Page 13 of 305 FirstFirst ... 311121314152363113 ... LastLast
Results 121 to 130 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #121
    Senior Member Regular Hubber Mahesh_K's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    186
    Post Thanks / Like
    பம்மலார் சார்.. .
    .
    நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளைப் பற்றிய உங்களது பதிவுகள் ஒரு சிறு இடைவெளிக்குப் பின் தொடர்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது கார்த்திக் சார் முன்பு குறிப்பிட்டதைப்போல, விடுபட்டுப்போன படங்களின் - குறிப்பாக திரிசூலம் - சாதனைகளை உங்கள் மூலமாக, ஆதரங்களுடன் காண ஆவலாக இருக்கிறோம்.

    மறு வெளியீடு குறித்த தொடர் மூலம் பல உண்மைகள் தெரிய வந்து , சில 'கற்பிதங்கள்' தகர்ந்து போகும் என்று நம்புகிறேன்.

    புதிய திரி ஜெட் வேகத்தில் 4 நாட்களில் 12 பக்கங்களைக் கடந்திருக்கிறது. பங்களிப்பு செய்த அனைவருக்கும் - குறிப்பாக - உங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ராகவேந்திரன் சார் மற்றும் வாசு சாருக்கும் என் நன்றி.
    Last edited by Mahesh_K; 26th July 2012 at 10:56 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #122
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் பம்மலார்,

    முதல் வெளியீட்டு விளம்பரம், மறு வெளியீட்டு விளம்பரங்கள் என்று ஜமாய்க்கிறீர்கள்.

    வாசு சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் சர்ர் ம்ற்றும் நண்பர்களின் பங்களிப்ப்போடு திரியும் ஜெட் வேகத்தில் செல்கிறது.

    வாழ்த்துக்கள்.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  4. #123
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Vasudevan Sir,
    Nadigar Thilagam Part 10....Ungaludaya Contribution should continue...oru anbu vendugoal....



  5. #124
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'காவல் தெய்வம்'(1.5.1969)



    திரையுலகைக் காத்த 'காவல் தெய்வம்' ஒரு ஆய்வு. (நடிகர் திலகத்தின் பகுதி மட்டும்)

    அதுவரை வெளிவந்த நடிகர் திலகத்தின் காவியங்களில் நடிப்பில் பிரளயம் செய்த சரித்திர பெருமை பெற்ற படம். நடிகர் திலகமே "கொஞ்ச நேரமே வந்தாலும் அந்த சாமுண்டி என்னை அதிகமாகத்தான் ஆட்டிப் படைத்து விட்டான்" என்று அந்த சாமுண்டி பாத்திரத்தைப் பற்றி பெருமிதம் கொண்ட கர்ஜனைக் காவியம். இனி சாமுண்டியைப் பற்றி...



    சாமுண்டி கிராமணி ஒரு மரம் ஏறி. பனை மரம் ஏறி 'பதநீர் ' இறக்கும் தொழில் அவனுடையது. குணம் புடம் போட்ட தங்கம். யார் வம்புக்கும் போகாமல் தான் உண்டு, தன் தொழில் உண்டு, தன் அன்பு மகள் உண்டு என்று வாழ்பவன். சாணரன் ஆனாலும் தன்மானமிக்கவன். தன்னுடன் மரம் ஏறும் சக தொழிலாளியிடம் கூட அவன் ஏறும் மரத்தில் இருக்கும் குருவிக்கூட்டைக் கலைத்து விடாதே என்று சொல்லும் இளகிய மனம் கொண்டவன். மனைவியை இழந்தவன். மகளுக்காக உயிரை சுமப்பவன்.

    ஊர்ப் பெரிய மனிதர் இருவரின் கழுகுப் பார்வையில் பட்டு விடுகிறாள் சாமுண்டியின் மகள். சாமுண்டி தொழிலுக்குப் போய் இருக்கும் நேரத்தில் மகளின் கற்பு சூறையாடப்படுகிறது. காமப் பிசாசுகளின் காம வெறியாட்டத்தால் கற்பிழந்து காலனுக்குப் பலியாகிறாள் காவிய மகள்.

    வீடு திரும்பும் சாமுண்டி கயவர்களைக் கண்டு விடுகிறான். என்ன நடந்தது என்று தெரியாமல் ஆனால் என்னவோ நடந்து விட்டது என்பதை மட்டும் புரிந்துகொண்ட சாமுண்டி வீடு நுழையும் முன் ஒருவனைப் பிடித்து விடுகிறான். இன்னொருவனோ தப்பித்து விடுகிறான். பிடித்தவனைப் பிடித்தபடியே வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால்...



    மகள் மானத்தை பலி கொடுத்து,அலங்கோலமாக சின்னாபின்னாபடுத்தப்பட்டு மரணத்தை தழுவியிருக்கிறாள் . சடுதியில் புரிந்து கொண்டு உறைந்து போய் விடுகிறான் சாமுண்டி. அவன் வாழ்வே அவன் கண்ணெதிரில் நாசமாகக் கிடக்கிறது. கோபத்திலும், வெறியிலும், கட்டுக்கடங்கா உணர்ச்சியிலும் பிடித்தவனை கண்டந்துண்டமாக வெட்டி மகளுக்கு பலி கொடுக்கிறான். கதறுகிறான்... துடிக்கிறான்... துவள்கிறான்.



    காவல் துறை கைது செய்து கூண்டில் ஏற்றுகிறது. கோர்ட் ஆயுள் தண்டனை விதிக்கிறது. விதியின் தீர்ப்பு. சாய்ந்த பனைமரமாய் சருகாய் கருகிப் போனது அவன் வாழ்க்கை.



    ஒருநாள்... எதிர்பாராத திருப்பம். தன் மகளை நாசப்படுத்திய இன்னொருவன் தான் இருக்கும் ஜெயிலுக்கே தண்டனை அனுபவிக்க வருவதைப் பார்த்து விடுகிறான் சாமுண்டி. கூண்டில் அடைக்கப் பட்ட சிம்மமாய் கர்ஜிக்கிறான். அங்கும் இங்கும் கூண்டில் அலை பாய்கிறான். கொலை வெறியோடு எரிமலை ஆகிறான்.

    ஜெயிலில் உள்ள சக கைதி கேசவன் தச்சுப் பட்டறையில் வேலை செய்யும்போது கம்பி அறுக்கும் ரம்பத்தை கொண்டு வந்து சாமுண்டியிடம் கொடுத்து தப்பித்துப் போக சொல்கிறான்.



    தப்பித்துப் போகவா விருப்பப்பட்டான் சாமுண்டி? அவன் மனம் முழுதும் ஒரே எண்ணம்... ஒரே சிந்தனை... பழி..பழி..பழி.. பழி தீர்... மகளைக் கெடுத்தவனை பழி தீர்...

    ஒரு இரவு வேளையின் நடுநிசியில் ஜெயில் கம்பியை அறுத்து தப்பிக்கிறான் சாமுண்டி. கால்களில் பூட்டப்பட்டுள்ள விலங்கு சத்தம் காவலர்களுக்கு தெரியாமல் பூனை போல மெதுவாக அடியெடுத்து வைக்கிறான். ஜெயிலுக்குப் பக்கத்தில் தெருக்கூத்து நடக்கிறது. என்ன நாடகம் தெரியமா.. இரண்ய விலாசம்..பிரகலாதா நாடகம்.

    என்ன ஒரு பொருத்தம்! அங்கே நாராயணன் தூணிலிருந்து நரசிம்மமாய் வெடித்துக் கிளம்ப இங்கே நமது சிம்மம் ஜெயிலில் இருந்து துடித்துக் கிளம்ப, அங்கே இரணியனை நரசிம்மன் குடலைக் கிழித்து துவம்சம் செய்ய, இங்கே சாமுண்டி கயவன் உறங்கும் சிறைக் கம்பியை அறுத்து அவனது குடலை உருவி நாசம் செய்ய...

    எல்லாம் முடிந்துவிட்டது. ஆனால் யாரும் நெருங்க முடியவில்லை.. சிங்கத்தின் உறுமல் நிற்கவில்லை...கோபம் தணிய வில்லை. அன்பே வடிவான ஜெயிலரின் சாந்தமான கண்களின் தீர்க்கமான கருணைப் பார்வையினால் சாந்தமடைகிறான் சாமுண்டி. பழி தீர்ந்தது...வெறி தணிந்தது. இனி நிம்மதி... மனதில் எந்த பாரமும் இல்லை...கொலைக்குற்றத்துக்கு தூக்கு தண்டனை... சந்தோஷமாக எதிர்கொள்கிறான். விரைவில் தன் மனைவி கமலத்திடமும் மகள் சிவகாமியிடமும் ஐக்கியமாகி விடுவான் நம் சாமுண்டி.



    சாமுண்டியாக சரித்திர நாயகர். கேக்கணுமா...சும்மா அதம் பறக்காதா!...

    தலையில் பின்னால் அள்ளி முடியப்பட்ட பெரிய கொண்டை... முகத்தின் இருபக்கமும் மேல்நோக்கி முறுக்கிவிடப்பட்ட முரட்டு மீசை... இடுப்பில் சாணரர்கள் அணியும் கச்சை... கச்சையில் கட்டப்பட்ட அருவாப் பொட்டி... அதில் செருகியிருக்கும் அருவாகத்தி... அருவாவை சுற்றியிருக்கும் கிட்டிக் கயிறு... மரம் ஏற தளவாடிக்கயிறு சகிதம் சாமுண்டி கிராமணியாக நம் சிங்கத்தமிழன். மரம் ஏறும் சாணரக் குலத்தோர் கெட்டார் போங்கள்.

    சாணரர்களுக்கே உரித்தான அந்த கம்பீர நடை... அந்தப் பணிவு... அடக்கம்... அதே சமயம் தன்மானத்தை விட்டுக்கொடுக்காத கவரிமானின் குணம்... கள் இறக்கச் சொல்லி தூண்டிவிடும் களவானிகளின் மேல் எரிச்சல், கோபம்... மகளின் மேல் மட்டற்ற பாசம்... மகள் கெடுக்கப்பட்ட நிலையில் பொங்கி எழும் பிரளய நிலை... அதிர்ச்சியில் உறைந்து நிலைதடுமாறி மகளின் பிணத்தின் மேல் விழுந்து மகளை வாரியணைத்து கதறி அழும் சோகம், வெறி கொண்ட வேங்கையாகி மகளைக் கெடுத்த ஒருவனை வெட்டிச் சாய்க்கும் வேகம்... சிறையில் தன்னுடன் சக கைதியாய் இருக்கும் சிவக்குமார் தன் கதையைக் கேட்கச் சொல்லி கேட்கும் போது "கத கேக்குறியா...என் கதையைக் கேக்குறியா" என்று குமுறி மகளின் மேல் உள்ள வாஞ்சையை வர்ணிக்கும் விதம்... தான் பழிவாங்கத் துடிக்கும் கயவன் தன் எதிரிலேயே தான் இருக்கும் சிறையில் அடைக்கப்பட கொண்டு போவதை எதிர்பாராமல் பார்த்து அதிர்ச்சியுற்று, அவன்தானா என்று நன்கு உற்று நோக்கி, பார்வையாலேயே நன்கு ஊர்ஜிதம் செய்த பின்னர் செய்வதறியாது சிறையிலேயே சிங்கம் போல சிலிர்த்து, ஜெயில் கம்பிகளைப் பிடித்தபடியே அவனை கிரகிக்கும் விதம்... அங்கும் இங்குமாக அலைபாய்ந்து நடக்கும் பட்டவர்த்தனமான பழி உணர்ச்சி... நாகேஷ் ரம்பத்தை கொடுத்தவுடன் ஏதோ பம்மலாரின் பொக்கிஷம் கிடைத்தது போன்ற சந்தோஷ வெறி... இரணியன் கூத்து நடக்கும் போது கம்பியை நைசாக அறுத்து தப்பிக்கும் விதம்... (ஆஹா... கம்பியை அறுத்து முடித்தவுடன் ஏற்படும் கைவலியைக் கூட கைகளை உதறிவிட்டவாறே காட்ட தெய்வமே! உன்னால் மட்டுமே முடியும்) கால்களில் பூட்டப்பட்ட விலங்குகளினூடே சத்தமில்லாமல், சந்தடியில்லாமல் அடிமேல் அடியெடுத்து வைக்கும் விவேகம்... O.A.K.தேவர் உறங்கும் சிறை அறையின் கம்பிகளை அறுத்து உள்ளே நுழையும் லாவகம்... உள்ளே நுழைந்தவுடன் நம்முடைய இலக்கை அடைந்து விட்டோம் என்ற பரிபூரண திருப்தியை முகத்தில் வெளிப்படுத்துதல்... கண்களில் கனல் கக்கும் வெறி... உச்சந்தலை வரை ஏறியிருக்கும் கோபம்... நாலு கால் பாய்ச்சலில் தாவி நரியைப் பிடிக்கும் சிங்கத்தின் வெறி... வில்லனை நார் நாராய் கிழித்து வெறி அடங்காமல் தொடர் உறுமல்... ஜெயிலர் எஸ்.வி. சுப்பையாவின் கருணைப் பார்வையில் படிப்படியாக கோபம் குறைத்து சாந்தம்... நோக்கத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி விட்ட திருப்தியை அழகாக நடையிலேயே வெளிப்படுத்தும் பாங்கு... தூக்குதண்டனையின் முதல்நாள் இரவு அநியாயமாக உயிரைவிடப் போகிறோமே என்ற சாதாரண மனிதனின் ஆதங்க வெளிப்பாடு ... தனிமை வாட்டும் சோகம்... அதை மறக்க சக கைதிகளை பாட்டு பாடச் சொல்லி கேட்கும் பரிதாபம்... பாட்டுபாட சக கைதிகள் மதங்களின் பெயரை சொல்லி மறுக்கும் போது,"அட ஏண்டா பாவிகளா இங்க வந்து கூட சாதி மதம்ணு பேசிகிட்டு" என்று சலிப்புக் குரல் கொடுத்து... பின் தானே "பொறப்பதும் போறதும் இயற்கை...சிலர் புகழ்வதும், இகழ்வதும் செயற்கை" என்று வருத்தம் மேலிடப் பாடி முடிக்கும் சோகம்... தூக்கு மேடைக்கு போகும் போது மிக அமைதியாக கைதிகளிடம் விடை பெற்று "நான் என் சிவகாமிகிட்டே போறேன்" என்று தன்னைத்தானே தேற்றிகொள்ளும் பக்குவம்... ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக இறுதி மூச்சை விடப்போகும் போது "ஐயா"...என்று குரல் எதிரொலிக்க கூக்குரலிடும் பரிதாபம்...


    நடிப்புக் கயிற்றால் உலகத்தைக் கட்டிப் போட்ட கண் கண்ட கடவுளே! உன் பக்தனாக நாங்கள் என்ன தவங்கள் செய்திருந்தோமோ தெரிய வில்லை.


    அன்புடன்,
    வாசுதேவன்.
    Last edited by vasudevan31355; 26th July 2012 at 01:54 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  6. #125
    Senior Member Devoted Hubber J.Radhakrishnan's Avatar
    Join Date
    Mar 2010
    Posts
    128
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,

    தங்களின் காவல் தெய்வம் படம் படம் பற்றிய புகைப்படத்துடன் கூடிய ஆய்வு, மீண்டும் ஒரு முறை
    படம் பார்த்த உணர்வு ஏற்ப்பட்டது.

    மிக்க நன்றி!
    அன்றும் இன்றும் என்றும் நடிகர்திலகத்தின் நிரந்தர ரசிகன்

  7. #126
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    நாங்கள் இரு திரி நண்பர்கள். ராசியான திருகரங்களால் வாசு ஏற்றி வைத்த ஜோதியும் பிரகாசிக்க வேண்டாமா?
    Same opinion;

    இருந்தாலும் , வாசு சார் ஆரம்பித்த 10வது பாகம் என்ன பாவம் செய்தது ?

  8. #127
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    டியர் வாசுதேவன் சார்,

    காவல்தெய்வம் - சாமுண்டி - புகைப்படங்களுடன் கூடிய உங்களுடைய வர்ணணை மிகவும் அருமை.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #128
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பம்மலார் sir,

    ஒரே நேரத்தில் 'காவல் தெய்வம்' மற்றும் 'முரடன் முத்து' (மறு வெளியீடு) விளம்பரங்களை வெளியிட்டு இரண்டுக்கும் உள்ள ஒரு அபூர்வ ஒற்றுமையை புலப்படுத்தி விட்டீர்கள்.

    அந்த ஒற்றுமை, அந்த இரண்டு படங்களிலுமே நடிகர்திலகம் ஊதியம் எதுவும் பெற்றுக்கொள்ளாமல் இலவசமாக நடித்துக்கொடுத்தார் என்பதுதான்.

    அவரது பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளாமல்தான் ஒருவர் (எஸ்.வி.சுப்பையா) டிபன் பாக்ஸுக்குள் பணத்தை வைத்து நடிகர்திலகத்தை அவமானப்படுத்தினார். இன்னொருவர் (பந்துலு) வேறு பக்கம் ஓடிப்போனார்.

    ஆவணப்பதிவு மழை தொடர்வது, வாடியிருந்த எங்களுக்கு மறுமலர்ச்சியளிக்கிறது.

    பாராட்டுக்கள், நன்றிகள்.

  10. #129
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இருந்தாலும் , வாசு சார் ஆரம்பித்த 10வது பாகம் என்ன பாவம் செய்தது ?
    வாசு சார் ஆரம்பித்தார் அல்ல்வா, அது தான் அந்த பாகத்திற்கு பொறுக்கவில்லை ....சொல்லியா தெரியவேண்டும்...
    அங்கே கேட்கவேண்டிய கேள்வியை இங்கே கேட்பதை என்னென்று சொல்வது ..?
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #130
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் வாசு சார்,
    காவல் தெய்வம் படத்தைப் பற்றி, குறிப்பாக நடிகர் திலகத்தைப் பற்றிய தங்களுடைய குறிப்புரை மிகச் சிறப்பு. அதிலும் பம்மலார் பொக்கிஷம் என தாங்கள் கூறியுள்ளது, மிகவும் யதார்த்தமான உவமை... கம்பருக்கு வாரிசாகி விட்டீர்கள்....

    சென்னை குளோப்பில் இந்தப் படம் வெளியான அன்று அதன் பின்புறம் வெளியான மற்றொரு படத்திற்கு ஏகத்திற்கும் விளம்பரம்.. அதிலும் முதல் டிக்கெட் வாங்கினால் கால் சவரன் மோதிரம் தருகிறார்கள் என்று ஒரு பேச்சு மிகப் பரவலாகப் பரவி யிருந்தது. ஆனால் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்புடனும் பரபரப்புடனும் வெளியான அந்தப் படத்திற்கு சற்றும் குறையாத விதத்தில் காவல் தெய்வம் குளோப்பில் பரபரப்பையும் மக்கள் ஆதரவையும் பெற்று வெற்றி நடை போட்டது, இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது..
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •