Page 233 of 401 FirstFirst ... 133183223231232233234235243283333 ... LastLast
Results 2,321 to 2,330 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2321
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    மிமிக்ரி என்ற பெயரில் பல கலைஞர்கள் நடிகர் திலகத்தைப் போல் திரைப்பட வசனங்களைப் பேசி பெருமை தேடுவது நடைமுறையில் இருந்து வருவது தான். ஆனால் சிலர் இதனை ஒரு காரணமாகக் கொண்டு சகட்டு மேனிக்கு நடிகர் திலகத்தைக் கிண்டலும் கேலியும் பேசி வருவது அவ்வப்போது நடந்து வருகிறது. குறிப்பாக நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் சமீபத்தில் ஒரு படத்தில் [கில்லாடி என அறிகிறோம் ] அப்பர் வேடம் தரித்து கொடுத்துள்ள போஸ் பல சிவாஜி ரசிகர்களைக் கொதிப்படைய செய்துள்ளதாகத் தெரிகிறது. இன்னும் அந்த போஸ்டரையோ அதன் நிழற்படத்தையோ இன்னும் பார்க்க வில்லை. என்றாலும் இது போல் விவேக் அவர்கள் முன்னரே நடிகர் திலகத்தை கிண்டல் செய்வது போல் வந்துள்ளதால் நம் ரசிகர்களின் கோபத்தில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி போஸ்டரைப் பார்த்தவர்கள் உடனடியாக அவரையோ அல்லது அவருடைய உதவியாளரையோ தொடர்பு கொண்டு நமது கண்டனத்தை ஜனநாயக முறையில் நாகரீகமாக வெளிப்படுத்த வேண்டுகிறேன்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

  3. #2322
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    இன்றைய விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடல் கேட்க நேர்ந்தது. பாடலின் பல்லவி... வாடா வாடா பையா ... இதனுள்ளே போக வேண்டாம். ஆனால் அது ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு தொகையறாவைப் பாடினார்கள் . அப்படியே திடுக்கிட்டு விட்டேன். மெல்லிசை மன்னர் இசையமைத்து ஒரு காலத்தில் பட்டி தொட்டி எங்கும் திரையரங்குகளில் எம்.ஜி.ஆர். உடல் நலம் பெற வேண்டி இசைக்கப் பட்ட இறைவா உன் மாளிகையில் என்று தொடங்கும் தொகையறா ... அந்த மெட்டில் ஏதேதோ வார்த்தைகளை இட்டு நிரப்பி ஒரு வழி ஆக்கி விட்டிருந்தார்கள். அது எந்தப் படத்தில் இடம் பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் மனம் மிகவும் வேதனைப் பட்டது உண்மை. சுசீலா அவர்களின் குரலில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் உருகிப் போய் விடுவார்கள். அந்தக் கால கட்டத்தில் நமது சாந்தி திரையரங்கிலும் இப்பாடல் ஒளிபரபப் பட்டது. இப்படிப் பட்ட மிகச் சிறப்பான பாடலை இப்படி நையாண்டி கிண்டல் கேலி என சிதைப்பது ஒரு படைப்பாளியை அவமானப் படுத்துவது போலாகும்.

    சிகரங்களைத் தொட்ட கலைஞர்கள் ஆண்ட தமிழ்த் திரையுலகில் இப்படித் தகரங்களை உலா வர விடுவது நியாயமா ... ரசிகர்கள் வரவேற்புத் தருவதால் இப்படி செய்கிறோம் என்கிற ஒப்புக்கு சப்பான விளக்கம் தருவார்கள்.

    மக்களே நீங்கள் வரவேற்கிறீர்களா ... இந்த மாதிரி பாடல்களையும் நகைச்சுவை என்ற பெயரில் விவேக் போன்றவர்கள் சாதனைகளைப் புரிந்த நடிகர் திலகம் போன்ற உன்னதக் கலைஞர்களைக் கிண்டல் செய்வதையும் உண்மையிலேயே மக்கள் வரவேற்கிறார்களா ....

    இதற்கெல்லாம் விடையளிக்க வேண்டியவர்கள் இக்கால சினிமாவின் ரசிகர்களே ...
    Last edited by RAGHAVENDRA; 26th March 2013 at 10:25 PM.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  4. #2323
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    நடிகர்திலகத்துடன் பல படங்களில் உடன் நடித்து, அவர் அன்பை பெற்றவரும், மற்றும் அவரின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், நண்பரில் தலை சிறந்தவருமான பீம்சிங் அவர்களின் துணைவியாருமான சுகுமாரி அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  5. #2324
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    Tomorrow is the 45th Birth Day of 'C.B.I.Office' Mr. Rajan.

    "THANGA SURANGAM" (28.03.1969 - 28.03.2013)

    The first BOND movie of our Nadigarthilagam. The third colour movie in social themes of NT.

    Our hubbers / fans, who are all having the details of the movie in form of magazines, paper cuttings, paper advertisements and other particulars about box-office, number of days run etc.... kindly publish them here, to make glorious to the movie.

    Smart and cute NT with slim body and original hairstyle.

    Two beauty queens Bharathi and Vennira Aadai Nirmala.

    The only movie mellisai mannar TKR done with superb songs.

    Ramanna's return back to NT's side after 1961.

  6. #2325
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vivek has been doing this type of acting quite a long time.
    What to do he don't have talent to show case his skill. This
    time we must teach a lesson to that idiot in whatever form
    we have in our resources.

  7. #2326
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    ராஜ ராஜ சோழன்.
    நண்பர் ரகுராம் அவர்களின் ஒரு அருமையான பதிவையும் அதைத்தொடர்ந்த நண்பர் ராகவேந்தர் அவர்களின் விளக்கமும், அதற்கு நண்பர் கோபால் அவர்களின் பதிலையும் படித்து மகிழ்ந்தேன்.
    மிக பிரம்மாணடமான முறையில் தயாரிக்கப்பட்டு,மிகவும் எதிர்பார்ப்போடு வெளியிடப்பட்ட இந்த காவியம் தோல்வி அடையவில்லை; ஆனால் வெற்றி வாய்ப்பை இழந்தது.
    இதற்கு காரணங்கள் எதுவாய் இருப்பினும் முக்கியமாக கருதப்படுவது.

    அந்த காலகட்டத்தில் சரித்திர படங்களுக்கு குறைந்து வந்த மவுசு

    தலைவரின் சற்றே மிகையான நடிப்பு.

    அப்பொழுது எழுத்தாளர் சுஜாதா இந்த படத்தை பற்றிய விமசரினத்தில்
    "ராஜ ராஜ சோழன்,சிவாஜி கணேசனாக நடித்துள்ளார்!" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

    ஆனால் உண்மை அதுவா?இல்லவே இல்லை.

    அடக்கம் என்ற ஒரு சொல்லை நாம் தவறாக பொருள் கொண்டு அதை பயன் படுத்துவ து போல வேறு எந்த சொல்லையும் செய்திருக்க மாட்டோம்.பரமசிவன் முதல் பாபநாசம் சிவன் வரை அடக்கமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இங்கு ஒரு எழுதப்படாத விதி.

    மேலும் அடக்கத்தில் துவங்கி கம்பீரம்,பெருமிதம்,கர்வம் ,மமதை,திமிர்,ஆணவம்,அகம்பாவம், அகங்காரம் என்று அழிவு எனும் டெர்மினசை நோக்கி பயணிக்கும் ஒரு மானுடனின் வெவேறு மனோபாவத்தை அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சரியான வகையில் நடித்துக்காட்டிய ஒரே உலகமகா நடிகனுக்கு, நாம் கொடுத்த பட்டம் அவர் சில படங்களில் அடக்கமாக நடிக்க தவறி விட்டார்.

    என்னய்யா அடக்கம்.பெரிய அடக்கம்!!

    தஞ்சை பெரிய கோவிலைப்போய் ஒரு முறை பாருங்கள் கட்டி ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது.பார்க்கும் நமக்கே அடக்கம் நீங்கி கர்வம் தலை எடுக்கும் அப்படி இருக்கையில் அதை திட்டமிட்டு கட்டிய அந்த பேரரசன் தலையில் கம்பளி கட்டிக்கொண்டு இருமிக்கொண்டா இருந்திருப்பார்!ஒரு சிம்மம் போல அல்லவா இருந்திருப்பார்.கண்களில் என்ன ஒரு கம்பீரம் பெருமிதம் இருந்திருக்கும் அதை ஒரு மகா கலைஞன் நடித்து நம் கண் முன்னே கொண்டு வந்தால் அது தவறா?
    நம் குறை ரசனையை வைத்துக்கொண்டு அதை மிகை நடிப்பு என்றா சொல்வது?

    சரி திருவிளையாடல் படம்.தலைவர் சிவன்..முதலில் தன மகன் முருகனுடன் பேசும் போ து என்ன ஒரு பெருமிதம்.கீழே பூமிக்கு வந்து தருமியுடன் பேசும்போது கொஞ்சமாவது அது (கர்வம்) தெரியுமா?

    "நாடகத்தையே நடத்துபவன் அதில் நடிக்க முடியுமா அப்பா?" என்று ஒரு குழை வு குழைவாரே!
    அது அடக்கத்தின் எல்லை அல்லவா!!

    சிறிது நேரம் கழித்து அரசவையில் "கூறும்! கூறும் !!கூறிப்பாரும் !!"என்று உறுமுவாரே ..அதில் எக்காளமிடும் ஆணவம் நக்கீரனை சோதிக்க அல்லவா? சரி மமதை மிகுந்த ஹேமநாத பாகவதர் முன் வருகிறார்.அங்கு இந்த கர்வம் எங்கு போயிற்று?அதே சிவன்தானே?ஒரு மிக சாதாரணமான் ஆடு மாடு மேய்ப்பவனாக ஒரு பாடலை பாடி அந்த பாகவதரை ஓடச்செய்வார் அல்லவா?

    இதன் பொருள்..

    தருமி அறியாமையின் வடிவம்..அவனுக்கு அன்பும் ஆதரவும் போதும்
    நக்கீரன் அறிவு மற்றும் பக்தியின் வடிவம் அதனால் அவரை சோதித்து ஆட்கொள்ள ஆணவத்தை ஒரு ஆயுதமாக எடுக்கும் நேர்த்தி.ஹேமநாதனோ திறமை இருப்பினும், அகங்காரம் மிக்கவன்; உன்னை அடக்க என் சுண்டு விரல் நுனி கூட
    தேவையில்லை என்பது போல ஒரு அலட்சியத்தின் மூலம் அவன் அகந்தையை அழிக்கும் நேர்த்தி.
    இவை எல்லாம் மிகை நடிப்பா?

    அதே வெள்ளையர்கள் தான்

    வீரபாண்டிய கட்டபொம்மனில் என்ன ஒரு வேகம் வீரம் இருக்கும்!"உனக்கு எதற்கடா கொடுக்க வேண்டும் வரி ?" என்று முழங்கும்போது அதிலிருப்பது தார்மீக ஆணவம் எனபது புரியுமல்லவா?அதே வெள்ளையனை கப்பலோட்டிய தமிழனில்
    சாதுர்யமாக எதிர்கொள்ளும்போது கம்பீரம்,பெருமிதம் என்று இரு எல்லைகளோடு நிறுத்தி விடுவாரே அவருக்கா தெரியாது, எங்கே,எதை,எப்படி, நிறுத்தவேண்டும் என்பது?

    அடுத்து பாசமலர் மற்றும் பார் மகளே பார்.

    முன்னதில் உழைத்து பணக்காரன் ஆகி தன பால்ய சிநேகிதன் தனக்கு எதிராக செயல்படுவதைக்கண்டு குமுறி அவனிடம் தன ஆணவத்தை காண்பிப்பது ஒரு நிலை.

    இரண்டாவதில் பிறவி செல்வந்தன்;பிறவி கர்வி..தன நண்பன் தன சொல் கேளாது வியாபரத்தில் பணம் இழந்தபின் அவனை ஒதுக்கும் ஒரு அகங்காரம்.இது ஒரு நிலை.

    அடுத்து தில்லானா மோகனாம்பாள்.இதில் முழுக்க முழுக்க வித்வத் கர்வம்.ஒரு கலைஞனுக்கு அது இருந்தே ஆகவேண்டும்!
    இல்லாமல் இருப்பது மிக கொடுமை..சற்றே விளக்குகிறேன்..

    ஒரு நேர்முகத்தில் ஜெயகாந்தனிடம் கேட்கிறார்கள்..உங்கள் ஆதர்ச எழுத்தாளர் யாரென.அவர் உடனே சொல்கிறார் "பாரதியார்! அவர்எழுத்துக்கள் தான் என்னை உருவாக்கின" என.அடுத்த கேள்வி "அப்படி அவர் எழுதாதிருந்திருந்தால்?
    உடனே பதில் "அதனாலென்ன அனைத்தையும் நான் எழுதியிருப்பேன்!"
    சொல்லுங்கள் இதில் என்ன ஒரு தன்னம்பிக்கை! வித்யா கர்வம் ஜொலிக்கிறது !!இது குற்றமா?

    நேர்மாறாக ஒரு சானலில் "மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும்... அனல் கொண்டு வெடிக்கும்" என்ற சுத்ததன்யாசி ராக தேவகானத்தில் இரண்டாவது "வெடிக்கும்" போது விழும் ஒரு அசாத்திய சங்கதியை கேட்டு
    கிறுகிறுத்துப்போய் அப்படியே கிறங்கி கிடந்தால் பாடல் முடிந்து,இதற்கு இசையமைத்த சக்ரவர்த்தி அடக்க ஒடுக்கமாக ஒரு ஆணவமே உருவான குண்டனுக்கு பேட்டி அளிப்பது தொடர்கிறது..'பாடல் நன்றாக உள்ளதே' என எதோ புதிதாக கண்டுபிடித்ததை போல அவன் சொல்ல, இந்த அரசர் கூனி குறுகி "மிக நன்றி என்னை சிறு வயதில் என் அன்னை, நான் எதற்கும் லாயக்கில்லை என வீட்டை விட்டே துரத்தி விட்டாள் நானும் வெளியே வந்து மிகவும் கஷ்டப்பட்டேன் திரை
    அரங்குகளில் இடைவேளை போது பக்கோடா எல்லாம் கூட விற்றிருக்கிறேன்" என்று தேவையே இல்லாமல்
    தன் "பய data" வை எடுத்து விடுவார்.சொல்லுங்கள் நமக்கு ரத்தம் கொதிக்காது?இந்த அடக்கம் தேவையா?

    ஆனால் இத்தனையிலும் நான் பெரும் பேராக கருதுவது... நல்ல வேளையாக தலைவர் ஒரு ஆண் மகனாக பிறந்தது தான் அவரே இத்தனை திறமையுடன் ஒரு பெண்ணாக பிறந்திருந்தால் இந்த அடக்க பாணத்தை மேலும் வேகமாக அவர் மீது வீசி அவரை விஜயகுமாரியின் assistant ஆக ஆக்கியிருப்போம்.(அவர்தானே அடக்கத்தின் அரசி)
    கணவனை எதிர்த்து பேசும் பாத்திரங்கள்,
    திருமணமே வேண்டாம் என கன்னியாகவே ஒழுக்கத்துடன் வாழும்போது,
    முதிர்கன்னிப்பருவத்தில் காதல்வயப்படும் பாத்திரங்கள்,
    தாசி பாத்திரங்கள்,
    புதுமைபெண் பாத்திரங்கள்,

    அத்தனையும் அவர் நெருங்க முடியாமல் செய்திருப்போம்.
    ஏனெனில் இவை அனைத்தும் கர்வம் மிக்க பாத்திரங்கள் அல்லவா?

    இப்படிதான் இருக்கவேணும் பொம்பளை என்பது நம் தேசீய கீதம் அல்லவா?
    Last edited by Ganpat; 27th March 2013 at 03:36 PM.

  8. #2327
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Ganpat Sir,
    குழப்பத்தின் மொத்த உருவான பதிவு. புகழ்கிறீர் களா ?திட்டுகிறீர்களா? வெற்றி வாய்ப்பை அடைந்திருக்க வேண்டிய படமா? அல்லது சுமார் வெற்றியே போதும் என்கிறீர்களா? நடிகர் திலகம் ஒருவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற தொனியில் அமைந்த இந்த பதிவை உண்மையான ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.
    Last edited by Gopal.s; 27th March 2013 at 04:07 PM.

  9. #2328
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    Today Malai malar.

    Last edited by vasudevan31355; 27th March 2013 at 08:46 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  10. #2329
    Junior Member Devoted Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Ð*оÑÑиÑ
    Posts
    0
    Post Thanks / Like
    [QUOTE=Gopal,S.;1029599]Ganpat Sir,
    குழப்பத்தின் மொத்த உருவான பதிவு. புகழ்கிறீர் களா ?திட்டுகிறீர்களா? வெற்றி வாய்ப்பை அடைந்திருக்க வேண்டிய படமா? அல்லது சுமார் வெற்றியே போதும் என்கிறீர்களா? நடிகர் திலகம் ஒருவரே பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்ற தொனியில் அமைந்த இந்த பதிவை உண்மையான ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும்.[/QUOTE

    தலைவர் ரசிகர் குடும்பத்தில் ஒருவனாக, ஒரு ஓரமாய் அடக்கமாய் நின்றிட்டு , அண்ணன் புகழ் பாடும் அனைவர்க்கும் அன்பு காட்டி மகிழ்ந்து கொண்டிருந்த எனக்கு, ஒரு மேடை அமைத்து கொடுத்திட்டு,"தம்பி நீ எழுதிடு,பதிவாக இட்டிடு,பல பேர் புகழ, தலைவர் புகழ் பாடிடு" என இங்கு இரு கை கோர்த்து அழைத்திட்டு, வந்திட்டு, இருக்கை வழங்கி கெளரவித்திட்ட, மய்ய நண்பர்கள் மனம் மகிழ, சில பதிவுகளை போட்டிடுவது என் தலையாய கடமை என்று பணி செய்யும் என்னை,

    யாதொரு காரணமின்றி,விபீஷணனாக,கடிலனாக ,எட்டப்பனாக மனதில் உருவகம் செய்திட்டு மனம் போனபடி வசைபாடி மகிழும் என் அன்பு நண்பர் கோபாலிற்கு பதிலிட்டு, அவர் ஏதோ கோபத்தை என் மேல் காட்டிடுகிறாரோ என, எனக்கு இல்லாவிட்டாலும், என் நண்பர்கள் பலருக்கும் இங்கு,இந்நேரம் தோன்றிட்டிருக்கும், ஐயத்தை கோடிட்டு, காட்டிட்டு, அவரை வருந்திட செய்யும் எண்ணம் எனக்கு எள்ளளவும் இல்லை.

    அதே சமயம் அவர் பலவகையான இஸ்கிகளை மேற்கோளிட்டு, தலைவர் நடிப்பை ஒப்பிட்டு பதிவிட்ட ஒரு பதிவை, ஒன்றும் புரியாவிட்டாலும் பாராட்டி மகிழ்ந்திட்ட என்னை, அவர் மறந்திட்டிருந்தாலும், மற்ற நண்பர்கள் மறந்திட்டிருக்க மாட்டார்கள். மேலும் அந்த பதிவின் விரிவாக்கத்தை விரைவில் பதிவிட்டிடுவேன் என்று அவர் பகர்ந்து பல நாட்கள் பறந்து விட்ட நிலையையும் இங்கு பதிவிட்டு ,அவர் மனதை புண்படுத்தமாட்டேன் என்றும் சொல்லி நல்லதொரு தீர்ப்பை நண்பர்கள் நவில்ந்திடுவார்கள்எனும் நம்பிக்கையுடன் நகர்ந்து நிற்கிறேன்.வணக்கம்
    Last edited by Ganpat; 27th March 2013 at 06:58 PM.

  11. #2330
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    பழம்பெரும் நடிகை திருமதி சுகுமாரி அவர்களின் மறைவுக்கு நம் கண்ணீர் அஞ்சலி.

    'பட்டிக்காடா பட்டணமா' திரைக் காவியத்தில் VKR அவர்களுடன் சுகுமாரி.

    Last edited by vasudevan31355; 27th March 2013 at 09:02 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •