Page 250 of 401 FirstFirst ... 150200240248249250251252260300350 ... LastLast
Results 2,491 to 2,500 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2491
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சமீபத்தில், திரியில் என்னை மிக கவர்ந்த விஷயம் ஆரோக்யமான விவாதங்களுடன், அதிகரித்து வரும் sense of humour . நட்புணர்வை அதிகரிக்க செய்யும் கிரியா ஊக்கி.(Catalyst )

    கண்பட் அவர்களின் , Mugale azam தொடர்பானது.(அரச உடையை பார்த்தாவது...., ராகவன் )

    வாசுவின், தண்ட,பேத,தான, சாமம்.

    ராகவேந்தர் சாரின், ஆயிரத்தில் ஒருவன் ராமதாஸ் பாணியில் வந்த ஒன்று.(நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள். ஆனால் வாய் தான் ..) .ஒன்றும் குறை காண முடியாது. ஆனால் விவேகம்தான்.... இதை என் குடும்பத்திடம் சொன்னதும் , சொன்னவர் யார்?உடனே மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும். எங்கள் மனதில் இவ்வளவு நாளாக புதைத்து அழுத்தி கொண்டிருந்த ஒரு ரகசியத்தை, இவ்வளுவு தைரியமாய் உரைத்த விவேகியை என்று.

    தொடந்த நட்புடன் கூடிய நகைச்சுவை தொடர, இந்த அவிவேகியின் பிரார்த்தனை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2492
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ராகவேந்தர் சாரின் பதிவு தொடர்பானது.

    போன வாரம் வாழ்க்கை படத்தை மீண்டும் பார்த்தேன். (இதை மலையாளம்,ஹிந்தி ஆகியவை பார்த்துள்ளேன்.) வாழ்க்கையில், நம்பிக்கை சார்ந்து சுய மரியாதையோடு இயங்கும் ஒருவன், மனைவியுடன் ஆன உறவு முறை காதல் வய பட்டதாக இருப்பினும் ,ஒரு குற்ற உணர்வு இழையோடி கொண்டே இருக்கும்.(செல்வ நிலையில் இருந்த அவள் வாழ்க்கையை சிதைத்து விட்டதாக). இதையெல்லாம் விடுங்கள். கடைசியில் மனைவி தனக்கு உடன்பாடில்லாத ஒரு காரியத்தை செய்யும் போது ,அதை கைகேயி வரமாகவே உபயோகிக்கும் போது ,....

    அந்த office scene ... நடிகர்திலகத்தின் உடல் மொழி, முக பாவம் வசன உச்சரிப்பு.... என் இதயத்தை யாரோ வெளியே எடுத்து பிழிந்து கொண்டிருப்பதை போல ஒரு அவலத்தை உணர்ந்தேன். அப்படியே சக்கையாய் பிழிய பட்டு ,குப்பையில் வீச பட்ட துறவு கலந்த ஒரு dryness , வெறுமை ..... (வாசு சார் முடிந்தால் காட்சி உதவி)
    Last edited by Gopal.s; 6th April 2013 at 03:21 PM.

  4. #2493
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் அண்ணன் குடும்பத்தின் சார்பாக நான் ராகவேந்திரன் சாருக்கு இந்த மிகப் பெரிய மாலையைப் போட்டு மகிழ்கிறேன்.

    நடிகர் திலகமே தெய்வம்

  5. #2494
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்தின் காட்சி finish பண்ணும் போது character -action -mood ஆகிய அனைத்தையும் ஒரு சிறு gesture மூலம் establish பண்ணும் அழகு.

    கல்லெல்லாம் மாணிக்க பாட்டின் இறுதியில், ஒரு துணியை எடுத்து கையை துடைக்கும் நேர்த்தியில் ,ஓவியத்தை திருப்தியாக முடித்து விட்ட காதலனின் திருப்தி.....

    தூங்காத கண்ணென்று பாட்டில், விக் கழட்டி, மேல் பட்டன் திறந்து, stress relieve செய்து, ஓய்வெடுப்பதை குறிப்பதுடன், காதலையும் கழட்டி விடும் symbolic gesture .

  6. #2495
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    ஆஹா,

    தீயாய் வேலை செய்கிறாயே தம்பி. என்ன ஒரு சுறு சுறுப்பு.சிறு வயதில் ஒரு கிராமத்து நண்பன் . அவன் வேலையே ,நம் அரை டிரௌசரை பின்னாலிருந்து உருவி விட்டு ஓடுவது. பாவம் ,நிறைய நண்பர்கள் அப்போதெல்லாம், தொள தொள அரை நிக்கரை ,அரணா கயிறு போட்டே இடுப்பில் அணிந்திருப்பார்கள்.(உடுக்கை இழந்தவன் கை போல,என்பதை உல்டா செய்த உயர்ந்த நண்பன்) .

    தொடர்பில்லா விட்டாலும் ஏதோ பழைய நினைவு. H mmmm .
    Last edited by Gopal.s; 6th April 2013 at 10:56 AM.

  7. #2496
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasu Sir,

    Welcome back with a bang and also do not forget
    the stunt scenes series of NT.We are eagerly
    awaiting for the same.

  8. #2497
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    கோபால் சார்,

    தங்களைப் போலவே நானும் நீங்கள் குறிப்பிட்ட அந்த நெஞ்சு பிழியும் காட்சியைப் பர்ர்த்து தன் வசமிழந்து நிற்கிறேன். நிம்மதியாகவே இருக்க விட மாட்டீர்களா?

    சரி! நீங்கள் கேட்டதற்காக அந்த அற்புதமான காட்சி. தரவேற்ற கொஞ்சம் நேரம் ஆகி விட்டது. அதான் delay.



    Last edited by vasudevan31355; 6th April 2013 at 12:52 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  9. #2498
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Thank u vasudevan sir. Definitely.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2499
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    வாசு சார்
    தங்களுடைய சிறந்த பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றிகள். இது வெறும் வார்த்தையல்ல... உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் உணர்வின் வெளிப்பாடு.

    வாழ்க்கை – ஏற்கெனவே படத்தை பல முறை பார்த்திருந்தாலும், கோபால் இந்த காட்சியில் உள்ள நுணுக்கமான விஷயங்களை சொன்ன பிறகு இந்த காட்சியைப் பார்க்கும் போது நிச்சயம் பல புதிய விஷயங்களை அறிய முடிகிறது. அதனைத் தாங்கள் உடனே இங்கே பதிவிட்டு அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  11. #2500
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,
    தங்களுடைய பதிவுகளை நான் எப்போதுமே ரசித்து வந்திருக்கிறேன் ... சில சமயம் அவசரத்திலோ அல்லது உணர்வின் வேகத்திலோ வெளிப்படும் வார்த்தைகளின் தன்மைகளைத் தவிர. அதனை சரி செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.
    நகைச்சுவையினை விரும்பாதவர் யார் உளர் .. அதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •