Page 163 of 305 FirstFirst ... 63113153161162163164165173213263 ... LastLast
Results 1,621 to 1,630 of 3049

Thread: Nadigar Thilagam : The Greatest Actor of the Universe & The One & Only BO Emperor

  1. #1621
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Quote Originally Posted by vasudevan31355 View Post
    சபாஷ் ராகவேந்திரன் சார். பின்னி எடுத்திட்டீங்க.. நீங்கள் எழுதியதைப் படித்தவுடன் எனக்கு 'சிந்து நதியின் மிசை' ஞாபகம் வந்து விட்டது. "வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்"வரிகளின் போது மிகுதியான நீர் ஆற்றோட்டமாய் வளைந்து நெளிந்து வந்து கடலில் சேர ஓடிவரும் வேகத்தை இரு கைகளின் வளைவுகளின் மூலம் அவர் காட்டும் அழகு... அடடா! மிகுதியான நீர் கடலில் கலந்து வீணாகாமல் பயிர் செய்ய உதவ வேண்டும் என்பதை உணர்த்த, நல்ல நீரை கடலில் சேராமல் தடுப்பது போன்ற பாவனையில் கைகளாலேயே சட்டென்று நிறுத்துவார்... பின் கடலில் சேரவிருக்கும் நல்ல நீரை தடுத்த பின் அந்த நீரோட்டத்தை திருப்பி மையத்து நாடுகளில் பயிர் செய்ய அனுப்பி வைப்பார்.(கைகளாலேயே) கைகளை சமமாக்கி நீரை சமமாக பங்கிட்டு வேறு கொடுப்பார். ஒரு செகண்ட் காட்சி. ஒரு கோடி தலைமுறைக்கும் எழுதலாம். பாரதி மட்டும் இதை கண்டிருந்தால் "என் பாட்டில் இவ்வளவு அர்த்தமா?" என்று ஆச்சரியப்பட்டுப் போவான்.


    Your write-up of nallavan enakunane nallavan of PMP very much impressive like the song. We need more sarathys' to publise NT'S talents.
    plese do write more mr parthasarathysir.
    Last edited by Subramaniam Ramajayam; 9th October 2012 at 07:53 AM.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #1622
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Location
    United Arab Emirates
    Posts
    0
    Post Thanks / Like

    About the strangers in the night video...

    வணக்கம். இது தான் நான் இங்கு முதல் முறை போஸ்ட் செய்வது. அந்த strangers in the night வீடியோ செய்தது நான் தான். ஆனால் மன்னிக்க வேண்டும், அது சிவாஜிக்காக செய்ததில்லை, பத்மினிக்காக செய்தது. I'm a huge Padmini fan. இது என் பத்மினி blog - http://athousanddances.posterous.com.

    நான் அமெரிக்காவில் வாழ்வதால் பத்மினி இருக்கும் படங்களோ பத்திரிக்கை பதிவுகளோ கிட்டுவது மிகவும் அருமை. ஆனால் இந்த வலைதளத்தில் அவர்களைப்பற்றி நிறையத் தெரிந்துக்கொண்டேன். அதற்கு மிக மிக நன்றி சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன். நான் பிறந்தது 1988 இல் என்பதாலும் என் பெற்றோர் தொலைக்காட்சி பார்க்காததாலும் நான் பழைய தமிழ் திரைப்படங்கள் நிறையப் பார்த்ததில்லை. ஆனால் இப்போது தேடித் தேடி மொழி புரிந்தும் புரியாமலும் நிறைய பத்மினி திரைப்படங்கள் பார்த்தபோது சிலவற்றில் சிவாஜியையும் பார்த்தேன். பத்மினியைப் பற்றி இந்த வலைத்தளத்தில் தேடும் பொது நீங்கள் அனைவரும் சிவாஜி மேல் வைத்திருக்கும் அதீத அன்பைப் பற்றி அறிந்துக்கொண்டேன். நான் அவருடைய ரசிகராக இல்லாவிட்டாலும் உங்கள் அன்பு என்னை மிகவும் தொட்டது.

    One day when I've made enough money, I shall collect all the old south indian magazines and (padmini ) movies, acquire the copyrights and make them available online freely.

    Keep up this amazing work and thank you so much for all the songs, videos, pictures, magazine clips and screenshots!
    Last edited by Pappimma KP; 9th October 2012 at 01:46 PM.

  4. #1623
    Senior Member Veteran Hubber mr_karthik's Avatar
    Join Date
    Sep 2005
    Location
    Irumbu kOttai
    Posts
    1,416
    Post Thanks / Like
    அன்புள்ள பார்த்தசாரதி சார்,

    முன்னறிவிப்பின்றி திடுமென "நல்லவன் எல்லோர்க்கும் நான் நல்லவன்" என்று நுழைந்திருக்கிறீர்கள். தங்கள் பாடல் ஆய்வை மீண்டும் கண்ணுற்றதும் பெரும் மகிழ்ச்சி. 'நல்லவன், எனக்கு நானே நல்லவன்' பாடல் ஆய்வு மிக நன்றாக உள்ளது.

    பாடல் முழுவதும் தலைவர் முகம் முழுக்க சிரிப்போடும் குதூகலத்தோடும், அலட்டல் எதுவுமில்லாமல் கைகளை ஃப்ரீயாக சுழலவிட்டு ஸ்டைலாக ஆடுவார். இவர் ஸ்டைலுக்கு முன் பாலாஜி என்னென்னவோ செய்துபார்த்தும் எடுபடாமல் போனார்.

    'நல்லவன், எனக்கு நானே நல்லவன்' என்பது முழுக்க முழுக்க சுயநலமான வார்த்தை. அதனால்தான் பாடல் முழுவதிலும் ஒரு இடத்தில்கூட நடிகர்திலகம் இந்த பல்லவியைப் பாட மாட்டார். தம்பிக்காகப் பார்த்த குடும்பக்குத்துவிளக்கை தான் அபகரித்துக்கொண்ட சுயநலக்காரர் பாலாஜிதான் திரும்பத்திரும்பப் பாடுவார். இயக்குனர் பீம்பாய் நன்றாக மேட்ச் செய்திருக்கிறார்.

    முன்பெல்லாம் பழைய படங்களில் இப்படித்தான். ஏதாவது பண்ணைத்திருவிழா, கோயில் திருவிழா, குடும்பத்தில் விசேஷம் என்றால் மட்டுமே குரூப் டான்ஸ் நடைபெறும். ஆனால் இப்போதோ, கதாநாயகனும் நாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டால் போதும், எங்கிருந்துதான் ஒரே மாதிரி உடையணிந்த முப்பது ஆண்களும் பெண்களும் வந்து குதிப்பார்களோ தெரியாது. டூயட் பாடல் என்ற பெயரில் ஒரே தையாதக்காதான்.

    பாடலை நன்றாக ஆய்வு செய்துள்ளீர்கள். படிக்காத, வேட்டையாடும் முரடனுக்கான உடல்வாகு, அதற்கேற்ற விக் என்று தலைவர் அட்டகாசமாக இருப்பார். தலைவருக்கு ஐந்து பாடல்கள் இருந்தும் கூட தன் ஜோடியுடன் ஒரு டூயட் பாடல்கூட இல்லை. கீரியும் பாம்புமாக இருப்பவர்களுக்கிடையே எப்படி டூயட் என்று கேட்கிறீர்களா?. அட, கனவுப்பாட்டாகக்கூட ஒரு டூயட் இல்லை. அதுதான் தலைவரின் பாணி. அதற்கு பதிலாக பாலாஜியுடன் இரண்டு டூயட். இப்போதுகூட டிவி ரியாலிட்டி ஷோக்களில், இரண்டு ஆண்கள் சேர்ந்து பாடும் பாடல் என்றால், 'பொன்னொன்று கண்டேன்' பாடலைத் தேர்ந்தெடுப்பவர்களே அதிகம்.

    வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்.... ஆறப்போடாமல் அடுத்த பாடலுக்கான ஆய்வை சீக்கிரமே வழங்குங்கள் பார்த்தி....

  5. #1624
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    அன்புள்ள திரு. ராகவேந்தர், திரு. வாசுதேவன், திரு. கோபால், திரு. ராமஜெயம், திரு. கார்த்திக் அவர்களுக்கு,

    படித்தால் மட்டும் போதுமா படத்தில் வரும் "நல்லவன் எனக்கு நானே நல்லவன்" பாடல் ஆய்வுக்கு பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள்.

    அன்புடன்,

    இரா. பார்த்தசாரதி

  6. #1625
    Senior Member Senior Hubber
    Join Date
    Jul 2010
    Location
    chennai
    Posts
    214
    Post Thanks / Like
    நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)



    6. "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு"; படம்:- நெஞ்சிருக்கும் வரை (1967); இயக்கம்:- சி.வி.ஸ்ரீதர்

    இன்னமும் கூட, பல கலைஞர்கள், சினிமாவில், பாடல் காட்சிகளில், எப்போதெல்லாம் வேகமும் ஒரு சில மூவ்மெண்டுகளும் தேவையோ, அப்போதெல்லாம் நடனமாட வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மாறாக, சினிமாவில், பாடல்களில் பெரும்பாலும் தேவைப் படுவது, நடனம் அல்ல, மூவ்மெண்டுகளுடன் கூடிய சில பல அபிநயங்கள் தான் என்று தெரிவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்தப் பாடலை ஒரு முறை பார்த்தால் போதும்.

    மூன்று படித்த இளைஞர்கள், வேலை தேடித் தேடி அலுத்துப் போனாலும், தன்னம்பிக்கையை வரவழைக்க, தங்கள் கண் முன் அப்போது இருக்கும் சூழலை ரசித்து, அனுபவித்து, தன்னம்பிக்கையோடு பாடுவதாக வரும் பாடல்.

    பாடலின் துவக்கத்தில் வரும் இசையே ஒரு வித உற்சாகத்தை அளிக்க, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் வி.கோபாலகிருஷ்ணன் மூவரும், பாடலைத் துவக்குகின்றனர்.

    இந்தப்பாடலைக் கேட்டாலே, பாடல் துவங்கி முடியும் வரையிலும், ஒரு வித சரளமும், வேகமும், உற்சாகமும் இருப்பதை உணரலாம். பார்த்தால், இவை பல மடங்கு
    விருத்தியாவதைக் கண்டு பிரமிக்கலாம். இதற்கு முழு காரணம் நடிகர் திலகம் மட்டுமே.

    பாடல் முழுவதிலும், அவர் காட்டியிருந்த சரளமும், நளினமும், கௌரவத்துடன் கூடிய அழகும்/மெருகும், வேகமும், வெவ்வேறு நடைகளும், ஒவ்வொரு முறையும், வேறு வேறு பாவனைகளையும், இலேசான மூவ்மெண்டுகளையும் மாற்றி மாற்றிக் காண்பித்தும் நடித்த விதம், படம் பார்த்து பல வருடங்கள் ஆனாலும், நெஞ்சில் பசு மரத்தாணி போல் நிரந்தரமாகத் தங்கி விட்டது (அதன் பின்னர் பல முறை பார்த்தாகி விட்டது என்பது வேறு விஷயம்!).

    இந்தப் பாடலின் துவக்கத்தில் வரும் இசையிலிருந்தே, நடிகர் திலகத்தின் இராஜாங்கம் துவங்கி விடும். நடிகர் திலகத்தின் ஒரு பக்கத்தில் முத்துராமனும், மறு பக்கத்தில் வி. கோபாலகிருஷ்ணனும் கூடவே வர, துவக்கத்திலிருந்தே, மிக மிக நளினமாக மெதுவாகத் துவங்குவார். முதலில், துவக்க இசைக்கேற்ற நளினமான நடை - இப்போது, விசிலடித்துக் கொண்டே, கைகளையும் கால்களையும் ஆங்கில பாணியில் அபிநயித்துக் கொண்டே செல்வார்... மெல்ல மெல்ல மூவ்மெண்ட் வேகமெடுக்கும் - ஆனால் ஒரு அளவோடு. இப்போது, நேர் போஸில் மற்ற இருவரோடும் அவர் வர, பல்லவி துவங்கும். "நெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் ஒரு மாதிரி லூசாக வைத்துக் கொண்டே, வலது கையால் சொடக்குப் போட்டுக்கொண்டே, இடது கையை லூசாக வைத்துக் கொண்டே, நடை. "வாழ்ந்தே தீருவோம்" எனும்போது, ஒரு வித இலேசான திமிருடனும் நம்பிக்கையுடனும், வலது கையை உயர்த்தி இந்த வார்த்தைகளுக்கேற்ற பாவம். இப்போது, பல்லவியை மறுபடியும், முத்துராமனையும் கோபியையும் நோக்கித் திரும்பி பாடும் போது வேறு விதமான நடை, மற்றும் பாவம், இப்போது "நாளை என்ற நாளிருக்கு" எனும்போது, இரண்டு கைகளையும் கீழே வைத்து "எப்படி வாழாமல் போவோம்" எனும் விதத்தில் வெளிப்படுத்தி, "வாழ்ந்தே தீருவோம்" எனும் போது, வலது கையை, பெரிய நம்பிக்கையுடன் உயர்த்தி இரண்டு பேரையும் நோக்கிச் சொல்வார். "எங்கே கால் போகும் போக விடு" என்று மற்ற இருவரும் சொன்னவுடன், இடது கையை உயற்றி “முடிவைப் பார்த்து விடு” என்று பாடி, திரும்பவும், "எங்கே கால் போகும் போக விடு" எனும் போது, இப்போது சைட் போஸில், வலது கையை உயர்த்தி சொல்லும் ஸ்டைல்; “காலம் ஒரு நாள் கை கொடுக்கும்”, என்று கூறி, "அது வரை பொருத்து விடு" என்று இப்போது, இரண்டு கைகளால், லூசாக, பொருத்தமாக, அந்த "பொறுத்து விடு"வைச் சொல்வார். இது எல்லாமும், ஒரு இடத்தில் கூட டெம்போ தொய்ந்து விடாமல், ஒன்று நடந்து கொண்டோ, அல்லது இலேசாக அபிநயித்துக் கொண்டோ, இல்லை, ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டோ தான் செய்து கொண்டே இருப்பார். அத்தனை சரளமாக! அனு பல்லவி முடியும் போது, "லா லா ... யா ய யா யா" என்று மூன்று பேரும் ஹம் செய்யும் போது, இவருடைய பாவனையைக் கவனியுங்கள்!

    இப்போது வரும் ஒரு துள்ளல் இசைக்கு, அப்படியே, பின்னோக்கி ஆங்கில ட்விஸ்ட் நடன பாணியில் நடனமாடிக் கொண்டே செல்லும் போது, ஆரவாரத்தில் தியேட்டர் கிழிந்தது.

    முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசைக்கேற்றபடி (filler music) , இந்தப் பாடல் துவங்கிய டெம்போ குறையாமல், நடிகர் திலகம் நடந்து கொண்டோ, இலேசான அபிநயத்துடன் கூடிய நடனத்துடனோ, மற்ற இருவருடனும் கைகளைக் கோர்த்துக் கொண்டோ, வலது கையால் சொடக்குப் போட்டபடியேவோ, அல்லது இடது கையோடு சேர்ந்து, கால்களின் துணையோடு, அற்புதமான நளினத்துடன் நடந்து கொண்டோ, நடனமாடிக் கொண்டோ வருவார்.

    முதல் சரணம் - "இருந்தால் தானே செலவு செய்ய" இப்போது "கைல என்ன இருக்கு செலவு செய்ய" என்பதை நளினத்துடன் செய்து காண்பிப்பார். "எடுத்தால் தானே மறைத்து வைக்க" எனும் போது கைகளில் அதற்கேற்ற அபிநயம் இருக்கும். திரும்பவும் அதே வரிகள் - பாருங்கள் - வேறு மாதிரியான அபிநயம் மற்றும் பாவனை - ஆனாலும், அந்தக் கருத்துகேற்பத்தானிருக்கும்! "கொடுத்தால் தானே வாங்கிச் செல்ல தடுத்தால் தானே விழித்துக் கொள்ள" என்று இரண்டு முறை சொல்லும் போதும், வலது கையை உயர்த்தி இரண்டு முறையும் இரண்டு விதமாகச் சொல்லும் விதம்! இப்போது, கேமரா டாப் ஆங்கிளில் இருக்கும்!!

    "எங்கே கால் போகும் போக விடு முடிவைப் பார்த்து விடு; காலம் ஒரு நாள் கை கொடுக்கும் அது வரை பொறுத்து விடு" எனும் போது, நடனமாடாமல், இப்போது வேகமாக நடக்கத் துவங்கி விடுவார் - அதுவும் படு ஸ்டைலாக. இப்போது முதலில் வந்த ஹம்மிங் மறுபடியும் "லா லா ... யா ய யா யா" - முதல் சரணத்துக்கு முன், இதே ஹம்மிங்கிற்கு ஆங்கில பாணியில் அபிநயித்து இலேசாக நடனமாடியவர், இப்போது அதே ஹம்மிங்குக்கு, ஒரு மாதிரி ஸ்டைலாக நடந்து கொண்டே வருவார் - மற்ற இருவர் மட்டும் ஹம் பண்ணுவார்கள். ஏனென்றால், இந்த ஹம்மிங்குக்கு முன் தான் வேகமாகப் பாடிக் கொண்டே நடந்து வருவார். இந்த ஹம்மிங் உடனே வருவதால், அந்த நடையின் வேகத்தைச் சிறிதே குறைத்து, மற்ற இருவரையும் ஹம் செய்ய விட்டு, நடு நாயகமாக, அனாயாசமாக நடந்து வருவார். மீண்டும், பல்லவி "நெஞ்சிருக்கும் எங்களுக்கு..." என்று துவங்கும் போது, அந்த வேகமான நடையுடன் கூடிய அபிநயத்துக்கு வந்து விடுவார். ஆங்கிலத்தில், 'follow through' என்று சொல்வார்கள். இதை நடிகர் திலகத்தைப் போல், பூரணமாகச் செய்து காட்டியவர் இன்று வரை ஒருவரும் இல்லை; இனி ஒருவர் பிறக்கப் போவதும் இல்லை!

    திரும்பவும், இப்போது, இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் துள்ளல் இசைக்கு ஏற்ற படி, கைகளையும் கால்களையும் ஒரு வித தாள கதியுடன் மற்ற இரண்டு பேர்களின் கைகளைக் கோர்த்துக் கொண்டு ஆங்கில பாணியில் நடனமாடிக் கொண்டே வருவார்.

    இப்போது இரண்டாவது சரணம் - "துணிந்தால் தானே எதுவும் முடிய தொடர்ந்தால் தானே பாதை தெரிய" எனும் போது, மறுபடியும் இரண்டு கைகளையும் லூசாக, ஆனால், இப்போது வேறு மாதிரி அபிநயித்துக் கொண்டே வருவார். "சிரித்தால் தானே கவலை மறைய" என்று முதல் முறை சொல்லும் போது, வலது கையை உயர்த்தி சொல்லும் போது, அவர் முகத்தில் தோன்றும் அந்த பாவம் - சிலிர்க்க வைக்கும்! (மனுஷன் எல்லா போஸ்களிலும் அழகாக இருந்தாலும், அந்த சைட் போஸ் மட்டும் - அடிச்சுக்க முடியாது!). மீண்டும் மறு முறை இதேயே சொல்லும் போது "இரண்டு கைகளையும் மேலே தூக்கி "எங்க சிரிக்கறோம்" எனும் போர்வையில் (ஆங்கிலத்தில் wry ஸ்மைல் என்பார்கள் அது போல் - ஒரு வித வறண்ட புன்னகை) அபிநயிப்பார்.

    கடைசியில், "நெஞ்சிருக்கும் எங்களுக்கு" என்று மீண்டும் பல்லவி துவங்கும் போது மூவரும், அங்கிருக்கும் வட்ட வடிவ நீரூற்றின் மேலே ஏறி பாடிக் கொண்டே போய் (இதற்குப் பக்கத்தில் தானே நீ இன்று சிலையாய் இருக்கிறாய் கலைக் கடவுளே!), கீழே இறங்கி அந்த வேகத்தை மெல்ல மெல்ல குறைத்து, "லா ல லா லா" என்று ஹம் செய்த படியே முடிக்கும் போது, அடடா, இவ்வளவு சீக்கிரத்தில் பாடல் முடிந்து விட்டதே என்று தோன்றும்!

    பாடல் எழுதிய கவிஞர் வாலியின் நோக்கத்தைப் புரிந்து, இப்படித் தான் எடுக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர், நடன இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோரின் இதயத்திற்குள் நுழைந்து, அருமையாக இசையமைத்த மெல்லிசை மன்னர் மற்றும் அற்புதமாகப் பாடிய டி.எம்.எஸ்ஸின் வித்தைக்குத் தலை வணங்கி, இந்தப் பாடலை மறக்க முடியாத பாடலாக்கிய பெருமை, நடிகர் திலகம் ஒருவருக்கு மட்டுமே சேரும்.

    இத்தனைக்கும் இந்தப் பாடல், சுட்டெரிக்கும் வெய்யிலில் மெரீனா கடற்கரைச் சாலையில் படமாக்கப் பட்டது. எனக்குத் தெரிந்து, இந்தப் பாடலை ஒரே நாளில் எடுத்து விட்டார்கள். என்ன, கூட நடித்தவர்கள் இவர் அளவிற்கு இயைந்து நடிப்பதற்கு நேரம் பிடித்திருக்கும் என்பதால், நிறைய டேக்குகள் போயிருக்கும். இருப்பினும், காலில் செருப்பில்லாமல் நடித்திருப்பார்கள், நடிகர் திலகம் உட்பட!

    நினைவு தெரிந்து இந்தப் படத்தை முதலில் ஒரு டூரிங் டாக்கீஸில் ஒரு வார நாளில் - அதுவும் - மதியக் காட்சியில் - பார்த்த போது (அரங்கம் நிரம்பி வழிந்து, ப்ளாக்கில் டிக்கெட் வாங்க வேண்டியதாகி விட்டது!), இந்தப் பாடலில், நடிகர் திலகம் ஒட்டு மொத்த மக்களையும் ஆர்ப்பரிக்க வைத்தது பசுமையாக நினைவில் உள்ளது - நிறைய பேர் ஆபரேட்டரிடம் சென்று, "ஒன்ஸ் மோர்" கேட்டு, மறுபடியும், இந்தப் பாடல் போடப் பட்டது - இதெல்லாம், வேறு எந்த நடிகருக்கும் சாத்தியமா?

    நடிகர் திலகத்திடம் இந்தப் பாடல் நெடுகக் கொப்பளிக்கும் குதூகலம், நளினம், நம்பிக்கை, இவை அத்தனைக்கும் மூல காரணங்களான அவரது அசாத்திய, அபாரமான கற்பனை வளம் மற்றும் அர்பணிப்புக்கு முன் கலை வாணியே மயங்கித் தான் தீர வேண்டும் எனும் போது, பார்க்கும் கேவலம் மனித ஜென்மங்களாகிய நாம் என்ன செய்ய முடியும்? அவரைப் பார்த்து வாய் பிளந்து பிரமிப்பதைத் தவிர!

    தொடரும்,

    இரா. பார்த்தசாரதி
    Last edited by parthasarathy; 10th October 2012 at 01:24 AM.

  7. #1626
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சாரதி,
    மறக்க முடியாத மற்றொரு பாடல் - படம் - நெஞ்சிருக்கும் வரை. கிட்டத் தட்ட இந்தப் பாடலின் பெரும் பகுதி படப் பிடிப்பைப் பார்த்த நினைவுகள் இன்றும் பசுமையாக உள்ளது. காலையில் துவங்கி மதியம் வரை நடைபெறும் படப்பிடிப்பில் மக்கள் கூட்டத்தை மிகவும் சிரமப் பட்டு கட்டுப் படுத்த போலீஸ் முயன்ற போது, நடிகர் திலகம் தன் வேண்டுகோளின் மூலம் அந்தப் படப்பிடிப்பை சுமுகமாக நடக்க வைத்த சாதுர்யம் மறக்க முடியாது. காலையிலேயே பெருமளவில் மக்கள் கூட்டம். அப்போதெல்லாம் நாங்கள் கடற்கரையில் காலையில் விளையாடும் வழக்கம் உண்டு. இந்தக் காட்சியிலேயே நீங்கள் கவனிக்கலாம். ஒரு கட்டத்தில் மணலுக்கு முன்புறம் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சி இதில் வரும். வி.கோபால கிருஷ்ணன் முத்து ராமன் இருவரும் மிகச் சிறந்த கலைஞர்கள். அதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் இந்தப் பாடல் காட்சியில் அவர்கள் நடிகர் திலகத்திற்கு ஈடு கொடுக்க முடிய வில்லை என்பதை நாங்கள் கண் கூடாகப் பார்த்தோம். அதுவும் அந்த மக்கள் கூட்டத்தில் நிறைய பேர் எம்.ஜி.ஆர். அவர்களின் ரசிகர்கள் இருந்தார்கள். அவர்களே வியந்து போனார்கள் என்ற அளவிற்கு நடிகர் திலகத்தின் திறமை பளிச்சிட்டது. பாடலில் காலணி இருக்காது. ஒரு கட்டத்தின் போது காலணியுடன் மூவருமே நடந்து விட்டார்கள். அது படமும் பிடிக்கப் பட்ட போது நடிகர் திலகம் திடீரென அதனை நிறுத்தச் சொல்லி விட்டு தன் காலில் வெயில் உரைக்க வில்லையே என காலைப் பார்த்து செருப்பினைக் கழட்டி விட்டு மீண்டும் நடநது வந்தார். அடிக்கடி டேக் எடுக்க வேண்டி வந்ததால் [காரணம் நடிகர் திலகமல்ல] ஷாட் எடுக்கும் போது வெயில் வந்து விடும். அந்த சுட்டெரிக்கும் வெயிலில் வெறும் காலுடன் நடந்து பாடல் முழுவதையும் மூவரும் நடித்து கொடுத்தது பாராட்டத் தக்கது. சாலையில் கடற்கரை ஒட்டிய நடைபாதையை ஒட்டிய பகுதி படப்பிடிப்பிற்காக ஒதுக்கப் பட்ட போது வாகனங்கள் அதனை ஒட்டிய பகுதியில் சாலையில் கடந்து சென்றன. அதனை மிகவும் திறமையுடன் காவல் துறையினர் ஒழுங்கு படுத்தித் தந்தது பிரமிக்கத் தக்க கடமையுணர்வாகும்.



    இதெல்லாம் சரி ... ஆனால் ...

    எந்த இடத்தில் அவர் ஆடிப் பாடினாரோ, எந்த இடத்தில் அவரை அந்தப் படப்பிடிப்பில் பார்த்தோமோ,



    அதே இடத்தில் இன்று அவர் சிலையாக இருப்பதை நாங்கள் கண்ணுறும் போதெல்லாம் ...



    Last edited by RAGHAVENDRA; 9th October 2012 at 09:01 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #1627
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இதயக்கனி சினிமா ஸ்பெஷல் அக்டோபர் பதிப்பு நடிகர் திலகம் பிறந்த நாள் சிறப்பிதழாக வந்துள்ளது. இதில் திருவிளையாடல் வெளியீட்டைப் பற்றி வெளிவந்துள்ள கருத்துரையின் நிழற்படம்





    இது நம்முடைய சொந்தக் கருத்தல்ல. இதயக்கனியின் அணுகுமுறையைக் காட்டுவதாகும். இதில் உள்ள கருத்துக்களை ஏற்பதும் புறக்கணிப்பதும் அவரவர் உரிமை. ஏராளமான ரசிகர்கள் திருவிளையாடல் படத்தின் திடீர் வெளியீட்டில் மனம் நொந்திருக்கும் வேளையில் இந்தக் கட்டுரை தனக்கே உரிய கோணத்தில் இப்பட வெளியீட்டைப் பற்றிக் கூறியுள்ளது.
    Last edited by RAGHAVENDRA; 9th October 2012 at 09:48 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  9. #1628
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    ஒரு ஒசையின்றி மௌனமாக சென்னை உட்லண்ட்ஸ் திரையரங்க வளாகத்தில் திரையிடப் பட்ட திருவிளையாடல் திரைக் காவியத்தின் 25வது நாளை ரசிகர்கள் இன்று 9.10.2012 மாலை அரங்க வாயிலில் கொண்டாடினர். திருவிளையாடல் நடிகர் திலகத்தின் திருவுருவம் இடம் பெற்ற பதாகைக்கு மாலை அணிவிக்கப் பட்டு மரியாதை செலுத்தப் பட்டது. வந்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது. ரசிகர்கள் நடிகர் திலகத்தின் பேனருக்கு தீப ஒளி காட்டி மரியாதை செலுத்தினர். திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்கள் தன் புதல்வியின் திருமண அழைப்பிதழை நடிகர் திலகத்தின் பதாகையின் முன் வைத்து வணங்கி, ரசிகர்களுக்கு அழைப்பிதழைப் படித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.

    நிகழ்ச்சியின் சில நிழற்படங்கள் நம் பார்வைக்கு











    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  10. #1629
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மேலும் சில நிழற்படங்கள்









    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #1630
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    வாசு,

    ஒரு மாதத்திற்கு முன் துணிவே துணை என்று விளம்பர பதிவிட்டீர்கள். ஆனால் நான் எப்போதும் சொல்வது போல் உங்களுக்கு கற்பனை வளமும் எழுத்து திறமையும் என்றுமே உங்கள் துணை. இதை தவிர உங்கள் துணை பதிவைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி.

    அன்புடன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •