Page 2 of 305 FirstFirst 12341252102 ... LastLast
Results 11 to 20 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #11
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் ராமஜெயம் சார்,
    தங்களுடைய அன்பான வாழ்த்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள். கார்த்திக் சொன்னது போல் இது நம் வீடு போன்ற ஒரு உணர்வைத் தருகிறது. இதற்கு பம்மலாருக்கு நாம் பாராட்டும் வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்க வேண்டும். அதே போல் வரவேற்பும் வாழ்த்தும் நல்கிய கார்த்திக் சாருக்கும் நன்றி. அதே போல் முதல் வாழ்த்து முத்தான வாழ்த்தாக அளித்த வாசு சாருக்கும் நன்றிகள்.

    டியர் பம்மலார் சார்,
    அமரதீபம் வெளியீட்டு விளம்பரமும் சரி, 50வது நாள் விளம்பரமும் சரி, இதுவரை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். உண்மையிலேயே பொக்கிஷாதி பொக்கிஷம் என்பதில் ஐயமில்லை. தங்களுக்கு அனைத்து சிவாஜி ரசிகர்கள் சார்பிலும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

    அதே போல் இன்னொரு பொக்கிஷம்...இது வரை இணையத்தில் வந்திருக்காது என எண்ணுகிறேன். முதன் முதலில் சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முத்திரையின் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு..



    பின்னர் இது விரைவிலேயே மாற்றப்பட்டு விட்டது.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #12
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திரன் சார்,

    இதயதெய்வம் நடிகர் திலகத்தின் பதினோராம் ஆண்டு அவதார நிறைவு நாளன்று [21.7.2012 : சனிக்கிழமை] மாலைப்பொழுதில், நமது புனிதஸ்தலமான சென்னை 'சாந்தி'யில், பக்தகோடிகள் சார்பில் நடைபெற்ற அருமையான நிகழ்வுகளின் நிழற்படங்களை இங்கே இடுகை செய்து நிரந்தரப்படுத்தியமைக்கு இனிய நன்றிகள்..!

    நடிகர் திலகத்துக்கு காட்டப்படும் கற்பூர தீபாராதனை நிழற்படத்தைப் பதிவிட்டது, நமது புதிய திரிக்கு திருஷ்டி கழித்ததுபோலவும் ஆகிவிட்டது.

    பேனர், போஸ்டர்கள் என களைகட்டச் செய்து விட்டீர்கள்..! அடியேன் எடுத்துள்ளவற்றையும் இன்று இரவு பதிவிடுகிறேன்..!

    தங்களின் பொன்னான பதிவுக்கு எனது முத்தான நன்றிகள் !

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  4. #13
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by Subramaniam Ramajayam View Post
    Nadigarthilagam 11th year anniversery ninaivu naal news collections and rasigargal tributes at shanthi well captured.
    Great comeback of pammalar and raghavendran to the hub most welcome. Expecting vasu with colourful pictures soon.
    We will ignore the shortcomings of the past and create a fresh life to the hub
    nadigarthilagam always remainswith us in our daytoday life and guides.
    Thank You So Much, Subramaniam Ramajayam Sir..!
    pammalar

  5. #14
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    பாசம் நிறைந்த பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நீங்கள் துவங்கியிருக்கும் இந்த புதிய திரி, மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் பதிவே நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக அமைந்ததில் இதயம் கனக்கிறது. ஒரே நேரத்தில் இருவேறு உணர்வுகள்.

    இங்கே வந்ததும் நமக்கென்று ஓர் இடம். நம் சொந்த வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இனி தடையேதும் இல்லை. தங்கள் தலைமையில் இந்த புதிய திரி எந்த தடைகளும் இன்றி வெற்றி நடைபோட நாங்கள் அனைவரும் துணை நிற்போம்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    டியர் mr_karthik,

    உளப்பூர்வமாகப் பாராட்டுதல் என்பதும் ஓர் உன்னத-உயர்ந்த பண்பு என்பதனைப் தொடர்ந்து உலகுக்கு உணர்த்தி வரும் உத்தமபுருஷரே, நீவீர் வாழ்க..!

    இங்கே வருகை புரியப் போகும் வாசு சாரையும், வருகை புரிந்துவிட்ட ரசிகவேந்தரையும், ராமஜெயம் சாரையும், தங்களையும், அளப்பரிய அன்போடும், மிகுந்த பாசத்தோடும் 'வருக! வருக!' என வரவேற்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்..! ஆனந்தக்கண்ணீரால் அகமும், புறமும் நனைகின்றன. தாங்கள் சரியாகச் சொன்னதுபோல் இத்திரி நமது சொந்தவீடு. இதில் எளியேனது சிறுசேவையோடு, தங்கள் அனைவரது மேலான மேன்னையான அரும்பெரும் பங்களிப்புகளை ஆவலுடன் தொடர்ந்து எதிர்நோக்குகிறேன்..!

    தங்களின் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் எனது தலையாய நன்றிகள்..!

    தங்கள் ஒவ்வொருவரையும் மீண்டும் 'வருக! வருக!' என உளமார வரவேற்கிறன்..!

    "வந்தவர்கள் வாழ்க ! மற்றவர்கள் வருக !".

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #15
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by mr_karthik View Post
    பாசம் நிறைந்த பம்மலார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    நீங்கள் துவங்கியிருக்கும் இந்த புதிய திரி, மனதில் எல்லையில்லா மகிழ்ச்சியைத் தருகிறது. முதல் பதிவே நடிகர்திலகத்தின் நினைவுநாள் பதிவாக அமைந்ததில் இதயம் கனக்கிறது. ஒரே நேரத்தில் இருவேறு உணர்வுகள்.

    இங்கே வந்ததும் நமக்கென்று ஓர் இடம். நம் சொந்த வீட்டுக்கு வந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இனி தடையேதும் இல்லை. தங்கள் தலைமையில் இந்த புதிய திரி எந்த தடைகளும் இன்றி வெற்றி நடைபோட நாங்கள் அனைவரும் துணை நிற்போம்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    அருமைச் சகோதரரே, இந்த ஒரு வரிக்காகவே அடியேன் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாகிறேன்..!

    என்றென்றும் தங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
    pammalar

  7. #16
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வணக்கம் கூறி வரவேற்பதும் நன்றி சொல்வதும் நம் பண்பாடு... இதை நாம் சொல்வதை விட நடிகர் திலகமே சொல்வதைக் கேட்டால் மேலும் சிறப்பாக இருக்கும் அல்லவா..

    வண்ணத் திலகங்கள் ஒளி வீசும் முகங்கள்..எங்கள்
    திருநாட்டுக் குலமாதர் நலங்கள்
    அன்புத் தெய்வங்கள்
    இன்ப செல்வங்கள்
    ஆடும் கலையாகுமோ
    பாடும் தமிழாகுமோ

    வணக்கம் பலமுறை சொன்னேன்
    சபையினர் முன்னே
    தமிழ் மகள் கண்ணே

    இதோ பாடலைப் பாருங்களேன்

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #17
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்
    நடிகர் திலகத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள
    அன்பிற்குமுண்டோ அடைக்கும் தாழ்


    பொன் போன்ற திரியை "அமர தீபம்" ஏற்றி மங்களகரமாய் துவக்கியிருக்கும் சுவாமி அவர்களே!

    பாங்குடன் வரவேற்று இதுவரை கண்டிராத சிவாஜி புரொடக் ஷன்ஸ் லோகோவை அப்லோட் செய்து தன் பங்களிப்பை செவ்வனே செய்துள்ள ராகவேந்தர் சார் அவர்களே, கார்த்திக் அவர்களே

    வரவிருக்கும் வாசு அவர்களே! நன்றிகள் பல!

    அன்புடன்

  9. #18
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்பு ராகவேந்தர் சார்,

    நடிகர்திலகத்தின் நினைவுநாளையொட்டி, நமது இரண்டாவது 'அன்னை இல்லமான' சாந்தி திரையரங்க வாயிலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியினை தொகுத்தளித்தமைக்கு மிக்க நன்றி. அஞ்சலி பேனரில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் மனதைத்தொட்டன.

    சிவாஜி புரொடக்ஷன்ஸின் முந்தைய எம்ப்ளம் நிழற்படம் அருமை. மராட்டிய மன்னர் சிவாஜி, பவானி அம்மனை கும்பிடுவது போன்ற தோற்றத்தில் வரையப்பட்டது. இதை வடிவமைத்தவர் ஆர்ட் டைரக்டர் மோகன். பின்னர் இது வி.சி.சண்முகம் அவர்களால் நிராகரிக்கப்பட்டு, நடிகர்திலகமும் ராஜாமணி அம்மாவும் சாமி கும்பிடுவது போன்ற ஷாட் எடுக்கப்பட்டு வியட்நாம் வீடு படத்தில் காண்பிக்கப்பட்டது.

    சிவாஜி புரொடக்ஷன்ஸ் முன்னாள் நிர்வாக மேலாளர் ஆர்.கே.என் மோகன்தாஸுடன் 'ரத்தபாசம்' வெளியீட்டன்று பேசிக்கொண்டிருந்தபோது இத்தகவலைச் சொன்னார்.

    அன்புள்ள பம்மலார் சார்,

    தங்கள் மேலான வரவேற்புக்கு மிக்க நன்றி.

    'அமரதீபம்' முதல் நாள், மற்றும் 50-வது நாள் விளம்பரங்கள் மிகவும் அருமை. நடிகர்திலகத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் சாதனைகள் தொடர்வது மனதுக்கு சந்தோஷமளிக்கிறது.

  10. #19
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    pammalar sir.



    சிவகாமி உமையவளே முத்துமாரி...
    உன் செல்வனுக்கு (பம்மலாருக்கு) காலம் உண்டு முத்துமாரி...
    மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக் கூறி
    இந்த மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி





    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 22nd July 2012 at 08:15 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  11. #20
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அன்பு பம்மலார் சார்,

    சாதனைத் திலகத்தின் புகழ் பரப்ப
    பிறவி எடுத்த ஆவணத் திலகமே!
    நீங்கள் ஆரம்பித்துள்ள இத்திரி
    திக்கெட்டும் ஜெயக்கொடி நாட்டட்டும்.

    உளமார, மனமார வாழ்த்தும்,

    உங்கள் அன்புச் சகோதரன் வாசுதேவன்
    நடிகர் திலகமே தெய்வம்

Page 2 of 305 FirstFirst 12341252102 ... LastLast

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •