முழுதுமாகப் போட்டு மூடிவிட்டு, அப்படியே நான் படுத்திருப்பது போன்ற செட்டப்பை பக்காவாகப் பண்ணிவிட்டு, தோட்டத்துப் பக்கம் வழியாக காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து படம் பார்க்க கம்பி நீட்டி விடுவேன். படம் முடிந்து வீட்டிற்கு வந்து பூனை போல் சுவர் ஏறிக் குதித்து ஒன்றும் தெரியாத பிள்ளை போல வந்து படுத்துக் கொள்வேன். அதெல்லாம் ஒரு காலம் சார். அந்த திரில்லே தனி... கமரில் தலைவரின் கிரஹப்பிரவேசம், என்னை ஆட்டிப்படைத்த படமான கருடா சௌக்கியமா, வா கண்ணா வா, துணை போன்ற காவியங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன.

    கமர் தியேட்டரைப் பற்றி எழுதிவிட்டு என்னை கலங்க வைத்து விட்டீர்களே! இருந்தாலும் ஆனந்தக் கலங்கல்கள் தான். ஞாபகப்படுத்தி மகிழ வைத்ததற்கு நன்றியோ நன்றிகள். (ப்ச்...அந்த கமர் தியேட்டர் முற்றிலுமாக கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் தரையோடு தரையாக இடிக்கப் பட்டு செங்கல் குவியல்களாகக் கிடக்கிறது சார்)

    நீங்கள் குறிப்பிட்டிருந்த 'பாதிரிக்குப்பம்' ஊரில் முன்பு ஒரு 'டூரிங்' டாக்கீஸ் இருந்தது. திருப்பாதிரிப்புலியூரிலிருந்து சரியாக மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும். அந்த 'டூரிங்' டாக்கீஸ் பெயர் 'ஜெகதாம்பிகா'. பின்னாட்களில் அது எடுக்கப்பட்டு அந்த இடத்தில் பெரிய தியேட்டர் கட்டப்பட்டு அதற்கு 'முருகாலயா' என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த ஏரியாவிற்கு அது ஒரே தியேட்டர் என்பதால் நன்றாகவே தியேட்டர் ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் அது நம்ம தலைவரின் கோட்டை. நம் படங்கள் அங்கு பட்டையைக் கிளப்பும். அங்கு படம் பார்த்த அனுபவங்களை எழுதினால்... நேரம் வரும் போது எழுதலாம்...பின்னாட்களில் ஏற்பட்ட புரட்சி மாறுதல்களால்(!)அந்த தியேட்டரும் கல்யாண மண்டபமாகிப் போய் பல ஆண்மகன்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறது தற்சமயம் வரையிலும்.

    முத்தையா பங்குதாரார்களின் பிரச்னைகளால் அப்படியே இடி விழுந்தாற்போல நிற்கிறது. அதனால்தான் மாற்று ஏற்பாடுகள் எதுவும் நடக்க வில்லை. இப்போது பிரச்சனை தீந்து விட்டதகாக் கூறுகிறார்கள். இனி மாற்று ஏதாவது ஏற்படலாம்.

    என்ன ஒரு இரண்டு நாட்களாய் நம்ம திரியில் ஒரே தியேட்டர்கள் மயமாகவே இருக்கிறதே! சரி ! கடலூரில் எந்த ஏரியாவில் இருந்தீர்கள் என்று கூற முடியுமா?

    தவறே இல்லாமல் அழகாகத் தமிழ் வரைகிறீர்களே! கடலூர்காரரா!.. கொக்கா!... ஒப்பீடெல்லாம் எதற்கு சார்... நாமெல்லோருமே ஒன்றுதான். வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு எழுதுங்கள். தங்கள் பதிவுகளை வேறொரு திரியில் ரசித்துப் படித்து தங்கள் காமெடி சென்ஸை நினைத்து நினைத்து சிரித்து மகிழ்ந்தவன் நான். அந்த 'அண்ணன்' ஒன்று போதாதா. இப்போது புரியுமே...

    கடலூர் வந்து கல்லூரி வாழ்க்கையின் நினைவுகளை அசை போடும் அதே வேளையில் அப்படியே எங்கள் இல்லத்திற்கும் வந்து எங்களைப் பெருமைப் படுத்துங்கள்.

    சூப்பர் சார். தற்சமயம் விடைபெறுகிறேன். தங்களது பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும்.
    Last edited by vasudevan31355; 11th August 2012 at 06:41 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #654
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    தி கிரேட் பம்மலார் சார்,

    நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கும் விழா 'தினத்தந்தி' ஆவணத்தைப் பதிவிட்டு அந்த மகானுக்கு ஆவ(ண)ன மரியாதை செய்து எங்களையும் கோலாகலப் படுத்தியுள்ளீர்கள். மாசறு பொன்னிற்கு, பாசத்தின் ஊற்றுக்கு உலக மரியாதை கிடைக்கச் செய்த அலங்கார, அற்புத, அதிசய, ஆர்ப்பாட்ட, ஆரவார, ஆணித்தரமான விழா நிகழ்வுகளை அற்புதமாகப் பதித்து அத்தோடு நில்லாது வரிசையாக ஆவணங்களின் 'செவாலியே' தொகுப்பு வைரப் பதிவுகள் அணிவகுத்து வரும் என்ற பேரின்ப அதிர்ச்சியை வேறு ஊட்டியுள்ளீர்கள். கைம்மாறு கருதாமல் பணி புரியும் பம்மலார் சார்! (அன்பு) மாற்று யாரும் வையகத்தில் இல்லை தங்களுக்கு.

    நன்றி சொல்ல வார்த்தையின்றித் தவிக்கும்
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #655
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் கல்நாயக் சார்,

    தங்களின் இடுகைகள் தகவலார்ந்த பதிவுகளாக ஒளிர்கின்றன. காமெடியாக பதிப்பதில் கலக்கும் தாங்கள், சீரியஸான பதிவுகளையும் சிறப்பாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்..! தங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்று இனிய பதிவுகளை இங்கே இடலாமே..!

    அன்பு கலந்த எதிர்பார்ப்புடன்,
    பம்மலார்.
    pammalar

  7. #656
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் mr_karthik,

    'செவாலியே விருது விழா' ஆவணப்பதிவுக்கு தாங்கள் வழங்கிய அன்பான பாராட்டுக்கு எனது கனிவான நன்றி..! இவ்விழா குறித்து 'விகட'னில் வந்த (அகடவிகட) விவரங்களைத் தந்து அசத்திவிட்டீர்கள்..!

    தாங்கள் பதித்த, இடிப்பதற்கு முன் உள்ள சென்னை 'புவனேஸ்வரி' அரங்கின் தோற்றம், இதயத்தை இன்று மீண்டும் கனக்கச் செய்தது. தாங்கள் எழுதியது போல் நமது மன்னர் தமது கோட்டைகளையும் தம்மோடு எடுத்துச் சென்றுவிட்டாலும், இன்று மீண்டும் புதுப்பொலிவோடு பற்பல புதுக்'கோட்டை'களில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். இதன்மூலம் நமக்கெல்லாம் மீண்டும் மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் தந்து கொண்டிருக்கிறார்.

    தங்களை இனி 'தமிழ்த் திரையுலக வரலாற்று விற்பன்னர்' என்றே விளிக்கலாம். 1969 முதல் 1972 வரையிலான காலகட்ட சுவாரஸ்யங்களை எத்தனை அழகாகத் தந்துள்ளீர்கள். கடலை கமண்டலத்துக்குள் கொண்டுவந்த 'கார்த்திகேயன்' நீங்கள்..! அத்தனை விஷயங்களையும் ஒரு அருமையான பதிவில் அடக்கிவிட்டீர்களே, பாராட்டுக்கள்..!

    [எந்தவொரு பதிவிலும் தங்களின் ஹியூமருக்கும், பஞ்ச்சுக்கும் பஞ்சமில்லை].

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  8. #657
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    தி கிரேட் பம்மலார் சார்,

    நடிகர் திலகத்துக்கு 'செவாலியே' விருது வழங்கும் விழா 'தினத்தந்தி' ஆவணத்தைப் பதிவிட்டு அந்த மகானுக்கு ஆவ(ண)ன மரியாதை செய்து எங்களையும் கோலாகலப் படுத்தியுள்ளீர்கள். மாசறு பொன்னிற்கு, பாசத்தின் ஊற்றுக்கு உலக மரியாதை கிடைக்கச் செய்த அலங்கார, அற்புத, அதிசய, ஆர்ப்பாட்ட, ஆரவார, ஆணித்தரமான விழா நிகழ்வுகளை அற்புதமாகப் பதித்து அத்தோடு நில்லாது வரிசையாக ஆவணங்களின் 'செவாலியே' தொகுப்பு வைரப் பதிவுகள் அணிவகுத்து வரும் என்ற பேரின்ப அதிர்ச்சியை வேறு ஊட்டியுள்ளீர்கள். கைம்மாறு கருதாமல் பணி புரியும் பம்மலார் சார்! (அன்பு) மாற்று யாரும் வையகத்தில் இல்லை தங்களுக்கு.

    நன்றி சொல்ல வார்த்தையின்றித் தவிக்கும்
    இத்தகைய இமாலய பாராட்டுதல்களைப் பெற அடியேன் என்ன புண்ணியம் செய்தேனோ...

    ஆருயிர்ச் சகோதரரே, நன்றி..நன்றி..நன்றி..!
    pammalar

  9. #658
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    திரைக்காவிய மறு வெளியீட்டு விளம்பரங்கள் : 6

    நடிகர் திலகத்தின் முழுமுதற்காவியம்

    பராசக்தி [முதல் வெளியீட்டுத் தேதி : 17.10.1952]

    முதல் வெளியீட்டில் வெள்ளிவிழாவையும் தாண்டி அயல்நாடான இலங்கையில் 42 வாரங்கள் [294 நாட்கள்] ஓடிய மகாமெகாஹிட் காவியம்

    பொக்கிஷாதி பொக்கிஷம்

    மறு வெளியீட்டு விளம்பரம் : தினகரன்(திருச்சி) : 14.8.1997


    முதல் வெளியீட்டில்,
    திருச்சி : வெலிங்டன் : 245 நாட்கள்,
    குடந்தை : டைமண்ட் : 50 நாட்கள்

    [குடந்தையில் சற்றேறக்குறைய 45 வருட இடைவெளியில் மீண்டும் அதே திரையரங்கில்...!]

    பக்தியுடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #659
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    'சந்திப்பு' திரைக்காவியத்தின் '35 நாட்களில் 75 லட்சம் ரூபாய் வசூல்' 'தினத்தந்தி' விளம்பர கட்டிங் எங்களுக்கு தாங்கள் அளித்த பொற்கிழி. விலைமதிப்பில்லாதது. பொற்கிழி வழங்கிய பொன்னான கைகளுக்கு நன்றிகள். இந்த நேரத்தில் 'திரிசூலம்' மெகா ஹிட் காவியம் '6 வாரங்களில் 60 லட்ச ரூபாய்' வசூல் ஈட்டிய 'தினத்தந்தி' விளம்பரம் நினைவுக்கு வருகிறது. நோக்கம் புரிகிறதா? நன்றிகள் சார்.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #660
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    80க்குப் பிறகு .... வசூலில் சாதனை படைத்த படங்களின் மூலம் தன்னுடைய ஆளுமையை நிரூபித்தார் நடிகர் திலகம் என்பதற்கு சந்திப்பு வசூல் ஒரு சாட்சி. தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள் பம்மலார் சார்.

    வாசு சார்,
    கடலூர் திரையரங்குகளின் நினைவுகளை எடுத்துரைத்து இலவசமாக கடலூருக்கு அதுவும் Time Machineல் சுற்றிக் காட்டி விட்டீர்கள். சூப்பரோ சூப்பர்.

    திரிசூலம் வசூல் எம்.ஜி.ஆர். அவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கு முக்கிய பங்கு வகித்தது என்பது அந்நாளில் பிரசித்தம்.

    பம்மலார் சாரே,
    திரியின் வேகம் மலைக்க வைக்கிறது.. இன்னும் ஓரிரு நாளில் 25,000 பார்வையாளர் எண்ணிக்கையைத் தாண்டி விடும்...ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 வரையிலான கால கட்டத்தில் 20 நாட்களில் 23000 பதிவுகள். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 1000 பார்வையாளர்களை ஈர்த்து வரும் வேகம். பாகம் பத்திலேயே தொடர்ந்திருந்தால் கூட இந்நேரம் நிச்சயமாக அடுத்த பாகத்தைத் தொடர்ந்திருக்கும். எப்படி யிருந்தாலும் புதிய திரியின் வரவு உண்டு. அது சற்று முன்னமேயே வந்து விட்டது.

    விரைவில் இத்திரியின் இரண்டாம் பாகத்தையும் சந்திப்போம் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள் மீண்டும் மீண்டும்.

    டியர் கார்த்திக்,
    தங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து செல்கின்றன. இந்தப் பக்கம் குளோப்பில் சிவந்த மண், அந்தப் பக்கம் வெலிங்டனில் எங்க மாமா, மிட்லண்டில் விளையாட்டுப் பிள்ளை, மூன்று படங்கள் ஒரே சமயத்தில் சென்னையில் ஓடிக் கொண்டிருக்கும் போதே வியட்நாம் வீடு வருகையின் அறிவிப்பு ... இப்படி இருந்தால் எங்கிருந்து படங்கள் 100 நாட்களைக் காணும். எங்க மாமா படம் கடைசி நாள் வரையில் இரு வகுப்புகள் நிறைவு பெற்றுத் தான் ஓடிக் கொண்டிருந்தது.

    இப்படி ஒரே சமயத்தில் மூன்று படங்களும் அதற்கு மேலும் புதிய படங்கள் அதுவும் பல முறை ஓடியது நடிகர் திலகத்திற்கு மட்டும் தான் சாத்தியம்.

    அன்புடன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •