Page 389 of 401 FirstFirst ... 289339379387388389390391399 ... LastLast
Results 3,881 to 3,890 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3881
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    அசத்தல் ஆர்ட்டில் ஆண்டவன் 'கர்ணன்'

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3882
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like


    from Maalaimalar website:

    சென்னை, மே 25-

    பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

    1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

    1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

    2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

    தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

    எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

    வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

    2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

    மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    நம்முடைய துயரத்தைக் கூற வார்த்தைகள் இல்லை. தமிழ்த்திரையுலகை தாங்கிப் பிடித்த தூண் சரிந்து விட்டது. தமிழ் சினிமா என்றால் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பங்கு தான் கண் முன் நிற்கிறது. 91வயது வரை அவர் வாழ்ந்தது நமக்கு ஒரு புறம் ஆறுதல் என்பது தான் சொல்லிக் கொள்ள முடியும். அவரை இழந்து வாடுவது அவர் குடும்பம் மட்டுமல்ல, தமிழ்த் திரையுலகமே... அதில் ரசிகர்கள் என்கிற முறையில் நாமும் அடங்குவோம்.

    நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்வது தான் நம்மால் முடியும். அவர் குரலிலேயே ...

    இரவல் தந்தவன் கேட்கின்றான் ... அதை
    இல்லையென்றால் அவன் விடுவானா
    உறவைச் சொல்லி அழுவதனாலே
    உயிரை மீண்டும் தருவானா..

    நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
    நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
    நாடகமாடும் கலைஞனடா
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3883
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like




    பாடகர் திலகம் மறைந்தார். இசை தன் புதல்வனை இழந்தது. நீ மறைந்தாலும் உன் குரல் வித்தைகள், ஜாலங்கள் மறையுமோ!

    இருமாதங்களுக்கு முன் கூட சுறுசுறுப்பாய் என் தெய்வத்தை வசந்த மாளிகையில் காண ஆல்பர்ட்டுக்கு வந்தாயே! ரசிகரோடு ரசிகராகத்தான் படம் பார்ப்பேன் என்று அவ்வாறே அமர்ந்து உன் குரலுக்கு என் தலைவன் வாயசைத்ததைக் கண்டு பரவசமடைந்தாயே!

    அதற்குள் ஏன் பிரிந்து விட்டாய்?

    திலகங்களுக்குத் தக்கவாறு தித்திக்கும் தமிழை உச்சரித்து மாயாஜாலங்கள் புரிந்தவனே!

    உடலை மட்டுமே பிரிந்துள்ளோம். உன் குரலுடனேயே வாழ்வோம்.

    அன்னாரைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்திற்கும், ரசிக இதயங்களுக்கும் நடிகர் திலகம் திரியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
    Last edited by vasudevan31355; 25th May 2013 at 05:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  5. #3884
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பாட்டும் நானே! பாவமும் நானே!

    நடிகர் திலகமே தெய்வம்

  6. #3885
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இனி இப்படி உன்னை எங்கே காணப் போகிறோம்?

    நடிகர் திலகமே தெய்வம்

  7. #3886
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'அருணகிரிநாதர்' படத்தில் திரு.T.M.S அவர்கள்.


    நடிகர் திலகமே தெய்வம்

  8. #3887
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.

    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3888
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பட்டினத்தார்' படப்பிடிப்பில்.

    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3889
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'பட்டினத்தார்'



    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3890
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    'கல்லும் கனியாகும்'.திரைப்படத்தில்.

    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •