Page 330 of 401 FirstFirst ... 230280320328329330331332340380 ... LastLast
Results 3,291 to 3,300 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3291
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சூப்பர் சௌத்ரி ... சாரி சௌரி ...

    திருவிளையாடல் பெற்ற வெற்றிக்குப் பின்னால் இருந்த சூழ்நிலையை அற்புதமாக விளக்கியுள்ளீர்கள்.

    அந்த கால கட்டம் உண்மையிலேயே மிகவும் திராவிட மயமாக இருந்த கால கட்டமாகும். என்றைக்கு தேர்தல் வைத்தாலும் அவர்கள் வெற்றி உறுதி என்று முன் கூட்டியே மக்கள் நிர்ணயிக்கும் அளவிற்கு காங்கிரஸ் மக்கள் வெறுப்பை சம்பாதித்திருந்த நேரம். போதாக் குறைக்கு போர் வேறு. தேச பக்தி என்பதையும் மீறி மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேர்ந்த கஷ்டங்களே கண்முன் நின்று வாக்களிக்கும் தேர்வை நிர்ணயம் செய்த நேரம். இப்படி பல்முனைத் தாக்குதல்களில் காங்கிரஸ் தட்டுத் தடுமாறி தமிழகத்தில் தன் பெயரை இழந்து வந்தது. இந்த எதிர்ப்பலையில் பெருந்தலைவரும் தப்பவில்லை என்பது அந்த தேர்தலில் நிரூபணமாயிற்று.

    இத்தனையும் தாண்டி அந்தத் தேர்தலில் - தமிழகத்தின் தலைவிதியை மாற்றிய 1967 தேர்தலில் - தமிழகத்தைப் பொறுத்த மட்டில் காங்கிரஸ் மானத்தோடு தப்பித்ததற்கு ஒரே காரணம் -

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்

    ஒரே சமயத்தில் இறை பக்தியையும் தேச பக்தியையும் மக்களிடம் கொண்டு சென்று அதற்கு தன் படங்களைத் துணைக் கொண்டு தமிழக மக்களிடம் விழிப்புணர்வூட்டியவர் நடிகர் திலகம். ஒரு பக்கம் திருவிளையாடல் இறை பக்தியை ஊட்டியது என்றால் மறுபக்கம் ரத்த திலகம் மற்றும் தாயே உனக்காக படங்கள் தேச பக்தியை ஊட்டும் பணியை மேற்கொண்டன.

    1967ல் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து திராவிட இயக்கம் வேரூன்ற வழி வகை செய்ததற்குக் காரணம் - எதிர்ப்பு அலையே அன்றி வேறல்ல. அரிசி பற்றாக்குறை, வாரத்திற்கு ஒரு முறை அரிசியை சாப்பிடாமல் கோதுமை சாப்பிடுங்கள் என செய்யப் பட்ட பிரச்சாரம், மற்றொரு பக்கம் இருக்கும் அரிசியை பலமடங்கு விலையை உயர்த்தி விற்றவர்களின் ராஜ்ஜியம் என்பன போன்ற காரணங்களால் அன்று கவிழ்ந்த தேசிய இயக்கம், இன்று வரை தமிழகத்தில் எழவில்லை.

    இருந்தாலும் அந்த எதிர்ப்புகளை மிகவும் ஆழமாக ஊடுருவாமல் பார்த்துக் கொண்டு காங்கிரஸின் மானம் காத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இப்படிப் பட்ட சூழ்நிலையில் தான் திருவிளையாடல் படத்தின் வெற்றி பார்க்க பட வேண்டும்.

    சிறந்த முறையில் திருவிளையாடல் படத்தின் வெற்றியைப் பற்றி எழுதிய சௌரி சார் மீண்டும் என் பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3292
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    சத்தியமாய் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த தற்செயல் ராகவேந்தர் சார். முரளியை சீண்டியும், தங்களுடன் நிஜமாகவே உதவி கோரியும் போட பட்ட பதிவுதான் அது. நான் தங்களை முதல் இரண்டு வரிகளுடன் தொடர்பு படுத்தி போடவில்லை. இம்முறை ,நிஜமாகவே நான் அப்பாவிதான்.
    உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி சார்.
    நன்றியெல்லாம் எதற்கு சார். எல்லோருக்கும் பயன் பட வேண்டும், அது எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பது தான் நோக்கம்.

    தாங்கள் இனி எம்முறையும் அப்பாவியாகவே இருங்கள். நடுவில் ட போட வைத்து விட வேண்டாம் என்பது தான் என் ஆசை.

    Jokes apart, let's be serious in our business. நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல காதங்கள் உள்ளன. இன்னும் 100 பாகங்கள் நமக்கு ஒதுக்கினாலும் போதாத அளவிற்கு நடிகர் திலகத்தைப் பற்றி நமக்கு விஷயங்கள் உள்ளன. இனி முழுமையாக தாங்கள் தங்கள் ஆய்வினைத் தொடர்ந்து எழுதுங்கள். அனைவரும் வந்து இணைந்து கொள்வார்கள். தங்களுடைய ஒவ்வொரு பதிவும் நம்மிடையே பெரும் எதிர்பார்ப்பையும் விஷய தாகத்தையும் உண்டாக்கும். எனவே தங்கள் பணியைத் தொடருங்கள். தங்களுடைய நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ளவும் நடிகர் திலகமே வழி வகுப்பார். அவருடைய படங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.

    அனைவரைப் போல் தங்கள் ஆய்வுக் கட்டுரையை மேலும் மேலும் எதிர்பார்க்கும்

    அன்பு நண்பன்
    ராகவேந்திரன்
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #3293
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    தங்கள் பாராட்டிற்கு நன்றி, சந்திரசேகர் சார்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  5. #3294
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    கண்பத் சார்,
    யாரடி நீ மோகினி பாட்டில் கைதட்டும் ஸ்டைல் புதுமையானது. தாங்கள் கூறியுள்ளது போல் தவறு செய்ய வேண்டும் என்று தெரிந்த செய்ய வேண்டிய சூழ்நிலையை தானாகவே அந்தப் பாத்திரத்தில் புகுத்தி விக்ரமன் பார்த்திபனாக வரும் போதும், பார்த்திபன் விக்ரமனாக வரும் போதும் நிரூபித்திருப்பார் நடிகர் திலகம். சரியாக செய்து பழக்கப் பட்டவர்களுக்கு தவறு செய்ய வராது. இந்த எச்சரிக்கை உணர்வைக் கடைப் பிடித்து மிக ஜாக்கிரதையாக ஆள் மாறாட்ட காட்சிகளில் தவறு செய்து மக்களுக்கு உணர்த்தும் சாமர்த்தியம் நடிகர் திலகத்திற்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.

    சிறப்பான பதிவு. பாராட்டுக்கள்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #3295
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The uniqueness of this milestone movie of NT Uththamapuththiran is that NT has not only proved his prowess in differentiating the two contradicting roles without much changes in the get up but also keeping the viewers to get enthralled by making them to believe that Parthiban acts as Vikraman and Vikraman acts as Parthiban! The minute differences and purposeful mistakes..... no other actor of this world has ever revealed. In Prisoner of Zenda, the original of Nadodi Mannan (inspired by both versions by Ronald Coleman and Stewart Granger in their own styles, they too differentiate but sometime we get confused). Showing a simple difference of Nose rubbing or putting a small beard won't create the impact. The labour and pain putforth by NT has only made this movie an immortal saga and evergreen celluloid magic till today. PU Chinnappa's version lacks lustre though that movie was a forerunner.

  7. #3296
    Junior Member Veteran Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Yemen
    Posts
    0
    Post Thanks / Like
    The song sequence 'un azhagai kanniyargal....' needs a special mention. NT as the drunkard prince, following Padmini with lot of leg jerks and facial expressions depicting a drunkard ... a totally different atmosphere till the end of the song!

  8. #3297
    Moderator Veteran Hubber
    Join Date
    Mar 2006
    Posts
    1,773
    Post Thanks / Like
    கோபால்,

    நான் முன்னரே சொன்ன மாதிரி நீங்கள் என் பதிவுகளை வைத்துக் கொண்டு எத்துனை வார்த்தை ஜால விளையாட்டுகளை விளையாடினாலும் எனக்கு எந்த பிரச்சனையுமில்லை. நான் ரசிக்கவே செய்வேன். வீண் விவாதங்கள் இல்லாமல் தொடர் தொடர்ந்தால் நன்று.

    நன்றி சித்தூர் வாசுதேவன் அவர்களே!

    எனது சிவாஜியின் சாதனை சிகரங்கள் தொடரில் திருவிளையாடல் வெளியான காலக்கட்டத்தில் நிகழ்ந்தவற்றை பற்றி நான் எழுதிய பதிவை மீண்டும் மீள் பதிவு செய்தது மட்டுமல்ல அதற்காக எனக்கு நன்றியையும் தெரிவித்த srs அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றி.

    அன்புடன்

  9. #3298
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by RAGHAVENDRA View Post
    தங்களுடைய நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்ளவும் நடிகர் திலகமே வழி வகுப்பார். அவருடைய படங்கள் அந்த வேலையைப் பார்த்துக் கொள்ளும்.
    மாமா,
    அப்படியும் சில படங்கள் உண்டுதானே?
    யோசிக்க வேண்டிய விஷயம்.
    ம்ஹும்...அடியோடு மறந்து விட வேண்டிய விஷயம்.

  10. #3299
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் சௌரிராஜன்
    இந்த மய்யம் திரியில் நடிகர் திலகம் என்ற பெயர் சொன்னவுடனே பல புதிய தலைமுறையினர் உடல் சிலிர்த்துக் கொண்டு உடனே ஓடி வந்து REFER செய்தது முரளி சாரின் பதிவுகளைத் தான். அந்த அளவிற்கு அவர் ஆணித்தரமாக நடிகர் திலகத்தின் சிறப்புகளையும் சாதனைகளையும் இங்கே பதித்திருக்கிறார். பம்மலார் வந்த பின்னர் முரளி சாரின் பதிவுகளுக்கு ஆதார ஸ்ருதியான ஆவணங்களைத் தந்து நடிகர் திலகத்தின் சாதனைகளை ஊரறியச் செய்தது மட்டுமல்லாமல் அது வரை நிலவி வந்த MYTHகள் அனைத்தையும் உடைத்தெறிந்து விட்டனர். அது மட்டுமில்லாமல் வாசு சாரும் எங்கும் கிடைக்காத பல அரிய ஆவணங்களைப் பகிர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் முயற்சியில் பங்கு கொண்டு சிறப்பான பணியாற்றியுள்ளார்.

    இந்த முயற்சியில் பம்மலார், வாசு மற்றும் அடியேன் சந்தித்த மனக் கஷ்டங்கள் தாங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். பயனற்ற பதிவுகள் என்று ஆவணங்களையும் நிழற்படங்களையும் கிண்டலடித்தவர்களும் உண்டு. அவற்றின் மகிமை தெரியாமல் மேம்போக்காக கேலி செய்தது மட்டுமின்றி இங்கு அவை இடம் பெறக் கூடாதென்பதற்கும் முயற்சிகள் நடந்தன. இதற்காக தனித்திரி துவங்கப் பட்டு பம்மலார் தன் பணியினை ஆற்றி வந்தார். அவர் வருகையில்லாமல் இப்போது அத்திரி முடக்கப்பட்டுள்ளது.

    இவையெல்லாம் தங்களிடம் கூறுவதற்குக் காரணம், எவ்வளவு சிரமங்களை எதிர்கொண்டு இந்த பதிவுகள் இடம் பெற்றுள்ளன என்பதைத் தங்களுக்கு உணர்த்தவே.

    திருவிளையாடல் பதிவினைப் பொறுத்த வரை தங்களுக்கு நான் பாராட்டுத் தெரிவித்ததற்குக் காரணம் ... [பொதுவாக அனைத்து நண்பர்களின் பதிவுகளுக்குமே நான் பாராட்டுக் கூறாமல் இருக்க மாட்டேன் ...] தாங்கள் அதனைக் கூற முன் வந்த விதமே.

    நம்முடைய திரியில் நடிகர் திலகத்தைப் பற்றி இடம் பெற்றுள்ள சாதனை விவரங்கள், நிழற்படங்கள் இவையனைத்துமே மேற்கோள் காட்டப் படலாம். ஆனால் அவற்றை உரிய முறையில் நாம் எடுத்தியம்ப வேண்டும். அப்படி செய்யும் போது, அந்த பதிவின் நாள், எந்த பாகம் போன்ற விவரங்களுடன் [QUOTE] என்று தனியாக பிரித்துக் காட்டுங்கள். அந்த QUOTE முடிந்த வுடன் தங்கள் கருத்தைத் தொடர்ந்து எழுதி முடியுங்கள்.

    அதே போல் பம்மலார் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கிடையே ஆவணங்களை இங்கு வழங்குகிறார். ஆனால் இதே ஆவணத்தை மற்ற சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தும் நம் நண்பர்கள் பம்மலாரின் WATERMARK கின் மேல் தன்னுடைய WATERMARK கினை overwrite செய்து தாங்கள் பேணிப் பாதுகாத்தது போன்ற தொரு சித்திரிப்பினை ஏற்படுத்துகின்றனர். இது நம் நண்பர்களுக்கு நாமே செய்தும் துரோகம் போன்றது. இப்படி செய்தால் மேற்கொண்டு அரிய ஆவணங்களை நாம் பெறாமல் போய் விட வாய்ப்புள்ளது. அந்த நண்பர்கள் இனிமேல் இந்த மாதிரி செய்யாமல் இருக்க வேண்டும் என நான் விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

    இது தங்களுக்கு மட்டுமின்றி நம் அனைத்து நண்பர்களுக்கும் தான், நான் உள்பட.
    Last edited by RAGHAVENDRA; 7th May 2013 at 07:01 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #3300
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஹ்ஹ... எங்கே பார்த்திபன்? என் பராக்கிரமம் கண்டு ஒளிந்து கொண்டு விட்டான். அவன் அரசாட்சி பெற கூட என்னை மாதிரி வேடமிட்டு வந்தால்தான் முடியும்.
    வெளியில் வா......
    -----விக்ரமன்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •