Page 231 of 401 FirstFirst ... 131181221229230231232233241281331 ... LastLast
Results 2,301 to 2,310 of 4005

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part 10

  1. #2301
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    'Baharatha Vilas' climax scene dialogue (re-presented in 'copy & paste' method from our former hubber Saradha mam's Bharatha Vilas analysis, in previous part)...

    படத்தின் நடுவே வரும் 'இந்தியநாடு என் வீடு இந்தியன் என்பது என்பேரு... எல்லா மக்களும் என் உறவு எல்லோர் மொழியும் என் பேச்சு' என்ற பாடல் சும்மா சம்பிரதாயத்துக்காக பாடப்பட்ட பாடல் அல்ல, உண்மையிலேயே படம் மத, மொழி, மாநில நல்லிணக்கத்தை வலியுறுத்தும் படமே என்பதை உறுதிப்படுத்தும் அந்த கிளைமாக்ஸ்....

    மகளுடைய திருமணத்தின்போது, லட்ச ரூபாய் தட்டில் வைப்பதாக வாக்குறுதியளித்த கோபால் (நடிகர்திலகம்), தொழிலில் திடீரென ஏற்பட்ட சரிவினால் அதை நிறைவேற்ற முடியாமல் போக, சம்மந்தியும் சொந்தக்காரருமான ராஜவேலு, கோபம் கொண்டு திருமணத்தை நிறுத்தும் நிலைக்குப் போகும்போது உதவிக்கு வரும் நண்பர்கள், அவர்கள் பேசும் வசனங்கள்.....

    நாயுடு (எம்.ஆர்.ஆர்.வாசு): "கோபால், இதோ நான் முதல்முதலா கதை எழுதிகிடைச்ச இருபதாயிரம் ரூபாய் செக், இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திட்டா?. கடன்பட்டு கல்யாணம் பண்றோமேன்னு கவலைப்படாதே, எங்கப்பன் ஏழுமலையானே குபேரன்கிட்டே கடன் பட்டுத்தான் கல்யாணம் பண்ணினான். இந்த வாங்கிக்கோ".

    சிங் (மேஜர்): "கோபால், இதோ ரெண்டு லட்சரூபாய் பெறுமானமுள்ள என்னோட கடையின் உரிமைப்பத்திரம். இதை உன் சம்மந்திகிட்டே கொடுத்திடு. இந்த வீட்டுல வளர்ந்த அந்தப்பிள்ளை கண்கலங்கி நின்னா எங்களுக்கு ஒரு பிடி சோறு இறங்குமா? இல்லை நாங்கதான் மனுஷங்களா?"

    பாய் (வி.கே.ஆர்): "கோபால், இதோ என்பையன் பேருல நான் போட்டிருந்த இன்ஷூரன்ஸ் பாலிஸி. என்ன சம்மந்தி பார்க்கிறீங்க?. இந்த பாலிஸி செல்லும். ஏன்னா என்மகன் இப்போது உயிரோடு இல்லை. அதோடு, பேங்க்ல என் பெயரில இருக்கிற முப்பதாயிரம் ரூபாய்க்கும் இதுல 'செக்' போட்டு வச்சிருக்கேன். கோபால் மனுஷன்தான் பணத்தை படைச்சான், பணம் மனுஷனைப்படைக்கலை. ஜாம் ஜாம்னு உன்பொண்ணு கல்யாணத்தை நடத்து".

    ராஜவேலு (சம்மந்தி): "அப்புறம் என்ன, அதான் நண்பர்கள் உதவிக்கு வந்துட்டாங்களே. நீரடிச்சு நீர் விலகுமா என்ன?. சொந்தக்காரங்களுக்குள்ளே........" பேசிக்கொண்டே அவற்றை வாங்கப்போகும்போது..

    கோபால் (நடிகர்திலகம்): "ச்சீ கையை எடுய்யா. யாருய்யா சொந்தக்காரன்?. நீயா சொந்தக்காரன்?. இல்லை... இந்த தெலுங்கர், இந்த சீக்கியர், இந்த முஸ்லீம் இவங்கதான் என் சொந்தக்காரங்க. இனி ஜென்மத்துக்கும் உன் கூட சம்மந்தம் கிடையாது... போ வெளியே".

    வசனகர்த்தா, இயக்குனர், கதாபாத்திரங்கள் அனைவரும் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அந்த இடம் அபாரம்.

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

  3. #2302
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    ஆதிராம் சார்.

    தங்கள் உயர்ந்த பாராட்டிற்கு என் ஆழ்ந்த நன்றிகள். நீங்களும் மிக மிக அற்புதமாக பாரத விலாசின் பெருமைகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். மேஜரை விரட்ட நம்மவரும் வாசுவும் சேர்ந்து போடும் திட்டங்கள், கோட்டான்கள் போலக் கூவிக் கொள்வது என்று ஒரே நகைச்சுவைக் காட்சிகள் நம் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. ராஜபாண்டியன் கூட நல்ல ஹயிட் தான் அதனால்தான் இந்தப் படத்துக்கு வில்லனாக திருலோகசந்தர் அவரைத் தேர்ந்தெடுத்தாரோ என்னவோ! இந்த ராஜபாண்டியன்தான் தங்கப்பதக்கம் நாடகத்தில் தலைவருக்கு மகனாக நடித்தவர். (படத்தில் ஸ்ரீகாந்த் செய்த ரோல்). டாக்டர் சிவாவிலும் தொழுநோயாளியாக சிவாவின் அப்பாவாக வருவார். ஆனால் சிறுவயதிலேயே காலமாகி விட்டார். பாரத விலாஸ் பதிவுகளுக்கு மேலும் மெருகேற்றம் அளிக்கும் வகையில் எனது குருநாதர் சாரதா மேடம் அவர்களின் கட்டுரையின் முக்கிய ஒரு பகுதியை அதுவும் அட்டகாசமான வசனப் பகுதியை இங்கு மீண்டும் அளித்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள். ஒரு அருமையான தேச உணர்வை ஊட்டக்கூடிய நல்ல படத்திற்கு நம்மால் முடிந்த சேவையை இன்று செய்ய முடிந்ததே என்ற ஆத்ம திருப்தி பரிபூரணமாய் கிடைத்திருப்பதை என்னால் உணரமுடிகிறது. தாங்களும், ராகவேந்திரன் சாரும் இதே மன நிலையில் இருப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன். அருமையான தங்கள் நினைவலைகளுக்கு மீண்டும் எனது ஆத்மார்த்தமான நன்றிகள்.
    Last edited by vasudevan31355; 24th March 2013 at 06:52 PM.
    நடிகர் திலகமே தெய்வம்

  4. #2303
    Member Senior Hubber
    Join Date
    Jan 2008
    Location
    Saudi Arabia
    Posts
    32
    Post Thanks / Like
    From our Murali Srinivas sir's
    'Sivajiyin Saadhanai Sigarangal' series...... about Bharatha Vilas...

    முதன் முதலாக இந்திய அரசாங்கமே ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய சாதனை நடிகர் திலகத்தின் பாரத விலாஸ் மூலமாக அரங்கேறியது.

    இந்த படம் வெளியான நாள் - 24.03.1973

    'பாரத விலாஸ்' 100 நாட்களைக்கடந்து ஓடிய அரங்குகள்

    சென்னை - சாந்தி, கிரௌன்
    மதுரை - சென்ட்ரல்
    திருச்சி - பிரபாத்
    கோவை - சிவசக்தி
    சேலம் – பேலஸ்

  5. #2304
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பாரத விலாஸ் 55வது நாள் மற்றும் 100 வது நாள் விளம்பரங்கள் சற்றே பெரிய அளவில் இங்கே மீண்டும் நம் பார்வைக்கு



    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

  6. #2305
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    நடிகர் திலகமே தெய்வம்

  7. #2306
    Senior Member Diamond Hubber vasudevan31355's Avatar
    Join Date
    Apr 2011
    Posts
    517
    Post Thanks / Like
    மலேசியா வாசுதேவன் அவர்களின் பேட்டி. இந்து நாளிதழிலிருந்து.

    "The highest praise for me came from Sivaji Ganesan"

    http://www.hindu.com/2006/08/10/stor...1019190200.htm
    நடிகர் திலகமே தெய்வம்

  8. #2307
    Senior Member Devoted Hubber abkhlabhi's Avatar
    Join Date
    Feb 2005
    Location
    Bangalore
    Posts
    400
    Post Thanks / Like
    Quote Originally Posted by Gopal,S. View Post
    abhklabi சார்,
    குற்றம் கண்டு பிடித்து பேர் வாங்கும் புலவர். சுட்டும் விரலால் காட்டுகையில் மற்றும் மூன்று விரல்கள்- ராகவேந்தர் சாரை attack பண்ணுவது போன்ற இந்த பதிவை நான் ஆட்சேபிக்கிறேன். சொக்கலிங்கம் மீது, சோ மீது, என் மீது குற்றம் சொன்னவர் அவர்தான்.
    தனக்கு நேரும் போது கூக்குரலிடுகிறார்.கொஞ்சம் பழைய பதிவுகளை பாருங்கள் தலைகளே.


    நாகரிகம் கருதி நண்பரே என்றேன். நண்பர் நீங்கள் தான். ராகவேந்திர சார் அல்ல. அவரை attack பண்ணுவது போன்ற பதிவும் அல்ல .

    அவரை attack செய்வது போல் எழுதி இருந்தால், என்னை பற்றியும் பதிவு செய்திருப்பார் .

    நீங்கள் எழுதிருப்பது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டி விடுவது போல் இருக்கிறது . நீங்களே அவரை attack செய்துவிட்டு , இப்போது , நான் தான் அவரை attack பண்ணி பதிவு செய்வதாக குறுவது முற்றிலும் தவறு. ஆட்டை கடித்து மாட்டை மாட்டை கடித்த கதையாக இருக்கிறது உங்களுடைய பதிவு .

    மற்றவர் மனதை புண்படுத்தாமல் எழுதமுடியாத உங்களால் நண்பரே.

  9. #2308
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Mr Vasudevan, Mr Raghavendra & Mr Adiram Sir

    Excellent coverage of Bharatha Vilas. Remembered watched the movie
    with my mother at Shanthi Theatre during my childhood. We were regular visitor to Shanthi
    theatre for all the NT's movies .

  10. #2309
    Junior Member Seasoned Hubber
    Join Date
    Mar 2021
    Location
    Estonia
    Posts
    0
    Post Thanks / Like
    Watch Needhipathi Tomorrow at 7.30 pm in Murasu TV.
    Super Hit movie.

  11. #2310
    Senior Member Seasoned Hubber RAGHAVENDRA's Avatar
    Join Date
    Jan 2008
    Posts
    1,585
    Post Thanks / Like
    பல்வேறு தொலைக்காட்சிகளில் இந்த வாரம் நடிகர் திலகத்தின் திரைப்படங்களின் விவரம்.

    ஜீ தமிழ்
    29.03.2013 – 2 மணி – இரு மலர்கள்

    வசந்த் டிவி
    26.03.2013 – வா கண்ணா வா
    28.03.2013 – துணை
    31.03.2013 – ஞான ஒளி

    ராஜ் டிவி
    30.03.2013 – இரவு 10.30 மணி – மனோகரா
    31.03.2013 – இரவு 10.30 மணி – பந்த பாசம்

    ராஜ் டிஜிட்டல் ப்ளஸ்
    26.03.2013 – பகல் 1 மணி – திரிசூலம்
    30.03.2013 – பகல் 1 மணி – அவன் ஒரு சரித்திரம்
    27.03.2013 – பிற்பகல் 3.30 மணி – தங்கமலை ரகசியம்
    31.03.2013 – இரவு 8 மணி – தாய்க்கு ஒரு தாலாட்டு

    பாலிமர் டி.வி.
    29.03.2013 பிற்பகல் 2 மணி – பக்த துக்காராம்

    மெகா டி.வி.
    28.03.2013 – நண்பகல் 12 மணி – சித்ரா பௌர்ணமி

    மெகா 24
    30.03.2013 – பிற்பகல் 3 மணி – ராஜ பக்தி
    31.03.2013 – இரவு 7 மணி – தீபம்

    ஜெயா டிவி
    26.03.2013 – பிற்பகல் 1.30 மணி – சினிமா பைத்தியம்
    27.03.2013 – பிற்பகல் 1.30 மணி – குலமகள் ராதை

    ஜே மூவீஸ்
    31.03.2013 – காலை 6 மணி – ராமன் எத்தனை ராமனடி


    இந்த நிகழ்ச்சிகள் இணைய தளங்களிலிருந்து தொகுக்கப் பட்டுள்ளன. இவற்றை அந்தந்த நேரத்தில் தான் நம்மால் உறுதியாகத் தெரிந்து கொள்ள முடியும்.
    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •