Page 247 of 401 FirstFirst ... 147197237245246247248249257297347 ... LastLast
Results 2,461 to 2,470 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2461
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Wecome back Mr. Neyveli Vasudevan sir, happy to see your posts again.

    You come with the bang of M.N.Rajam, the evergreen Heroine cum Villi cum charector artist.

    Following matter is picked from Saradha mam's old post about M.N.Rajam, (on copy & paste method)

    திருமதி எம்.என்.ராஜம் வழங்கிய 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அவர் சொன்ன ஒரு சுவாரஸ்யமான விஷயம்...

    'பாவை விளக்கு படத்துக்காக நானும் சிவாஜியும் மற்றும் படப்பிடிப்புக்குழுவினரும் டெல்லி சென்றபோது தமிழ்த்திரையுலக்மே திரண்டு வந்து, ஏன்னவோ நாங்கள் இமயமலையில் ஏறப்போவது போல வழியனுப்பினர். அதற்குக்காரணம், அதுவரை தமிழ்ப்படங்கள் ஊட்டி, கொடைக்கானல் அல்லது மிஞ்சி மிஞ்சிப்போனால் மைசூர் பிருந்தாவனம் வரைதான் சென்று படப்பிடிப்பு நடத்தினர். எங்கள் குழுதான் முதன்முதலில் டெல்லி சென்று படம் பிடித்தது.

    ஆக்ராவில் தாஜ்மகாலின் முன்பு 'காவியமா நெஞ்சின் ஓவியமா' பாடல் படமாக்கப்பட்டபோது, முதல்நாள் அவ்வளவு கூட்டம் இல்லை. மறூநாள் அதிகாலையில் அங்குள்ள மக்கள் பெருங்கூட்டமாக படப்பிடிப்பைக்காண வந்திருந்தனர். கூடவே போட்டோகிராபர்களையும் அழைத்து வந்திருந்தனர். அதற்கு முன் இந்திப்படங்கள் அங்கு எடுக்கப்பட்டிருந்தபோதிலும் அதில் நடித்தவர்கள் பேண்ட், சட்டை அல்லது பைஜாமா சுடிதார் இவற்றுடன்தான் நடித்திருப்பார்கள்.

    ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமிட்டு அந்த அரச உடையில் தலையில் கிரீடம் சகிதம், அதுவும் தாஜ் மகாலுக்கு முன்னால் நிற்பதைப்பார்த்து உணர்ச்சிவசப்பட்ட அவர்கள் அனைவரும் எங்கள் முன் மண்டியிட்டு சலாம் செய்தனர். அதோடு தாங்கள் அழைத்து வந்திருந்த போட்டோகிராபர்களைக் கொண்டு ஒவ்வொருவரும் தனித்தனியாக எங்கள் இருவருடனும் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர். அந்த போட்டொ எடுக்கும் சம்பவம் முடியவே ஒருமணிநேரத்துக்கும் மேலே ஆனது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்ததையும் அவர்கள் நின்று பார்த்து மகிழ்ந்தனர்.

    ஆக்ராவில் உள்ள வீடுகளில் நிஜமான ஷாஜகான் மும்தாஜ் படம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சிவாஜியும் நானும் ஷாஜகான் மும்தாஜ் ஆக வேடமணிந்த போட்டோ பெரும்பாலான வீடுகளில் இடம்பெற்றுள்ளது. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2462
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Same like that, M.N.Rajam's portions in Saradha mam's 'Paasamalar' analysis...

    வழக்கமாக வில்லன், வில்லிகளாக வரும் நம்பியாரும், எம்.என்.ராஜமும் இதில் நல்லவர்களாக வர (இவர்களின் இனிஷியலைவைத்து இவர்கள் இருவரும் நிஜமான அண்ணன் தங்கை என்று கரடி விட்டவர்களும் உண்டு).

    கணவனை எதிர்த்து தேர்தலில் நிற்கவேண்டாம் என்று அண்ணனைக் கேட்க வந்திருக்கும் ராதா (சாவித்திரி)யிடம் வாதம் செய்யும் மாலதியை (ராஜம்) ராஜு அடக்கும்போது, "நீங்க சும்மா இருங்க, அவங்கவங்க கணவருக்காக அவங்கவங்க வாதாடும்போது என் கணவருக்காக வாதாடும் உரிமையை எனக்குக் கொடுங்க" என்று ராஜம் கேட்குமிடத்தில் எம்.என்.ராஜம் மீது நமக்கு கோபம் வரவில்லை. தங்கை, தங்கை என்று உயிரைவிடும் அதே நேரத்தில், தன்னை நாடி வந்த மனைவியின் சின்ன உரிமையைக்கூட அவளுக்குத்தரக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது.

  4. #2463
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    சாரதா மேடம்,கார்த்திக் சார் போன்றவர்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். முரளியும் அபூர்வ பொருளாகி விட்டார். காவேரி கண்ணன் ayn rand இடம் தஞ்சமடைந்து விட்டார். JOE ,NOV ,GROUCH போன்றோர் காண்பதே இல்லை.
    இந்த நேரத்தில் தங்கள் சாரதா மேடம் பதிவிலிருந்து quote செய்தது,அவர்களே திரும்பி வந்த உணர்வை கொடுத்தது. ரொம்ப நன்றி ஆதிராம் சார்.

  5. #2464
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by adiram View Post
    Same like that, M.N.Rajam's portions in Saradha mam's 'Paasamalar' analysis...

    வழக்கமாக வில்லன், வில்லிகளாக வரும் நம்பியாரும், எம்.என்.ராஜமும் இதில் நல்லவர்களாக வர (இவர்களின் இனிஷியலைவைத்து இவர்கள் இருவரும் நிஜமான அண்ணன் தங்கை என்று கரடி விட்டவர்களும் உண்டு).

    கணவனை எதிர்த்து தேர்தலில் நிற்கவேண்டாம் என்று அண்ணனைக் கேட்க வந்திருக்கும் ராதா (சாவித்திரி)யிடம் வாதம் செய்யும் மாலதியை (ராஜம்) ராஜு அடக்கும்போது, "நீங்க சும்மா இருங்க, அவங்கவங்க கணவருக்காக அவங்கவங்க வாதாடும்போது என் கணவருக்காக வாதாடும் உரிமையை எனக்குக் கொடுங்க" என்று ராஜம் கேட்குமிடத்தில் எம்.என்.ராஜம் மீது நமக்கு கோபம் வரவில்லை. தங்கை, தங்கை என்று உயிரைவிடும் அதே நேரத்தில், தன்னை நாடி வந்த மனைவியின் சின்ன உரிமையைக்கூட அவளுக்குத்தரக் கூடாதா என்றுதான் தோன்றுகிறது.
    whatever may be his later decision,havent you observed that sivaji goes aside and let his wife assert her rights verbally without interfering or taking sides?What a performance!!!

  6. #2465
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    சாரதா மேடம்,கார்த்திக் சார் போன்றவர்களை ரொம்ப மிஸ் செய்கிறோம். முரளியும் அபூர்வ பொருளாகி விட்டார். காவேரி கண்ணன் ayn rand இடம் தஞ்சமடைந்து விட்டார். JOE ,NOV ,GROUCH போன்றோர் காண்பதே இல்லை.
    இந்த நேரத்தில் தங்கள் சாரதா மேடம் பதிவிலிருந்து quote செய்தது,அவர்களே திரும்பி வந்த உணர்வை கொடுத்தது. ரொம்ப நன்றி ஆதிராம் சார்.
    Another important missing personality is our beloved "PAMMALAR".

  7. #2466
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் பார்த்தசாரதி அவர்களின் கனிந்த அன்பிற்கு என் முதற்கண் நன்றி.

    இந்தமய்யத்தின் நக்கீரர் போல செயல்பட்டு அதை கட்டிக்காக்கும்.நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு நன்றி.

    தாம் தூம் என, நண்பர் கோபால் அவர்கள், பத்திற்கும் மேற்பட்ட பகுதிகளில் பட்டையைக்கிளப்ப,

    தீம் என நண்பர் வாசுதேவன் ஒரு புது பதிவுடன் உலா வருகிறார். நன்றி.

    முரளி,பார்த்தசாரதி,கோபால்,வாசுதேவன் என சர்வம் கிருஷ்ண மயமாக இங்கு கணேசரை போற்றிக்கொண்டிருக்கும் இந்த அற்புத வேளையிலே,இவர்களை படித்த மயக்கம் பின்னூட்டம் இட கூட இடையூறாக உள்ளது.

    இருப்பினும் என் பதிவை ரசித்து பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி கூறுதல் என் தலையாய கடமை.

    நிற்க.

    நண்பர் கோபால் "திலீப்ஜியிடம் காணப்படாத நடிப்பு" என்ற தலைப்பில் ஒரு விரிவுரை ஆற்றி விட்டு அமர ,தொடரும் நண்பர் வாசுதேவன் அதை சாட்சியங்களுடன் நிரூபிக்கிறார்.அவர் போட்டுள்ள மொகல்-e-ஆசாம் காணொளி கதைப்பல சொல்கிறது.அதை விளக்க நான் விழைகிறேன்.

    சக்ரவர்த்தி அக்பரின் அரசவை நர்த்தகி அனார்கலி.இவளிடம் அக்பர் மகனும் பட்டத்து இலவரசனுமான சலீமிற்கு நிறைய இது.அனார்கலி கேட்கும் போதெல்லாம் "நம் 'இது' புனிதமானது.நாம் அடுத்த ஜன்மத்திலாவது ஒன்று சேர்வோம் அன்பே!" என சலீம் தட்டிகழிக்க,"இந்த ஜன்மம் முடியவே இன்னும் அறுபது ஆண்டுகள் உள்ளபோது அடுத்த ஜன்மமாவது, ஒன்றாவது!" என கோபபப்படும் அனார்,"இது வேலைக்காகாது,நாமே நேரடியாக கோதாவில் இறங்க வேண்டியதுதான்!" என முடிவெடுத்து அரசவை நடனம் ஒன்றில், நேரடியாக சக்ரவர்த்தி அக்பரை பார்த்து "காதல் செய்தால் பயம் ஏன்?.நான் காதலிக்கத்தானே செய்தேன்! திருட்டு குற்றம் எதுவும் செய்யவில்லையே!.அப்படி இருக்கையில் இப்படி பட்ட வெறுப்பெதற்கு?" என பொருள்பட தைரியமாக பாட.அக்பர் கொதிக்கிறார்.இங்கே தான் வருது வில்லங்கம்.

    திலீப்ஜிக்கு இந்த காட்சியை விவரித்த இயக்குனர் இதை ஒரு சரித்திரப்படம் என சொல்ல மறந்து விட்டரா என்று ஒரு ஐயம் வருகிறது.அப்படியே இருந்தாலும் திலீப்ஜி தனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் உடைகளைப்பார்த்தாவது இது சரித்திரப்படம் என ஊகித்திருக்கலாம்! அதுவும் இல்லை!.real life திலீப்ஜியின் பெண் சிநேகிதி,அவர் தந்தையிடம் வந்து தங்கள் காதலைப்பற்றி சொன்னால் எப்படி முகபாவனை காட்டுவாரோ அப்படி காட்டியுள்ளார்.இது நம் சிவகுமார் சில படங்களில் காட்டும் முக பாவங்களுக்கே ஆஸ்கர் வாங்கித்தர வல்லது.இதையும் நடிப்பில் ஒரு பாணி என நினைப்பவர்கள், ஓடாத கடிகாரம் ஒரு நாளில் இரண்டு முறை சரியான நேரம் காட்டும் என சொல்பவர்களுக்கு சமமானவர்கள்.

    நான் பள்ளியில் படித்தபோது,சிலப்பதிகாரம் நாடகம் போட்டார்கள் அதில் பாண்டிய மன்னனாக என் நண்பன் ராகவன் நடித்தான்.அவன் பயிற்சியின் போது அரியணையில் வந்து அமர்ந்த விதமே, அவனை அந்த பாத்திரத்திலிருந்து வெளியேற்ற காரணமாய் அமைந்தது. என் தமிழ் ஆசிரியர் அதை பார்த்து சொன்னது "தம்பி ராகவா!,நீ இப்படி உட்கார்ந்து உன் மேல் ஒரு வெள்ளை துணியை கழுத்து வரை போர்த்தினால், அரசவை hair cutting saloon ஆகி விடும்!"

    பாவம் திலீப்ஜிதான் என்ன செய்வார்!!.
    பயம்( என்ன இவள் இப்படி போட்டு உடைக்கிறாள்?),
    நிம்மதி(எப்படியோ அப்பாவிடம் சொல்லியாச்சு),
    ஆவல்(அவர் என்ன செய்வாரோ?)
    எனும் மூன்று உணர்வுகளை ஒரே சமயத்தில் வெளிக்காட்ட
    அவர் என்ன நம் தலைவரா என்ன?

    இது தமிழில் வந்திருந்தாள் அக்பராக எஸ்.வி.ரங்கராவும்,சலீம் ஆக தலைவரும் இருந்திருக்கலாம்.90 களில் வந்திருந்தால்,அக்பர் நம் தலைவர்,சலீம்.. வேறு யார்? தேவர் மகன் தான்!!.

    முடிவாக நண்பர் கோபாலிற்க்கு: முதல் ரேங்க் பெற்ற மாணவன் நூறு சதவிகிதம் என்றால் இரண்டாவது ரேங்க் 9௦ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.அது 40 ஆகவும் இருக்கலாம்.

    நன்றி.
    Last edited by Ganpat; 5th April 2013 at 01:56 PM.

  8. #2467
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post

    Meisner School.

    இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.


    நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).

    அடிக்கோடிடப்பட்ட பகுதியை நீங்கள் கீழே குடுத்த எடுத்துக்காட்டுகளையும் பொருத்திப் பார்க்க சிரமமாக இருக்கிறது.

    வசனங்கள் தட்டையாக உள்வாங்கப்பட்டு, வெளிப்படுத்தும்போது அந்தக்கணத்தின் (முன்தீர்மானம் இன்றி) உணர்ச்சியுடன் வெளிப்படத்தவேண்டும் (என்று இவ்வகை கூறுகிறது) என்று புரிந்துகொண்டேன்.

    குறிப்பாக உடன் நடிப்பவர்கள் காட்சியின் டைனமிக்ஸ் இவை சார்ந்து மேலெழும் performance என்பதை படிக்காத மேதை, ப.ம.போதுமா போன்றவற்றில் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அப்பரை இத்துடன் பொருத்திப் பார்க்க முடியவில்லை.

    (நான் பார்த்தவரை) காட்சிகளின் கதியும் (pace), உடன் நடிப்பவர்களுடன் உள்ள interactionஸும் சட்சட்டென்று மாறிக்கொண்டே வரும் (because of the episodic nature of that film). உதாரணம்: ஒரு காட்சி முன்புதான் சந்தித்த முத்துராமன் குடும்பத்துடன் ஒரு துயரத்தில் பங்கெடுக்கவேண்டிய அடுத்த காட்சி. இதற்கு முன்: முற்றிலும் வேறுபட்ட ஞானசம்பந்தர் காட்சி. உடன் யாருமே நடிக்காத : மலை ஏறும் காட்சி.

    இவற்றில் உள்ள consistency அபாரமானது. அதில் ஒரு வித தீர்க்கமான முன்தீர்மானமும், சூழலுக்கு அப்பால் (மேலே உயர்ந்து!) இயங்கும் தன்மையும் எனக்குத் தெரிகின்றன.

    என் புரிதல் முழுமையில்லை என்று நினைக்கிறேன்...
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  9. #2468
    Moderator Platinum Hubber P_R's Avatar
    Join Date
    Nov 2004
    Posts
    10,036
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

    Stella Adler School

    நடிகர்திலகத்தின் படங்கள்-
    மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

    ---to be continued.
    And the many many plays in the movies?
    Like Chatrapathi Sivaji.
    மூவா? முதல்வா! இனியெம்மைச் சோரேலே

  10. #2469
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    Yes Gopal ji..that is a great scene where HE handles HIS sister and wife deftly.Oh! what a performance!!

  11. #2470
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Quote Originally Posted by P_R View Post
    And the many many plays in the movies?
    Like Chatrapathi Sivaji.
    Yes. Many plays within the Films, Chatrapathi comes under this category.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •