Page 344 of 401 FirstFirst ... 244294334342343344345346354394 ... LastLast
Results 3,431 to 3,440 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3431
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    இரவின் மடியில் குளிர் போக்க கொள்ளிக்கட்டைகள் எரிந்துகொண்டிருக்க, முக்கால்பாக முகம் வெளிச்சத்திலும் கால் பாக முகம் இருட்டிலும் தெரிய 'புதியபறவை' பழைய பாடலை அமைதியாகப் பாட, ஆழ்ந்த அமைதி கொண்ட அந்த வேளையில் மனம் முழுக்க அந்த சமயம் லேசாகி கண்களை எப்போதாவது சிமிட்டி (கண்களை அடிக்கடி சிமிட்டினால் புதிய பறவையின் அழகை முழுதும் பருக முடியாமல் போய்விடுமோ!) மிக நிதானமாக புகையை இழுக்கும் பாங்கு, வந்த பறவை வல்லூறு என்று தெரியாமல் தன்னை முழுவதுமாகவே கொடுத்துவிடும் ஏமாளித்தனம்... உள்மனதில் புதைந்து கிடக்கும் மர்மங்களையும் தாண்டிய தாளாத காதல்... பறவையின் சம்மதம் நிச்சயம் என்ற திருப்தி... உடல் அசதி, உள்ள அசதி, கண நேர மனநிம்மதியில் பறவையின் பாடலில் மயங்கி, கிறங்கி அப்படியே ஆழ்நிலை உறக்கம். அதே நாற்காலியில் அமர்ந்து பின்னாளில் தானே தன் வாயால் வாக்குமூலம் கொடுக்கப் போவதை அறியமாட்டாத அப்பாவியாய்.

    அந்த பாவப்பட்டவனோடு சேர்ந்து நாமும் கொஞ்சம் உறங்கலாம்.

    நடிகர் திலகமே தெய்வம்

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3432
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    அழகு பொம்மையாய் Fashion Showவில் Catwalk செய்வதைத் தவிர வேறொன்றும்ம செய்யத் தெரியாத Modelஐப் போல் பயன்படுத்தப் பட்டு வந்த சரோஜா தேவி என்ற மிகச் சிறந்த நடிகையின் திறமையை கல்யாணப் பரிசு படத்தில் ஸ்ரீதர் உலகறியச் செய்தார் என்றால் பாகப் பிரிவினை படம் அவருக்குள் இருந்த அந்த நடிப்புப் புலமையை மெருகேற்றியது என்றால் மிகையில்லை. அதற்குப் பிறகு நடிகர் திலகத்துடன் அவர் நடித்த பெரும்பாலான படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தினார். இதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது புதிய பறவை. சௌகார் ஜானகியின் நடிப்பில் புதிய பரிணாமத்தையும் இப்படம் வெளிக்கொணர்ந்தது. ஒவ்வொருவரும் தத்தம் பங்கினை மிகச் சிறப்பாக அளித்ததன் பலனே இந்த சிறப்பிற்குக் காரணம்.

    ஒவ்வொரு ரசிகரின் டாப் 10 நடிகர் திலகத்தின் படங்களைப் பட்டியலிட்டால் அதில் நிச்சயம் புதிய பறவைக்கு இடம் உண்டு.
    Last edited by RAGHAVENDRA; 10th May 2013 at 10:30 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3433
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    புதிய பறவை - ஒரு கலக்கு கலக்கி விட்டீர்கள். ஒரு படத்தின் நாயக வேடம் இதற்கு முன் இந்தளவிற்கு விலாவாரியாக அலசி ஆராயப்பட்டிருக்குமா என்பது கேள்விக்குறியே.

    இந்த திரியின் முதல் இரண்டு பாகங்களில் நானும் அன்றைய ஹப்பர்கள் பலரும் புதிய பறவை பற்றி நிறையப் பேசிக் கொண்டிருப்போம். அந்த பாத்திரத்தை மனோதத்துவ முறையில் அலசி ஆராய்ந்து நீங்கள் எழுதியது நன்றாக அமைந்திருக்கிறது.

    கோபால் பாத்திரத்தை நீங்கள் introvert என்று சொன்னீர்கள். உண்மை. ஆனால் அதையும் மீறி ஒரு innocence தெரியும். அதாவது சற்றே பரிவாக யாராவது பேசி விட்டாலே அவர்களை மலை போல் நம்பி விடுவது. ஆட்களை தவறாக எடை போடுவது. யாரையெல்லாம் நம்புவாரோ அவர்கள் அனைவருமே அவருக்கு எதிராக திரும்புவார்கள். சிறிது யோசித்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு சதி வலை எப்படி பின்னப்படுகிறது என்பதே பிரமிப்பாக இருக்கும். அதாவது கதையின் போக்கில் இயல்பாக நடப்பது போன்றே தோற்றமளிக்கும் காட்சிகள் எப்படி மற்றவர்களால் மனப்பூர்வமாக உருவாக்கப்பட்டது என்பது தெரிய வரும் போது பார்வையாளனுக்கு ஒரு அதிர்ச்சி கலந்த பிரமிப்பு.

    கோபாலோடு நெருங்கி பழகி அவனிடமிருந்து அவனின் அந்தரங்க செய்திகளை அறிந்து அதே வைத்தே அவனை வீழ்த்தும் இந்த சதுரங்க ஆட்டத்தில் அதை புரிந்து கொள்ள முடியாமல் ஒவ்வொரு முறையும் அவர் திகைத்து தடுமாறி இதிலிருந்து மீண்டு வர வழியே இல்லையா என்று மனதுக்குள்ளே புழுங்கி அந்த அழுத்தத்தை தாங்க முடியாமல் தவிப்பதை எவ்வளவு அழகாய் வெளிப்படுத்துவார். நீங்கள் குறிப்பிட்ட பால் பேணி, பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலை போலி சௌகார் பாடுவது, எடுத்த கைரேகையை தொலைத்து விட்டு OAK தேவர் வந்து சஞ்சீவி கொண்டு கொடுத்தான் என்றவுடன் ரேகை ரேகை என்று எக்காளமிடுவது, சௌகாரின் முதுகில் உள்ள மச்சத்தை வைத்து ஜெயித்து விடலாம் என்று குதூகலத்தில் துள்ளி குதித்து பின் அதிலும் தோல்வி கண்டவுடன் அதுவும் நீங்கள் சுட்டிக் காட்டியது போல் ராமதாஸ் தங்கச்சி, சித்தப்பா என்று அழைக்க "ராஜு, you fool" என தன் இயலாமையையும் கோவத்தையும் ஒரு சேர காட்டுவது என்று ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தையே கட்டி ஆண்டிருப்பார்.

    நான் எப்போதும் பிரமிக்கும் காட்சி ஒன்று. அந்த காட்சி பற்றி நான் பழைய பாகங்களில் குறிப்பிட்டிருக்கிறேன். Flashback காட்சியில் வீட்டை விட்டு வெளியேறும் சௌகாரை துரத்தி சென்று அவரை தடுத்து அவரை convince செய்ய முயற்சி செய்து, முடியாமல் அவரின் பிடிவாதத்தையும் திமிரான வார்த்தைகளையும் பொறுக்க முடியாமல் ஒரு அறை அடித்து விட்டு காரை எடுத்துக் கொண்டு வந்தவுடன் ரயில்வே கிராஸ்-ல் வண்டியை நிறுத்த, அப்போது வரும் அந்த காட்சி.

    அந்த காட்சியில் அவரை தவிர யாரும் கிடையாது. வசனம் மட்டுமே ஒலிக்கும் montage shot. Voice over என்ற முறையில் பின்னணியில் வசனங்கள் ஒலிக்க காரில் அமர்ந்திருக்கும் நடிகர் திலகத்தின் முகம் மட்டுமே பார்வையாளனுக்கு தெரியும். ஒலிக்கும் வசனத்திற்கேற்ப அவர் முகம் வெளிப்படுத்தும் பல்வகை உணர்வுகள் அற்புதமாக இருக்கும். இதை எப்படி எடுத்திருப்பார்கள் என்று பலமுறை வியந்து போயிருக்கிறேன்.

    காரணம் அன்றைய நாட்களில் டப்பிங் கிடையாது. Live sound தான். படப்பிடிப்பு நடக்கும் போது எப்படி எடுத்திருப்பார்கள்? உதவி இயக்குனர் யாராவது prompt பண்ணியிருக்கலாம்! அப்படி இருந்தால் கூட அந்த track -ஐ மாற்றி விட்டு இவர் பேசுவதை எப்படி சேர்த்திருப்பார்கள்? இல்லையென்றால் இவரே பேசி பதிவு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட பாடல்களை நாக்ரா மூலம் ஒலிக்க செய்து படமாக்குவது போல் இதையும் செய்திருப்பார்களா? டப்பிங்கே இருந்தது என்று சொன்னால் கூட முகபாவத்திற்கு தகுந்தார் போல் பேசுவது அவ்வளவு எளிதல்ல. அதில் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு உணர்வை வெளிப்படுத்துவார். குறிப்பாக இறுதியில் "அப்படி ஏதேனும் நடந்து விட்டால்" என்ற வரியையே இரண்டு வித பாவத்தில் சொல்லுவார். அப்படி இருக்கும் போது அது டப்பிங் என்றாலும் சரி, live sound என்றாலும் சரி ஒரு பிரமிக்கத்தக்க performance.

    இன்னும் இந்தப் படத்தை பற்றி அவர்தம் நடிப்பை பற்றி பல்வேறு பக்கங்கள் எழுதலாம். என் எண்ணமெல்லாம் அடுத்த வருடம் இந்த திரை காவியத்தின் பொன் விழா கொண்டாடப்படும் போது இந்த படத்தை நவீன மெருக்கேற்றல் முறையில் வெளியிட முயற்சி மேற்கொண்டிருப்பவர்கள் அதை செவ்வனே செய்து படத்தின் பிரம்மாணடமான வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்.

    நன்றி கோபால்! மேலும் தொடருங்கள்!


    அன்புடன்

  5. #3434
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சார்,
    நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை. சரோஜாதேவி பாக பிரிவினை,
    பாலும் பழமும்,இருவர் உள்ளம்,புதிய பறவை, தேனும் பாலும் படங்களில் அற்புதமாக பயன் படுத்த பட்டு அவர் நடிப்பு திறன் பூவோடு சேர்ந்த நார் போல மிளிர்ந்தது.

    முரளி,
    கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால். சுற்றியிருப்பவர்களால் வஞ்சிக்க பட்டு அவதியுறுவது இயற்கையே. கோபாலு க்காக இந்தளவு நீங்கள் தவிப்பது உங்கள் உயர் நட்பின் அடையாளம். வருக. வருக.

    சௌரி சார்,
    மிக ரசித்தேன். ஏ தே து உங்கள் எண்ண ஓட்டத்துக்கு எல்லையே இல்லை போலுள்ளதே?

  6. #3435
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    வாசு சார்,

    காட்சிக்கேற்ற வர்ணனை.வர்ணனைக்கேற்ற காட்சி.மிக மிக ரசித்தேன்.

  7. #3436
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    கோபால் என்றாலே அப்பாவி. அப்பாவி என்றாலே கோபால்.


    ஆஹா... இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா...

    கலக்குங்க... கோபால் சார் ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  8. #3437
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by KCSHEKAR View Post
    Welcome Ravichandran Sir,

    Your first post is a best one.
    சந்திரா,
    எனக்கு 16 வயதினிலே படத்தில் ஒரு காட்சி ஞாபகம் வருகிறது. மயிலு க்கு வைத்தியம் பார்க்க வரும் நாட்டு வைத்தியர் சப்பாணி யிடம் நிறைய instruction கொடுத்து என்ன புரிஞ்சுதா ,புரிஞ்சுதா என்று நிறைய முறை கேட்டு விட்டு தலையை ஆட்டும் சப்பாணி யிடம், என்ன எழவு புரிஞ்சுதோ ,எல்லாத்துக்கும் தலையை தலையை ஆட்டு என்பார். நான் மிக ரசித்த காட்சி.
    உங்கள் பதிவுகளையும் ரசிக்கிறேன்.

  9. #3438
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post

    ஆஹா... இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா...


    துளி விடாமல் குடிக்கும்.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #3439
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    Hats off to Gopal Sir for his neat and riveting documentations to fortify the name and fame of our legend NT in a narrative Tamil, that must be emulated by persons like me. Because of contributors of calibre like you only NT will live ever in the minds and hearts of generations who will always be grateful to you Sir. My only lifetime dream is such documentations from you, Pammalar Sir, Vasudevan Sir, Raghavendra Sir, Murali Sir...... with a mission initiative from Chandrasekaran Sir shall culminate in a lifetime posthumous award from Oscar be conferred on our NT, the neglected gem by oversight but a diamond forever in our vision! Awaiting many more from you sir.

  11. #3440
    Junior Member Senior Hubber
    Join Date
    Jul 2011
    Location
    chennai
    Posts
    22
    Post Thanks / Like
    Super sivaji senthil sir. I am also one of the ardent fan of NT dreaming for the NEGLECTED GEM BY OERSIGHT BUT A DIAMOND FOREVER IN OUR VISION. DEfinitely one day or another it will take place and VAIMAYE VELLUM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •