Page 336 of 401 FirstFirst ... 236286326334335336337338346386 ... LastLast
Results 3,351 to 3,360 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

 1. #3351
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  அருமையான நிழற்படம். இந்த மாதிரி அபூர்வ படங்கள், நம்மை கை பிடித்து nostalgic effect உடன், சிறு வயதுக்கு அழைத்து செல்லும் வலிமை உடைய அற்புதம் நிகழ்த்தும். நன்றி ராகவேந்தர் சார்.

 2. # ADS
  Circuit advertisement
  Join Date
  Always
  Location
  Advertising world
  Posts
  Many
   

 3. #3352
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  டியர் ராகுல் ராம்
  கல் தூண் திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துப் பரிமாற்றம் மிகவும் சிறப்பாக உள்ளது. படத்தின் அஸ்திவாரமே நடிகர் திலகம் தான். அதனைத் தாங்கி நிற்கும் தூண்களாக விளங்கியவை மெல்லிசை மன்னரின் இசையும் பாடல்களும். சிங்கார சிட்டுத் தான் பாடல் அந்த கால கட்டத்தில் ஒலிக்காத இடமே இல்லை என்கிற அளவிற்கு பிரபலமானது. இந்த இரண்டு பேர் இருந்தால் போதும் என்று இயக்குநர் நினைத்து விட்டார் போலும். ஓவர் ஆக்டிங் இந்தப் படத்தில் உண்டு - ஆனால் யாரிடம் - திலக்கிடம்... அவருடைய நடிப்பு மிகை நடிப்பிற்கு சரியான உதாரணம் என்று அந்தக் காலத்தில் தியேட்டரில் மக்கள் பேசுவதை நான் பல முறை கேட்டிருக்கிறேன்.

  சரியான பதிவு. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள்.

  கல்தூண் திரைக்காவியத்தினை நினைவூட்டிய தங்களுக்காகவும் நம் மற்ற நண்பர்களுக்காகவும்  நீலமலைக் காத்தாட வரிகளின் போது தன் தோள்களைச் சிலுப்பிக் கொண்டு அவர் வருவதும் அதற்கு சற்று முன் மீசையை முறுக்கிக் கொள்வதும் ... ஒரு புறம் என்றால் பாடல் வரிகள் அதற்கு மேல் பட்டி மன்றம் ரேஞ்சுக்கு கருத்துப் பரிமாற்றங்களைத் தருகின்றன. பாருங்கள் கேளுங்கள்..


  இந்தப் பாட்டின் துவக்கத்தில் வரும் ஒரு இசை, யாதோன் கி பாராத் படத்தில் இடம் பெற்ற சுராலியா பாடலில் வரும் ஒரு பிட் இசையை நினைவு படுத்தும்.
  Last edited by RAGHAVENDRA; 8th May 2013 at 10:53 AM.
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 4. #3353
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  Excellent ராகவேந்திரன் சார்,

  தங்கள் புண்ணியத்தால் பார்க்க முடியாத அருமையான, அரிதான நடிகர் திலகத்தின் நிழற்படங்களைக் காண முடிகிறது. இப்போதெல்லாம் தெருத் தெருவாய் அலைந்தாலும் பேருக்குக்கூட ஒரு ஆவணமும் கிடைக்க மாட்டேன் என்கிறது. அந்தக் காலத்தில் தாங்களும் பம்மலாரும் சேமித்து வைத்து இங்கு அளிப்பது நாங்கள் அனைவரும் செய்த பாக்கியமே! விலை மதிக்க முடியாத சொத்துக்கள் இவை. இவற்றை பேணிப் பாதுகாத்து தாங்கள் இங்கு எங்களுக்கெல்லாம் அளித்து வருவது போற்றுதலுக்குரியது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பழைய புத்தகக்காரர்களிடம் கேட்டால் "அதெல்லாம் இப்ப எங்கே சார் கிடைக்கிறது?" என்கிறார்கள். ஆனந்த விகடனில் பழைய விமர்சங்களை கலெக்ட் செய்யக் கேட்டால் ஒரு page ஜெராக்ஸ் எடுக்க ரூபாய் எக்கச்சக்கமாக கேட்கிறார்கள் என்று தகவல். தவிர மிகவும் கண்டிஷன்கள் வேறு. எங்களுக்கு என்னவோ இது சாதாரண ஆவணமாகத் தெரியலாம். இதன் பின்னால் பம்மலாரும், தாங்களும் உழைத்திருக்கும் உழைப்பு நிஜமாகவே பிரம்மிப்பு.

  தங்கள் இருவரின் இந்த சீரிய பணிக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறோமோ தெரியவில்லை.

  நன்றி! நன்றி! நன்றி!
  நடிகர் திலகமே தெய்வம்

 5. #3354
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  ராகுல்,

  வாரே (கண்ணா) வா! கல்தூண் போல நின்று அருமையான பதிவுகளை அளிப்பதற்கு நன்றி! நேற்று முரசில் பார்த்து ரசித்தேன். தலைவர் உரி அடிக்குமிடம் அட்டகாசம். கடலூரில் ஒரு மாதம் ஓடிய படம். தம்பி தம்பிதான்.
  நடிகர் திலகமே தெய்வம்

 6. #3355
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  நாங்கள் எல்லோரும் பண்ணிய பெருந்தவறு, அந்த ஆவண ங்களின் எதிர்கால வலிமையை உணராது, ஒரு personal stamp collection போல் செய்து, அதை காக்க தவறி விட்டோம். நான் 1968 முதல் 1980 வரை கிட்டத்தட்ட 22 various daily / weekly /monthly news paper /magazines இவற்றில் வந்தவற்றை சேமித்து பறி கொடுத்தவன். இந்த மாதிரி hub /thread என்று பார்க்கும் போது பறி கொடுத்த சோகம் மேலும் அதிகமாகிறது. அந்த சோகத்தை குறைக்கும் தூதர்களாக பம்மலார் ,ராகவேந்தர், வாசு போன்றோர்களை அனுப்பியுதவியதற்கு ,கடவுளுக்கு நன்றி.
  Last edited by Gopal,S.; 8th May 2013 at 12:00 PM.

 7. #3356
  Senior Member Veteran Hubber
  Join Date
  Feb 2012
  Location
  Indonesia
  Posts
  4,127
  Post Thanks / Like
  ராகவேந்தர் சார்,
  அது என்ன ஓர வஞ்சனை? சதீஷ் சாருக்காக மட்டும்? அப்போது நாங்கள் பார்க்க கூடாதா? எங்களுக்காக இல்லையா?

 8. #3357
  Senior Member Platinum Hubber RAGHAVENDRA's Avatar
  Join Date
  Jan 2008
  Posts
  10,107
  Post Thanks / Like
  படத்தை centre align பண்ண முடியவில்லை. அதனால் default ஆக விட்டு விட்டேன். சென்டர் பண்ணியிருந்தா நடு வஞ்சனை ஆகியிருக்குமோ
  விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

 9. #3358
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  சென்னைக்கு சமீபத்தில் சென்ற போது பழைய ஆவணங்கள் ஏதாவது கிடைக்குமா என்று தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினேன். முடிந்தவரை மூர் மார்க்கெட், மற்றும் பழைய புத்தகங்கள் கிடைக்கும் பகுதிகளுக்குச் சென்று தேடினேன். ம்ஹூம்... மருந்துக்குக் கூட ஒரு புத்தகம் கூட கிடைக்கவில்லை. பொம்மை, பிலிமாலயா, பேசும்படம் இவற்றுள் ஒரு புத்தகம் கூட இல்லை. கேட்டால் சில கடைக்காரர்கள் சிரித்தே விட்டார்கள். ஒருவர் ஒரே ஒரு பேசும் படம் வைத்திருந்தார். அவரிடம் கெஞ்சிக் கூத்தாடி கேட்டதில் மனமே வராமல் ஒருமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு பெரிய விலைக்குக் கொடுத்தார். பம்மலார், ராகவேந்திரன் சாரெல்லாம் எப்படி அலைந்து திரிந்து கஷ்டப் பட்டிருப்பார்கள் என்று முழுமையாக உணர முடிந்தது. கடலூரில் ஒரு முதியவர் சில ஆவணங்களை வைத்திருந்தார். அவரிடம் கேட்டதற்கு அவர் கேட்ட விலை என்ன தெரியுமா? வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொடுத்து அதற்கு வாடகையும் நாம் கட்ட வேண்டும். நான் அதற்குக் கூட சம்மதம் தெரிவித்தும் பின்னால் அதையும் அவர் மறுத்து விட்டார். ஆறுமாதமாக அலைந்தும் அவர் அவருடைய பெருமையைப் பற்றி பேசியதுதான் மிச்சம். தலைகீழாக நின்று தண்ணி குடித்துப் பார்த்தாகி விட்டது. தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் பயன்படச் செய்யாமல் அந்தக் கிழவர் விலை மதிப்பில்லா ஆவணங்களை செல்லரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். (கடலூரில் சுனாமி தாக்கிய போது அந்தப் பெரியவரின் வீடும் பாதிக்கப்பட்டது. வீட்டில் உள்ள அனைவரும் வெளியே ஓடி விட்டார்களாம்... அவரையும் ஓடிவரச் சொன்ன போது அவர் "நான் செத்தால் இந்த ஆவங்களுடன் செத்துப் போகிறேன்" என்று ஆவண மூட்டைகளை கட்டிபிடித்தபடி கிடந்தாராம். அப்படிப்பட்டவர் எப்படி நமக்குத் தருவார் சொல்லுங்கள்?) நூலகங்களில் விசாரித்தால் அதெல்லாம் இல்லை என்று ஈசியாகக் கைவிரித்து விடுகிறார்கள். பொம்மை, பேசும்படம், பிலிமாலயா ஆபீஸ்களே இல்லை.

  கோபால் சொன்னது போல் அப்போதெல்லாம் அவ்வளவு ஆவணங்கள் வைத்திருந்தேன். பலதடவைகள் வீடு மாற்றி, எலி கடித்து, மிச்சம் மீதிகள் செல்லரித்து ஏதோ கொஞ்ச நஞ்சம்தான் மிஞ்சியது. அவைதான் இப்போது பயன்படுகின்றன. நம் ரசிகர்கள் சிலர் நிறைய ஆவணங்கள் வைத்துள்ளனர். ஆனால் அவர்கள் கொடுக்க தீவிரமாக மறுத்து விடுகின்றனர். எதை வேண்டுமானாலும் கேள்... ஆவணங்கள் மட்டும் கேட்காதே... என்று சொல்வதுதான் அவர்கள் பல்லவி.

  பழைய அந்த பொற்காலம் திரும்பி வந்தாலென்ன!
  Last edited by vasudevan31355; 8th May 2013 at 11:41 AM.
  நடிகர் திலகமே தெய்வம்

 10. #3359
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  Quote Originally Posted by RAGHAVENDRA View Post
  படத்தை centre align பண்ண முடியவில்லை. அதனால் default ஆக விட்டு விட்டேன். சென்டர் பண்ணியிருந்தா நடு வஞ்சனை ஆகியிருக்குமோ
  haaa..haaa... punch
  நடிகர் திலகமே தெய்வம்

 11. #3360
  Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
  Join Date
  Apr 2011
  Posts
  9,086
  Post Thanks / Like
  Quote Originally Posted by Gopal,S. View Post
  ராகவேந்தர் சார்,
  அது என்ன ஓர வஞ்சனை? சதீஷ் சாருக்காக மட்டும்? அப்போது நாங்கள் பார்க்க கூடாதா? எங்களுக்காக இல்லையா?
  வம்பு வளர்க்காதே
  வாயைக் கிளறாதே
  ஆத்திரமூட்டாதே
  அடக்க நினைக்காதே

  அடுத்த வரியை நீ சொல்லி தப்பிக்க நினைக்காதே.
  நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •