Page 141 of 305 FirstFirst ... 4191131139140141142143151191241 ... LastLast
Results 1,401 to 1,410 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1401
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like








    வசந்த மாளிகை நினைவலைகள் தொடர்ச்சி

    பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் நிழற்படங்கள் ...

    இந்த நிழற்படங்களுக்குள்ளே ஒளிந்திருப்பது என்ன ..

    கோடானு கோடி ரசிகர்களின் ஆர்வம், உழைப்பு, தங்கள் உடல், பொருள், ஆவி, வாழ்க்கை என அனைத்தையும் அர்ப்பணித்து நடிகர் திலகம் என்கிற கலைக் கடவுளையும் அவருடைய பெருமையினையும் ஊரறியச் செய்த மகத்தான சாதனையின் வடிவமல்லவா இந்த நிழற்படங்கள்.. எத்தனை முறை ஒவ்வொரு ரசிகரும் இப்படத்தைப் பார்த்திருப்பர் என்பது அவர்களாலேயே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் உதிரத்திலும் ஊறித் திளைத்தது நடிகர் திலகம் என்ற பெயர்.

    72ன் உச்சகட்ட வெற்றியின் அடையாளம் மறுநாள் வெளியாகிறது என்கிற புளகாங்கிதமும் பெருமையும் உடலில் தனி வேகத்தையும் உணர்வையும் உந்தி விட்டன. சாந்தி திரையரங்கின் உச்சியில் இருந்த இடிதாங்கி அருகில் ஒரு கம்பம் வைத்து அங்கிருந்து அதனுடைய மறுகோடி வரை அகலமாக கயிறமைத்து, அங்கிருந்து சிண்டிகேட் பாங்க் முன்புறம் சுவற்றில் கிட்டத் தட்ட 15 அடி உயரத்தில் அதே அகலத்திற்கு இந்த முனையில் ஒரு கயிறு கட்டி இரு முனையும் கிட்டத் தட்ட 15 முதல் 20 வரிசைகள் வரும் அளவில் கயிறுகளை குறுக்கே கட்டி தோரணங்களைக் கட்டித் தொங்க வைத்து அழகிற்கு அழகு சோ்த்தனர். கொடிகளில் பெரும்பாலும் மூவர்ணக் கொடிகள் அதில் பெருந்தலைவர் காமராசரின் உருவம் அல்லது ராட்டை சின்னம் இருக்கும். ஒவ்வொரு வரிசையிலும் கிட்டத் தட்ட 10 முதல் 15 ஸ்டார்கள் தொங்க வைக்கப் பட்டிருக்கும். ரம்மியமான காட்சி யல்லவா அது..

    தொடரும்...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #1402
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வசந்த மாளிகை நினைவலைகள் .. தொடர்ச்சி

    எல்லா அமர்க்களங்களையும் முழுதும் பார்க்க ஆசை.. என்றாலும் வீட்டிற்குக் கட்டுப் பட்டவர்கள்... ஒரு வழியாக 10 மணி வரை இந்த கோலாகலங்களைப் பார்த்து விட்டு வீடு திரும்பி மறுநாள் காலை எப்பொழுது விடியும் என்று ஆவலுடன் காத்திருந்த நாள்... எங்கே தூங்கினோம்.. மனம் பட்டாம்பூச்சி போல் பறந்து பறந்து சாந்தி தியேட்டரையல்லவா வட்டமடித்துக் கொண்டிருந்தது..

    அந்த நாளும் வந்திடாதோ என எம் எஸ் அவர்கள் பாடியது போல் அந்த நாளும் வந்து விட்டது. பொழுது விடிந்து விட்டது. சிறப்புக் காலைக் காட்சி.. காதுகளைக் கிழித்து தனியாக வைத்து விட்டுத் தான் படம் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு ஆரவாரம். அதுவும் சக்கரவர்த்தியடா என்ற வரிகள் ஒலித்த போது ...

    விண்ணுலகம் நிச்சயம் அதிர்ந்திருக்கும். தேவலோகம் பூகம்பத்தினால் சிதறுண்டு போயிருக்கும்.. பாற்கடலில் சுனாமி ஏற்பட்டு மஹாவிஷ்ணு மறைந்தே போயிருப்பார் ... எமலோகம் எட்டுத்திக்கும் எகிறிப் போயிருக்கும்... சிவலோகம் சின்னாபின்னமாயிருக்கும் ...வைகுண்டம் வடிந்தே போயிருக்கும் ...

    நானசைந்தால் அசையும் அகிலமெல்லாமே என்று மீண்டும் ஒரு முறை நி்ரூபித்தார் நடிகர் திலகம்.

    மனமும் உடலும் உற்சாகத்தில் கரை புரண்டோட படம் முடிந்து வெளியே வரும் போது ஒவ்வொரு ரசிகர் முகத்திலும் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஒளிரும் ஒளி வெள்ளம் போல் தேஜஸ் ...

    அன்று முதல் அப்படம் ஓடி முடியும் வரை சாந்தியில் வாகனங்களின் அணிவகுப்பு .... நகரில் இருந்த அத்தனை விதமான நவீன கார்களின் இருப்பிடமாக சாந்தி மாறி விட்டது..

    ஆம்... 29.09.1972 ஒரு வரலாறு படைத்து விட்டது. அந்த வரலாறு இன்று தன்னுடைய 40வது ஆண்டை நிறைவு செய்கிறது.

    அந்த படத்தில் பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் திலகத்தை வி.எஸ்.ராகவன் அவர்கள் வாழ்த்துவார். அப்போது நடிகர் திலகம் சொல்லும் வரிகள் வரலாறு படைத்து விட்டன.

    உன்னைப் போல நல்லவர் வாழ்த்து இருக்கும் போது 100 வயது என்ன ஆயிரம் வருஷம் வாழ்வேன் என்பார்..

    இன்னும் லட்சம் வருஷம் ஆனாலும் இவர் வாழ்வார்.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #1403
    Member Regular Hubber
    Join Date
    May 2011
    Location
    Dubai, UAE
    Posts
    34
    Post Thanks / Like
    டியர் ராகவேந்திர சார்,

    வசந்த மாளிகையின் நினைவலைகளை அருமையான வைர வரிகளால் எழுதி எங்களையெல்லாம் அந்த நாட்களுக்கே கூட்டி சென்று விட்டீர்கள்!!!!

    ஆனந்த்

  5. #1404
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post






    வசந்த மாளிகை நினைவலைகள் தொடர்ச்சி

    பார்க்கப் பார்க்க பரவசமூட்டும் நிழற்படங்கள் ...

    இந்த நிழற்படங்களுக்குள்ளே ஒளிந்திருப்பது என்ன ..

    கோடானு கோடி ரசிகர்களின் ஆர்வம், உழைப்பு, தங்கள் உடல், பொருள், ஆவி, வாழ்க்கை என அனைத்தையும் அர்ப்பணித்து நடிகர் திலகம் என்கிற கலைக் கடவுளையும் அவருடைய பெருமையினையும் ஊரறியச் செய்த மகத்தான சாதனையின் வடிவமல்லவா இந்த நிழற்படங்கள்.. எத்தனை முறை ஒவ்வொரு ரசிகரும் இப்படத்தைப் பார்த்திருப்பர் என்பது அவர்களாலேயே சொல்ல முடியாது. அந்த அளவிற்கு ஒவ்வொரு ரசிகரின் உதிரத்திலும் ஊறித் திளைத்தது நடிகர் திலகம் என்ற பெயர்.
    டியர் ராகவேந்திரன் சார்,

    இந்தப் பூவுலகில் அடியேன் பிறந்து ஒரு வார காலமே ஆன நிலையில், தமிழகத்தில், குறிப்பாக சென்னையில், காலத்தை வென்ற நமது காதல் இதிகாசத்தின் வெளியீட்டையொட்டி, கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட, கலைக்கடலின் "வசந்த மாளிகை" திரைக்காவியத்தினுடைய வசந்தமயமான-வண்ணமயமான நிகழ்வுகளை, அக்காவியத்தின் 41வது ஆண்டு துவக்கவிழாவையொட்டி, வளமான நினைவலைகளாக, இங்கே ஆவண விஷுவல்களோடு அம்சமாகப்பதித்து, அதன்மூலம் இந்த 'மய்ய'த்தில் இன்பவெள்ளம் கரைபுரண்டோடச்செய்துவிட்டீர்கள்..! பாராட்டுக்கள்..!

    'கோடானு கோடி ரசிகர்களின் ஆர்வம், உழைப்பு, தங்கள் உடல், பொருள், ஆவி, வாழ்க்கை என அனைத்தையும் அர்ப்பணித்து நடிகர் திலகம் என்கிற கலைக் கடவுளையும் அவருடைய பெருமையினையும் ஊரறியச் செய்த மகத்தான சாதனையின் வடிவமல்லவா இந்த நிழற்படங்கள்..' என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டிருந்தீர்கள். சென்ற வருட ரிலீஸ்மேளாவின்போது அடியேன் இந்த பொக்கிஷ விளம்பர நிழற்படங்களை நமது ஒன்பதாவது பாக திரியில் அளித்திருந்தேன். இவற்றை அப்போது இடுகைசெய்தபோது அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்போதுதான் அதிகம் மகிழ்கிறேன்..! அந்த கோடானுகோடி அன்புள்ளங்களுக்கு இந்தப் ஆவணப்பொக்கிஷ விளம்பரங்களை அர்ப்பணம் செய்கிறேன்..! இதற்குத் தங்களின் மலரும் நினைவுகள் மூலம் வழிவகைசெய்ததற்காக எனது பிரத்தியேக நன்றிகளையும் தங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்..!

    லட்சம் ஆண்டுகள் என்ன....கோடி ஆண்டுகள் ஆனாலும் நமது கோமகன் வாழ்வார்..!

    தங்களின் தொண்டுள்ளம் என்றென்றும் வாழ்க..!

    பாசத்துடன்,
    பம்மலார்.
    pammalar

  6. #1405
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by rajeshkrv View Post
    ungalukku illamala .. you are welcome sir
    Thank you so much Sir....Thank you so much..!
    pammalar

  7. #1406
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by sivajisenthil View Post
    my sincere thanks to you Pammalar Sir for honoring me with the everlasting fabulous still of NT that is always on my table for first look when i wake up.
    Thank you so much, sivajisenthil Sir..! தங்கள் மகிழ்ச்சி என் பாக்கியம்..!

    'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதே நமது தாரக மந்திரம்..!
    pammalar

  8. #1407
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    Quote Originally Posted by BaristerRajinikanth View Post
    A CLARIFICATION WITH YOUR PERMISSION, YOUR HONOUR !!!

    PAMMALAR MAYLAE IDUGAI SEIDHA PADATHIL ORU VIDHDHAI SEIDHULLAR....ENNUDAYA ANUMAANUM SARIYAAGA IRUKKUMAE AANAAL ADHU....ENGAL ANNAI ILLA RAAJAKUMARANIN IDHAYATHIL THIRU.KUMARESAN AVARGAL NIRAINDHU IRUPAVAR ENGRA KAARANATHINAAL AVARIN IDHAYATHARUGAE KUMARESAN AVARGAL PEYARAYUM......

    "THAMIZHAGATHIN PERUMAI" ENGAL KALAI AVADHAARATHIN PAADHA SEVAGARGAIL THAANUM ORUVAR ENBADHU POL, AVARIN PAADHATHIL THANN PEYAR VARUMAARU POATIRUKIRAAR......

    ENNA PAMMALARAE.....SONNADHU SARIDHAANAE ?

    THAT's All Your HONOR !!!


    You are cent percent right, Barrister Sir..!
    pammalar

  9. #1408
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் முரளி சார்,

    உத்தமபுத்திரரான வில்லன் விக்ரமன் ஸ்டில்லை தங்களுக்கு பரிசாக அளிக்காமல் வேறு யாருக்கு அளிக்கமுடியும்..!
    [அடிகளாரே, சாந்தம் அடைக..!]

    தங்களுடைய மகிழ்வு இந்த சுவாமிநாதன் பெற்ற பேறு..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  10. #1409
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் பார்த்தசாரதி சார்,

    தங்களின் அளப்பரிய மகிழ்ச்சி கண்டு எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி..! தங்களுடைய அன்பான பாராட்டுதல்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  11. #1410
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    தங்களுடைய இதயபூர்வமான பாராட்டுதல்களுக்கு எனது அன்பு நிறைந்த நன்றிகள்..!

    "திருவிளையாடல்" மகாமெகா ஸ்டில்ஸ் ஆல்பம் வழக்கம்போல் excellent..! முக்கிய பாத்திரத்தில் நடித்த ஒவ்வொருவரையும் மறவாமல் இந்த ஆல்பத்தில் பிரதானமாக பதித்துள்ளீர்கள். இதற்காக தங்களுக்கு எனது ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!

    'பைக்' ஓட்டும் பைரவர் படம் : பிச்சுப்புட்டீங்க சார்..!

    ஞானப்பழங்கள், தங்கள் ஜூஸ் பதிவின்மூலம் "ஞான ஒளி" பெறட்டும்..!

    "மூன்று தெய்வங்கள்" முத்தான ஸ்டில்ஸ், ஸ்டைல் சக்கரவர்த்தி 'கோபால்' ஸ்டில்ஸ் அனைத்தும் கண்களுக்கு சரியான விருந்து..!

    திரு.'லூஸ்' மோகன் அவர்களுடன் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றிய பகிர்வு உண்மையிலேயே top class..!

    நாகேஷ் 80 : ஸ்டில்ஸ் ஸ்பெஷல் : டைம்லி & லவ்லி போஸ்ட்..!

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •