Page 329 of 401 FirstFirst ... 229279319327328329330331339379 ... LastLast
Results 3,281 to 3,290 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #3281
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    அட ,இப்போதுதான் கவனித்தேன். dolphin show க்களில், பிரமாதமாக perform பண்ணி விட்டு வரும் dolphin க்கு encourage செய்ய (conditional response ) ஒரு மீன் கொடுப்பார் trainer . அதை போல் சில நண்பர்கள் நான் நன்றாக perform செய்தால் சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட ஒரு பாடல் காட்சி கொடுத்து மேலும் நன்றாக perform செய்ய தூண்டுகிறார்கள்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #3282
    Senior Member Seasoned Hubber goldstar's Avatar
    Join Date
    Apr 2010
    Location
    Australia
    Posts
    168
    Post Thanks / Like

    NT photos 11














  4. #3283
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சத்தியமாய் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த தற்செயல் ராகவேந்தர் சார். முரளியை சீண்டியும், தங்களுடன் நிஜமாகவே உதவி கோரியும் போட பட்ட பதிவுதான் அது. நான் தங்களை முதல் இரண்டு வரிகளுடன் தொடர்பு படுத்தி போடவில்லை. இம்முறை ,நிஜமாகவே நான் அப்பாவிதான்.
    உங்கள் உதவிக்கு மிக மிக நன்றி சார்.

  5. #3284
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Welcome Mr Murali sir after a long time.

    Ennai Pol Oruvan - watched at Devi Paradise during my brother's wedding with
    brother's friends. First time watched the movie in Devi Paradise. Nice experience
    watching this entertainer at Devi Paradise.

  6. #3285
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    அட ,இப்போதுதான் கவனித்தேன். dolphin show க்களில், பிரமாதமாக perform பண்ணி விட்டு வரும் dolphin க்கு encourage செய்ய (conditional response ) ஒரு மீன் கொடுப்பார் trainer . அதை போல் சில நண்பர்கள் நான் நன்றாக perform செய்தால் சிவாஜி-வாணிஸ்ரீ சம்பந்த பட்ட ஒரு பாடல் காட்சி கொடுத்து மேலும் நன்றாக perform செய்ய தூண்டுகிறார்கள்.
    "சில " அல்ல "ஒரு" திரு கோபால் அவர்களே !

    வாழ்கையில் அனைவருக்குமே ஒரு ஊக்கம் தேவை. ஊக்கம் என்பது உந்துதலுக்கு பெரிய சக்தியாக விளங்கும். ஊக்கம் இல்லையென்றால் தூக்கம் தானே வரும் ?

    தங்களுடைய கட்டுரைகளை படித்து உண்மையிலேயே உங்களுக்கு வாழ்த்துக்களை தருகிறேன். நீங்கள் எழுதுவதே இவ்வளவு அருமையாக இருக்கிறதென்றால், அதனுடன் சேர்த்து காட்சிகளையும் இடுகை செய்தால் ? அப்பப்பா ! நினைத்தவுடன் புளகாங்கிதம் அடையசெய்கிறது !

    இதோ பிடியுங்கள் இன்னொரு ஊக்க சக்தி !


  7. #3286
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஹா ! அண்ணே!என் உதடே வலிக்குமளவு வலுவான பதிவு!!!

  8. #3287
    Senior Member Seasoned Hubber KCSHEKAR's Avatar
    Join Date
    May 2010
    Location
    CHENNAI
    Posts
    243
    Post Thanks / Like
    திரு. கோபால் அவர்களே,

    (அத்தனை பாகங்களையும் இணைப்பாக அளித்து உதவிய ராகவேந்திரன் சாருக்கு முதலில் நன்றிகள்.)

    தங்களுடைய இந்தியாவின் ஒரே உலக அதிசயம் - ஆய்வுக் கட்டுரையின் சிலவற்றை படிக்க இயலாமல் போய்விட்டது. தற்போது மொத்தமாகப் படிக்கும்போது மலைப்பாக இருக்கிறது. இதனை ஒரு புத்தக வடிவில் தந்தால் ஒவ்வொரு ரசிகனுக்கும் உபயோகமாக இருக்கும்.

    தொடருங்கள் உங்கள் ஆய்வுக் கட்டுரையை - ஆவலுடன் காதிருக்கிறோம் - ரசிப்பதற்கு.
    அன்புடன்

    K.CHANDRASEKARAN
    President
    Nadigarthilagam Sivaji SamooganalaPeravai
    sivajiperavai@gmail.com
    https://www.facebook.com/sivaji.peravai

  9. #3288
    Junior Member Regular Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    கடினமான காலகட்டமும் நடிகர் திலகம் திரைப்படங்களும்

    முதல் திரைபடதிலயே இதை சந்தித்ததாலோ என்னவோ, ஒவ்வொரு காலகட்டத்திலும் சோதனைகளை தன் திரைப்படம் வெளிவரும்போது நம்முடைய நடிகர் திலகம் சந்தித்திருக்கிறார்.

    50 துகளில் பராசக்தி என்றால் 60 துகளில் திருவிளையாடல் திரைப்படத்தை சொல்லலாம்.70 களில் பெருந்தலைவரின் மறைவிற்கு பிறகு திராவிட கட்சிகளின் வன்முறை ஆதிக்யத்தால் மாறியஅரசியல் சூழல் இப்படி பல சவால்களையும் துரோகங்களையும் நம் நடிகர் திலகம் துணிவுடன் சந்தித்து அவற்றை வென்றுகாட்டியும் உள்ளார்.

    1965 பொறுத்தவரை " திருவிளையாடல் " வருடம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றி நடிகர் திலகத்தின் திருவிளையாடல் பெற்றது ! இந்திய திரைஉலகில் தமிழ் திரை உலகின் "Mythological Subject " மற்ற திரை உலகினரை மீண்டும் ஒருமறை திரும்பிபார்க்க வைத்த திரைப்படம் திருவிளையாடல்.

    மிகவும் சுலபமாக கிடைத்த வெற்றி அல்ல அது. நடிகர் திலகதிற்கு பல சவால்கள் திரைத்துறையில் அரசியல்வாதிகளால் தமிழ்திரைஉலகில் கலகங்களை விளைவித்த நேரம்.

    எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடல் இந்த வெற்றியை பெற்றது என்பதை உற்று நோக்கினால் அதன் வெற்றியின் பிரம்மாண்டம் புரியும்.

    1965-ல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக ஆளும் காங்கிரஸ் கட்சியையும் அதை சேர்ந்தவர்களையும் வெறுக்கும்படி திராவிட கட்சிகளால் மக்கள் தூண்டி விடப்பட்டிருந்தனர்.

    கடவுள் மறுப்பு கொள்கை திராவிட கட்சிகளால் தீவிரமாக பிரச்சாரம் செய்யப்பட்ட நேரம். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும்

    பலருக்கும் தெரியாத விஷயம் ஒன்று செப்டம்பர் மாதம் நடந்தது

    1965 - செப்டெம்பரில் இந்திய - பாகிஸ்தான் போர் மூண்டது. குஜராத்தின் கட்ச் பகுதி வழியாகவும், பஞ்சாபின் வாகா எல்லை வழியாகவும் பாகிஸ்தான் படைகள் அத்து மீறி உள்ளே நுழைந்து நம்மை தாக்கியது. இந்திய நகரங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசியது.

    பாதுகாப்பு நடவடிக்கையாக இரவு நேரங்களில் Black out என்று சொல்லப்படும் விளக்குகளை முற்றிலுமாக அணைத்தல் முறை எல்லா நகரங்களிலும் தமிழகம் உட்பட அமுல்படுத்தப்பட்டது. போர் நிறுத்தம் ஏற்பட்ட பிறகும் எச்சரிக்கை நடவடிக்கையாக சில நாட்கள் இந்த முறை இருந்தது. இந்த நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கும் போதும் (முன் இரவுகளிலும், இரவுகளிலும் மக்கள் வெளியே வர தயக்கம் கொண்டிருந்த காலத்தில்) திருவிளையாடல் பெற்ற வெற்றி ஒரு வரலாற்று சாதனையாகும்

    ஈசனாக தோன்றிய நடிகர் திலகத்தின் திருவிளையாடல் திரைப்படம் நிகழ்த்திய சாதனைகளில் சில துளிகள் அனைவரின் பார்வைக்கும் ! - COURTESY : Mr.Pammalar & Mr.Murali Srinivas

    1. முதன் முதலாக 1 கோடிக்கு மேல் வசூல் செய்த புராண படம் - திருவிளையாடல்.

    2. முதன் முதலாக தமிழகத்தில் 13 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்த புராண படம் - திருவிளையாடல்.

    3. முதன் முதலாக சென்னையில் 3 திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய தமிழ் புராண படம் - திருவிளையாடல்

    4. மதுரை ஸ்ரீதேவி திரையரங்கில் 100 நாட்களில் தினம் ஒரு முறை வீதம் 100 முறை பார்த்த ஒரு வயதான பாட்டியம்மாளுக்கு 100-வது நாளன்று பரிசு வழங்கப்பட்டது, தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த செய்தியாகும்.

    மதுரை ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 167

    மொத்த வசூல் - Rs 3,54,457.53 p

    அத்திரையரங்கத்தின் முந்தைய சாதனைகள் எல்லாம் முறியடிக்கப்பட்டது.

    10. அனைத்துக்கும் சிகரம் வைத்தார் போன்று சென்னையில் திருவிளையாடல் நிகழ்த்திய சாதனை.

    சென்னை அரங்குகள் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி

    மொத்தம் ஓடிய நாட்கள் - 537

    மொத்த வசூல் - Rs 13,82,002.91 p

    பார்த்த மக்கள் - 11,02,567

    சென்னையின் முந்தைய ரிக்கார்ட்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.
    Last edited by Sowrirajan Sree; 6th May 2013 at 03:29 PM.

  10. #3289
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    மிக சரியான பதிவு. 1965 இல் நடந்தது தெய்வத்தின் திருவிளையாடலே.

  11. #3290
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர் திலகம் உலகின் தலை சிறந்த நடிகர்களில் தலைசிறந்தவர் என்ற ஒற்றை வாக்கியத்தை தமிழனாய் பிறந்த எவரும் சொல்லிவிடலாம்.ஆனால் அது எவ்வாறு என, ஒரு இருபதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் மூலம் ஆயிரம் வாக்கியங்களில் ஆணித்தரமாக நிரூபிக்க நண்பர் கோபால் ஒருவரால்தான் முடியும்.அதேபோல அவைகளை இவ்வளவு அழகாக index செய்ய நண்பர் ராகவேந்தர் ஒருவரால்தான் முடியும்.இருவருக்கும் என் நன்றி.


    மேலும் பல பள்ளிகளைப்பற்றி எழுதி நம்மை மிரளவைத்த கோபால் இப்பொழுது உத்தம புத்திரனாக மாறி சற்றே இரங்கி அனைவருக்கும் படிக்க இலகுவாக எழுதியுள்ளது வரவேற்கத்தக்கது.

    சுமார் 55 ஆண்டுகள் கடந்த ஒரு திரைப்படம்.இரட்டை வேடம் என்பது ஒரு technical excellence ஆக மட்டுமே கருதப்பட்டு வந்த ஒரு. கால கட்டம்.இரட்டை வேடம் என்றால் ஒரு வேடதாரி,மற்றவரிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்த நுனி விரலால் மூக்கை திருப்பி சொடுக்கினால் போதும் என மக்கள் நம்பியிருந்த காலம்.
    அப்பொழுது சிலம்பாட வருகிறார் தலைவர்.இரண்டு பாத்திரங்களுக்கும் இருக்கும் மனோரீதியான வேறுபாட்டை உடல் மொழியால் விளக்குகிறார்.தமிழ் ரசிகர்கள் விழித்துக்கொள்கிறார்கள்.Technical excellence என்பது மாறி,artistic excellence என ஆகிறது.

    நண்பர் கோபால் இவ்வளவு விளக்கிய பின் மீண்டும் அதை விவரிப்பது தேவையில்லாதது.
    இருப்பினும் ஒன்று. ஹெலன் நாட்டியத்திற்கு விக்கிரமன் கைத்தட்டும் விதமே அதுவரை இந்திய திரைப்பட உலகம் கண்டிராதது.

    உல்லாசம்+சுயநலம்+பயம்+அலட்சியம் இவைகளை வெவேறு அளவில் கலந்து நம்மை மெய்மறக்க செய்வார்.
    பிற்பாடு பார்த்திபன், விக்கிரமனாக வரும்போது கூட,நடையுடை பாவனைகளில் சில தவறுகள் மூலம் தான் பார்த்திபன் என்பதையும் நுணுக்கமாக காட்டியிருப்பார்.

    இன்று இருக்கும் தொழிற்நுட்ப அசுர வளர்ச்சியில் வானில் பறப்பது சாதாரணமாகி விட்டாலும் அந்த ரைட் சகோதரர்கள் முதலில் வானில் பறந்த நிகழ்விற்கு ஒப்பாகும் உத்தம புத்திரன் அளித்த இரட்டை வேடம்.

    கால்,அரை,ஒன்று,இரண்டு,மூன்று,ஒன்பது ஆகிய அனைத்து வேடங்களுக்கும் அரசர் தலைவர்.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •