Page 388 of 401 FirstFirst ... 288338378386387388389390398 ... LastLast
Results 3,871 to 3,880 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3871
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இந்தப் படத்தின் ஒரிஜினல் கிடைக்குமா...

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3872
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இந்த நாள் இனிய நாளாகும் என்பதில் ஐயமில்லை. அசத்தல் நிழற்படங்கள். அதுவும் பாலாஜியுடன். அசத்தல் ராகவேந்திரன் சார்.
    Last edited by vasudevan31355; 25th May 2013 at 10:11 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #3873
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    என்னோட பாகபிரிவினை writeups க்கு hubbers குடுத்த feedbacks க்கு நன்றி .

  5. #3874
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    பார்த்தல் பசி தீரும்

    ஒவ்வொரு பா series படங்களும் ஒரு theme அதாவது ஒரு மைய கரு வின் அடிப்படையில் அமைந்து இருக்கும் . பாகபிரிவினையில் அண்ணன் தம்பி பாசம், கூட்டு குடும்பம்தின் நிறைகள் , இந்த பார்த்தல் பசி தீரும் படத்தில் நாடு பற்று, மற்றும் friendship தான் highlight மற்றும் under current theme .

    இந்த படம் தின் கதை என்று பார்த்தல் வேலு(ஜெமினி) மற்றும் பாலு (சிவாஜி)வும் , airforce யில் வேலை பார்கிறார்கள் . யுத்தத்தில் அவர்கள் விமானம் ஜப்பான் வீரர்களால் சுடப்பட்டு , அஸ்ஸாம் எல்லையில் காயத்துடன் உயிர் தப்புகிறார்கள் .
    இதுக்கு இடையில் ஒரு நாள் சிவாஜி ஜப்பான் வீரர்களால் கைது செய்ய படுகிறார்
    இங்கே இந்திரா(சாவித்திரி)யை சந்திக்கும் ஜெமினி அவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .
    சில நாட்களில் இந்திய ராணுவம் அவரை கண்டுபிடித்து திரும்பவும் பணிக்கு அழைத்து செல்கின்றனர் .

    யுதத்தில் சாவித்திரி வின் கிராமம் அழிந்து விடுகிறது . சாவித்திரி மற்றும் சாவித்ரியின் தந்தையை தேடி செல்லும் வேலு இதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

    II ND world வார் முடிந்த உடன் பாலு ஜப்பான் அரசாங்கத்தினால் விடிதலை செய்யப்பட்டு , நேதாஜியின் INA வில் பணியாற்றி விட்டு டெல்லி வந்து சேர்கிறார். அங்கே பேப்பர் விக்கும் ஒரு தமிழ் சிறுவனை சந்திக்கிறார் , அந்த சின்ன பய்யன் தான் கமல்ஹாசன் , அவர் மூலம் தன உடன் பிறவா சகோதரி (சாவித்திரி) உயிரோட இருபதை தெரிந்து கொண்டு , அவர்களுக்கு யாரும் இல்லை என்ற சூழ்நிலையில் அவர்களை தானே அடைக்கலம் தருகிறார் . கதை சென்னைக்கு நகருகிறது. அங்கே ஜெமினி வின் கம்பெனியில் வேலை செய்கிறார் .ஜெமினியை அவர் வீட்டில் சந்தித்து இந்திரா மற்றும் சிறுவன் பாலு உயிருடன் இருப்பதாய் சொல்லல வரும் பொழுது , ஜெமினி வின் மனைவி ஜானகி (சௌகார் ) மற்றும் குமார் ( again கமல் ) யை அறிமுகம் செய்து வைக்கிறார் ஜெமினி , கூடவே சௌகார் ஒரு இதய நோயாளி என்பதையும் தெரிவிக்கிறார் . இதனால் சிவாஜி சொல்ல வந்த உண்மையை சொல்லாமலே சென்று விடுகிறார் .

    சில நாட்கள் கழித்து தற்செயலாக சிவாஜியின் வீட்டுக்கு வரும் ஜெமினி மற்றும் சௌகார் அங்கே சிறுவன் கமல் (பாலு) மற்றும் சாவித்திரி யை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

    சிவாஜி தனிமையில் ஜெமினியிடம் , இந்திரா (சாவித்திரி)க்கு கண் பார்வை பறிபோய்விட்டது என்ற உண்மையை சொல்கிறார் . மேலும் சாவத்ரியின் தந்தை காலம் ஆகிவிட்டதையும் , தான் அவர்களுக்கு அடைக்கலம் தருவது பற்றி உண்மையை சொல்கிறார் .
    இது தெரியாத சரோஜா (சரோஜா தேவி) சிவாஜியை காதலிக்கிறார் . சரோஜா ஜெமினியின் sister in law .
    இந்த உண்மை தெரிந்த ஜெமினியால் எதிலும் concentrate செய்ய முடியவில்லை . பாலு மற்றும் குமாரும் நண்பர்கள் நண்பர்கள் ஆகி விடுகிறார்கள் .

    பாலுவின் மூலம் சௌகார்க்கு சாவித்திரி தான் சிவாஜியின் மனைவி என்று நினைத்துகொண்டு ஜெமினிவிடம் சிவாஜி யை பற்றி தவறாக சொல்கிறார் .

    ஜெமினி சிவாஜி பேரில் தன் குடும்பத்துக்காக சொத்து எழுதி வைக்கிறார் , இதுவும் சௌகார் க்கு பிடிக்கவில்லை .அவர் சரோஜாவுக்கு சிவாஜியை பத்தி சொல்லிவிடிகிறார் . சிவாஜி மற்றும் சரோஜா க்கு இடையில் வாக்குவாதம் வந்து அதை கமல் (பாலு) மற்றும் இந்திரா (சாவித்திரி) கேட்டு விடுகிறார்கள் .

    இந்திரா மற்றும் பாலு ஜெமினி யின் வீட்டுக்கு வந்து விடுகிறார்கள் .ஜெமினி உண்ம்மையை உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் உண்மையை சொல்லி விடுகிறார் . அதிர்ச்சி அடைந்த சௌகார்யின் உயிர் பிரிகிறது .சிவாஜி மற்றும் சரோஜா , ஜெமினி மற்றும் சாவித்ரி இணைகிறார்கள் .
    படம் இனிதே முடிகிறது

    சிவாஜி இந்த படத்தில் சற்று பூசினது போல் இருக்கிறார். அது அவருக்கு , அவர் ஏற்ற்று கொண்ட கதாபாத்திறதுக்கு வலு சேர்க்கிறது . பொதுவாக ராணுவதில் இருந்து வருவோர்கள் இப்பிடி இருப்பதாய் நாம் பார்க்க முடியும் . இந்த படத்தில் அவர் கால் சற்று ஊனம், இருந்தாலும் அதில் ஒரு கம்பீரம் , அந்த நடையில் ஒரு ராஜா நடை . அவர் புருவம் சற்று தடியாக இருக்கிறது . இந்த படத்தில் அவர் கதாபாத்திரம் நட்புக்கும் அவர் எது கொண்ட பொறுப்புக்கும் இடையில் சிக்கி கொண்டு , ஆனால் அதை ஒரு சுமையாக கருதாமல் வாழ்கிறார் , திரையில் மட்டும் இல்லை நம் மனதிலும் தான் . அவர் நடிப்பை சொல்லுவதுக்கு என்னக்கு வயசு பத்தாது, சொல்லி சொல்லி வாய் வலிகிறது அனாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை . எப்படி ஒரு நடிகர் எல்லா படத்திலும் தன்னோட பெஸ்ட் யை கொடுக்க முடியாதோ . குறிப்பாக பிள்ளைக்கு தந்தை ஒருவன் யில் அவர் நடிப்பு , கோடி அசைந்ததும் கற்று வந்தாதா என்ற டூயட் ல் அவர் உதடு அசைவு , இனிமையான பாடல் வரிகள் டாப் .
    இந்த படத்தை பார்க்கும் பொழுது நமக்கும் இப்படி ஒரு நண்பர் இல்லை என்ற ஒரு வித பொறமை தொற்றி கொள்கிறதை தவிர்க்க முடியாதது.

    ஜெமினி முதலில் காதல் வயபடும் காட்சிகள் நல்ல நகைச்சுவை , அது அப்புறம் அவர் இரு கொல்லி நெருப்பாக எறிகிறார். நடிகர் திலகத்துக்கு apt foil , puccka second fiddle . ஒரு வித ஈகோ வும் இல்லாமல் அவருக்கு குடுக்க பட்ட கேரக்டர் யை சும்மா பிச்சு உதறிக்கிறார் .

    நடிகையர் திலகம் அசாம் பெண் அக introduce ஆகி , கண் தெரியாமல் நடிப்பில் ஸ்கோர் செய்து , அவரும் அழுது , நம்மளையும் அழ வைத்து விடுகிறார் . சௌகார் யின் பாத்திரம் இரு கோடுகள் , உயர்ந்த மனிதன் யின் செயல் தெரிகிறது . Of Course இந்த படம் தன் முதலில் வந்தது , இந்த படத்தின் பதிப்பு , வெற்றி யின் reach இந்த characters டிசைன் செய்ய பட்டு இருக்கும் என்று நினைக்கிறன் .

    பாகபிரிவினை படத்தில் சரோஜா விக்கு நடிப்பு scope அதிகம் இந்த படத்தில் இத்தனை ஸ்டார் performers க்கு இடையில் காணமல் பொய் விடுகிறார் .இருந்தாலும் சிவாஜி உடன் confrontation சீன் யில் கிடைத்த சான்ஸ் யை நன்றாக பயன்படுத்தி கொள்கிறார் .

    சிறுவன் கமல் தோல் ரோல்யில் தன் மனசிக குரு நடிகர் திலகம் , ஜெமினி , சாவித்திரி , சௌகார் உடன் நடித்து கல்கி உள்ளார் .

    தங்கவேலு காமெடி as usual டாப். குறிப்பாக அவர் ஜெமினி விடம் சிவாஜிக்கு வேலை கேட்கும் பாங்கு.
    3 பாடல்கள் சாக வரம் பெற்று விட்டது .
    இந்த படத்தின் கதை திரு AC Tirlok . பிற்காலத்தில் சிவாஜியை வெச்சு நிறைய படங்கள் , வெற்றி படங்கள் கொடுத்து உள்ளார்.

    பார்தால் பசி தீரும் படத்தை பார்த்தல் பார்வையாளர்களுக்கு நல்ல படம் பார்த்த பசி தீரும் .

  6. #3875
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Hope my Tamil is better this time

  7. #3876
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Dinamalar & Malaimalar - Thanjavur News



    Nice Initiative to safeguard NT 's movie 's fame

  8. #3877
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நயாகரா மேயர் கௌரவம். ஜவஹர்லால் நேருவிற்குப் பிறகு கிடைக்கப் பெற்ற ஒரே செல்வாக்கான இந்தியன் எங்கள் மனித தெய்வம். நடிக தெய்வத்தின் காலடி எங்கள் மண்ணில் படவேண்டும் என்று வேண்டி விரும்பி அழைத்து கௌரவித்தது அமெரிக்கா.

    'செவாலியே' தந்து தனக்கு செல்வாக்கைத் தேடிக் கொண்டது பிரான்ஸ். தலைசிறந்த நடிகர் விருது தந்து ஆசியாவும், ஆப்பிரிக்காவும் தலைவணங்கின. உலக நாடுகளில் தன் நடிப்பால் உன்னதப் புகழ் அடைந்த மமதை இல்லாத மாமேதை.

    சென்ற இடமெல்லாம் செல்வாக்கு பெற்ற மாமனிதர்.
    அந்நியர் மண் தூக்கி வைத்துக் கொண்டாடியது அவர் பெருமை கண்டு.
    அவரை சீண்டி சீரழிந்து போனது நமது மண்.

    நஷ்டம் அவருக்கல்ல...
    எங்களுக்கல்ல...

    இந்த பாழாய்ப் போன பூமிக்கு.

    நடிகர் திலகத்தின் செல்வாக்கைக் கண்டு ஓடி ஒளிந்த வடநாட்டு நடிகர்.



    Last edited by vasudevan31355; 25th May 2013 at 10:34 AM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #3878
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Senegal
    Posts
    0
    Post Thanks / Like
    Dear Ragavendran sir,

    Photos are too good especially the black & white one , with pattu sattai, looks like smiling us, with a divine touch

  10. #3879
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இதுவரை எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத இமாலய வசூல் சாதனை புரிந்த, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்த திரிசூலம் 200-ஆவது நாள் வெற்றிவிழாக் கேடயம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  11. #3880
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    உங்களுக்குத் தெரியுமா - அபூர்வத் தகவல் தொடர்



    David Lean என்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர்-இயக்குநர் நமது பாரத தேசத்திற்கு வருகை புரிந்தது தெரிந்திருக்கும். 1962-63 காலத்தில் நடிகர் திலகத்தை அன்னை இல்லத்தில் சந்தித்தார். நடிகர் திலகம் அவரை உபசரித்து விருந்தளித்ததோடு, பார் மகளே பார் திரைப்படத்தின் அரங்கத்திற்கும் அவரை அழைத்துச் சென்றார். அப்படத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பைப் பார்த்து டேவிட் லீன் மெய்ம்மறந்து நின்றதெல்லாம் வரலாறு. தெரியாத விஷயம். அந்த வருகைக்கான காரணம்.



    தனது Lawrence of Arabia திரைப்படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை அழைப்பதற்கே. நடிகர் திலகம் தனது தாய் மொழியும் தாய்நாடும் பெரிது, அதில் நல்ல பெயர் கிடைத்தாலே போதும் என்ற மொழி உணர்வுடன் அந்த வாய்ப்பை மறுத்து விட்டார். அதன் பிறகு டேவிட் லீன் திலீப் குமார் அவர்களை அணுகியதெல்லாம் வேறு கதை.

    நிறைகுடம் தளும்பாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் நடிகர் திலகம்.
    Last edited by RAGHAVENDRA; 25th May 2013 at 01:49 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •