Page 236 of 401 FirstFirst ... 136186226234235236237238246286336 ... LastLast
Results 2,351 to 2,360 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2351
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கோபால் சார்,
    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் இதனுடைய நோக்கம் பார்வை விஸ்தாரமாக இருக்க வேண்டும், இந்த படத்தில் தான் இதைப் பார்ப்பேன் இந்த கால கட்டத்தில் தான் என்னுடைய ஆய்வை நான் உட்படுத்துவேன் என்கிற கண்ணோட்டம் இல்லாத பட்சத்தில் இந்த கட்டுரை முழுமையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். அந்தக் கலைஞனின் உழைப்பு இறுதிப் படம் வரையில் முழுமையாக இருந்தது. எனவே தங்களுடைய பார்வை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் அல்லது குறிப்பிட்ட காலத்தில் என்று இல்லாமல் அவருடைய காலம் முழுதுமாக விஸ்தரிக்கப்படுமானால் அப்போது அதுவே அந்தக் கலைஞனுக்கு தாங்கள் செய்யும் நேர்மையான மரியாதையாக இருக்கும்.

    நடிகர்திலகம் Stanislavski ஸ்கூல் பாணியில் sense memory அடிப்படையில் கதை கருவின் objectiveபடி,கண்டு,கேட்டு,உயிர்த்து,உணர்ந்து,உணர்த ்தி,காத்து,அழித்து,தூண்டி,மறைந்து,மறைத்து ,அனைத்தையும் திரையில் Meisner ,Straberg பாணியில் instinctive improvisations செய்து,
    Stella Adler பாணியில் largeness in action and voice கொண்டு,Chekhov பாணியில் வாழ்கையை imitate செய்யாமல் interpret செய்து,Oscar wilde பாணியில் தன் பாத்திரங்களின் முகமூடியில் உணர்வுகளை சுமந்து,Spolin &Suzuki ஸ்கூல் படி தனக்கிருந்த பாய்ஸ்' கம்பெனி பயிற்சி அனுபவங்களின் மூலம் உடலின் அனைத்து அங்கங்களையும் தன்னிச்சை படி ஆட்டுவித்து ,Focus reach முறையில் கதாபாத்திரங்களின் ஆத்மாவிற்குள் நுழையும் விந்தையில், உலகிலேயே ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெருந்தகையாய் ,திகழ்ந்த ஒரே உலக பெரு நடிகன்.
    இதைத் தான் நானும் சொல்லி வருகிறேன். He had full control on his performance and did not allow his performance to control him. வெளியில் இருந்த வாறே உள்ளே அந்தப் பாத்திரத்தை I mean the character, உள்ளே அலசி ஆராய்ந்து அதனைத் தன்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வந்து அதே சமயம் தான் அதற்குள் போகாமல், பார்வையாளனை உள்ளே தள்ளி விடும் சாமர்த்தியம் ...
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2352
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    நான் உதாசீனம் செய்யும் புற காரணிகள்- star என்பவன் இந்தியாவில் நிலைக்க செய்ய வேண்டிய நீர்மைகள்(Dilution ),நமது அழகுணர்ச்சி(அதுவும் தமிழக மக்களின் விபரீத அழகுணர்ச்சி),கூத்து மரபாகவே தொடர்ந்த நமது திரைப்பட கலையாக்கம்(பாடல்களுடன்), நமது talkie என்ற காரண பெயர் கொண்ட படங்கள், அவியல் ஆன அவற்றின் ஆக்க முறைகள்,tribalised ஆக தெரியும் விரிந்த பழம் கலாச்சாரங்கள்,நமது பிரத்யேக வியாபார நிர்பந்தங்கள்,(இதிலும் தமிழ் வினோதம்), ஒரே நேரத்தில் பல தர பட்ட படங்களில் shift முறையில் ஓயாது உழைத்த நடிகர்திலத்தின் பிரத்யேக சிரமங்கள் ,Focus இல்லாத நமது படங்களின் செக்கு மாட்டு கதை-காட்சியமைப்புகள், இவற்றை பற்றிய ,இவை சார்ந்தவற்றை முற்றாக ஒதுக்கி, நடிகர் திலகம் என்ற மேதை தான் அறியாமலேயே எப்படி அத்தனை பொருட்படுத்த தக்க உலக நடிப்பு பள்ளிகளின் அனைத்து பாணியையும் , தன்னிடையே கொண்டு விளங்கி தனக்கு பிறகு ஆயிரம் இடங்கள் காலியாகவே இருக்கும் படி செய்த விந்தையை எனக்கு தெரிந்த வரையில் சுலபமாக ,அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் புரியும் வண்ணம் விளக்க முயல்கிறேன்.
    இந்த variables எல்லாமே புறந்தள்ளக் கூடியவை அல்ல. இவை அனைத்தையும் புறந்தள்ளி விட்டுப் பார்த்தால் நடிகர் திலகத்தின் நடிப்பை ஆராயும் கண்ணோட்டத்தில் BALANCE இருக்காது. ஏனென்றால் இந்தக் காரணிகளை எல்லாம் அலசி ஆராய்ந்து அவற்றில் தேவையானவற்றை மட்டும் எடுத்து அவற்றை நமக்குப் பரிமாறியிருக்கிறார். இவற்றை ஒதுக்கி விட்டு அவரை நீங்கள் பார்த்திருந்தீர்களானால், மேலே உதாரணம் காட்டப் பட்டுள்ள பல்வேறு உலகக் கலைஞர்களோடு பத்தோடு பதினொன்றாகத் தான் இருந்திருப்பார். அந்தப் பட்டியலோடு அவரை நிறுத்தி விட்டிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

    SYMBOLISM இல்லாமல் இந்திய சினிமா இல்லை. நமது கலாச்சாரம் நமது பண்பாடு இவற்றை மீறி அந்நிய பாணியில் நாம் பயணிக்க முடியாது. அதனைத் தெரிந்து கொண்டு தான் அவர் நடிப்பினை வகுத்துக் கொண்டுள்ளார்.

    சொல்லப் போனால் BEYOND AN ACTOR, HE WAS AN ASSUMPTION OF A RESPONSIBLE CITIZEN, HE VIEWED THE CHARACTER IN THE VIEW OF A CENSOR OFFICER, A NATIONAL LEADER, AND SOCIAL WORKER.

    இந்த அடிப்ப்டையில் அவருடைய நடிப்பினைப் பற்றித் தாங்கள் கூறினீர்களானால் IT WILL BE JUSTIFIED.

    அவருடைய இந்த எச்சரிக்கை உணர்வு கலந்த characterisation க்கு உதாரணம், புதிய பறவை படத்தில் வரும் சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து பாடலில் அவர் உதட்டை வழிக்கும் கட்டம். இது போல் மேலும் சில படங்களில் suggestive ஆக அவரே செய்திருப்பார். இயக்குநருக்கும் படத் தொகுப்பாளருக்கும் filler வைக்க வேண்டிய வேலை இல்லாமல் அவர்களுடைய பணியை எளிதாக்கி விடுவார்.

    இன்னும் பல உண்டு. தங்களுடை தொடரில் தங்களுடைய கண்ணோட்டத்திற்கேற்ப கருத்துப் பரிமாற்றங்கள் தொடரும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2353
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    நண்பர் ராகவேந்தர் அவர்களுக்கு,

    உங்கள் இரு பதிவையும் படித்தேன்.சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.

    கோபால் உள்ளிட்ட நம் அனைவருக்கும் உள்ள ஒரே கருத்து
    தலைவர் ஒரு மகா கலைஞர் அவரை போன்ற ஒருவர் தோன்றுவது மிக அபூ ர்வம் எனபது.
    அதில் யாருக்கும் எந்த வித ஐயமும் வேண்டாம்.

    இன்று உலகமே சுருங்கி ஒரு நகரத்தின் அளவிற்கு வந்துவிட்ட தொழிற்நுட்ப புரட்சி காலத்தில் ,
    நம் மண்ணில் பிறந்த ஒரு மகா கலைஞனின் புகழை உலகெங்கும் எடுத்து செல்ல வேண்டியதும் நம் கடமை ஆகிறது.

    அப்பொழுது உலக அரங்கிலே நின்று எங்கள் சிவாஜியை மிஞ்ச வேறு யாரும் கிடையாது என முழங்குவதால் பயன் ஒன்றும் இல்லை.
    காரணம் அதை சொல்லும் வகையில் சொல்லாதது தான்.ஒரு குழந்தை துறு துறுவென்று மூக்கும் முழியுமாக அழகாக் உள்ளது என்று ஒரு சாதாரண அரங்கில் சொல்லலாம்.ஆனால் கற்றோரும் கவிகளும் நிறைந்த அரங்கில் அதையே,

    மாவடு கண்ணல்லவோ, மைனாவின் மொழியல்லவோ!
    பூவின் மண மல்லவோ, பொன்போன்ற நிறம் அல்லவோ!!

    என்றால்தானே எடுபடும்.

    நண்பர் கோபால் என்ன எழுதப்போகிறார் என எனக்குத்தெரியாது.ஆனால அது தலைவர் புகழ் பாடும் எனபதில் எனக்கு ஐயமில்லை.

    மேலும் நான் ஏற்கனவே சொன்னதைப்போல நீங்கள் திறனையும் (potential ), செயல்பாட்டையும் (execution ) ஒன்றாக சேர்த்து மனக்கிலேசப்படுகிறீ ர்கள்..
    ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரி, நேற்று அங்காடி சென்று, ஐந்து கிலோ காய்கறி வாங்கி வந்தார் என்றால்,அவர் உலக அரங்கில் 70 கிலோ தூக்கி சாதனை படைத்தவர் அவரை எப்படி சிறுமை படுத்தலாம் என்பது போல.70 கிலோ அவரது திறன்.ஐந்து கிலோ அவர் execution
    தலைவர் த்ன் potential முழுவதும் வெளிகாட்டியிருக்கும் திரைப்படங்களை மட்டும் நாம் உலகதிற்கு அறிமுகம் செய்வது போதுமானது
    அதை அவர்கள் பாணியில் ஒப்பீ டு செய்வது இன்னும் சால சிறந்தது.

    எனவே முடிவாக கோபால் என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இது என் வேண்டுகோள் மட்டுமே

    நண்பர் கோபாலிற்கும் ஒரு வேண்டுகோள்,விருந்தில் ஆவக்காய் ஊறுகாயும்,கோங்குரா துவையலும் மிக குறைவாகவே பரிமாறுங்கள்

    முடிவாக நீங்கள் இருவரும் எதையும் கேளாது உங்கள் natural game தான் ஆடப்போகிறோம் என முடிவெடுத்தால்......

    எனக்கு ஒரு பெவிலியன் terrace complimentary ticket ஆவது அனுப்பிவையுங்கள்.

    வேறு வழி?

  5. #2354
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    டியர் கண்பத் சார்,
    தங்களுக்கும் கோபாலுக்கும் உள்ள understanding பற்றி நான் எதுவும் சொல்ல வில்லை. அவரைப் பற்றிய என்னுடைய understanding தவறாக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். அவர் மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்து ஒப்பிப்பது போல் இல்லாமல் அவராகவே எழத வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

    மேலும் நான் ஏற்கனவே சொன்னதைப்போல நீங்கள் திறனையும் (potential ), செயல்பாட்டையும் (execution ) ஒன்றாக சேர்த்து மனக்கிலேசப்படுகிறீ ர்கள்..
    ஒலிம்பிக் வீராங்கனை மல்லேஸ்வரி, நேற்று அங்காடி சென்று, ஐந்து கிலோ காய்கறி வாங்கி வந்தார் என்றால்,அவர் உலக அரங்கில் 70 கிலோ தூக்கி சாதனை படைத்தவர் அவரை எப்படி சிறுமை படுத்தலாம் என்பது போல.70 கிலோ அவரது திறன்.ஐந்து கிலோ அவர் execution
    தலைவர் த்ன் potential முழுவதும் வெளிகாட்டியிருக்கும் திரைப்படங்களை மட்டும் நாம் உலகதிற்கு அறிமுகம் செய்வது போதுமானது
    அதை அவர்கள் பாணியில் ஒப்பீ டு செய்வது இன்னும் சால சிறந்தது.
    This is not a question of potential or its execution. நடிகர் திலகத்தைப் பொறுத்த வரை அவர் 70 கிலோ என்பதற்காக ஒரு மாதிரியும் 5 கிலோ என்பதற்காக ஒரு மாதிரியும் execution செய்பவரில்லை. அனைத்திற்கும் ஒரே approach தான், அதில் sincerity and honesty இருக்கும். இங்கு முதலில் தெளிவாக வேண்டியது அவருடைய நடிப்பைப் பற்றி எழுதப் போகிறோமா அல்லது அவருடைய படங்களைப் பற்றியா என்பது. அவருடைய நடிப்பு என்பது உண்மையானால் அதில் படம் இரண்டாம் பட்சம் அல்லது அதற்கும் கீழே போய் விடும். இல்லை, குறிப்பிட்டு சில படங்களைத் தேர்ந்தெடுப்பதானால் அப்போது அங்கே நடிப்பினைப் பற்றிய ஆய்வு பின் தள்ளப் பட்டு படத்தின் அடிப்படையில் ஒரு biased approach வந்து விடும். இது தான் இது வரையில் திரு கோபாலின் பார்வையில் இருப்பதாக எனக்குத் தெரிகிறது. PRE DETERMINED ANALYSIS AND APPROACH அடிப்படையில் அமையுமானால் இதில் Straightforwardness இருக்க வாய்ப்பில்லை. அவருடைய நடிப்பின் அடிப்படையில் தான் இந்த ஆய்வு இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது.

    இந்த அடிப்படையில் திரு கோபால் தன் ஆய்வை அமைத்துக் கொண்டால் நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல்லாக விளங்கும். அவ்வாறு இல்லாமல், தன்னுடைய சுய விருப்பு வெறுப்பின் அடிப்படையில் அவருடைய ஆய்வை அவர் வடிவமைத்துக் கொண்டால் அங்கே நிச்சயம் நடிகர் திலகம் பின்னுக்குத் தள்ளப் படுவார் என்பதே நடக்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே எனக்கு இருக்கும் ஒரு ஐயப்பாடு இது தான்

    கோபாலின் ஆய்விற்கு அடிப்படையாக இருக்கப் போவது நடிகர் திலகத்தின் படங்களா அல்லது அவருடைய நடிப்பா..

    There is no question of neutrality here. இரண்டுமே என்கிற கேள்விக்கே இடமில்லை ... நான் ஏற்கெனவே பல முறை கூறியுள்ளது போல் குப்பைப் படமாக இருந்தாலும் கூட அவரது நடிப்பில் நுணுக்கமான பல விஷயங்கள் ஆராயப் பட வேண்டியவை உள்ளன. அவருடைய நடிப்பை மட்டுமே என்கிற அடிப்படையில் இருந்தால் தான் அங்கே நேர்மையான ஆய்விற்கு இடமிருக்கும்.

    I am going to play my natural game only.
    Last edited by RAGHAVENDRA; 29th March 2013 at 09:10 AM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2355
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    கண்பட்/ராகவேந்தர் சார்,
    உங்கள் வழிகாட்டுதல்களுக்கு நன்றி. நான் பிறந்ததிலிருந்தே,யார் பேச்சையும் கேட்காததனால்தான், பெற்றோருக்கு நல்ல பிள்ளையாகவும், ஆசிரியருக்கு நல்ல மாணவனாகவும், நிறுவனங்களுக்கு நல்ல அதிகாரியாகவும் இருந்திருக்கிறேன். இப்போது, என்னுடைய தெய்வத்திற்கு நல்ல பக்தனாகவும் இதுவரை இருந்தது போல்,இனிமேலும் இருக்க விரும்புகிறேன். மண்டபம் எல்லாம் சீண்டும் வேலை. சக கீழ் மட்ட ஊழியர்களிடம் உபயோகிக்க வேண்டிய தந்திரம்.
    Last edited by Gopal.s; 29th March 2013 at 01:22 PM.

  7. #2356
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-3

    Stanilavski//Strasberg school.

    முக்கியமாக எல்லோராலும் பேச படும் "Method Acting" என்ற புகழ் பெற்ற நடிப்பு பள்ளியாகும்.சுருங்க சொன்னால் "உன் பாத்திரமே நீயானால் எப்படி உணர்வாய் " என்ற முறையில் நடிப்பை செங்கல் செங்கலாய் வீடு கட்டுவது போல் அணுக வேண்டும்.ஆனால் அத்தைனையும் உன் சொந்த செங்கலாக இருக்க வேண்டும்.இரவல் கூடவே கூடாது.

    ஒரு கதை கருவின் இயங்கு சக்தி என்னவென்று கண்டு அதனை "super Objective" என்று கொண்டு பிறகு அதனை உதிரி உதிரி ஆக Script வடிவத்தில் பிரித்து,அந்த பாத்திரத்தின் முக்கிய நோக்கமென்ன,அது எதனை நோக்கி பயணிக்கிறது அதற்கு தடைகளென்ன , உதவிகள் என்ன, அதை அணுக வேண்டிய முறையென்ன, அது செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அதன் பின்னணி என்ன, நடப்பு நிலை என்ன, எதிர் காலம் என்ன, என்று கண்டு அதனை "Super Objective" உடன் வரி வரியாக இணைவு செய்து ஒருங்கிணைக்க வேண்டும்.பிறகு, "Sense Memory" என்ற தங்கள் சொந்த நினைவு சார் உணர்வுகளின் மூலம் அந்த பாத்திரத்தின் தன்மைகள்,உணர்ச்சி வெளிப்பாட்டை super -impose செய்ய வேண்டும். இதில் "Realistic Approach" என்பது இன்றியமையாதது.உணர்வுகளை போலி செய்தல்(Faking of Emotion) அறவே தவிர்க்க பட வேண்டும்.பிறகு அந்த கதாபாத்திரம் எப்படியெல்லாம் நடக்க,பேச,நினைக்க,பாவிக்க,என்று முன்முடிவு செய்து,அதனை அவற்றின் mannerism சார்ந்த விஷயங்களை நிர்ணயித்து, கொண்டு வெளியிட பழக வேண்டும்.இவையெல்லாம்,"Sub Objective" and "Super Objective"மற்றும் சக பாத்திரங்களுடன் ஒருங்கிணைக்க பட வேண்டும்.இதன் மூலம் அந்த பாத்திரம் வாழ வேண்டிய முறை முன்-நிர்ணயம் செய்ய பட்டு விடும்.

    இந்த முறை நடிகர்களில் குறிப்பிட வேண்டிய முக்கியமான பிரபலங்கள்-Marlon Brando,Gregory Peck.

    நிறைகள்-இந்த முறையில் ஒரு வலுவான சமகால கதையை ,உண்மைக்கு அருகில் வரும் வலுவான கதாபாத்திர வார்ப்புகளால் மெருகேற்றலாம். Oscar விருது வென்ற நிறைய நடிகர்கள் இந்த வகை பள்ளியை பின் பற்றயவர்களே.ஒரு சிறந்த இயக்கனரின் வலுவான படைப்பு இவர்களின் பங்களிப்பில் மெருகேறும்.(உறுத்தல் இன்றி துருத்தி தெரியாமல்)
    முக்கியமாக Limited period ,biographical ,contemporary commoner பாத்திரங்களுக்கு ,இதை விட சிறந்த முறை கிடையாது.

    குறைகள்- முன் முடிவு செய்ய பட்டு நடிப்பு execute செய்ய படும் இந்த வகை நடிப்பில் ,சோர்வும்,staleness உம் தெரிய வாய்ப்புள்ளது.Energy level குறைவாக தேவை படும்,evenly paced (poised ?) பாத்திரங்களுக்கே இவ்வகை நடிப்பு உதவும்.இந்த வகை நடிப்பில் நடிகர் கூடு விட்டு கூடு மாறும் அதிசயம் நிகழ வாய்ப்பே இல்லை.பல பாத்திரங்கள் ஏற்று நடித்தாலும், நடிகரின் உண்மையான உள்ளணர்வு,தேக்க உணர்ச்சிகள் சார்ந்தே இயங்குவதால், எந்த மாதிரி வித விதமான subject கொண்ட படங்களில் நடித்தாலும் ,அந்த பாத்திரங்களுக்கு அவரவர்கள் இயல்பு கொண்டே பொருத்தி கொள்ள முடியும்."Sense Memory"அடிப்படையில் பாத்திரத்தை அணுகும் போது வெவ் வேறு காலகட்டங்களுக்கு (ஆதி காலம்,இடைக்காலம்,வேறு பட்ட கலாசார சூழ்நிலைகள் )அந்த பாத்திரங்களின் period related behaviour &mind -set ஆகியவற்றில் ஒரு contemporary தன்மை வருவது தவிர்க்க முடியாதது. இவர்கள் தண்டவாளத்தில் பயணிக்கும் ரயில் வண்டி போன்றவர்களே.

    நடிகர்திலகம் நடித்த இந்த வகை நடிப்பு மிகும் படங்கள்-அந்த நாள்,மக்களை பெற்ற மகராசி,தெய்வ பிறவி,பாக பிரிவினை,இரும்பு திரை,பாலும் பழமும்,கப்பலோட்டிய தமிழன்,பார்த்தால் பசி தீரும்,இருவர் உள்ளம்,மோட்டார் சுந்தரம் பிள்ளை,தில்லானா மோகனாம்பாள்,உயர்ந்த மனிதன்,ராஜபார்ட் ரங்கதுரை ,தீபம் ,துணை,முதல் மரியாதை,தேவர் மகன் போன்ற படங்களாகும்.

    -----to be continued .
    Last edited by Gopal.s; 1st April 2013 at 08:15 AM.

  8. #2357
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-4

    Meisner School.


    இந்த முறைக்கு முன்னோடியானவர் Stanislavski ஆகவே இருந்தாலும்,இந்த முறையில் முன் தீர்மானத்துடன் "Sense Memory"அடிப்படையில் நடிப்பது தவிர்க்க பட்டது.அந்த பாத்திரங்கள் பகல் கனவு காணும் உணர்வுடன்,அந்த கண நேர உணர்வுகளின் துடிப்புடன் ,நடிப்பை வெளிபடுத்த வேண்டும்.வசனங்களை கூட எந்த ஒரு modulation இன்றி flat ஆகவே மனபாடம் செய்ய இந்த வகை பள்ளியை சேர்ந்த நடிகர்கள் பணிக்க படுவார்கள். அந்தந்த கண நேர சாத்தியங்களுடன்,சக பாத்திரங்களுடன் உணர்ச்சி மிகு வெளியீட்டில் உள்ள energy level,power , "method acting" முறையை விட சிறந்ததாக கருத படுகிறது.

    இந்த வகை நடிப்பில் பயின்றவர்கள்-Dustin Hoffman,Steve Mcqueen,Alpacino,Tom Cruise,Diana Keaton,Sandra bullock போன்றவர்களாகும்.

    நிறைகள்- Surprise yourself to surprise the audience என்ற வகையில் spontaneity கிடைக்கும். சில வலுவான தனி காட்சியமைப்புகள் இந்த வகை நடிப்பின் மூலம் ,நல்ல நடிகர்களால் ,மேலும் வலுப்படும் சாத்தியங்கள் அதிகம்.இந்த வகை நடிப்பில் சோர்வகன்ற புத்துணர்ச்சியுடன் energy level high ஆக இருக்கும்.

    குறைகள்-பாத்திர வார்ப்பில் மிகை உணர்ச்சியால்,inconsistency வர வாய்ப்புண்டு.நிறைய re-takes தேவை படலாம்.நடிப்பவர்கள் அன்றைய மனநிலை காட்சிகளில் பிரதிபலித்து காட்சியின் tone கெடும் வாய்ப்பு அதிகம்.(when you cant get call sheet again from the actor/actors in indian situation )

    நடிகர்திலகத்தின் இந்த வகை படங்கள்-முதல் தேதி,ரங்கோன் ராதா,அன்னையின் ஆணை,படிக்காத மேதை,பாவ மனிப்பு,பாச மலர்,படித்தால் மட்டும் போதுமா,பார் மகளே பார்,திருவருட்செல்வர்(அப்பர்),வியட்நாம் வீடு,கெளரவம்(ரஜினி காந்த்).

    -----to be continued .
    Last edited by Gopal.s; 1st April 2013 at 08:13 AM.

  9. #2358
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-5

    Stella Adler School

    இந்த பள்ளி எல்லாவற்றிலும் largeness வேண்டியது.உடல் மொழியில், உடலில்,குரலில், பாணியில் எல்லாவற்றிலுமே.மிகையான energy level கொண்டு ,larger than life (சராசரி வாழ்வினும் மிக மேம்பட்ட அல்லது அந்நிய பட்ட)பாத்திரங்களில்,மிகை உணர்வுகள்,தோரணைகள்,பாவங்கள்,உடல் மொழி கொண்டு,போலி செய்த புலன் சார்ந்த உணர்வுகளையும் கலந்து(faking the emotion ),மேடைக்கு மட்டுமே உண்மையாகவும்,அந்த சூழ்நிலை புரிந்து,அபரிமித கற்பனை அடிப்படையில் நடிப்பதே இந்த பள்ளியாகும்.

    Acting is doing -You have to be larger in all aspect -Strong body ,voice கொண்டு,actors should never feel small ,they should give bigger meaning to the text with sense of epic என்று போதிக்கும் பள்ளியாகும்.

    இவர் stanislavski யின் சிஷ்யராக இருந்தும் ,நேர் எதிர் நிலைப்பாடு கொண்ட நடிப்பு கலையை பயிற்றுவித்தார்.

    இந்த முறை நடிப்பு பள்ளி பிரபல மாணவர்கள் -Robert De Niro ,Antonio Banderas ,Warren Beaty முதலியோர்.

    நிறைகள்- சரித்திர,புராண, அமானுஷ்ய,மாயா-ஜால,futuristic ,Science fiction போன்ற larger than life பாத்திரங்களுக்கும்,shakespere ,கம்பன் போன்ற காவிய பாத்திரங்களுக்கும் ,பொதுவாக நம்மிடையே மிக வேறு பட்ட கதா பாத்திரங்களுக்கும் இதை விட சிறப்பான பயிற்சி முறை கிடையாது.

    குறைகள்-இந்த வகை நடிப்பு சம கால நடப்பு பாத்திரங்களுக்கு பொருந்தாது.realism சார்ந்த படங்களுக்கு அறவே பொருந்தாது.இந்த வகை நடிப்பில் பார்வையாளர்கள் அந்நிய படும் சாத்திய கூறுகள் அதிகம்.பார்வையாளனுக்கும், காவியங்களில்,கவிதைகளில் பயிற்சி இருந்தால்தான் சுவைக்க முடியும்.

    நடிகர்திலகத்தின் படங்கள்-
    மனோகரா,வீர பாண்டிய கட்டபொம்மன்,கர்ணன்,திருவிளையாடல்,சரஸ்வதி சபதம்.

    ---to be continued.
    Last edited by Gopal.s; 30th March 2013 at 12:40 PM.

  10. #2359
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-6

    Oscar Wilde School

    An actor should have strange & Rare temperament to convert his own disposition on an imaginative level which was beyond the reach of hampering elements and demands of real life .

    ஒரு நடிகனின் வேலையே கவிஞன் மனதை பார்வையாளர்களிடம் பழுதில்லாமல் கொண்டு சேர்ப்பதே. ஒரு நடிப்பையோ ,நடிகனையோ,புற காரணிகளை,நடைமுறை உதாரணங்களை கொண்டு அளவிடவோ ,அடக்கவோ கூடாது.அவர்கள் எந்த ஒரு வாழும் மனிதனிலும் வேறு பட்டு மாறு பட்டவர்கள்.சமூகத்துக்கு, மகிழ்ச்சி கொடுப்பதுடன் சமூகம் செல்ல வேண்டிய திசையை தீர்மானிப்பவர்கள்.அவர்கள் யாருக்கும் எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.அவர்களின் தேவைகளை,அழகியலை,வெளிப்பாட்டை அவர்களே தீர்மானித்து,கதாபாத்திரம் என்ற முகமூடி வாயிலாக தங்களை வெளி காட்டுவார்கள்.சமூகத்தின் பார்வையை(அழகியல்,இயற்கையை ரசிப்பது உட்பட)கலைதான் தீர்மானிக்கிறது.realism உம் கலையும் எந்த காலத்திலும் இணைய முடியாது.ஒரு கலைஞனின் உள்ளுணர்வு சார்ந்து அவன் பார்வையில் interpret பண்ண படுவதே அழகுணர்ச்சி மிகு கலையாகும்.

    இந்த பள்ளியை சார்ந்த நடிகர்கள்-Laurence Olivier ,Spencer Tracy ,David garrick ,Richard Burbage ,Edmund Kean ,Olivier Martinez ஆகியோர்.

    நிறைகள்-பலதர பட்ட கற்பனை மிகுந்த கதாபாத்திரங்களை உருவாக இந்த பள்ளி கை கொடுக்கும்.ஒரு நடிகனின் கற்பனையை பிரதானமாக முன்னிறுத்தி,பல வேறு பட்ட மாறு பட்ட சராசரி வாழ்க்கையில் சந்திக்கவே இயலாத மனிதர்களை தன கற்பனையால் நடிகன் முன்னிறுத்த இந்த பள்ளி ஊக்குவிக்கிறது.

    குறைகள்-சமூகத்தை கீழ்நிலை படுத்தி,கலையை மேல் நிறுவுவதன் மூலம்,கலைக்கு ஒரு அந்நிய தன்மை அளிக்க இந்த பள்ளி வாய்ப்பளிக்கிறது.realism புறம் தள்ள படுவதால் சமகாலத்தில் ஒட்ட இயலாது.

    நடிகர்திலகத்தின் படங்கள்- பலே பாண்டியா,ஆண்டவன் கட்டளை,நவராத்திரி,எங்க ஊர் ராஜா,காவல் தெய்வம்,தெய்வ மகன்(விஜய்),ராமன் எத்தனை ராமனடி,பாபு.

    ----To be continued.
    Last edited by Gopal.s; 30th March 2013 at 01:32 PM.

  11. #2360
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    இந்தியாவின் ஒரே உலக அதிசயம்.-பாகம்-7

    Michael Chekhov School.


    இந்த வகையான நடிப்பு பள்ளியில் கற்பனை கலந்து,உளவியல் பார்வை கொண்ட அணுகுமுறையுடன் நடிக்க வேண்டும்.இந்த வகை நடிப்பில், imitate செய்யாமல் interpret செய்து நடிக்க வேண்டும்.அந்த பாத்திரத்துக்குள்ளும்,கதை கருக்குள்ளும்,ஒளிந்துள்ள மறை பொருளும் (Hidden meanings )பார்வையாளர்களுக்கு ஒரு வடிவமாக்கி ,அழகு நேர்த்தியுடனும், creativity யுடனும் கொடுக்க பட வேண்டும்.கதா பாத்திரங்களின் உண்மை நிலையறிந்து,அதன் தேவைகளையும்,விருப்பங்களையும் சரியான உடல் மொழி கொண்ட gesture மூலம்,கை-கால்கள் மூலமும் வெளிபடுத்த பட வேண்டும்.இந்த வகை நடிப்பில் முக்கியமானது subtle /sudden changes in tempo ,body position மற்றும் சூழ்நிலை சார்ந்த உணர்வு நிலையில் சந்தோஷம்,துக்கம்,அமைதி,பரபரப்பு,பயம்,anxiety ,புதிர் நிலை,எதிர் நிலை,தீர்மானமற்ற நிலை,சூன்ய நிலை எல்லாவற்றையும் கலப்பு வெளியீடாக,monotony தவிர்த்த permutation combination கொண்டு உளவியல் பார்வையில் வெளியிட வேண்டும்.

    இந்த வகை நடிப்பு பள்ளியில் பயின்ற பிரபலங்கள்-Anthony Quinn ,Anthony Hopkins ,Johnny depp ,Jack Nicholson போன்ற பலர்.

    நிறைகள்-மிக complicate ஆன உளவியல் பார்வை கொண்ட படங்கள்,psychologically disturbed பாத்திரங்கள்,குழப்பமான மன நிலை கொண்ட பாத்திரங்கள் ஆகியவற்றுக்கு மிக பொருந்தும் பாணி. மிக புத்திசாலியான நடிகர்களின் நடிப்புக்கு ஒரு gloss &Depth கொடுத்து அவர்களை வேறு தளத்திற்கே உயர்த்தும் வலிமை கொண்ட பள்ளி.

    குறைகள்-Hang -over அதிக நாட்கள் நீடித்து, நடிகர்களின் மனநிலையை சீர்குலைக்கும் சாத்தியகூறுகள் கொண்டது. சராசரி வேடங்களில் இந்த சாயல் வந்தால் சிறிது மிகை கலந்து அன்னியமாக (Out of Context )தோன்றும்.

    நடிகர்திலகத்தின் இந்த பள்ளியை ஒத்த நடிப்பு கொண்ட படங்கள்-உத்தம புத்திரன்(விக்ரமன்),ஆலய மணி,புதிய பறவை,தெய்வ மகன்(கண்ணன்),எங்கிருந்தோ வந்தாள்,ஞான ஒளி ,ரோஜாவின் ராஜா.

    ---To be Continued.
    Last edited by Gopal.s; 30th March 2013 at 05:20 PM.

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •